15 ஏப்ரல் 2020

நீங்களும் சமைக்கலாம் பகுதி -14

                                                     பொரியல் வகைகள் - 
                                                        ----------------------
                             
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)


காய்கறிகளை பொரியலாக செய்வது மிகவும் எளிதானது.

   கத்தரிக்காய்&உருளைக் கிழங்கு பொரியல், உருளைக்கிழங்கு பொரியல்,கத்தரிக்காய்பொரியல்,பாகற்காய்பொரியல்,வெண்டைக்காய்பொரியல், பீர்க்கங்காய்பொரியல்,புடலங்காய் பொரியல்,வாழைப்பூபொரியல்,வாழைத் தண்டுபொரியல்,கீரை வகைகள் பொரியல் செய்யலாம்..
(https://konguthendral.blogspot.com)

கத்தரிக்காய் உருளைக் கிழங்கு பொரியல்..
தேவையான பொருட்கள்..
(1)கத்தரிக்காய் -4
(2)உருளைக் கிழங்கு - 1
(3)தக்காளி - 1
(4)மஞ்சள்தூள் - அரை டீ ஸ்பூன்
(5)சாம்பார்த் தூள் - அரை டீ ஸ்பூன்
(6)தேங்காய்த் துருவல் - 1 ஸ்பூன்
(7)சின்ன வெங்காயம் - 10
(8)வறமிளகாய் - 2
(9)கறிவேப்பிலை - 1இணுக்கு
(10)எண்ணெய் - 1 ஸ்பூன்
(11)கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
 (12)உளுந்து - 1 ஸ்பூன்
(13) உப்பு - தேவையான அளவு.
செய்முறை;
கத்தரிக்காய்,உருளைக் கிழங்கு இவைகளை நறுக்கி தண்ணீரில் போடுங்க.
,சின்னவெங்காயம்,தக்காளி,மிளகாய் இவைகள் நறுக்குங்க.
வாணலியில் எண்ணெய்  சூடானதும் கடுகு ,கடலைப் பருப்பு,உளுந்து போடுங்க.
 பொரிந்தவுடன் நறுக்கிய சின்னவெங்காயம்,தக்காளி,வறமிளகாய்,கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்குங்க..
        பிறகு கத்தரிக்காய் துண்டுகளையும்,உருளைக்கிழங்கு துண்டுகளையும் போட்டு மஞ்சள் தூளையும்,சாம்பார்த் தூளையும்,தேவையான அளவு உப்பையும் சேர்த்து வதக்குங்க.
  பிறகு இவைகளை  மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி அளவான தீயில் 10நிமிடம் வேக வையுங்க. பின்னர் தேங்காய்த் துருவலை போட்டு வதக்கி கிரேவியாக இருக்கும்போது இறக்கி வையுங்க...
இதே போன்று உருளைக் கிழங்கு,கத்தரிக்காய்,பாகற்காய்,வெண்டைக்காய், பீர்க்கங்காய்,புடலங்காய் பொரியல் செய்யலாம்.
 (https://konguthendral.blogspot.com)

2.வாழைக்காய் பொரியல்..

 தேவையான பொருட்கள்.
(1)வாழைக்காய் -2
(2)துவரம் பருப்பு -50கிராம்
(3)வறமிளகாய் - 4 அல்லது பச்சை மிளகாய்
(4)சின்ன வெங்காயம் - 5
(5)தேங்காய்த் துருவல் -
(6)மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
(7)சீரகம்,
(8)எண்ணெய்,
(9)கடுகு,
(10)உளுந்து,
(11)கடலைப் பருப்பு,
(12)கறிவேப்பிலை,
(13)உப்பு

செய்முறை;
 முதலில்  துவரம் பருப்பை தண்ணீரில் அலசி  10 நிமிடம் ஊறவைத்து வேகவையுங்க.
.பிறகு வாழைக்காயை தோல் சீவி இரண்டாக வெட்டுங்க. குறுக்காகவும்,நீளமாகவும்,தகடாகவும் வெட்டி ,வெட்டி தண்ணீரில் போடுங்க.(இல்லையேல் கறுத்துவிடும்).
தேங்காய்,சீரகம்,வெங்காயத்தை அரைத்து வைத்துக்கொள்ளுங்க.
  வாணலியில் போட்டு மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து அளவான தண்ணீரில் வேகவையுங்க.
 அரைத்த தேங்காயை வாழைக்காயுடன்  சேர்த்து  நன்றாக பிசைந்துகொள்ளுங்க.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து,மிளகாய் வற்றல் அல்லது பச்சை மிளகாய் போட்டு தாளித்து  பிசைந்த வாழைக்காயை போட்டு பச்சை வாசனை போகும்வரை கிளறி வதக்கி இதனுடன் வேகவைத்த துவரம் பருப்பை  தண்ணீர் பிழிந்து போட்டு  கறிவேப்பிலை,மல்லித்தழை சேர்த்து இறக்கி வையுங்க....
இதேபோன்று
இதே போன்று வாழைப்பூ,வாழைத் தண்டு,கீரை வகைகள் பொரியல் செய்யலாம்...



                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........

என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம். (https://konguthendral.blogspot.com)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...