13 செப்டம்பர் 2014

உலக முதல் உதவி தினம்

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
 
உலக முதலுதவி தினம் இன்று (செப்டம்பர் 13 )
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் இரண்டாம் வாரத்தின் சனிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. உலக செஞ்சிலுவை கூட்டமைப்பு கடந்த பதினான்கு வருடங்களாக உயிர்களை காப்பதில் முதலுதவியின் முக்கியத்துவத்தை உணர வைக்க இந்த நாளை கொண்டாடி வருகிறது.
ஒரு உயிரைக்காக்க,மேலும் ஆபத்து ஏற்படாமல் இருக்க,ஒரு குறிப்பிட்ட தாக்குதலில் இருந்து பாதிக்கப்பட்டவரை மீட்க என்று பலவற்றுக்கு முதலுதவி பயன்படுகிறது.
முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும். சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயப்பட்ட நபர்க்கு அளிக்கப்படும்.
1859இல் தான் ஜீன் ஹென்ரி டுனன்ட் ,சல்பிரினோ போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய கிராமவாசிகளை திரட்டினார் .அவர்கள் முதலுதவியையும் செய்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், நான்கு நாடுகள் ஜெனீவாவில் சந்தித்து ,போரால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவுவது என்ற நோக்கத்தோடு ஒரு சங்கத்தை உருவாக்கின .அதுதான் பின்னாளில் செஞ்சிலுவை சங்கமாக வளர்ந்தது. அதன் பிறகு புனித ஜான் அவசர ஊர்தி 1877 இல் தொடங்கப்பட்டது.அது முதலுதவியை கற்பிப்பதற்கென தொடங்கப்பட்டது. அதோடு அதனுடன் நிறைய சங்கங்கள் இணைந்தன. இது போன்ற செயல்களால் முதலுதவி என்னும் சொல் 1878இல் முதன்முதலில் வழங்கப்பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...