13 செப்டம்பர் 2014

கோவை மாநகர காவல்துறையின் அசத்தல் பாதுகாப்பு வழிமுறை

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 
                     கோவை மாநகரக் காவல் துறை , மாவட்டத்தில் நடக்கும் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் பொதுமக்களிடம் இருந்து சமூகவிரோத செயல்களைப் பற்றியத் தகவல்களைப் பெறவும், நேரடியாக பொதுமக்களே எந்த ஒரு குற்றச் சம்பவத்தைப் பற்றிய தகவல்களைக் கொடுக்கவும் மொபைல் எண்ணை அறிமுகப் படுத்தி இருக்கிறது. மெயில் மூலமாகவும் காவல்துறைக்குத் துப்புக் கொடுக்கலாம். எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டிய மொபைல் எண் : 9843100100 (இது நேரடியாக கமிஷனர் மற்றும் டெபுடி கமிஷனரின் பார்வைக்குப் போகும்) பொதுமக்கள் தொலைபேசியில் நேரடியாக டெபுடி கமிஷனரிடம் பேச : 0422-6545464 மெயில் மூலம் தகவல் தெரிவிக்க : copcbe@yahoo.com தொடர்ச்சியான ரோந்துப் பணியின் காரணமாகவும், காவல்துறையின் உடனடி நடவடிக்கையின் காரணமாகவும் , 2012 ம் ஆண்டை விட , 2013 ம் ஆண்டில் கோவையில் குற்றச் செயல்கள் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். மக்களுடைய பங்களிப்பின்றி காவல்துறையினால் மட்டுமே எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. ஆகவே நாமும் நம் காவல்துறையினரோடு இணைந்து பணியாற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக