மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வார்...
“அடேய் ...இந்த ஒலகத்துல ரெண்டே ரெண்டு
அறிவாளிங்கதான்....ஒண்ணு அந்த ஜி.டி நாயுடு.. ...இன்னொண்ணு நான்தான்” ...நண்பர்களே,இந்த வசனம் படத்தில் பார்த்தபோது சிந்தனையில்லாமல் நாம் சிரித்திருக்கலாம்.ஆனால் நினைத்துப்பாருங்கள்........
·

அப்போது சிரித்தாலும் இப்போது நினைத்தால் ...மலைப்பாக இருக்கிறது ஜி.டி.நாயுடு என்ற அந்த மஹா மேதையை நினைத்து...!
கோயம்புத்தூர் மாவட்டம் கலங்கல் கிராமத்தில் பிறந்தவர்தான் நம்ம ஜி.டி. நாயுடு..!
துவக்கக் கல்வியை மட்டுமே முடித்த ஜி.டி.நாயுடுவுக்கு இந்தியாவில் பிறந்த ஒரே காரணத்துக்காக உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை...
[ எந்த மேதையை வாழும்போதே நாம் மதித்தோம்..? ]
1920 ஒரு பஸ் வாங்கி விடுகிறார்... பொள்ளாச்சியிலிருந்து பழனிவரை...டிரைவர், கண்டக்டர், கிளீனர், முதலாளி எல்லாமே அவர்தான் ...!
1922 ல் இரண்டு பஸ்கள்.. 1933 ல் .. 280 பஸ்கள் ..!
1938 ஆம் ஆண்டு அத்தனை பேருந்துகளையும்
கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தாராம் ஜி.டி.நாயுடு...!
விவசாயத்திலும் வியக்கத்தக்க பல சாதனைகளைக் கண்டுபிடித்த நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு காரணம் ...அன்றைய அரசு அவரது கண்டுபிடிப்புகள் மீது காட்டிய அலட்சியம்...!
அதோடு விட்டார்களா..?அவர்மேல் அதிகபட்ச வரியையும் சுமத்தினார்கள்..!!
வருமானவரி மீதான அபராதமும் ஏறிக்கொண்டே போனது. எனவே, மனம் உடைந்து போன நாயுடு...”எனக்கு சொத்து இருந்தால் தானே ஜப்தி செய்வீர்கள்..? ” என்று புது கார், வீட்டில் இருந்த விலை மதிப்புள்ள பொருட்கள் எல்லாவற்றையும் உடைத்துப் போட்டு விட்டாராம்...
மனக் கொதிப்போடு மரணத்தை தழுவினார் ஜி.டி.நாயுடு .. 1974-ல்..!….
ஜி.டி.நாயுடுவை நினைக்கும்போது பாரதியின் இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன ...!
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக