21 ஜூலை 2014

கண்தானம் -விழிப்புணர்வு கருத்தரங்கம்& பார்வைக்கோர் பயணம் பேரணி-நம்ம சத்தியமங்கலத்தில்.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
கண்கள் பாதுகாப்பு மற்றும் கண் தானம் விழிப்புணர்வு கருத்தரங்கு 
 21-07-2014 திங்கட்கிழமை இன்று காலை பத்து மணிக்கு மஞ்சள் நகரமாம் ஈரோடு மாவட்டத்தின் சந்தன நகரமாம் நம்ம சத்தியமங்கலத்தில் உள்ள காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் மூன்று மணி நேரம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியிலிருந்து பேருந்து நிலையம் வரை  பார்வைக்கோர் பயணம் மாபெரும் பேரணி நடந்தது.அத்துடன் கண் தானம் விழிப்புணர்வு நோட்டீஸ் பிரச்சாரமும் செய்யப்பட்டது.
           அதன் படங்களில் சில மட்டும் தங்களது பார்வைக்காக..                  வருகை புரிந்த அனைவருக்கும் மிக்க நன்றிங்க.குறிப்பாக தாளவாடி ராமாபுரம் 
கொங்கு சேரிட்டபிள் டிரஸ்ட் மெட்ரிக் பள்ளி 
                                    (KCT MATRIC SCHOOL- THALAVADI) 
          தாளாளர் திருமிகு.சுரேஷ்குமார் ஐயா அவர்களுக்கு தனிப்பெரும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

                 திங்கட்கிழமை எத்தனையோ கடினப்பணிகளுக்கு இடையிலும் இந்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு துவக்கவுரை ஆற்றிய திருமிகு.Dr.K.G.ரங்கநாதன் M.S.,FICS ., KGR மருத்துவமனை சத்தியமங்கலம் அவர்களுக்கும்,பேரணியினை துவக்கிவைக்க உரிய நேரத்தில் விரைவாக வருகை தந்து கல்லூரி மாணவ சமுதாயத்திற்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைத்த திருமிகு.காவல் ஆய்வாளர்(சட்டம்&ஒழுங்கு) சத்தியமங்கலம் மற்றும் திருமிகு.போக்குவரத்து ஆய்வாளர் சத்தியமங்கலம் அவர்களுக்கும் காமதேனு கல்லூரி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு& சாலை பாதுகாப்பு சங்கம் சார்பாக  நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


 காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவ,மாணவியர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் இணைந்து நடத்திய கண் தானம் விழிப்புணர்வு பேரணி பேனர் (மேலே).....மற்றும் கண் தான கருத்தரங்கம் பேனர் (கீழே)....                                                            மரியாதை.


மரியாதை                                                               மரியாதை

                                                        மரியாதை


                                              மரியாதை


              இந்த நிகழ்ச்சியில் புகைப்படங்கள் எடுத்து,சிறப்பான சேவையாற்றிய திரு.பாண்டி அவர்கள்-சிவகாசி பட்டாஸ் நகர் அவர்களுக்கும்,கார் ஓட்டுநர் அவர்களுக்கும் சத்தியமங்கலம் மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

''பார்வைக்கோர் பயணம்'' ''தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்'' பேரணியில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த பிரச்சார நோட்டீஸ் இதுதாங்க...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக