மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். இந்திய அரசியலமைப்பு உருவானது பற்றி அறிந்துகொள்வோம்.
இந்திய அரசியலமைப்பு உருவான வரலாறுதொகுப்பு,
இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதி 1858 லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த காலத்தில் வெளிநாட்டு ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக உயர்வு கண்டது. 1934-ல் இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய சபை வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. பின்னர் 1936-இலும் 1939-இலும் இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதன்படி, அரசியல் நிர்ணய சபையை உருவாக்கலாம் என கிரிப்ஸ் தூதுக்குழு மார்ச்-1942-ல் பரிந்துரைத்தது. பின்னர் வந்த அமைச்சரவைத் தூதுக்குழு (மே-1946) அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன்படி அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், ஜூலை 1946-ல் நடைபெற்றது. டிசம்பர் 1946-ல் அரசியல் நிர்ணய சபை கூடியது. அச்சபையின் தலைவராக டிசம்பர்-11, 1946-ல் இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1947,ஆகஸ்ட் 15-ல் பிரித்தானிய இந்தியாவானது இந்திய மாகாணம், பாக்கிஸ்தான்
மாகாணம் என்ற இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டதால் சுதந்திர
இந்தியாவிற்கான அரசியலமைப்பை மட்டும் உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய சபை
செய்ய வேண்டியதாயிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக