04 ஏப்ரல் 2014

இந்தியாவின் முதல் வாக்காளர்

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் வரவேற்கிறேன்.
          
இந்தியாவின் முதல் வாக்காளர் 97 வயது ஷியாம் நெகி : இப்பவும் ஓட்டு போடுவேன்
            நாட்டின் முதல் வாக்காளர் யார் என்று தெரியுமா? இந்தியாவில் முதல் முறையாக மக்களவைக்கு வாக்களித்த பெருமையை பெற்றவர், இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஷியாம் சரண் நெகி (97). நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து ஒரு முறை கூட தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தது இல்லை இவர். இமாச்சலப் பிரதேசம் கின்னாவுர் மாவட்டம் கல்பா கிராமத்தில் பிறந்த நெகியை உள்ளூர் மக்கள் அன்பாக மாஸ்டர்ஜி என்று அழைக்கின்றனர். இவர் தனது மகன் சி.பி. நெகியுடன் வசித்து வருகிறார். வாக்காளர் விழிப்புணர்வு விளம்பரத்தில் இவரும் இடம்பெற்றுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

ஜனநாயக சக்தியின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. அதனால்தான் என்னுடைய ஜனநாயக கடமையை மிகச்சரியாக செய்து வருகிறேன். 1951ல் நடந்த நாட்டின் முதல் பொதுத் தேர்தலின்போது, 17 கோடியே 30 லட்சம் பேர் வாக்களித்தனர். இப்போது 81 கோடியே 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். அப்போதெல்லாம், இமாச்சலத்தில் பனி மூடி சாலை போக்குவரத்து முடங்கிவிடும். அதனால் பிற பகுதிகளில் தேர்தல் நடப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே இங்கு தேர்தல் நடந்து விடும்.

ஆனால், வாக்களிக்கச் செல்லும்போது மழை பெய்தாலும், பனி அடித்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட்டதே இல்லை. (நாட்டின் முதலாவது பொதுத் தேர்தல் 1952ம் ஆண்டின் ஆரம்பத்தில் நடந்தது. இதற்கு சில மாதங்களுக்கு முன்பே இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நடந்ததால்தான், நெகிக்கு முதன் முதலாக வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்தது.) என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...