06 ஜூலை 2014

நம்ம தாளவாடியில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்.

Saturday, 5 July 2014

இலவச பொது மருத்துவ முகாம்-தாளவாடி


மரியாதைக்குரியவர்களே,
                         வணக்கம்.
       கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.

           ஈரோடு மாவட்டம் தாளவாடியில் நாளை காலை குட்டைகரை ஸ்கூல் என்று அழைக்கப்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
         அதற்கான விளம்பரம் இன்று 5.7.2014 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6.30 மணிவரை தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களுக்கான விளம்பரம் செய்யப்பட்டது.
  திரு.பரமேஸ்வரன்.C அவர்கள், செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் பிரச்சாரத்தின் பொறுப்பு ஏற்று பரப்புரை நிகழ்த்தினார்..உடன் திரு.T.P.இரகுபதி B.Pharm.,அவர்களும்
KCT மெட்ரிகுலேசன் பள்ளி,ஆசிரியர்களும்,ஓட்டுநர்களும் இரு வாகனங்களில் பிரச்சாரத்திற்கு வந்து உதவினர்.6000நோட்டீஸ்கள் தமிழிலும்,கன்னடத்திலும் விநியோகித்து விளம்பரம் செய்யப்பட்டது.
 தமிழில் அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகித்த நோட்டீஸ் விவரம் கீழ்கண்டவாறு அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

                              சிறப்பு இலக்கு படை, சத்தியமங்கலம்.
                            KGR மருத்துவமனை,சத்தியமங்கலம்.
                           KCT மெட்ரிகுலேசன் பள்ளி,ராமாபுரம் - தாளவாடி
                                                                            இணைந்து நடத்தும்

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்
பொது இலவச அறுவை சிகிச்சை மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம்.

  நாள்; 06.07.2014, ஞாயிற்றுக் கிழமை
நேரம்; காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
இடம்;  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,மைசூர் ரோடு,தாளவாடி.
               
                                              நிகழ்ச்சி நிரல்

சிறப்பு விருந்தினர் மற்றும் 
முகாமை தொடங்கி வைப்பவர்;
                                                      திரு.S.V.கருப்பசாமி IPS.,அவர்கள்
                                                   காவல் கண்காணிப்பாளர் 
                                                                                   (Supt.Of Police),
                                                 சிறப்பு இலக்கு படை,
                                                   சத்தியமங்கலம்.
தலைமை;                        திரு.K.பிரபாகர் அவர்கள்
                                         கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
                                                                               (Addl.Supt.Of Police),
                                          சிறப்பு இலக்கு படை,
                                               சத்தியமங்கலம்.
  முன்னிலை;  Dr.K.G.ரங்கநாதன் M.S.FICS.,அவர்கள்
                                         K.G.R.மருத்துவமனை,
                                             சத்தியமங்கலம்.
                                    திருமதி. R.ராஜம்மா M.A.,M.Ed.,  
                                   உதவி தொடக்க கல்வி அலுவலர்,
                                                  தாளவாடி.
                                      Dr.S.S.பாலு M.B.B.S.,அவர்கள்
                                      KGR மருத்துவமனை,
                                           சத்தியமங்கலம்.
                                  திரு.M.சுரேஷ்குமார் M.Sc.,B.Ed.,MBA.,
                                 தாளாளர், KCT மெட்ரிகுலேசன் பள்ளி,
                                                         தாளவாடி.
முகாம் ஒருங்கிணைப்பாளர்; 
                                 திரு.T.P.இரகுபதி B.Pharm.,அவர்கள்,
                                             சத்தியமங்கலம்.
______________________________________________________________________________
பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு 
                                                                   அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 பொதுமக்களுக்கு மருத்துவ முகாமில் 
                         இலவசமாக சிகிச்சையும்,மருந்துகளும் வழங்கப்படும்.
_________________________________________________________________________________
                                         KGR மருத்துவமனை
9,கொட்டணக்கார வீதி,அத்தாணி ரோடு,சத்தியமங்கலம் - 638401 
                                          போன் 04295 220406

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...