13 ஜூலை 2015

ஹெல்மெட் அணியுங்க...


மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம். தலைக்கவசம் போடுவதற்கு நம்மில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற இதே வேளையில் நண்பர் இல.கோபாலசாமி ஐயா அவர்களது கூற்றை கொஞ்சம் கேளுங்க...

ஒரு ஹெல்மெட் போட வலிக்கிறது!!
படத்தில் நீங்கள் பார்ப்பது எனது மோட்டார் சைக்கிள் கவச உடைகள்.
1. ஜாக்கெட் - முதுகில், தோல் பட்டைகளில் , கை மூட்டுகளில் கவச அட்டைகள் வைத்து தைக்கப் பட்டது. சிராய்ப்பு தாங்கும் துணியால் ஆனது (scratch resistant). ஏனெனில் சிராய்ப்பு நேராத இருசக்கர விபத்து அரிது!

2. கால்சட்டை - மூட்டு, தொடைப் பகுதியின் பக்கவாட்டில் கவச அட்டைகள் வைத்து தைக்கப்பட்டது. கணுக்கால் பகுதியில் தோல் பட்டி வைத்து தைக்கப்பட்டது. கால் நுனிக் குழாயின் அகலம் குறைவாக இருக்கும். ஏனெனில் பூட் ரெஸ்ட் இல் பேன்ட் நுனி சிக்கிவிடக் கூடாது என்பதற்காக.
3. முதுகுக் கவசம் - ஜாகெட் உள்ளே அணியும் ஆமை ஓடு போன்ற முதுகுக் கவசம். ஜாக்கெட்டில் உள்ளே வைத்து தைக்கப்பட்டிருக்கும் பட்டைகளுக்கும் மேலான கூடுதல் பாதுகாப்பிற்காக.
4. பூட்ஸ் - மோட்டார் சைக்கிள் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட பூட்ஸ். தேவையான கீழ் மேல் கோணத்தில் மட்டுமே கால் அசைவுக்கு உதவும். வெளிப்புற விரல் நுனிப் பகுதியில் இரும்புப் பட்டைகள் பொருத்தப் பட்டிருக்கும். கடினமான தட்டையான அடி வைத்து தைக்கப் பட்டிருக்கும். சாப்ட் ரப்பர் சோல் உள்ள பூட்ஸ்கள் பாதுகாப்பானவை அல்ல. நாடா (லேஸ்) வைத்துக் கட்டிய பூட்ஸ் அணிந்தால் அது பூட் ரெஸ்டில் சிக்க வாய்ப்பு உள்ளது.
5. கையுறை - மாட்டுத் தோலால் ஆன கையுறை. விரல் மூட்டுகளில், உள்ளங்கை மேடுகளில் அட்டைப் பஞ்சு வைத்து தைக்கப் பட்டிருக்கும். கீழே விழ நேர்ந்தால் முதலில் ஊன்றுவது உள்ளங்கைதான் , மேலும் விரல்கள் உடையும் வாய்ப்பு அதிகம் என்பதால் இப்பாதுகாப்பு.
6. ஹெல்மெட் - மிக முக்கியமான தலைகவசம். காற்று புகுவதற்கு சிறு சன்னல்கள் அமைக்கப் பட்டிருக்கும். உள்ளே ப்ளுட்டூத் ஹெட்போன் மைக் பொருத்தப் பட்டிருக்கும். பின்னால் அமர்ந்து கொண்டிருக்கிறவருடன் அல்லது தொலைபேசியோடு இணைத்துக் கொள்ளல்லாம்.
இவை அத்தனையும் ஐரோப்பிய தர முத்திரையான E முத்திரை பெற்றிருக்க வேண்டும் (நமது ஐஎஸ்ஐ முத்திரை மாதிரி).
சட்டப்படி பார்த்தால் , ஹெல்மெட் மட்டும் தான் அத்தியாவசியமாக கோரப்படுவது. ஆனால், எவரும் கவச உடை, பூட்ஸ், கிளவுஸ் அணியாமல் ஒட்டுவதில்லை. ஏனெனில், தனது பாதுகாப்பு மற்றும் சாலையில் உள்ள மற்றவரின் பாதுக்காப்பு குறித்த விழிப்புணர்வு இயல்பிலேயே இருக்கிற காரணத்தால். அது தங்கள் கண்டமை எனஅனைவரும் உணர்ந்துள்ள காரணத்தால். சட்டத்திற்கும், அபராததிற்கும் அச்சப்படுவது என்பது அடுத்த நிலைதான் , ஆனால் சுய ஒழுக்கம் பிராதனம்.
இவை அத்தனையும் அணிந்திருந்த பொழுதும் இரு சக்கர வாகனம் , காரை விட ஆபத்தானது என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கே என்னதான் கட்டாயப் பாடமாக பல நுண் பயிற்சிகளை பயிற்றுவித்தாலும் , உரிமம் பெறுவதை கடினமான நடைமுறை ஆக்கினாலும், ஒப்பீட்டளவில், காரைக் காட்டிலும் மோட்டார் சைக்கிள் விபத்தில் தான் அதிக இழப்பு நேருகின்றன. விபத்து, காயம் என்பது பல காரணிகளால் நிகழக் கூடும். ஆயினும் நமது கட்டுப்பாட்டில் இருக்கிற காரணிகள் இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்ஜாக்கிரதை மட்டுமே! அதில் கவனம் செலுத்துவது நம் சாமர்த்தியம். நமது கட்டுப்பாட்டை மீறிய காரணிகளால் பாதிப்பு நேர்ந்தால் , நம் மீது குறைப்பட்டுக்கொள்ள இடமளிக்கக் கூடாது அல்லவா.
மோட்டார் சைக்கிளின் மீது கை வைக்க வேண்டுமெனில், கிலோகணக்கில் இத்தனை கவசங்களை தரித்துக் கொண்டுதான் நான் அமருகிறேன். உங்களுக்கு ஒரு ஹெல்மெட் போட வலிக்கிறது!!
அறியாமையில் இருந்தது தவறல்ல, அறியாமையிலேயே தொடர விரும்புவது தான் தவறு!!

தலைக்கவசம் அணிவது பற்றிய நமது நண்பர் புதுமடம் சீனி அவர்களது கருத்தினைக்கேளுங்க....

 Pudumadam Seeni Packir இல கோபால்சாமி சார் அதிகமான நண்பர்கள் சொல்வது ஐரோப்பாவில் குளிர் இந்தியாவில் வெப்பம் ு என்று கூறும் நண்பர்கள்
வாருங்கள் துபாய் அல்லது வாருங்கள் சவுதி அரேபியாவிற்க்கு இங்கு அடிக்கும் வெப்பத்தில் ஆம்லெட் வேனும்னாலும் போடலாம் ஆனாலும் தலைகவசம் போடாமல் யார
ாவது ஒருவனாது போகமுடியும்மா?? இத்தனைக்கும் இரு சக்கர ஓட்டிகள் 90 சதமானவர்கள் இந்தியர்கள்...
இங்கே சட்டத்தை மதிக்கிறார்கள்
நமது சட்டத்தை மிதிக்கிறார்கள்

கதையா சொல்ரிங்க கதை போய் GH ல போய் பாருங்க எத்தனை எத்தனை சோக கதை இருக்கிறது என்று புரியும் அப்புறம் தானாகவே தலைகவசத்தை வாங்கி மாட்டிக்கொள்வீர்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...