10 மே 2017

மாமேதை கால்டுவெல்

    

கால்டுவெல் 1814-1891

     
                               ஐரோப்பிய குருமார்கள் தமிழ் மொழியினால் ஈர்க்கப்பட்டு, அதன்  சிறப்புகளில் மயங்கி, அதன் மேன்மைகளை மேதினிக்குப்  புலப்படுத்தினர். அவருள் முதன்மையானவர், தமிழ் தனித்தன்மை  வாய்ந்த மொழி, செம்மொழி  திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த  முதல் மொழி எனக்கூறி, உரிய சான்றுகளுடன் நிறுவிய மாமேதை  கால்டுவெல்!  டாக்டர் கால்டுவெல் தமிழகத்தில் தங்கியிருந்தபோது  தமிழ் மொழியை மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம்  போன்ற பிற திராவிட மொழி கற்றவராக விளங்கினார். அதன்பயனாக,  தமிழ் உள்ளிட்டதென்னிந்திய மொழிகளை குறித்திட, ‘திராவிட  மொழிகள்’ என்னும் சொல்லாக்கத்தை முதன்முதல் உருவாக்கி  உலகுக்கு அறிமுகம் செய்தார்.

வடமொழிச் சார்பாளர்கள் போலவே கீழை நாட்டு அறிஞர்கள் சிலரும்  திராவிடமொழிகளை சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை என்றே  கூறினர். அவர்களின்அக்கருத்தை கால்டுவெல் அவர்கள் வன்மையாக  மறுத்து, திராவிட மொழிகள் தனித்தன்மை வாய்ந்தவை; அவற்றுள்ளும்  தமிழ் வடமொழியின் துணையின்றி தனித்து இயங்கும் ஆற்றல்  உடையது என அழுத்தம் திருத்தமாக சான்று காட்டி நிறுவினார்.   இதன் காரணமாகத்தான், திமுக, கால்டுவெல்லை என்றும் நன்றியுடன்  போற்றி வருகிறது. 1968ம் ஆண்டில் நடத்திய இரண்டாம் உலகத் தமிழ்  மாநாட்டின்போது, 2.1.1968ல் சென்னை கடற்கரை காமராசர் சாலையில்  டாக்டர் கால்டுவெல்லின் திருவுருவச்சிலையை நிறுவினோம்.  கோவையில் 27.6.2010ல்  நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி  மாநாட்டு நிறைவு விழாவில் டாக்டர் கால்டுவெல் நினைவாகச் சிறப்பு  அஞ்சல் தலை வெளியிட ஆவன செய்தோம். .

 எங்கோ பிறந்து, தமிழகத்திற்கு வந்து, சமயத் தொண்டுகளாற்றி,  தமிழ் மொழியைக் கற்று, அதன் இன்பத்தில் தோய்ந்து, தமிழ்  மொழியில் இயல்பாய் அமைந்துள்ள மொழியியல் சிறப்பைக் கண்டு  வியந்து, தமிழின் மேன்மையை மேதினில் நிலைநாட்டிய மாமேதை  டாக்டர் கால்டுவெல்  கொடைக்கானல் மலையில் 28.8.1891ல்  மறைவெய்தினார். அவரது உடல், அவர் 50 ஆண்டுகாலம்  தங்கியிருந்து சமயத்தொண்டுகள் ஆற்றிய, இடையன்குடியில், அவர்  எழுப்பிய தேவாலய வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.


தமிழ் மொழிக்கு அருந் தொண்டு ஆற்றிய - திரா விட மொழிகளின் ஒப்பிலக் கணம் தந்த அறிஞர் கால்டுவெல் பாதிரியார் 50 ஆண்டு காலம் வாழ்ந்த நெல்லை மாவட்டம் இளை யான்குடி வீட்டினைப் புதுப் பித்து மானமிகு கலைஞர் தலைமை யிலான தி.மு.க. அரசு நினைவுச் சின்னமாக நாட்டுக்கு அர்ப்பணித் துள்ளது.

முதல்வர் கலைஞர் காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். தமிழுக்கு உழைத்தவர் களையெல்லாம் வரலாற் றில் வாழ வைத்த பெருமை தி.மு.க. அரசுக்கு உண்டு.

அதிலும் குறிப்பாக கால்டுவெல் அவர்களுக் குச் செய்யப்பட்டுள்ள சிறப்பு மிகமிகப் போற்று தலுக்கு உரியது.

கால்டுவெல் பற்றி மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறுகிறார்:

மொழி நூலானது உலக மொழிகள் எல்லாவற் றையும் தழுவும் ஒரு பொதுக் கலை. உலக மொழிகள் எல்லாவற்றை யும் ஆரியம் (Aryan) , சேமியம் (Semitic), துரேனியம் (Turanian) என்னும் முப்பெருங் குலங்களாகப் பிரித்துள் ளார் மாக்கசு முல்லர். அவற்றுள் துரேனியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திராவிடக் குடும்பத்தின் மொழிகளைத் திறம்பட வகுத்துக் காட்டியவர் கால்டுவெல்.

இங்ஙனமே பிறரும் பிற குடும்பங்களை வகுத்துக் காட்டி உள்ளனர். மேற்கூறிய முக்குலங்கட் கும் உள்ள தொடர்பை ஆராய்வதே இந்நூலின் நோக்கம்.

அவற்றுக்கொரு தொடர்புண்டென்று; அஃதாவது அம்மூன்றும் ஒரு குலத்தினின்றும் கவைத்திருக்க வேண்டு மென்று சென்ற நூற்றாண் டிலேயே மாக்கசு முல்லர் (Max Muller) திடமாகக் கூறிவிட்டார்.  அம்மூலத்திற்குத் திரா விடம் மிக நெருங்கிய தென்று கால்டுவெல் கூறியுள்ளார்.

இக்கூற்றை என்னாலியன்ற வரை முயன்று மெய்ப்பித்திருக் கிறேன் - என்று மொழி ஞாயிறு அவர்களின் உயர்ந்த படைப்பான ஒப் பியன் மொழி நூல் எனும் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் என்றால் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே இத்திசையில் சிந் தனையை செலுத்திய ஒரு வெளிநாட்டு அறிஞரை- அயர்லாந்துக்காரரை - அதுவும் வெளிநாட்டு மதத்தைச் சேர்ந்த கிறித் துவப் பாதிரியாரை - தமிழர் கள் எவ்வளவுத் தூரம் தூக்கி வைத்தும் புகழ வேண்டுமே!

தெலுங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், கன்னடம் 1500 ஆண்டு களுக்கு முன்பும், 750 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளமும் ஆரிய மொழியான சமஸ்கிருத கலப்பால் பிரிந்தன என்பது தமிழ் அறிஞர்கள் ஆய்ந்து சொன்ன அதே கருத்தை தந்தை பெரியார் அவர் களும் கூறியிருக்கிறார் என்பது சுட்டிக் காட்டத் தகுந்ததாகும்.

கிறித்துவப் பாதிரியார் கள் செய்துள்ள தமிழ்த் தொண்டில் கால்டுவெல் இயற்றிய திராவிட மொழி களின் ஒப்பிலக்கணம் அடிக்கோடிட்டுக் குறிப்பிடப் பட வேண்டிய பொன்னே டாகும்.

ஓவியக் கல்லூரியில் பயின்றவர்; 1838 முதல் மரணத்தின் வாயிலில் புகும் வரை (1891 ஆகஸ்ட் 28) தமிழ்த் தொண்டாற்றிய பெருமகனாரை நன்றி உணர்வோடு பேற்றுவோம்!
 அறிஞர் கால்டுவெல் தமது 77 ஆண்டுகளில் 53 ஆண்டுகள்  தமிழகத்தில் வாழ்ந்துள்ளார். தமிழ் மொழிக்கு செய்த தொண்டுகளால்  இன்றும் உலகம் முழுவதும் புகழப்படுகின்ற அந்த மாமேதை  கால்டுவெல் பிறந்த 200ம் ஆண்டு 7.5.2014ல்  நிறைவுபெறும்  வேளையில் அப்பெருமகனாரை ஒட்டுமொத்த உலகத் தமிழ் சமுதாயம்  சார்பில் நன்றியுடன் நினைந்து வணங்கி மகிழ்வோம். தமிழ் மொழிக்கு  செய்த தொண்டுகளால் இன்றும் உலகம் முழுவதும் புகழப்படுகின்ற  அந்த மாமேதை கால்டுவெல் பிறந்த 200ம் ஆண்டு 7.5.2014ல்  நிறைவுபெறும் வேளையில் அப்பெருமகனாரை ஒட்டுமொத்த உலகத்  தமிழ் சமுதாயம் சார்பில் நன்றியுடன் நினைந்து வணங்கி மகிழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...