31 ஜூலை 2014

Http://www.ilovesathy.blogspot.com-நான் விரும்பும் சத்தி

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.
                  ''கொங்குத்தென்றல்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.  அரசியல்,மதம்,இனம்,சாதி,மொழி வேறுபாடின்றி செயலாற்ற  I LOVE SATHY அதாவது ''நான் விரும்பும் சத்தி'' விளக்கமாக கூறவேண்டுமானால் , நான் விரும்பும் சத்தியமங்கலம்..என்னும் பெயரில் சமுதாய நலனுக்கான குழு- புதியதாக உருவாக்கி உள்ளோம்.     நம்ம சத்தியமங்கலத்தின் இணையதளத்தினை   பயன்படுத்தும் நண்பர்கள் அனைவரும் இணைந்து ஒரு வலைப்பின்னலை உருவாக்கி,24 X 7 முறையில் இளைய சமுதாயத்திற்கு தன்னம்பிக்கை வழிகாட்டுதல்,எதிர்காலத்தில் வாழ்க்கைமுறையினை ஒழுங்குபடுத்துதல்,சமுதாய மற்றும் கலாச்சார சீர்கேட்டிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுதல்,மகளிருக்கான வன்முறை மற்றும் வெளியூர் வேலைகளுக்கு செல்லும்போது பாதுகாப்பு முறையினை தெளிவுபடுத்துதல்,மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு வகையான பயிற்சிகளை அல்லது பயிற்சி மையங்களை நிறுவி அவ்வப்போது பயிற்சி கொடுத்தல்,இயற்கை வளங்களை பாதுகாத்தல்,மருத்துவ தாவரங்களை பாதுகாத்தல் மற்றும் வெளிக்கொணர்தல்,உடலின் இயக்கம் மற்றும் உடல் பராமரிப்பு ,சுற்றுலாவின் முக்கியம்,முதியோர்களை பாதுகாத்தல்,குழந்தைகளை பேணி காத்தல்,சிக்கனத்தை போற்றுதல்,தேவையற்ற பொருட்களை வாங்காமல் இருத்தல்,உள்ள சூழலுக்கேற்ப வாழ்க்கையினை மகிழ்ச்சி கரமாக்குதல்,போதைப்பொருட்களை தவிர்த்தல்,குடும்ப உறவு பேணுதல்,மன அழுத்தமும் வாழ்க்கைமுறைகளும் மற்றும் உணவு முறைகளும் உடல் நலமும்  பற்றிய கருத்தரங்கு என  இன்னும் பல சமூகம் சார்ந்த முன்னேற்றத்திற்கான சேவைப்பணிகளை செய்யலாம் ,சிறு கையேடு அச்சிட்டு வெளியிடலாம்,பிற சமூக அமைப்புகளோடு இணைந்து பணியாற்றலாம்,பள்ளிகள்,கல்லூரிகள்,பொதுமக்களுடன் ,அரசு துறைகளுடன்,காவல்துறையுடன்,இணைந்து நம்ம தனித்துவம் இழக்காமல் பணியாற்றலாம்,வாங்க..
உங்களுடைய கருத்தினையும் கூறுங்க...மேலும், 
''நான் விரும்பும் சத்தி'' -  I LOVE SATHY
இணையதள நண்பர்கள் குழுவிற்காக http://www.ilovesathy.blogspot.com 
    என்னும்  புதிய வலைப்பூ ஒன்றினையும் துவக்கி உள்ளோம்.அதனையும் பார்வையிடுங்க..உங்களது தொடர்புக்கு நாங்க மதிப்பளிக்கிறோம்,உங்க கருத்துக்கு நாங்க மதிப்பளிக்கிறோம்.செய்பவர் யார்?என்பது முக்கியமில்லைங்க! செயல்களே முக்கியமுங்க!!..ஆலோசனைக்கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ளுங்க.அல்லது தங்களது கருத்தினை மின்னஞ்சல் மூலம் தெரிவியுங்க.... எனது மின்னஞல் முகவரி; paramesdriver@gmail.com மொபைல் எண் #+91 9585600733 நன்றிங்க! என அன்பன் ,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...