13 ஏப்ரல் 2014

கண் பார்வைத்திறன் பற்றிய விளக்கம்.

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
             
               கண் பார்வை திறனை பற்றி  கொஞ்சம் மேல்மட்டம் வரைக்கும் சென்று அலசுவோம்.
                பார்வைத்திறனைக் குறிக்க 6/24, 6/18, 6/12, 6/6 என்றெல்லாம் எழுதுவதை பார்த்திருப்பீர்கள். 
               ஒரு கண் பரிசோதனை அறையில் 6 மீட்டர் தொலைவில் மாட்டி வைக்கப்பட்டுள்ள இந்த சார்ட்டில் ஒருவரால் அதிலுள்ள முதல் வரி எழுத்தை மட்டும்தான் படிக்க முடிகிறது அல்லது தெரிகிறது என்றால் அவரது பார்வையின் அளவு : 6/60 . அதேபோல முறையே இரண்டாவது வரிசை மூன்றாவது வரிசை ....என்று வரும்போது 6/36, 6/24, 6/18, 6/12, 6/9, 6/6 என்று கணக்கில் கொள்ளப்படும்.

       இந்த கணக்கு எதற்கு?
              அதாவது ஒருவர் போர்டில் உள்ள முதல் வரி எழுத்தை மட்டும் படிக்கிறார் என்றால் அவரது பார்வையின் அளவு 6/60. ஒரு சரியான பார்வை உள்ளவரால் 60 மீட்டர் தூரத்தில் பார்க்க முடிந்த ஒரு பொருளை இந்த 6/60 பார்வை உள்ளவரால் வெறும் 6 மீட்டர் தொலைவில் வைத்தால் மட்டும்தான் பார்க்கமுடியும். அதேபோல 6/24 என்றால் 24 மீட்டரில் பார்க்கவேண்டிய காட்சி 6 மீட்டரில் வைத்தால்தான் அவரால் பார்க்கமுடியும். அப்ப 6/6 என்றால் என்ன? 6 மீட்டர் தொலைவில் பார்க்க வேண்டிய பொருளை அவரால் 6 மீட்டரிலேயே பார்க்க முடிகிறது. எனவே 6/6 என்பதுதான் மனிதர்களுக்கான சரியான பார்வை (normal vision ).

        ஏன் எல்லாவற்றிற்கும் 6 மீட்டரையே எடுத்துக்கொள்கிறார்கள் என்றால் நம் கண்பார்வை குவியத்தை பொறுத்தவரை குறைந்தபட்சம் ஆறு என்னும் 6 மீட்டர் தொலைவிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள்தான் குவியாமல் parallel ஆக வரும். 
             ஆறு மீட்டர்க்கு மேல் 7,8,9,10 என எல்லா மீட்டர் தொலைவிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் parallel ஆக வந்தாலும் 6ஐ மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு காரணம் மிக குறைந்த தூரம் என்பதால் இடவசதி காரணமாக உலகெங்கிலும் பார்வையை அளவீடு செய்யும் தொலைவாக ஆறு என்னும் 6 மீட்டரையே    எடுத்துக்கொள்கிறார்கள்.

             இந்தியாவில் பொதுவாக எல்லா இடங்களிலும் மீட்டர் கணக்கில் பார்வையை அளவிடுவார்கள். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் 6 மீட்டர் என்பதை 20 அடிகளாக வைத்து குறிப்பிடுவார்கள். 6/6 என்பதும் 20/20 என்பதும் ஒன்றுதான். 
              கீழேயுள்ள இந்தப்படத்தில் எழுத்து வரிசைகள் மீட்டர் மற்றும் அடிகள் என்ற இரண்டிலுமே குறிக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
கண் பார்வை திறனை பற்றி சிலர் அவ்வப்பொழுது வினா எழுப்புவதால் அதைப்பற்றி கொஞ்சம் மேல்மட்டம் வரைக்கும் சென்று அலசுவோம்.

பார்வைத்திறனை குறிக்க 6/24, 6/18, 6/12, 6/6 என்றெல்லாம் எழுதுவதை பார்த்திருப்பீர்கள். ஒரு கண் பரிசோதனை அறையில் 6 மீட்டர் தொலைவில் மாட்டி வைக்கப்பட்டுள்ள இந்த சார்ட்டில் ஒருவரால் அதிலுள்ள முதல் வரி எழுத்தை மட்டும்தான் படிக்க முடிகிறது அல்லது தெரிகிறது என்றால் அவரது பார்வையின் அளவு : 6/60 . அதேபோல முறையே இரண்டாவது வரிசை மூன்றாவது வரிசை ....என்று வரும்போது 6/36, 6/24, 6/18, 6/12, 6/9, 6/6 என்று கணக்கில் கொள்ளப்படும்.

அப்படியென்றால் என்ன?
 
அதாவது ஒருவர் போர்டில் உள்ள முதல் வரி எழுத்தை மட்டும் படிக்கிறார் என்றால் அவரது பார்வையின் அளவு 6/60. ஒரு சரியான பார்வை உள்ளவரால் 60 மீட்டர் தூரத்தில் பார்க்க முடிந்த ஒரு பொருளை இந்த 6/60 பார்வை உள்ளவரால் வெறும் 6 மீட்டர் தொலைவில் வைத்தால் மட்டும்தான் பார்க்கமுடியும். அதேபோல 6/24 என்றால் 24 மீட்டரில் பார்க்கவேண்டிய காட்சி 6 மீட்டரில் வைத்தால்தான் அவரால் பார்க்கமுடியும். அப்ப 6/6 என்றால் என்ன? 6 மீட்டர் தொலைவில் பார்க்க வேண்டிய பொருளை அவரால் 6 மீட்டரிலேயே பார்க்க முடிகிறது. எனவே 6/6 என்பதுதான் மனிதர்களுக்கான சரியான பார்வை (normal vision ).

ஏன் எல்லாவற்றிற்கும் 6 மீட்டரையே எடுத்துக்கொள்கிறார்கள் என்றால் குறைந்தபட்சம் 6 மீட்டர் தொலைவிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் தான் குவியாமல் parallel ஆக வரும். ஆறுக்கு மேல் 7,8,9,10 என எல்லா மீட்டர் தொலைவிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் parallel ஆக வந்தாலும் 6ஐ மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு காரணம் மிக குறைந்தது என்பதால் இடவசதி காரணமாக உலகெங்கிலும் 6மீட்டரை பார்வையை அளவீடு செய்யும் தொலைவாக எடுத்துக்கொள்கிறார்கள்.

இந்தியா வில் பொதுவாக எல்லா இடங்களிலும் மீட்டர் கணக்கில் பார்வையை அளவிடுவார்கள். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் 6மீட்டர் என்பதை 20 அடிகளாக வைத்து குறிப்பிடுவார்கள். 6/6 என்பதும் 20/20 என்பதும் ஒன்றுதான். கீழேயுள்ள இந்தப்படத்தில் எழுத்து வரிசைகள் மீட்டர் மற்றும் அடிகள் என்ற இரண்டிலுமே குறிக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...