02 ஏப்ரல் 2020

Thirukkural Perumai Arivom Part - 06

                             திருக்குறள் பெருமை அறிவோம். பகுதி 06.

      மரியாதைக்குரியவர்களே,
                                   வணக்கம். கொங்குத் தென்றல் வலைப் பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

                 திருக்குறள் பரப்பிய மேலை நாட்டினர்...
                                      தமது மதத்தைப் பரப்புவதற்காக இங்கு வருகைபுரிந்த மேலைநாட்டினர் தமிழை நேசித்து பிழையற நன்றாகக் கற்றுத் தேர்ந்து மதத்தை பரப்பினாலும் தமிழை நன்றாக வளர்த்தனர்.தமிழ் இலக்கியங்களை பிறமொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தனர்.அந்த வரிசையில்...
திருக்குறள் சிறப்புநிலை அடைந்தது.

                           கி.பி.1730 ல் வீர மாமுனிவர் என்னும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி திருக்குறளை முதன்முதலாக இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்.
                      கி.பி.1794 ல் கிண்டெர்ஸ்லே ஆங்கிலத்தில் திருக்குறள் கருத்துக்களை வெளியிட்டார்.
                    கி.பி.1812 ல் எல்லீசன் என்றழைக்கப்பட்ட பிரான்சிஸ் வைட் எல்லீஸ் என்பவர் திருக்குறளின் அறத்துப்பாலிலுள்ள 13 அதிகாரங்களுக்கு உரை எழுதி வெளியிட்டதோடு,தங்கக்காசில் திருவள்ளுவர் உருவம் பொறித்து வெளியிட்டார்.
                   கி.பி.1886 ல் ஜீ.யூ.போப் என்றழைக்கப்பட்ட ஜார்ஜ் யுக்ளூ போப்தாங்க ஆங்கிலத்தில் முதன்முறையாக திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டார்.இவ்வாறாக இன்னும் பல மேலைநாட்டினர்
               திருக்குறளை வாசித்து அதில் குறிப்பிட்டுள்ள வாழ்வியல் கருத்துக்களை உணர்ந்து அதாவது நீதிநூல்கள் காலத்தாலும் இடத்தாலும் வேறுபடும்.அல்லது பயன் இல்லாமலும் போய்விடும்.ஆனால்,
                   திருக்குறள் ஆனது உலக மக்கள் அனைவருக்கும் எக்காலத்தும் பயனுள்ள வாழ்வியல் கருத்துக்களை கூறி தனிச்சிறப்பு பெற்றுள்ளது. என உலக மொழிகளில் மொழிபெயர்த்து வருகின்றனர்.
                    இன்றுவரை 107 மொழிபெயர்ப்புகள் நடைபெற்று உலக மொழிகளிலேயே அதிகமொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல்களின்வரிசையில் பைபிள்,திருக்குர் ஆன் அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் தமிழ் இலக்கியநூலான திருக்குறள் உள்ளது.

                       என்னறிவுக்கு கிடைத்த தகவல்களை இங்கு பதிவிட்டுள்ளேன்.கூடுதலான தகவல் அறிந்த தமிழறிஞர்கள் தகவலளித்து உதவ வேண்டுகிறேன்.
                                       இன்னும் தொடரும்...

என
C.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்
9585600733

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 நடவடிக்கை கோருதல் மனு 🙏 தமிழார்வலர்கள் அனைவருக்கும்  வணக்கம். மக்களின் அத்தியாவசியச் சேவை நிறுவனமான அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணி...