அனைவருக்கும் கனிவான வணக்கம்.
கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.இந்தப் பதிவில் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் ஸ்ரீநந்தா நாட்டியாலயா பள்ளி பற்றி அறிவோம்.
சத்தியமங்கலம் ஸ்ரீநந்தா நாட்டியலாயா பயிற்சிப் பள்ளி நிறுவனர் திரு.Rtn.N.B.நந்தகுமார் MDance.,M.Phil.,
மேலும் சிதம்பரம், தஞ்சாவூர், திருவாரூர், திருவையாறு, திருஅதிகம், கரூர், பாபநாசம், வழுவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெறும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளில் மாணவிகளுடன் இவர்கள் கலந்துகொண்டுள்ளனர். மற்றும் கேரளாவிலுள்ள குருவாயூர், கர்நாடகாவிலுள்ள உடுப்பி, புதுச்சேரி, கோவா, திருப்பதி தேவஸ்தானம் ஆகிய பிரசித்தி பெற்ற கோயில்களில் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
"பரத முனிவர்", "நாட்டியஸ்ரீ", "நாட்டியச் செல்வன்", "நாட்டிய கலைச்சிகரம்" ஆகிய விருதுகளைப் பெற்ற இவர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் உயரிய விருதான, "கலைச்சுடரொளி" பட்டம் இருவருக்கும் வழங்கி கௌரவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடித்த மாணவ,மாணவியருக்கு சலங்கை அணிவிழா நடத்தி அரங்கேற்றம் செய்வித்து கௌரவப்படுத்துகிறது.இந்த ஆண்டும் வருகின்ற 10-11-2024 ஞாயிறு அன்று மாலை 4.25மணிக்கு சத்தியமங்கலத்திலுள்ள ஸ்ரீசுந்தர்மஹால் A/C பிரமாண்டமான அரங்கில் சலங்கை அணி விழா நடத்துகிறது.
அதன் அழைப்பிதழ் இதோ.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக