மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். நமது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரும் இந்திய அறிவியல் வளர்ச்சியின் தந்தையுமான டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல்கலாம் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.ஐயா அவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
பிறப்பு 15.10.1931 இறப்பு 27.07.2015
உங்களை போல் மனிதருல் மாமனிதனாக பிறந்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் கல்வியை நேசித்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் ஒழுக்க நெறியுடன் வாழ்ந்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் ஆசிரிய சமுதாயத்தை நேசித்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் எளிமையாக வாழ்ந்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் ஊனமுற்றவர் வாழ்கைக்கு ஒளி ஏற்றியவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் எளிபவர்க்கும் புரியும் வண்ணம் எழுதியவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் மக்களை பற்றி சிந்தித்து நேசித்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் விஞ்ஞானியாக பணியாற்றியவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் மனித நேயத்திற்கு மரியாதை செய்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் இயற்கையை நேசித்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் மணவர்களுக்கு அறிவூட்டியவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் இந்தியாவை நேசித்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் தமிழை உலகரங்கில் பேசியவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் மனிதரின் மனதினில் வாழ்பவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் இறந்த பின்பும் திரும்பி பார்க்க வைத்தவர் எவரும் இல்லை ஐயா!
மீண்டும் எப்போது இந்த மண்ணை அலங்கரிக்க அவதரிக்க போகிறீர்கள்
உங்கள் வரவை எதிர் நோக்கும் உங்களால் விதைக்கப்பட்ட விதைகள்!!
பதிவிட்ட ஃபேஸ்புக் நண்பர் நடராஜ் smnr அவர்களுக்கு நன்றிங்க.

இதோ தினமணி நாளிதழில் வெளிவந்த கட்டுரை ....
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் காலமானார்.
மேகாலயா மாநிலம், ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த
கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது
அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக
இருந்ததையடுத்து இந்திய ராணுவ மருத்துவர்கள் விரைந்து சென்று தீவிர
சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு 8.30 மணியளவில் காலமானார்.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர்,
மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை
நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும்
அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின்
முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல்
கலாம் 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும்,
ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில்
அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான
இராமேஸ்வரத்தில் பிறந்தார்.
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு,
திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல்
பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால்,
இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய
“விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார்.
பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO)
விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு
சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர்,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத்
தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III
ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில்
ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக
அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981
ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி
கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி
ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு
“பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு
ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை
திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட்
படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
2002-ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில்
வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002
ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய
விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி”
என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத்
தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த
தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
- அக்னி சிறகுகள்
- இந்தியா 2012
- எழுச்சி தீபங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக