02 செப்டம்பர் 2015

வியட்யாமின் புரட்சித்தலைவர் ஹோ சி மின் ...

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.
               ஹோ சி மின் (Hồ Chí Minh மே 19, 1890 – செப்டம்பர் 2, 1969) வியட்நாமின் புரட்சித் தலைவராக இருந்தவர், பின்னர் வடக்கு வியட்நாமின் பிரதமராகவும் (1946–1955), அதிபராகவும் (1946–1969) இருந்தவர்.
வியட்நாமின் விடுதலைக்கு களமாடிய ஹோசிமின்னுக்கு பெற்றோர் வைத்த பெயர் சிங்சுங். ஆனால் தங்கள் நாட்டை ஒளியேற்ற வந்தவர் என்பதாக குறிக்கும் ஹோசிமின் என்று மக்கள் அழைத்த பெயரான ஹோசிமின் என்பதே வரலாற்றில் நிலைத்து நின்று விட்டது.
ஹோசிமின் சிறுவனாக இருந்தபோது வியட்நாமை பிரான்ஸ் ஆண்டு கொண்டிருந்தது. அங்கு போராடிக்கொண்டிருந்த கெரில்லா குழுக்களுக்கு ஹோசிமின் தனது சிறு வயதிலேயே சிறுசிறு உதவிகள் செய்து தன்னை தொடர்பு படுத்திக்கொண்டிருக்கிறார். அந்த சிறுவயதிலேயே வியட்நாமை அந்நியரிடமிருந்து விடுதலை பெறச்செய்யவேண்டும் எனும் கனல் ஹோசிமின் உள்ளத்தில் எரிந்துகொண்டிருந்தது. பிரான்ஸின் பெரும்படையை எதிர்கொள்ளமுடியாமல் பிரான்ஸைப் பற்றி அறிந்துகொள்ள அந்த நாட்டிற்கே சென்று அங்கு ஒரு கடையில் வேலை பார்த்துக்கொண்டே தான் வந்த வேலையையும் செய்துவந்தார்.
அந்த சூழலில் ஜப்பானிய படைகள் வியட்நாமில் நுழைந்து பிரான்ஸை விரட்ட, மக்கள் மகிழ்ச்சியில் இருந்தபோது ஹோசிமின் தனது நாட்டிற்கு திரும்பி வந்தார். வந்ததும் மக்களை எச்சரித்தார். 'நமக்கான மூக்கணாங்கயிறுதான் மாறியிருக்கிறதே தவிர, விடுதலை கிடைக்கவில்லை' என்றார். ஜப்பானிய படை இவரைக் கைதுசெய்ய தேட, காட்டிற்குள் தங்கி பெரும்படையை நிர்மாணித்தார். தக்க சமயத்தில் ஜப்பான் படையை வீழ்த்தி, உடனே தேர்தல் நடத்த மக்கள் இவரையே தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
அதற்கு பின் பிரான்ஸ் உள்ளிட்ட மற்ற நாடுகளில் தாக்குதல்களை வெற்றிகரமாக சமாளித்து வியட்நாமை சுதந்திர பூமியாக்கியவர் ஹோசிமின்

1 கருத்து:

  1. மாபெரும் புரட்சியாளர் ஹோசிமின் குறித்து எனக்கு தெரியாத தகவல்களை தந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...