30 ஜூலை 2015

மவுன அஞ்சலி ஊர்வலம் தாளவாடியில் 01

DR.APJ.ABDUL KALAM - FUNERAL அப்துல் கலாம் அவர்களுக்கு இரங்கல் கூட்டம்-தாளவாடி.

   தாளவாடியில் 2015 ஜூலை 30 ந் தேதி இன்று....

            அமைதி ஊர்வலம்,இரங்கல் பொதுக்கூட்டம்,மவுன அஞ்சலி.

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.2015ஜூலை 30 ந் தேதி இன்று மறைந்த பாரத் ரத்னா டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு  சர்வ மதங்களின் ஒற்றுமையுடன்  அமைதி ஊர்வலம், இரங்கல் தெரிவிப்பு பொதுக்கூட்டம் ,மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
  அமைதி ஊர்வலம் தாளவாடி நேதாஜி சர்க்கிள் தொடங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
   
       அனைத்து மதங்களின் முக்கிய பிரமுகர்களும்,அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும்,அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும்,அனைத்து பள்ளிகளின் இருபால் ஆசிரியப்பெருமக்களும்,இருபால் மாணவர்களும்,அனைத்து வார்டு கவுன்சிலர்களும்,பத்திரிக்கை ஊடகங்களும்,இளைய சமுதாயங்களும் ,அரசு சாரா தன்னார்வ அமைப்புகளும், அரசு போக்குவரத்து உட்பட தனியார் போக்குவரத்து தொழிலாளர்களும்,
 அரசு பல்வேறு துறைகளின் அலுவலர்களும்,ஊழியர்களும்,வணிகர்களும்,விவசாயப்பெருங்குடி மக்களும்,பொதுமக்களும்  தாங்களாகவே  கலந்துகொண்டனர்.
இரங்கல் கூட்டம் 10.30மணிக்கு தொடங்கி 1.00மணி வரை நடைபெற்றது.
   திரு. R.மாதேஸ் M.A.,B.Ed.,அவர்கள்,தலைமை ஆசிரியர் . 
            ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-தாளவாடி.
      இரங்கல் கூட்டத்தில் கூட்ட நிகழ்வு ,அமைதி ஊர்வலம், மவுன அஞ்சலி,பற்றிய திட்டமுறைகள் பற்றி அறிமுகம் செய்கிறார்.

      தலைமை ஏற்று இரங்கல் உரை;
         திரு. நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள் தலைவர்,
                              தாளவாடி ஊராட்சி மன்றம்.

                            திரு. வெங்கட்ராஜ் அவர்கள் துவக்கஉரை,
                                      தாளாளர் மற்றும்முதல்வர்,
                      J.S.S.தொழிற் பயிற்சி கல்லூரி, தாளவாடி.



                திரு. வியானி அவர்கள் உரை,
                                 ROTARY CLUB OF THALAVADI.
         (உரையாற்றும் புகைப்படம் தவறிவிட்டது வருந்துகிறேன்)


                     திரு.இனையத் அவர்கள்  உரை,
             இசுலாமிய முக்கிய பிரமுகர் தாளவாடி.

                         திரு.மாதேஸ் B.A.,B.L. அவர்கள் உரை,
                                           வழக்கறிஞர்,தாளவாடி.



                    திரு. உபைத்துல்லா அவர்கள் உரை,
                                    மசூதி - தாளவாடி

                    திரு. சென்னஞ்சப்பா,அவர்கள் உரை.
                    கன்னட சங்கத்தலைவர்,தாளவாடி.

                         திரு.காளநாயக்கர் அவர்கள் உரை,தலைவர்,
                     திகனாரை ஊராட்சி மன்றம் (தாளவாடி)
                       திரு. பிரகாஷ் அவர்கள் உரை,  முன்னாள் தலைவர்,
                        தலமலை ஊராட்சி மன்றம்.(தாளவாடி)


                   திரு. நாகநாதன் அவர்கள் உரை,பட்டதாரி ஆசிரியர், 
                         அரசு மேல்நிலைப் பள்ளி,தாளவாடி.

                       திரு. அமல் அவர்கள் உரை,ஆசிரியர், 
              அரசு மேல்நிலைப் பள்ளி தாளவாடி.

                                      திரு.ஜெயராம் அவர்கள் உரை,
                      திரு.யேசுதாசன் அவர்கள் உரை, PALM2NGO.
                          திட்ட ஒருங்கிணைப்பாளர்,
                             அரசு சாரா தன்னார்வ அமைப்பு,தாளவாடி.
                திரு. ஜான்சன் அவர்கள் உரை,
                       CCF (ASHA KENDRA) 
                          தன்னார்வ சமூக சேவை அமைப்பு,
                                 சூசைபுரம்,தாளவாடி.

நிறைவுரை மற்றும் நன்றியுரை; 
திரு. C.பரமேஸ்வரன் அவர்கள் செயலாளர், 
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு.
          அரசு பதிவு பெற்ற தன்னார்வ  அமைப்பு,


           அமைதி ஊர்வலம் துவக்கம். நேதாஜி திடல், தாளவாடி.
 அமைதி ஊர்வலத்தின் ஒரு பகுதி....தாளவாடி.மைசூர் மெயின் ரோடு.

அமைதி ஊர்வலத்தில் திரு.N.நாகநாதன் அவர்கள், தமிழ்த்துறை பட்டதாரி ஆசிரியர்GHSSCHOOL , திரு .P.யேசுதாசன் அவர்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர்,PALM2NGO.,
 திரு. ரபிதீன் அவர்கள் நடத்துநர், (TNSTC) தாளவாடி கிளை.
 அமைதி ஊர்வலத்தில் இசுலாமிய சகோரதரர்களில் ஒரு பகுதி.....தாளவாடி.

 அமைதி ஊர்வலத்தில்திரு. உபைத்துல்லா,திரு.R.மாதேஸ் தலைமை ஆசிரியர்,திரு.வடிவேலு தாளவாடி,

 அமைதி ஊர்வலத்தில்,வழக்கறிஞர், காவல்துறை நண்பர்கள்,கிறித்துவ அமைப்பினர் உட்பட முக்கிய பிரமுகர்களில் சிலர்..........
இரங்கல் கூட்டத்தில்  அனைத்து ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் ஆசிரியப்பெருமக்கள் மற்றும் சர்வ மதங்களின் முக்கிய பிரமுகர்கள்.
இரங்கல் கூட்டத்தில் திரு. வியானி அவர்கள் ரோட்டரி கிளப் உட்பட  தன்னார்வ அமைப்புகளின் முக்கிய பிரமுகர்கள்.

 இரங்கல் கூட்டத்தில் பொதுமக்கள் சூழ்ந்த  ஒரு பகுதி ,



தொடர்ந்து  தாளவாடி பொதுமக்கள் அனைவரும் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
                        




27 ஜூலை 2015

டாக்டர் APJ அப்துல்கலாம் இன்று மண்ணுலகை விட்டு விண்ணுலகில் மறைந்தார்.

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.  நமது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரும் இந்திய அறிவியல் வளர்ச்சியின் தந்தையுமான டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல்கலாம் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.ஐயா அவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
                    பிறப்பு 15.10.1931     இறப்பு 27.07.2015

 உங்களை போல் மனிதருல் மாமனிதனாக பிறந்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் கல்வியை நேசித்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் ஒழுக்க நெறியுடன் வாழ்ந்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் ஆசிரிய சமுதாயத்தை நேசித்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் எளிமையாக வாழ்ந்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் ஊனமுற்றவர் வாழ்கைக்கு ஒளி ஏற்றியவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் எளிபவர்க்கும் புரியும் வண்ணம் எழுதியவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் மக்களை பற்றி சிந்தித்து நேசித்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் விஞ்ஞானியாக பணியாற்றியவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் மனித நேயத்திற்கு மரியாதை செய்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் இயற்கையை நேசித்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் மணவர்களுக்கு அறிவூட்டியவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் இந்தியாவை நேசித்தவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் தமிழை உலகரங்கில் பேசியவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் மனிதரின் மனதினில் வாழ்பவர் எவரும் இல்லை ஐயா!
உங்களை போல் இறந்த பின்பும் திரும்பி பார்க்க வைத்தவர் எவரும் இல்லை ஐயா!
மீண்டும் எப்போது இந்த மண்ணை அலங்கரிக்க அவதரிக்க போகிறீர்கள்
உங்கள் வரவை எதிர் நோக்கும் உங்களால் விதைக்கப்பட்ட விதைகள்!!

பதிவிட்ட ஃபேஸ்புக் நண்பர்  நடராஜ் smnr அவர்களுக்கு நன்றிங்க.


     இதோ தினமணி நாளிதழில் வெளிவந்த கட்டுரை ....
                முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் காலமானார்.

மேகாலயா மாநிலம், ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து இந்திய ராணுவ மருத்துவர்கள் விரைந்து சென்று தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு 8.30 மணியளவில் காலமானார்.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார்.

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

2002-ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.


விருதுகள்:



1981 – பத்ம பூஷன்



1990 – பத்ம விபூஷன்



1997 – பாரத ரத்னா



1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது



1998 – வீர் சவர்கார் விருது



2000 – ராமானுஜன் விருது



2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்



2007 – கிங் சார்லஸ்-II பட்டம்



2008 – பொறியியல் டாக்டர் பட்டம்



2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது



2009 – ஹூவர் மெடல்



2010 – பொறியியல் டாக்டர் பட்டம்



2012 –  சட்டங்களின் டாக்டர்



2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது





ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:



  1. அக்னி சிறகுகள்
  2. இந்தியா 2012
  3. எழுச்சி தீபங்கள்
  4. அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

26 ஜூலை 2015

G.D.நாயுடு கோயம்புத்தூர் விஞ்ஞானி.

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம். 
         இந்தியாவின் எடிசன் என்ற பெரும்புகழினைப்   பெற்ற நம்ம கோயம்புத்தூர் G.D.நாயுடு அவர்கள் பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம் வாங்க...
             
             தான் இருந்த, தொட்ட எல்லா துறையிலும் சாதித்தவர் ஜி.டி.நாயுடு.
பள்ளிப்படிப்பை நான்காவதோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ளையரிடம்
இருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்து பணம் சேர்த்து வாங்கி, பிரித்து
சேர்த்து சாதித்தார்.


                 பஸ் விடுதலை தொடங்கி 600-க்கும் மேற்பட்ட பஸ்களை
விடுகிற அளவுக்கு உயர்ந்தார். 

         அரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை.
 

            மின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பண்ணாத ஷேவிங் ரேசரை
ஐம்பதுகளில் உருவாக்கினார்.


                     ஒரே வாழைத்தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த
வேளாண் விஞ்ஞானி அவர். 


                         இந்த நாட்டில் இளைஞர்களை கெடுப்பவை சினிமா,
அரசியல், பத்திரிக்கைகள், பெற்றோர்கள் ஆகிய நான்கும் தான் என தெளிவாக
சொன்னார். 


                        கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட மிக சிறந்த பொறியியல்
கல்லூரிகள், ஐந்து வருட காலத்தில் உருவாக்கும் திறன் மிகுந்த மாணவர்களை,
ஒரே வருடத்தில் உருவாக்கிக் காண்பிப்பதாகச் சொல்லி சில சாதித்தும்
காட்டினார்.


                   எஞ்ஜின் ஒடிக்கொண்டிருக்கும் போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க vibrator tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்தார். 

              பழச்சாறு பிழிந்து எடுக்க ஒரு கருவி, 

          எந்தவித வெட்டுக்காயமின்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு, 

        பல்வேறு பூட்டுகளை (ஆயிரக்கணக்கான பூட்டுகள்) திறக்கும் மாஸ்டர் கீ 

  முதலியவை இவரின் பிற கண்டுபிடிப்புகள். 

          இன்றைக்கு நாம் பேருந்துகளில் பார்க்கும் டிக்கெட் அச்சடிக்கும் இயந்திரத்தை ஐம்பது வருடங்களுக்கு முன்னரே தன்னுடைய பேருந்துகளில் அமல்படுத்தியவர் அவர்.


            இந்தியாவில் முதல் மின்சார மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலை இவராலே தொடங்கப்பட்டது. 

                 கோவையில் தேர்தலில் தோற்றதால் அவர் கண்டுபிடித்துக் கொடுத்தது தில்லு முல்லு செய்யமுடியாத மின்சார ஒட்டுப்பதிவு இயந்திரம். 


                எழுபது ரூபாயில் ரேடியோ என அவர் உருவாக்கிய பல திட்டங்கள் அரசாங்க ஒத்துழைப்பு இல்லாமல் நின்றுபோனது. 

                   நாட்டுக்கு பல நல்ல கண்டுபிடிப்புகளை ஒப்புவிக்க தயாராக இருந்த அவரை அரசு தொடர்ந்து தொல்லைப்படுத்தியது. பழைய இரும்பில் இருந்து தயாரித்த பேருந்துகளுக்கும் வரி போட்டது. 

               ரொம்பவும் தொல்லை அதிகமாகிப்போக மனைவியை விவாகரத்து செய்து வருமான வரி கொடுப்பதில் இருந்து தப்பித்தார் அவர்.


                  அவரின் பட்டறையில் ஒரு செருப்பும், கீழ்கண்ட வாசகம் தொங்கிக்கொண்டே இருக்குமாம்.

                     ‘அவரவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய வேண்டிய முறையில் செய்யாமல் போனால் 25 ரூபாய் அபராதமும், இதனால் ஒரு அடியும் கிடைக்கும்’. 

         அவர் சொன்ன வரிகளை நாம் அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ளலாம் :


                      21 வயது வரை படி, பிறகு பத்து ஆண்டுகள் ஏதாவது துறையில் வேலைசெய், பிறகு உன்னுடைய படிப்பையும் பத்து ஆண்டுகள் அனுபவத்தையும் வைத்து தொழில் செய். 

           குறைந்தது அடுத்த இருபது ஆண்டுகளுக்குத் தொழில் செய்து பொருள் ஈட்டு, பிறகு உன்னுடைய படிப்பு, ஞானம் எல்லாம் பிறருக்குப் பயன்படப் பணி செய்'


           மார்ச் 23: இந்தியாவின் எடிசன் எனப் புகழ்பெற்ற ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள்



நன்றி;- பூ.கொ.சரவணன்

நெட்வொர்க் இன்டர்நெட் ,அப்படியா?

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.இந்தப்பதிவில் இணையதள இணைப்பு வகைகள் பற்றிய தகவல் அறிந்துகொள்வோம்.

தெரிந்து கொள்வோம்
நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன்
2G, E , 3G , H ,H+
Symbol அதாவது  குறியீடு வருவதை பார்த்திருக்கிறோம். 

                   இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.
++++++++++++++++++++++


1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்நெட் GPRS (General Packet Radio service) இணைப்பு செய்ததற்கான symbol.
இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம்.

இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2). "E" இதுவும் 2G(2.5G)
EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும்.
2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.

இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும்.

இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3). "3G" இது 3G மொபைல் இன்டர்நெட்
UMTS (Universal Mobile Telecom System) இணைப்பு  செய்வதன் மூலம் தோன்றும் குறி.

இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4. Symbol "H" இது 3G மொபைல் இன்டர்நெட்
HSPA (High Speed Packet Aceess) இணைப்பு  செய்வதன் மூலம் தோன்றும் குறி.

இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்
இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5). "H+" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட்
(Evolved High Speed Packet Access) இணைப்பு செய்வதன் மூலம் வரும் குறியீடு

இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும்,
1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6). "4G" இச்சேவை 4G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது.

இதன் வேகம் மிகவும் அதிகம்.
இதை இயங்க அவசியம் 4G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம்.
அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவமும் இச்சேவை வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.


 நன்றி;ஆன்டிராய்டு தகவல் களஞ்சியம்

23 ஜூலை 2015

உண்ணாவிரதம் அவசியம் தேவை!...

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். உண்ணாவிரதம் இருந்தால் அதுவே ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளம்!....அறிந்துகொள்ளுங்க..

                   எல்லா மதங்களிலும் விரதம் என்று ஒன்று வைத்திருந்தனர் இதன் காரணம் என்னவென்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் நமக்கு புரியும். மனிதனுக்கு நோய் வராமல் தடுக்கவே இந்த விரதங்கள் நமக்கு முன்னோர்கள் கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.எல்லா மதங்களிலேயும் விரதம் என்று சொன்னதும் நமக்கு உடனே தோன்றுவது உண்ணா நோன்பு. முதன் முதலில் உண்ணா நோன்பு எப்படி அனுசரித்தனர் என்பதை பற்றி பார்ப்போம்.
                     உண்ணா நோன்பு என்பது சாப்பிடாமல் இருப்பது மட்டும் அல்ல. இதில் பல சூட்சமங்கள் நிறைந்துள்ளது. உதாரணமாக உண்ணா நோன்பு மொத்தம் 7 நாட்கள் இருக்க வேண்டும். நோயாளிகள் தவிர யார் வேண்டுமானாலும் இருக்கலாம் முதல் நாள் தோலுள்ள பழங்களை மட்டும் தான் உண்ண வேண்டும் ( வாழைப்பழம், மாம்பழம்,சப்போட்டா பழம்). இரண்டாம் நாள் சாறு உள்ள பழங்களை மட்டும் தான் உண்ண வேண்டும் ( ஆரஞ்சு,திராட்சை,எலுமிச்சை). மூன்றாம் நாள் வெறும் தண்ணீரை மட்டும் தான் அருந்த வேண்டும் நான்காம் நாள் ஒன்றுமே சாப்பிடாமல் இருக்க வேண்டும். ஐந்தாம் நாள் தண்ணீரை மட்டும் தான் அருந்த வேண்டும். ஆறாம் நாள் சாறு உள்ள பழங்களை உண்ணவேண்டும்.ஏழாம் நாள்
தோலுள்ள பழங்கள். இது தான் உண்ணா நோன்பின் முறை நாளடைவில் இது விருப்பதுக்கு தகுந்தபடி மாறிவிட்டது. இதைப்பற்றி நமக்கு பல சந்தேகம் வரலாம் ஒரு வேளை பசி என்றாலே நம்மால் தாங்க முடியவில்லையே 7 நாட்கள் எப்படி சாப்பிடாமல் இருக்கப்போகிறோம் என்று தோன்றினாலும் கண்டிப்பாக நம்மால் இருக்க முடியும்.
             இதில் மறைந்திருக்கும் உண்மையை பற்றி பார்ப்போம் முதல் நாள் நாம் சாப்பிடும் தோலுள்ள பழங்கள் நம் மலக்குடலை சுத்தப்படுத்தும் கழிவுகளை நீக்கும். இரண்டாம் நாள் நாம் சாப்பிடும் சாறுள்ள பழங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். மூன்றாம் நாள் நாம் அருந்தும் தண்ணீர் நம் உடலில் எந்த பாகங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அதை குணப்படுத்தும். (System Recovery).நான்காம் நாள் நம் உடல் ஒன்றுமே கேட்பதில்லை வயிறு பசிப்பதில்லை. ஐந்தாம் நாள் தண்ணீர், ஆறாம் நாள் சாறு உள்ள பழங்கள் , ஏழாம் நாள் தோலுள்ள பழங்கள். சிறு பூனையை எடுத்துக்கொள்வேம் தனக்கு நோய் வராமல் இருக்க சில நாட்கள் அது வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துகிறது. நம் உடலும் பெரும் நோய் தாக்காமல் தடுக்க இதைப்போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம்.நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இயற்கை மருத்துவரிடம் ஆலோனை பெற்ற பின் உண்ணா நோன்பு இருப்பது நல்லது. விரதம் இருக்கும் நாட்களில் உடலுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்காமல் இருக்க வேண்டும்.

முளை கட்டிய தானியங்கள் !சிறந்த உணவுங்க..

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். முளை கட்டிய தானியங்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்வோம்.
          முளை கட்டிய தானியங்களை 
                     சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
முளை கட்டிய தானியங்கள் என்பவை ஊட்டச்சத்துகளும், புரதச்சத்துகளும் நிறைந்த இயற்கை உணவுகளாகும். பருப்புகள், விதைகள், தானிங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் முளை கட்டி விடலாம். முளை கட்டப்படுவதால் தாதுக்கள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் ஆகியவை சேகரிக்கப்படுகின்றன. முளை கட்டும் முறையால், செரிமானத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் பைரேட்ஸ் போன்ற எதிர் ஊட்டச்சத்துக்கள் குறைக்கப்படுகின்றன. இதனால் சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்டு, செரிமானத்திற்கு உதவும் எண்ணற்ற என்ஸைம்கள் சுரக்கப்படுகின்றன. பருப்புகள் மற்றும் பிற தானியங்களை தண்ணீரில் நனைத்து வைத்து அவற்றை ஆரம்பமுளைப்பு என்னும் முளைக்க வைப்பதையே  முளை கட்டுதல் என்கிறோம்.
                பாதாம் கொட்டைகள் போன்றவற்றை முளைக்கட்டி வைக்கும் போது, அதில் மறைந்துள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் வெளிப்படுகின்றன. பாதாம் கொட்டைகளில் முளை கட்டும் போது, உடலின் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய லைபேஸ் என்ற என்சைமை உருவாக்குகிறது. மணற்புல் (Alfalfa), முள்ளங்கி, ப்ராக்கோலி, தீவனப்புல் (Clover) மற்றும் சோயா பீன்ஸ் போன்றவற்றை முளை கட்டும் போது, அவற்றிலிருந்து கிடைக்கும் சில தாவர சத்துக்கள் நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை கொடுக்கின்றன. வேகமாக ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மிகுந்திருக்கும் முளைக்கட்டப்பட்ட தானியங்களால் மூப்படையும் வேகம் மட்டுப்படும் என்பதை நம்ப முடிகிறதா? இது உண்மை தான்.
                    முழுமையான ஊட்டச்சத்துக்களை குறைவாகவும், எளிதாகவும் அடைய மிகவும் ஏற்றவையாக இருப்பவை முளை கட்டப்பட்ட தானியங்களே. பச்சைப் பருப்பு, பெங்கால் பருப்பு, கொண்டைக்கடலை, கிட்னி பீன்ஸ், காய வைத்த பட்டாணிகள் ஆகியவை நாடு முழுவதும் எளிதில் கிடைக்கக் கூடிய தானிய வகைகள் தான். பல நூற்றாண்டுகளாகவே இந்தியாவில் பாரம்பரிய முறையில் முளை கட்டப்பட்ட தானியங்களை பயன்படுத்தியும் வருகிறோம். மணற்புல் விதைகளில் முளை கட்டப்படும்போது, அவை மாங்கனீசு, வைட்டமின்களான ஏ, பி, சி, ஈ, கே மற்றும் பிற முக்கியமான அமினோ அமிலங்களை உற்பத்தி செய்து தருகின்றன.
இங்கு அத்தகைய முளைகட்டிய தானியங்களின் அற்புதமான சில ஆரோக்கிய பலன்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
என்சைம்கள்
           பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிகளவு என்ஸைம்கள் முளைக்கட்டப்பட்ட தானியங்களில் உள்ளன என்று அறிவியல் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அவசியமான கொழுப்பு
அதிக புரதச்சத்து
            பீன்ஸ், கொட்டைகள், விதைகள் மற்றும் தானியங்களில் உள்ள புரதத்தின் தரம் மற்றும் அளவு ஆகியவை முறை கட்டப்பட்ட பின்னர் மேலும் அதிகரிக்கின்றன. முளை கட்டிய தானியங்களில் உள்ள சில அமினோ அமிலங்கள் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்திக்கு ஊட்டமளிக்கின்றன.
அதிகமான நார்ச்சத்து
               எடையைக் குறைக்கவும், செறிமாணத்தை சீராக்கவும் உதவும் நார்ச்சத்துக்களை முளை கட்டுவதால் அதிகரிக்க முடியும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் உதவுகின்றன.
வைட்டமின்கள்
            முளை கட்டுவதால் வைட்டமின்களின் அளவு மிகவும் அதிகரிக்கிறது. குறிப்பாக வைட்டமின் ஏ, பி-காம்ப்ளக்ஸ், சி மற்றும் ஈ ஆகியவை அதிரிகரிக்கின்றன. முளை கட்டிய தானியங்களில், சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமினோ அமிலங்கள்
              முளை கட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்கள்ளை போதிய அளவில் சுரக்கச் செய்ய முடியும். 
         ( நாம் சூழ்நிலை காரணமாக தொடர்ந்து சரிவிகிதமான உணவை சாப்பிட முடியாத காரணத்தால், கொழுப்பை எரிக்கக் கூடிய அமினோ அமிலங்கள் போதிய அளவு உற்பத்தி ஆகாமல் இருப்பது இன்று பலரும் எதிர் கொள்ளும் உடல் ரீதியான பிரச்னையாகும்).
மிகவும் அவசியமான தாதுக்கள்
             நமது உடலால் உடனடியாக பயன்படுத்தப்படும் வகையில், பல்வேறு வடிவங்களினாலான தாதுக்களை முளை கட்டிய தானியங்கள் கொண்டுள்ளன. முளை கட்டும் போது, அல்கலைன் தாதுக்களான கால்சியம், மக்னீசியம் ஆகியவை புரதங்களுடன் சேர்ந்து, செரிமானத்தின் போது உடலால் எளிதில் கிரகிக்கப் படுகின்றன.
பாதுகாக்கும் மருந்துகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை தவிர்த்தல்
விதைகள், தானியங்கள், கொட்டைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை முளை கட்டும் செயலை வீட்டிலேயே சுத்தமான சூழலில் செய்ய முடியும். இதன் மூலம் கெட்டுப்போகாமல் இருக்க தெளிக்கப்படும் மருந்துகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளிலிடமிருந்து உங்கள் உணவுப் பொருள் பாதுகாக்கப்படுகின்றன.
சக்தி வெளிப்பாடு
             முளை கட்டுவது என்பது ஒரு விதமான வாழ்வின் தொடக்க நிலையாகும், இதன் மூலம் தானியங்களில் மறைந்திருக்கும் சக்திகள் வெளிப்படுத்தப்பட்டு அவை உடலில் கலக்கின்றன. பாதாம் கொட்டைகளை முளைகட்டும் போது, அதில் உள்ள உடலுக்கு தேவைப்படும் சக்திக்காக கொழுப்பை எரிக்கும் லைபேஸ் என்ற என்சைம் உருவாக்கப்படுகிறது.
எளிதில் கிடைக்கும்
கறி மற்றும் பழங்கள் போன்ற புரதச்சத்துக்கள் மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் நிறைந்த பிற உணவுகளைப் போலல்லாமல், முளை கட்டிய தானியங்கள் வருடம் முழுவதும் எளிதில் கிடைக்கின்றன. இவற்றை வீட்டிலேயே தயாரிப்பதால், செலவும் குறைவு என்பது தான் முக்கியமான விஷயம்.
பல்வகைப் பயன்பாடுகள்
                 முளை கட்டிய தானியங்களை எந்த வகையிலும் சாப்பிட முடியும். பச்சையாகவோ, வறுத்தோ அல்லது சமைத்தோ கூட சாப்பிட முடியும். இதன் மூலம் பெரும்பாலான மக்கள் விரும்பும் உணவாகவும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற உணவாகவும் முளை கட்டிய தானியங்கள் உள்ளன.
 என்னங்க?
 இப்போதே தயாராகிவிட்டீர்களா! இனிமேல் நமக்கு காலை உணவு முளை கட்டிய தானியங்களே!.........

பப்பாளி மருத்துவக்குணம்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். பப்பாளி மருத்துவம் படியுங்க..

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!
* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!
* பித்தத்தைப் போக்கும்......!
* உடலுக்குத் தென்பூட்டும்......!
* இதயத்திற்கு நல்லது......!
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!
* கல்லீரலுக்கும் ஏற்றது......!
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......!
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......!
*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்......!
* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......!
* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!
* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......!
* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......!
* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!
* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது......!
* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......!
* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......!
* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......!

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!
அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை....

18 ஜூலை 2015

செட்டிநாடு சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்

மரியாதைக்குரியவர்களே,
                         வணக்கம்.செட்டிநாடு என்பது தனிநாடு இல்லைங்க! இதோ தங்களின் சிந்தனைக்காக.............


செட்டிநாடு!  இது ஏதோ ஒரு தனி நாடு அல்ல. தமிழ்நாட்டுக்கு உள்ளே தனிப்புகழ் பெற்ற நாடு. தமிழகத்தின் பாரம்பரியக் கட்டடக் கலையைப் பாருக்குப் பறைசாற்றும் நாடு. சர்வதேச கட்டடக்கலைக்கு முன்னோடியாக திகழுகிறது இந்த செட்டி நாடு.  நூறாண்டுகளை கடந்த செட்டிநாடு புராதன பங்களாக்கள் யுனெஸ்கோ மேப்பில் இடம்பிடித்துள்ளன. தமிழ் நாட்டின் தென் பகுதியில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் காரைக்குடியை மையமாகக் கொண்ட குறிப்பிட்ட சில ஊர்கள் சேர்ந்த பகுதியைச் "செட்டிநாடு" என்று அழைக்கப் படுகிறது. குறிப்பாகக் காரைக்குடி, புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட மக்கள் குடியேறிய 96 ஊர்களும் சேர்ந்து "செட்டிநாடு" என்று குறிக்கப்படுகிறது. 



             இந்த ஊர்களில் காரைக்குடி, தேவகோட்டை பெரிய ஊர்கள். மேலும்,  கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், ஆத்தங்குடி, அரியக்குடி, கண்டரமாணிக்கம், பாகனேரி, நாட்டரசன்கோட்டை, ஒக்கூர், வேந்தன்பட்டி, பொன்னமராவதி போன்ற ஊர்களும் உள்ளன.  நகரத்தார் சமூகத்தினர் வசிக்கும் இந்தப் பகுதியை, நாட்டுக்கோட்டை என்றும் அழைப்பது உண்டு.
                     ஆயிரம் ஜன்னல் வீடு செட்டிநாட்டில் மிகவும் பிரபலம்.  செட்டிநாட்டிலுள்ள வீடுகள் எல்லாம் 1875ஆம் ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டு வரை கட்டப்பெற்றதாகும்.  எல்லா வீடுகளுமே 80அடி முதல் 120 அடிவரை அகலமும்,160 அடி முதல் 240 அடிவரை நீளமும் கொண்டவையாக இருக்கும்.  வீடுகள் எல்லாம் பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேக்குமரங்களால் இழைத்துக் கட்டப்பெற்றவையாகும்.


                          ஒரு வீடு கட்டி முடிக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை காலம் பிடித்திருக்கிறது.  இந்திய சுதந்திரத்திற்கு முன்பு சுமார் 8,000 வீடுகள் இருந்தனவாம். இப்போது சுமார் 6,000 வீடுகள் உள்ளன. அதில் மிகவும் கலையம்சமான வீடுகள் 500 அல்லது 600 வீடுகள் இருக்கலாம்.

              பராமரிக்கப் படாமல் சிதிலமான வீடுகள் அனேகம். அவற்றில் இருந்த மரத் தூண்களும், மரச் சாமான்களும், ரவிவர்மாவின் ஓவியங்களும்,லண்டன் லாந்தர், மற்றும் சாண்ட்லியர் விளக்குகளும், மற்றும் பல அரிய கலைப் பொருட்களும் இன்று இந்தியாவெங்கும் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் வியாபித்திருக்கின்றன அல்லது வெளி மாநிலங்களில் உள்ள பெரும் பணக்காரர்கள் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்.

                       செட்டிநாடு வீடுகள் அனைத்துமே, தரை மட்டத்தில் இருந்து, ஐந்து அடிகளுக்கும் மேலான உயரத்திலேயே கட்டப்பட்டு இருக்கின்றன. செட்டி நாட்டு வீடுகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை வெள்ளை அடிக்கப்படுவதில்லை. 

                  அந்த அளவுக்கு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது.  சர்வதேச கட்டடக்கலைக்கு சவால் விடும் வகையில் பிரமாண்டமான கட்டடங்களை எழுப்பினர். சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைகரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டியுள்ளனர். இவை தான் பங்களா சுவற்றில் பளபளப்பையும், உறுதியையும் ஏற்படுத்தியுள்ளன. சிறிய பங்களா 40 அடி அகலம், 120 அடி நீளத்திலும், அரண்மனை போன்ற பங்களா 60 அடி அகலம், 200 அடி நீள இடத்தில் கலைநயத்துடன் கட்டப் பட்டுள்ளது. மின்விசிறி இல்லாமலேயே இதமாக இருக்கும்.

                   பங்களா மேற்கூரையில் பொருத்தியுள்ள லண்டன் ஓடுகள் மூலம் மழைக்காலத்தில் சேகரமாகும் மழை நீரை விரையமாக்காமல் ஆள்உயர அண்டாவில் சேகரித்து மழை நீர் சேகரிப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்துள்ளனர் நகரத்தார்.

                     செட்டிநாட்டு வீடுகளின் பிரதான மரக் கதவுகள் மிகப் பெரிய நிலைகளைக் கொண்டவை. இரட்டைக் கதவுகள் அமைக்கப் பட்டிருக்கும். கதவுகளிலும், நிலைகளின் இரு பக்கங்களிலும் நேர்த்தியான சிற்பங்கள் செதுக்கப் பட்டிருக்கும் அவை பெரும்பாலும் முப்பரிமாணத்தில் அமைக்கப் பட்டுள்ளன.

      
                            இக்கதவுகளிலுள்ள சிற்பங்கள் பெரும்பாலும் கிளி முதலிய பறவைகள், மிருகங்கள்,     செடிகொடிகள், தாமரை, கடவுள்கள்,     கஜலட்சுமி, இலட்சுமி, ரதிமன்மதன் போன்றவைகளாகும். பதினாறு - பதினேழாம் நூற்றாண்டின் நாயக்கர் காலச் சிற்ப அமைப்புகளே செட்டி நாட்டு நகரத்தாருக்கும் கலைஞர்களுக்கும் முன்மாதிரியாக அமைந்தன. இம்மரபைப் பின்பற்றியே செட்டியார்கள் தாம் கட்டிய மற்றும் புதுப்பித்த கோயில்களில் சிற்பங்கள் அமைத்துள்ளனர்.
 
                        செட்டி நாட்டுக் கதவுகளில் அவர்கள் வணங்கிய தெய்வங்களின் உருவங்களே அதிகம் காணப் படுகின்றன. அனைத்துக் கதவுகளிலும் இலட்சுமி பிரதான இடத்தைப் பெற்றுள்ளாள். இவ்வுரு பெரும்பாலும் கஜலட்சுமியாக, அதாவது நடுவில் தேவி அமர்ந்து கொண்டிருப்பது போலவும், அவளுக்கு இரண்டு பக்கமும் யானைகள் நின்று கொண்டு அத்தேவிக்கு நீர்கொண்டு அபிடேகம் செய்வது போலவும் அமைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். அடுத்த முக்கியமான கதவுச் சிற்பம் சிவனும் பார்வதியும் நந்தியின் மீது அமர்ந்துள்ள இடப வாகன மூர்த்தியின் சிற்பமாகும்.
 


               இது அவர்களது திருமண     வாழ்வையும்,     குடும்பத்தின் மகிழ்ச்சியையும் குறி்ப்பதாகும். செட்டியார்களின் தாலிகளில் கூட இவ்வுருவம் பொறிக்கப் படுவது வழக்கமாகும். இராமர், சீதை பட்டாபிடேகக் காட்சியும் கதவுச் சிற்பமாகக் காணப்படுகிறது. கணபதி, கருடன் மீது அமர்ந்துள்ள விஷ்ணு, முருகன் ஆகியோரின் உருவங்களும் கதவுகளில் வைக்கப் பட்டுள்ளன.

 வழித்தடம் :

                           புதுக்கோட்டை, சிவகங்கை இரு மாவட்டங்களுக்கும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பஸ் மற்றும் ரயில் வசதி உண்டு.  கானாடுகாத்தான் ஊரில் நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன.  புதுக்கோட்டை பொன்னமராவதியிலும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலும், கானாடுகாத்தானிலும் அதிகமான பங்களாக்கள் உள்ளன.

15 ஜூலை 2015

சமூகத்திற்கு சமர்ப்பணம்..


மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.  
          ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வினோத் ராஜேந்திரன் உட்பட எனக்கு வாழ்த்துச்சொல்லும் அனைவருக்கும் சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...