27 செப்டம்பர் 2014

அதிமதுரம் மருத்துவ குணம்.

மரியாதைக்குரியவர்களே,
                              வணக்கம். நாட்டு மருத்துவம் படியுங்க...
அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் !
சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான பொருளை தெரியுமா? அது தான் அதிமதுரம்! உலகின் சில பகுதிகளில் குழந்தைகள், மிட்டாய் போல் அதிமதுர வேரை சுவைக்கின்றனர். இனிப்பது மட்டுமல்ல, அதிமதுரம் ஆயுர்வேதத்தில் முக்கியமான மருந்து. சக்தி வாய்ந்த ‘டானிக்’! தவிர மேலும் பல மருத்துவ குணங்கள் கொண்டது.
*அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருள், உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலைத் தீர்ப்பதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.
* ஊட்டச்சத்தாகவும், ரத்தப்போக்கை நிறுத்துவதிலும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
* அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவில் எடுத்து இலேசாக வறுத்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
* அதிமதுரம், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்துக் கொண்டு, 20 கிராம் பொடியை 200 மி.லி. தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மி.லி.யாக சுண்டியதும் வடிகட்டி, காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால், கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்துக்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கை நிறுத்திவிடலாம்.
* அதிமதுரச் சூரணத்தை தயாரித்து வைத்துக்கொண்டு 1 அல்லது 2 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண்மைப் பலவீனம் நீங்கும். உடல் பலமும் ஆரோக்கியமும் கூடும்.
* பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களை அதிமதுரம் நிவர்த்தி செய்யும்.
* அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக் கொண்டு, இரவு படுக்கும்போது சிறிது பாலில் கலந்து சாப்பிட்டால் மலச் சிக்கல் இருக்காது.
* சோம்புச் சூரணம், அதிமதுரச் சூரணம் இரண்டையும் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு வெந்நீர் பருகினால் இலகுவாக மலம் வெளியாகும். உள்உறுப்புகள் சூடு தணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.
* அதிமதுரச் சூரணம், தூய சந்தனச் சூரணம் இரண்டையும் தலா அரை கிராம் எடுத்து பாலில் கலந்து, மூன்று வேளை சாப்பிட்டால் வாந்தியுடன் ரத்தம் வருவது நிற்கும். உடல் உள்உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

1 கருத்து:

  1. அன்புள்ள அய்யா திரு.பரமேஸ்வரன் அவர்களுக்கு,
    வணக்கம்.
    மருத்துவ குணமுள்ள பல அரிய கருத்துகளைத் தருகிறீர்கள்...பாராட்டுகள். வாழ்த்துகள்.
    எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து தாங்கள் கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...