மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
இந்திய தண்டனைச் சட்டம் என்றால் என்ன? என்பது பற்றி தெரிந்துகொள்வோம்..
இந்திய தண்டனைச்-சட்டம் (Indian Penal Code) இந்தியாவின் முக்கிய குற்ற குறியீடாகும்.இது குற்றவியல் சட்டத்தின் அனைத்து பிரத்தியேக அம்சங்களையும் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது. இது 1860 ல் வரையப்பட்டு 1862 ல் பிரித்தானிய ஆட்சியின் போது காலனித்துவ இந்தியாவில் அமலுக்கு வந்தது. இது பல முறை திருத்தம் செய்யப்பட்டு, இப்போது மற்ற குற்றவியல் விதிமுறைகளையும் தன்னுள்ளே கொண்டு விரிவடைந்துள்ளது.
சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய தண்டனைச் சட்டம் பாக்கிஸ்தான் (இப்போது பாக்கிஸ்தான் தண்டனைச் சட்டம் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் வங்காளத்தால் ஏற்கப்பட்டு தங்களது நாட்டின் தண்டனைச் சட்டமாக விளங்கி வருகிறது. இது பர்மா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் புருனே பொன்ற நாடுகளால் தழுவப்பட்டு , அந்த நாடுகளின் தண்டனைச் சட்டமாக இருந்துவருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக