28 செப்டம்பர் 2014

சொரியாசிஸ் நோய் மருத்துவக்குறிப்பு.

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். சொரியாசிஸ் என்னும் தோல் நோய் பற்றிய மருத்துவக்குறிப்பு படியுங்க.........


சோரியாஸிஸ் டிப்ஸ்
மழைக்காலத்தில் சளி இருமல் மட்டுமல்ல, சில தோல் நோய்களும்
அதிகம் வாட்டும். குறிப்பாக சோரியாஸிஸ் எனும் தோல் நோய்
சிலருக்கு மழைக்காலத்தில் அதிகம் துன்பம் தரும். நன்கு குணமாகி,
அப்பாடா ஒருவழியாய் ஓய்ந்து விட்டது சோரியாஸிஸ் என பெருமூச்சு
விடுகையில், மடமடவென மீண்டும் தலைதூக்கும் இந்த நோய், சிலருக்கு
குளிர்காலத்தில்/ பனிக்காலத்தில் பெரும் தொல்லை தருவதுண்டு.
அவர்கள் இப்பருவத்தில் நோய் இல்லையென்றாலும் முன்பு வந்து போன
இடங்களில் சித்த மருத்துவ தைலங்களைப் பூசுவதும், உணவில் புளிப்பை
அறவே தவிர்ப்பதும் நல்லது. மீன், நண்டு, கோழிக்கறி-போன்றவற்றை
மழைக்காலத்தில் சோரியாஸிஸ் நோய் உள்ளவர்கள் தவிர்ப்பதும்
நல்லதே. ஆனால், நல்ல உடலினருக்கு மழைக்காலத்தில் புளிப்பு நல்லது.

சோரியாஸிஸ் குணமாக:
சோரியாஸிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய் ரத்தம், எலும்பு போன்றவற்றின் சீர்கேடால் நமது சருமத்தைப் பாதிக்கும். இதற்கு இன்றைய நவீன மருத்துவம்கூட முறையான மருந்துகள் இன்றி தவித்து வருகிறது. ஆனால் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் இந் நோயை முற்றிலும் குணப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அகத்தி "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு மிகச் சிறந்த பலன் தருவதாக சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அகத்திக்கீரை, தேங்காய் பத்தை வகைக்கு 100 கிராம்; சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 100 கிராம் இவற்றை நீர் சேர்த்து விழுதாய், அதாவது துவையல்போல் அரைத்து, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தேய்த்துக் குளித்துவர, தோல் நோய்கள் அனைத்தும் விலகும். "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு முறையாக உள்மருந்து எடுத்துக் கொண்டு, இதனை வெளிப்பூச்சாய் பயன் படுத்தி வர, நோயிலிருந்து விரைவில் மீண்டு விடலாம்.

சோரியாஸிஸ் எளிய மருத்துவம்
கார்போக அரிசி-50கிராம்
வெள்ளை மிளகு-10கிராம்
பரங்கி பட்டை சூரணம்-25கிராம்
வேப்பில்லை பொடி-50கிராம்
அனைத்தையும் பொடியாக்கி ஒன்றாக சேர்த்து காலை இரவு சிறிது(கேப்சூல்)அளவு சாப்பிடவும்.

தனியாக திரிபலா சூரணம் சாப்பாட்டிற்கு முன் தேனில் கலந்து சாப்பிடவும்.
சோரியாசிஸ் குணமாகும்
சோரியாசிஸ் என்னும் கடுமையான தோல் வியாதி மற்றும் மஞ்சள்காமாலை நோயாளிகள் குணமாக 15 மிளகைப் பொடியாக்கி, இரண்டு தேக்கரண்டி கற்கண்டு சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். பத்து நாட்கள் இதே முறையில் அருந்திப் பிறகு அடுத்த ஐந்து நாட்கள் இந்தக் கலவையில் 5 பாதம் பருப்பையும் ஊறவைத்துச் சேர்த்து அரைத்து அருந்தவும். இந்த மருத்துவம் மிகவும் சக்தி வாய்ந்தது. முதல் பதினைந்து நாட்களில் ஓரளவுதான் குணமாகி இருந்தால், அடுத்து பத்துநாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் 15 நாட்கள் இதே முறையில் அருந்தி வரவும். இதனால் கல்லீரல் பலம் பெறும்

சோரியாசிஸ் 
சில உடல் ஆரோக்கிய வழி முறைகள்:
 

           சோரியாசிஸ் இருப்பவர்களுக்கு இது நிச்சயமாக உதவும் என்பதால் இதை பற்றிய சில உடல் ஆரோக்கிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.இந்த அலர்ஜியை பொறுத்தவரை மன அழுத்தம் மற்றும் உணவு ஆகியவற்றை முக்கியமாக பார்க்க வேண்டும்.

முதலில் நாம் என்ன செய்கின்றோமோ இல்லையோ ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு மணிநேரம் முதல் எட்டு மணி நேரம் வரை உறங்குவதிலேயே பாதி ஆரோக்கியம் நமக்கு கிடைத்து விடும்.அடுத்ததாக காலையில் எழுந்தவுடன் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஆனால் நாம் யாரும் அதிகமாக தண்ணீர் குடித்து நம்முடைய வயிற்றை சுத்தமாக வைத்து கொள்வதில்லை.நாம் எப்படி வகை வகையாக சாப்பிட்டு விட்டு அடுத்த முறை சாப்பிடுவதற்கு தட்டினை கழுவிகின்றோமோ அது போலவே தான் நம்முடைய வயிறும்.முதல் நாள் நாம் சாப்பிட்ட உணவுடன் கலந்தே அடுத்த நாளைக்கான உணவு ஜீரணிக்க படுகின்றது.காலையில் நமக்கு தண்ணீர் தாகம் இருக்காது.முதன் முதலாக குடிக்கும் போது ஒரு மாதிரி இருக்கும்.ஆனால் போக போக சரி ஆகிவிடும். தண்ணீர் குடிக்க பழகி கொண்டால் அதன் பின்னர் உங்களுக்கே சில உடல் ஆரோக்கிய மாற்றம் தெரிய வரும்.
அடுத்ததாக யோகா.சில அறிவாளிகள் யோகாவையும் உடற்பயிற்சியையும் சேர்ந்து செய்வர்.

யோகா என்பது உடற் சக்தியை சேர்ப்பது.உடற் பயிற்சி என்பது சேர்த்து வைத்ததை வீணாக்குவது.

       இந்த இரண்டும் சேர்ந்து செய்தால் பளு தாங்காமல் ஸ்ப்ரிங் அறுந்த கதை தான்.அதனால் இதில் எதாவது ஒன்றை மட்டுமே செய்ய வேண்டும்.
காலையில் யோகா செய்தவுடன் மூலிகை சாறு குடிக்க பழக வேண்டும்.கற்றாழை (சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ளலாம்.தோலில் மட்டுமே கசப்பு தன்மை இருக்கும்),வேப்பங் கொழுந்து(சிறிது சேர்த்தல் போதும்),துளசி (சற்று அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும் ஏன் என்றால் வேப்பிலை கசப்பு தன்மையை குறைக்க உதவும்.அதை விட பல மருத்துவ குணங்களை கொண்டதும் கூட ),அருகம் புல்.(நம்முடைய உடம்பை ரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ளும்).
அடுத்தாக யோகா செய்ய வேண்டிய நேரங்கள் என்று பார்த்தால் காலை சூரிய வெளிச்சம் நம் மீது பட தொடங்கி அது நமக்கு சுடுவதாக உணரும் வரை(அதற்காக சூரிய வெளிச்சம் எனக்கு சுடவில்லை என்று நண்பகல் வரை உட்கார்ந்து இருக்க கூடாது).மாலையில் அது போலவே சூரியன் சூடு குறைந்த பின் மாலை வெயில் முதல் மறையும் வரை இருக்கும் நேரத்தினை எடுத்து கொள்ளலாம்.சோரியாசிஸ் உள்ளவர்கள் சுடும் சூரிய வெளிச்சத்தை தவிர்ப்பது நல்லது.காலை மாலை வெயில் வெயிலில் நன்றாக செல்லலாம்.முடிந்த வரை தவிர்த்தால் சோரியாசிஸ் கூடுவதை தவிர்க்கலாம்
சோரியாசிஸ் - குணமாக ஒரு விடிவு காலம் :
 

முன்குறிப்பு :
சோரியாசிஸ் உள்ளவர்கள் உங்கள் வீட்டில் பெட்டி பெட்டியாக அடுக்கி வைத்து இருக்கும் மருந்துகளை முதலில் குப்பையில் போட்டு விட்டு வந்து இந்த மருந்தினை உபயோகிக்க வாருங்கள்.

சோரியாசிஸ் குணமாக:
சோரியாசிஸ் குணமாக சித்தாவிலும் ஹோமியோபதியிலும்(உட்பிரிவு மலர் மருந்து)மருந்து உண்டு.சித்தாவில் பார்த்தால் அது உடல் சம்பந்தபட்டது.ஆனால் ஹோமியோபதியை எடுத்து கொண்டால் அது மன சம்பந்தபட்டது.அதனால் நாம் உடலுக்கு மருந்து கொடுக்கும் சித்தா எடுத்து கொள்வோம்.

          சரி இனி சோரியாசிஸ் குணப்படுத்துவதற்கான மருந்து என்னவென்றால் "வெட்பாலை" -(Holarrhena Antidysenterica).இதனை வட்டார மொழிகளில் 'வெம்பாலை' என்று கூறுவர்.இந்த மருந்தினை பற்றி கூறும் முன் சில விசயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.நான் இந்த மருந்தினை தைரியமாக பரிந்துரைப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
என்னடைய தோழி ஒருத்திக்கு சோரியாசிஸ் வந்து அவளுக்கு தலையில் இருந்து ஆரம்பித்து தற்போது நான் யூகித்தபடி அவளுக்கு இடுப்பு வரை வந்து இருக்க வேண்டும்.ஆனால் அவளை
ஒரு இரண்டு மாதங்கள் கடந்து அவளை பார்த்தேன்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.ஏன் என்றால் அவளுக்கு சோரியாசிஸ் முற்றிலுமாக மறைந்து போய் தழும்பு கூட தெரியவில்லை.அவள் இந்த மருந்தை பற்றி கூறினாள்.அடுத்ததாக என்னுடைய சித்தா மருத்துவ நண்பர் நான் இந்த மருந்தை பற்றி அவரிடம் கூறிய போது அவருடைய மருந்துகளில் வெட்பாலையின் இலைகளை கொண்டு தான் மருந்து தயாரித்து வந்து கொண்டு இருக்கின்றார் என்பதை தெரிந்து கொண்டேன்.அவர் இந்த வெட்பாலை உட்பொருளாக கொண்டு சோரியாசிஸ்சிற்காக மருந்து தயாரித்து இதுவரை அவர்களிடம் சென்றவர்கள் மீண்டும் சோரியாசிஸ் வந்ததாக யாரும் இல்லை என்பதை கூறினார்.சரி இனி இந்த வெட்பாலையை எப்படி பயன்படுத்தவது என்பதை பற்றி பார்க்கலாம்.

வெட்பாலை -(Holarrhena Antidysenterica):
முதலில் தூய்மையான தேங்காய் எண்ணெய்யில் வெட்பாலையின் கொழுந்து ( நுனி பகுதி ) அதை ஒடித்து பார்த்தால் அதில் பால் வடியும்.அந்த பாலினை சேகரித்து தேங்காய் எண்ணையில் கலந்து வெயிலில் வைக்க வேண்டும்.இதில் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் இரண்டு ஸ்பூன் வெட்பாலையின் பாலை கலக்க வேண்டும்.அது சிறிது நேரம் கழித்து கத்திரிகாய் நிறத்தில்(purple color)அந்த எண்ணெய் மாறும் வரை வைக்க வேண்டும்.அப்படி நிறம் மாறாமல் இருந்தால் இன்னும் சிறிது நேரம் அதை வைத்து இருக்க வேண்டும்.கண்டிப்பாக மாறி விடும்.இதனை நன்றாக உடம்பில் பூசி செதில்களில் நனையும்படி தேய்த்து கொள்ளவும்.தினமும் இதனை தேய்த்து வந்தாலே போதுமானது.
எப்போதும் இந்த எண்ணெய் உங்கள் உடம்பில் சிறிது அளவு இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.தலைக்கும் இந்த எண்ணெய் தேய்த்து சீகக்காய் தேய்த்து குளித்து விட்டு மீண்டும் இதே எண்ணெய் தேய்த்து கொள்ள வேண்டும்.இது பொதுவாக சித்தா மூலிகை தோட்டத்தில் கிடைக்கும்.அப்படி கிடைக்காவிட்டால் எதாவது ஒரு சித்த மருத்துவரிடம் கேட்டால் அவர் கூறிவிடுவார்.மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ள யானைமலையின் உச்சியில் இந்த செடி அடர்ந்து கிடக்கும்.அது போக இதே எண்ணையை எந்த ஒரு வெட்டு காயமோ அல்லது தோல் சம்பந்தபட்ட அனைத்திற்கும் இதே எண்ணையை உபயோகபடுத்தலாம்.
அடுத்ததாக உணவு முறை :
உணவு முறையை பொறுத்த வரை நீங்கள் கீழே உள்ளதை மட்டும் மனதில் வைத்து கொள்ளுங்கள்.இதனை மட்டும் தவிர்த்தல் போதும்.

*பால்
*மது
*செயற்கை நிறம் ஊட்டுபவை மற்றும் ப்ரிசெர்வேடிவ்கள்
*காளான் (இது பூஞ்சான் வகைகளை சேர்ந்தது.சோரியாசிஸ் அல்லாதவர்களும் இதனை உட்கொள்ள கூடாது என்பதே உண்மை.).
*உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் உணவு வகைகள்.

இதனை மட்டும் கடை பிடித்தால் போதுமானது.காளான் எதற்காக சேர்க்க கூடாது என்றால் அதில் விஷ காளான்கள் இருக்கும்.சுத்தமான காளான்களை சாப்பிடுவதில் தவறு இல்லை.இதை எப்படி கண்டு பிடிப்பது என்றால் சுடுநீரில் காளான்களை போட்டு அதில் ஒரு வெள்ளி காசினை போட்டால் அது நிறம் மாற கூடாது.அப்படி இல்லாமல் மாறினால் அது விஷ காளான்கள்.சோரியாசிஸ் உள்ளவர்கள் சுத்தமான காளான்களாக இருந்தாலும் சேர்க்க கூடாது.
www.psoriyasis.blogspot.com/  இந்த வலைத்தளத்தில் பார்வையிட்ட தகவல்களை இங்கு பதிவிட்டுள்ளேன்.எனவே மேற்கண்ட தளத்தில் சென்று அதிக விவரங்களை அறிந்துகொள்ள வேண்டுகிறேன்.

3 கருத்துகள்:

  1. சோரியாசிஸ் நோய்க்கு நிரந்தர தீா்வு பெற, வெட்பாலை எண்ணெயை சோரியாசிஸ் பாதிக்கபட்ட இடத்தில் பூசி வர நிரந்தர தீா்வு கிடைக்கும், வெட்பாலை எண்ணெய் வேண்டும் என்றால் இந்த எண்ணில் தொடா்பு கொள்ளவும் 9489847246 இதை ஒரு சேவையாக செய்து வருகின்றேன், நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, என்னக்கு சோரியாசிஸ் நோய் பதினைந்து வருடங்களாக இருக்கிறது. ஆங்கில மருத்துவம் பக்க விளைவை ஏற்படுத்துகிறது. எனக்கு உங்கள் மருந்து எண்ணையை தருமாறு கேட்டுகொள்கிறேன்.

      இவன்:

      பேசில்.அ
      கைபேசி எண்-9840767512

      நீக்கு
  2. சோரியாசிஸ் நோய்க்கு நிரந்தர தீா்வு பெற, வெட்பாலை எண்ணெயை சோரியாசிஸ் பாதிக்கபட்ட இடத்தில் பூசி வர நிரந்தர தீா்வு கிடைக்கும், வெட்பாலை எண்ணெய் வேண்டும் என்றால் இந்த எண்ணில் தொடா்பு கொள்ளவும் 9489847246 இதை ஒரு சேவையாக செய்து வருகின்றேன், நன்றி

    பதிலளிநீக்கு

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...