21 ஜூலை 2014

கண் தானம் விழிப்புணர்வு பேரணி-நம்ம சத்தியமங்கலத்தில்...

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவ,மாணவியர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு இணைந்து நடத்திய கண் தானம் விழிப்புணர்வு பேரணி காட்சியில் சில..........

    அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்பு நெடுஞ்சாலையின் இடதுபுறமாக பேரணியை திருமிகு.போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள்   துவக்கி வைக்கிறார்.

     கண் தானம் விழிப்புணர்வு பேரணியில் முன்னிலை வகித்த அரிமா.K.லோகநாதன் அவர்கள் (லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்) மற்றும் கல்லூரி பேராசிரியர் திரு.அழகேந்திரன் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அவர்களும் பிற பேராசிரிய பெருமக்களும்....தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்- பேரணியில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு நிர்வாகிகளும்,போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களும்.....

 கண் தானம் விழிப்புணர்வு  பேரணி ''கோகுல் சில்க்ஸ்'' கடை வழியாக செல்கிறது.

தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் பேரணி விளம்பரத்தை ஏந்தி வந்த மாணவிகளுக்கு மனமார்ந்த நன்றிகளும்,பாராட்டுக்களும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக