08 செப்டம்பர் 2015

ஓடும் தண்ணீரை அளவிடுவது எப்படி?

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். ஓடும் தண்ணீரை அளக்க பல அளவுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.எனினும் V வடிவ முறை அதாவது முக்கோண வடிவமுறைதாங்க அதிகமாக பயன்பாட்டில் உள்ளதும் எளிமையானதும் ஆகும்.
          முக்கோண நீர்வழி முறையில் அடிப்பகுதி 90 டிகிரி கோண அளவும் இருபுறமும் 45 டிகிரி கோண அளவும் உள்ள சாதனம் அல்லது கருவி பயன்படுத்த வேண்டும். அல்லது தண்ணீர் ஓடும் பாதையை அடிப்பகுதி 90 டிகிரி கோண அளவு உள்ளவாறு முக்கோண வடிவில் கட்டமைக்க வேண்டும்.

V வடிவ வழியில் 
ஒருவிநாடி நேரத்தில்                          அப்போது வெளியேறும் தண்ணீரின் அளவு
ஓடும் தண்ணீரின்                                     லிட்டர் அளவில்....                                                   
உயர அளவுசெ.மீட்டரில்.
4.0செ.மீ.  -----------------------------------------0.45 லிட்டர்/விநாடி                                4.5செ.மீ.------------------------------------------ 0.60 லிட்டர்/விநாடி    
5.0செ.மீ.------------------------------------------ 0.80 லிட்டர்/விநாடி   
5.5செ.மீ.------------------------------------------ 1.0 லிட்டர்/விநாடி   
6.0செ.மீ.------------------------------------------ 1.2 லிட்டர்/விநாடி   
6.5செ.மீ.------------------------------------------ 1.5 லிட்டர்/விநாடி   
7.0செ.மீ.------------------------------------------ 1.8லிட்டர்/விநாடி   
7.5செ.மீ.------------------------------------------ 2.2 லிட்டர்/விநாடி
 8.0செ.மீ.------------------------------------------ 2.5 லிட்டர்/விநாடி
 8.5செ.மீ.------------------------------------------ 2.8 லிட்டர்/விநாடி
 9.0செ.மீ.------------------------------------------ 3.4 லிட்டர்/விநாடி
 9.5செ.மீ.------------------------------------------ 3.9 லிட்டர்/விநாடி
10.0செ.மீ.------------------------------------------ 4.5 லிட்டர்/விநாடி
10.5செ.மீ.------------------------------------------ 5.1 லிட்டர்/விநாடி
11.0செ.மீ.------------------------------------------ 5.7 லிட்டர்/விநாடி
11.5செ.மீ.------------------------------------------ 6.3 லிட்டர்/விநாடி
12.0செ.மீ.------------------------------------------ 7.1 லிட்டர்/விநாடி
12.5செ.மீ.------------------------------------------ 7.8லிட்டர்/விநாடி
13.0செ.மீ.------------------------------------------ 8.6 லிட்டர்/விநாடி
13.5செ.மீ.------------------------------------------ 9.5 லிட்டர்/விநாடி
14.0செ.மீ.------------------------------------------ 10.5 லிட்டர்/விநாடி
14.5செ.மீ.------------------------------------------ 11.3லிட்டர்/விநாடி
15.0செ.மீ.------------------------------------------ 12.3 லிட்டர்/விநாடி
15.5செ.மீ.------------------------------------------ 13.32 லிட்டர்/விநாடி
20.0செ.மீ.------------------------------------------ 25.5 லிட்டர்/விநாடி
25.0செ.மீ.------------------------------------------ 44.5லிட்டர்/விநாடி
    அணைகள் போன்ற பெரிய அளவுகளை ஓடும் நீரின் அளவை கன அடி அளவில் அளவிடப்பட்டு அதை விநாடி நேரத்திற்கு செல்லும் தண்ணீர் டிஎம்சி /விநாடி என குறிக்கப்படுகிறது. டிஎம்சி (TMC) THOUSAND MILLION CUBIC  FEET PER SECOND  என்பதன் சுருக்கமே டி.எம்.சி. ஆகும்.
 ஆயிரம் மில்லியன் என்பது நூறு கோடி கன அடி அளவாகும்.மில்லியன் அளவு மேற்கத்திய நாடுகளின் அளவுமுறையாகும்.
நாம் தசம என்னும்  பத்தின் அடுக்குமுறையில் கணக்கிடுகிறோம். ஆனால் மேற்கத்திய நாடுகள் மில்லியன் என்னும் ஆயிரத்தின் அடுக்குமுறையில் கணக்கிடுகிறார்கள். 

பொறுமை மற்றும் ஆர்வமுள்ளவர்கள் மட்டும் கீழ்கண்ட பதிவினை படித்து அறிய வேண்டுகிறேன்.
10ன் மூன்றடுக்கு ஆயிரம்  அதாவது ஆயிரத்தின் ஒரு அடுக்கு
10ன் ஆறு அடுக்கு மில்லியன் அதாவது ஆயிரத்தின் இரண்டு அடுக்கு,
10 ன் ஒன்பது அடுக்கு பில்லியன் அதாவது ஆயிரத்தின் மூன்று அடுக்கு,
10ன் பன்னிரண்டு அடுக்கு டிரில்லியன் -ஆயிரத்தின் நான்கு அடுக்கு,
10ன் பதினைந்து அடுக்கு க்யோடிரில்லியன் -ஆயிரத்தின் ஐந்து அடுக்கு,
10ன் பதினெட்டு அடுக்கு க்யோன்டில்லியன் -ஆயிரத்தின்ஆறடுக்கு,
10ன் இருபத்தொன்று அடுக்கு செக்ஸ்டில்லியன் -ஆயிரத்தின் ஏழடுக்கு,
10ன் இருபத்திநான்கு அடுக்கு செப்டில்லியன்-ஆயிரத்தின் எட்டடுக்கு,
10ன் ஆறுநூறு அடுக்கு சென்ட்டில்லியன் -ஆயிரத்தின் நூறு அடுக்கு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...