23 ஜனவரி 2014

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி 238 கேள்விகளா?

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
காயல்பட்டினம் ‘மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு - மெகா’ சார்பில், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், காயல்பட்டினம் நகராட்சியிடம் 238 கேள்விகள் ‘மெகா’ அங்கத்தினரால் கேட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ‘மெகா’ செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

அக்டோபர் 25ஆம் நாள் – தகவலறியும் உரிமை நாளாகும். அதனை முன்னிட்டு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 25ஆம் நாளன்று, காயல்பட்டினம் ‘மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு - மெகா’ சார்பில், அதன் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், “நகராட்சிப் பணிகளில் பொதுமக்களுக்குள்ள சந்தேகங்களைக் கேள்விகளாக வடிவமைத்து, அமைப்பின் சார்பில் காயல்பட்டினம் நகராட்சிக்குத் திரளாகச் சென்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அக்கேள்விகளை நகராட்சி தகவல் அலுவலரிடம் அளிக்க” தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், இம்மாதம் 07ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில், ‘மெகா’ அங்கத்தினர் சுமார் 30 பேர் - அதன் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சாளை நவாஸ் தலைமையில், காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்குத் திரண்டு சென்று, பொது தகவல் அலுவலரான நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் - தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் 238 கேள்விகளை துறை வாரியாகப் பிரித்து, தனித்தனி உறைகளிலிட்ட கேள்விகளை சமர்ப்பித்து, அவற்றுக்கான ஒப்புகை முத்திரையைப் பெற்று வந்தனர்.



தகவலறியும் உரிமை சட்டத்தின் படி, வரும் பிப்ரவரி மாதம் 06ஆம் தேதிக்குள் இக்கேள்விகளுக்கு நகராட்சி விடையளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படாவிடில், மேல் முறையீட்டு அலுவலரான நகராட்சி ஆணையரிடம் மேல் முறையீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்ட 60 நாட்களுக்குள் அவரது விடையும் கிடைக்கப்பெறாவிடில், கேள்விகளை சமர்ப்பித்த அனைவரையும் ஒருங்கிணைத்து, சென்னையிலுள்ள - தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திடம் முறையிட திட்ட ‘மெகா’ திட்டமிட்டுள்ளது.

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், காயல்பட்டினம் நகராட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகள் வருமாறு:-


































இவ்வாறு, ‘மெகா’ செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...