13 செப்டம்பர் 2014

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

       மருத்துவம் என்பது ஒரு புனிதமான தொழில். ஒரு மருத்துவர் தனது திறமை, அறிவை வைத்து நோயாளியை குனபடுத்த முழு முயற்சி எடுக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கிலும், ஒரு நோயாளிக்கு அதிக பட்ச அல்லது மிக குறைவான கவனிப்பு தரப்பட்டதா என்று நீதிமன்றம் கணிக்கிறது.
வேண்டுமென்றே கவனக்குறைவாகவோ, அல்லது ஒரு மருத்துவர் எப்படி நடந்து கொள்ள கூடாதோ அப்படி ஒரு மருத்துவர் நடந்து கொண்டால் மட்டுமே, மருத்துவ சேவை கவனக்குறைவு ஆரம்பிக்கிறது. மக்களிடம் உள்ள எழுத்தரிவின்மையும், வறுமையுமே, அவர்கள் மருத்துவர்கள் கையில் பலியாக நேரிடுகிறது. தெருவில் நிற்கும் ஒரு நோயாளிக்கு மாற்று மருந்தோ அல்லது காலாவதியான மருந்தோ தரப்படுகிறது. ஒரு சில வழக்குகளில், நோயாளிகளின் முக்கிய உறுப்புகள் அவர்களுக்கு தெரியாமலேயே எடுக்கப்பட்டு, கள்ள சந்தையில், அதிக பட்ச விலைக்கு விற்கபடுகிறது. இந்த விஷயம் நோயாளிக்கு தெரிய வந்தால், மருத்துவர் அவனது வறுமையை பயன்படுத்தி, குறைந்த தொகை கொடுத்து, அவனை அமுக்கி விடுகிறார். ஒரு நோயாளி இரண்டாவது ஒபினியன், வேறு மருத்துவரிடம் வாங்கும்போது, ஒரு வேளை, இரண்டாவது டாக்டர், முதல் டாக்டரின் தவறான சிகிச்சையை பற்றி நோயாளிக்கு சொல்லலாம்.
குறை தீர் வழிமுறை :
ஒரு மருத்துவ சேவை குறைபாட்டில், ஒரு நுகர்வோருக்கு ஒரு மருத்துவமனை (அரசு / தனியார் ) மீதோ, ஒரு மருத்துவர் மீதோ, ஏதும் புகாரோ அல்லது குறையோ இருந்தால், முதலில் அதே துறையில் இருக்கும் இன்னொரு மருத்துவரிடம், இரண்டாவது கருத்து வாங்க வேண்டும். அந்த இரண்டாவது மருத்துவர் சொல்வதை வைத்து பார்க்கும்போது, நோயாளி, முதலில் தனக்கு மருத்துவம் செய்த மருத்துவர், சேவை குறைபாடாக தனக்கு வைத்தியம் அளித்துள்ளார் என்று முடிவு செய்தால், தான் வைத்தியம் பார்த்த மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளருக்கு Medical Superintendent (M.S), தனது புகாரை அனுப்ப வேண்டும். இதன் நகலை தனது ஏரியாவில் உள்ள முதன்மை மருத்துவ அதிகாரிக்கும் Chief Medical Officer (CMO) அனுப்ப வேண்டும். தனக்கு பதில் ஏதும் வராவிட்டாலோ, அல்லது பதில் கிடைத்து அதில் நோயாளி திருப்தியுராவிட்டாலோ, தனது ஏரியாவில் உள்ள மாநில மெடிக்கல் கவுன்சில்க்கு அந்த புகாரை மீண்டும் அனுப்ப வேண்டும். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை. மாநில மருத்துவ கவுன்சில் அனுப்பிய பதிலிலும் திருப்தி இல்லாவிட்டால், நோயாளி மீண்டும் அகில இந்திய மருத்துவ கவுன்சில்க்கு அனுப்ப வேண்டும். அகில இந்திய மருத்துவ கவுன்சில், இந்த நடைமுறைக்கு, நோயாளி வசம் ரூபாய் 500/ – ஐ, வசூலிக்கும். இதில் குற்ற நிகழ்வு ஏதும் நடந்திருந்தால், அருகாமையில் உள்ள காவல் துறைக்கும் புகார் அளிக்கலாம். (உதாரணமாக, கிட்னி திருட்டு)
எப்படி இருந்தாலும், காவல் துறை வழக்கு பதிவு செய்ய, நிபுணர்களின் ஆலோசனை பெற்றே, முடிவெடுப்பார்கள். பாதிக்கப்பட்ட நோயாளி, நுகர்வோர் நீதிமன்றம், சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்களில் தனக்கு தவறான சிகிச்சை கொடுத்ததற்காக அல்லது உடல் உறுப்புகளை தனது சம்மதம், அறிவுக்கு எட்டாமல் எடுத்ததற்காக இழப்பீடு கேட்டும், மருத்துவர்கள் , மருத்துவமனைகள் மீது வழக்கு தொடுக்கலாம்.
நன்றி – கன்சூமர் கவுன்சில் ஓப் இந்தியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...