21 ஏப்ரல் 2014

தபால் ஓட்டு



போலீஸாருக்கான தபால் ஓட்டு வாக்குச்சாவடி மையம் திடீர் மாற்றம்

போலீஸாருக்கான தபால் ஓட்டு வாக்குச்சாவடி மையம் ஞாயிற்றுக்கிழமை திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது.
போலீஸாருக்கான தபால் ஓட்டு வாக்குச்சாவடி மையம் ஞாயிற்றுக்கிழமை திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது.
தேர்தல் பணியாற்றும் போலீஸாருக்கான தபால் ஓட்டுப் போடும் வாக்குச்சாவடி மையம், ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வந்தது. இதில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட போலீஸார் தபால் வாக்கைச் செலுத்தி வந்தனர்.
இந்த வாக்குச்சாவடி மையத்துக்கு சிறப்பு அலுவலராக சகாயமேரி நியமிக்கப்பட்டார். பாதுகாப்பு பணிக்காக வெளியூர் செல்லும் போலீஸார் தங்களது பணி ஆணையை காண்பித்து தபால் ஓட்டு போட்டுவிட்டுச் சென்றனர். இந் நிலையில், ஈரோடு மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சோ.மதுமதி இம் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு செய்தார். மிகவும் குறுகலான இடத்தில் வாக்குச்சாவடி மையம் இருப்பதைப் பார்த்த அவர், அதை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்டார். ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் அரங்குக்கு இம் மையம் உடனடியாக மாற்றப்பட்டது. சனிக்கிழமை 101 பேர் தபால் ஓட்டுப் போட்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை 208 பேர் ஓட்டுப் போட்டிருந்தனர். மொத்தமுள்ள 443 பேரில் இதுவரை 309 பேர் வாக்களித்துள்ளனர்.

தபால் ஓட்டு சீட்டு தயார்!

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், தேர்தல் பணி படிவம் (இ.டீ.சி) மூலமாக ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணி படிவம் வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவம் இருந்தால், அரசு அலுவலர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிக்குள் எந்த ஓட்டு சாவடி யில் ஓட்டு போட அனுமதி வழங்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இதன் மூலமாக தபால் ஓட்டு போடுபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறையும் என தெரிகிறது. கோவை மாவட்ட அளவில் 15 ஆயிரம் தபால் ஓட்டு படிவம் மற்றும் தபால் உறை (படிவம் 13 ஏ) அச்சடிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பெயர், கட்சியின் பெயருடன் இந்த படிவம் தயார் செய்யப்பட்டுள்ளது. சின்னம் அச்சடிக்கப்படவில்லை. வரும் 15ம் தேதி சட்டமன்ற தொகுதிகள் வாரியாக ஓட்டு சாவடி அலுவலர்களுக்கு இறுதி கட்ட பயிற்சி வகுப்பு நடக்கவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் தபால் ஓட்டு சீட்டு வழங்கப்படும். அன்றைய தினம் கோவை, பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தபால் ஓட்டு பெட்டி வைக்கப்படும். தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் இந்த ஓட்டு பெட்டியில் தபால் ஓட்டு போடலாம். ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ஒரு மணி நேரம் முன்பு வரை தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...