13 ஜூலை 2015

மெட்ரோ ரயில்...தற்போது சென்னையிலும்..

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம். பயனுள்ள பல விசயங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள  நண்பர் இல.கோபாலசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
சென்னை மெட்ரோ:
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கிவிட்ட இந்த நேரத்தில்  ஒரு சில முக்கியமான மெட்ரோ ரயில் நிலையங்கள் தொடங்கப்பட்ட ஆண்டுகளைப் பார்ப்போம்.
லண்டன் மெட்ரோ 1890
க்ளாஸ்கோ சப்வே மெட்ரோ 1896
அமேரிக்கா சிகாகோ 1897
அமேரிக்கா நியு யார்க் 1904
பாரிஸ் மெட்ரோ 1900
ஏதென்ஸ் கிரீஸ் மெட்ரோ 1904
ஜெர்மனி பெர்லின் மெட்ரோ 1902
ஜப்பான் ஒசாகா 1933
ஜப்பான் டோக்யோ 1927
ஸ்பெயின் மேட்ரிட் 1919
ஸ்பெயின் பார்சிலோனா 1924
இவ்வளவு ஏன் ,
அர்ஜென்டினா 1913
ஹங்கேரி புடாபெஸ்ட் 1896

லண்டன் அல்லது பாரிஸ் மெட்ரோவில் பயனித்தவர்களுக்குத் தெரியும். அவை நிலத்தடி சுரங்கங்களில் ஓடும் ரயில்கள். சுரங்கங்கள் மிக ஆழத்தில் அமைக்கப் பட்டிருக்கும். சில மெட்ரோ நிலையங்களில் லிப்டுகளில் 4-5 அடுக்குகள் வரை கீழே செல்ல வேண்டி இருக்கும். லண்டன் நார்தன் லைன் தடத்தில் ஹம்ஸ்டட் மெட்ரோ நிலையம் 58.5மீ ஆழத்தில் அமைந்துள்ளது. உலகப் போரின் பொழுது, மழையாகப் பொழிந்த ஜெர்மானிய குண்டு வீச்சிலிருந்து தப்பிப்பதற்கு , லண்டன் வாசிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது இந்த மெட்ரோ நிலையங்கள். பாரிஸ் மெட்ரோவின் அப்செச்ஸ் நிலையம் 36 மீட்டர் ஆழத்தில் உள்ளது.
ஒரு வியப்பான விடையம் என்னவென்றால் ,
உக்ரெயின் நாட்டின் கிவ் மெட்ரோ நிலையம்தான் உலகின் மிக ஆழமான மெட்ரோ நிலையம். தரை தளத்தில் இருந்து 105 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. 1960 இல் கட்டப்பட்டது.

இன்னும் நிறைய சுவாரசியமான தகவல்களைக் குறிப்பிடலாம். ஆனால் நீளமான தகவல் தொகுப்பைப் படிக்கும் ஆர்வம் தமிழ் மக்களுக்கு இல்லை என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.
இவை மூலம் நான் சொல்ல வருவது என்ன என நீங்கள் யூகித்திருப்பீர்கள். லண்டன் மெட்ரோ அமைத்து 125 ஆண்டுகள் கழித்து, பாரிஸ் மெட்ரோ அமைத்து 115 ஆண்டுகள் கழித்து,
இன்னும் சொல்லப்போனால் அர்ஜென்டினா மெட்ரோ அமைத்து 102 ஆண்டுகள் கழித்து , நவீன வரலாற்றின் மிகப் பழமையான நகரம், பிரிட்டிஷ் ஆட்சியின் தலைமையிடம், இந்தியாவின் மிக முக்கிய பன்னாட்டுநகரான சிங்காரச் சென்னைக்கு 2015 இல் தான் ஆட்சியாளர்களின் அருட்கொடையால், மெட்ரோ ரயில் ஓடும் பாக்கியம் கிட்டியுள்ளது. அதுவும் புண்ணியவான் ஜப்பான் வங்கி இத் திட்டத்திற்கான 59% நிதியை வழங்கியமையால். இதற்கு மத்திய அரசு 21% நிதி வழங்குகிறது. மீதம் 20% மட்டுமே மாநில அரசு செலவிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...