25 மார்ச் 2014

சுயலாப தொண்டு நிறுவனங்கள்!

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம். 
                 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.சமூக சேவை அமைப்புகள் அதாவது தொண்டு நிறுவனங்கள் இப்படியெல்லாம் குளறுபடிகள் செய்கின்றனவா?.இதோ தினமணி கட்டுரை படித்துப்பாரீர்.

First Published : 25 March 2014 02:37 AM IST
     தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்கிற பெயரில் காளான்கள் போல உருவாகி இருக்கும் அமைப்புகள், வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறவும், அரசு நிதியுதவி பெற்று, பெயருக்குப் போலிக் கணக்கெழுதி பெரும் பகுதியைச் சுருட்டிக் கொள்ளவும் செய்கின்றன என்கிற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்தியப் புலனாய்வுத் துறை (ம.பு.து.) நடத்திய விசாரணையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
120 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 43,527 நிறுவனங்கள் கடந்த 2011-12 நிதியாண்டுப்
புள்ளிவிவரப்படி, வெளிநாட்டிலிருந்து கணிசமாக நன்கொடைகள் பெறுபவை. ஏறத்தாழ 12,000 கோடி ரூபாய் நன்கொடையாக இந்தியாவுக்கு வருகிறது. இதில் கணிசமான பகுதி, அமெரிக்காவிலிருந்து மட்டுமே பெறப்படுகிறது.
தில்லிதான் மிக அதிகமான வெளிநாட்டு நன்கொடைகள் பெறும் இடமாக இருந்து வருகிறது. யூனியன் பிரதேசமான தில்லியில் செயல்படும் 1,482 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே ரூ.2,285 கோடி ரூபாய் வெளிநாட்டு நன்கொடை கிடைத்
திருக்கிறது. தமிழகத்தில் 3,341 நிறுவனங்கள் ரூ.1,704 கோடி, ஆந்திரத்தில்  2,527 நிறுவனங்கள் ரூ.1,258 கோடி, மகாராஷ்டிரத்தில் 2,056 நிறுவனங்கள் ரூ.1,107 கோடி வெளிநாட்டு நன்கொடை பெற்றிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்
களுக்கு மிக அதிகமான நன்கொடைகள் அமெரிக்கா (ரூ.3,838 கோடி), பிரிட்டன் (ரூ.1,219 கோடி), ஜெர்மனி (ரூ.1,096 கோடி), இத்தாலி (ரூ.529 கோடி), நெதர்லாந்து (ரூ.418 கோடி) ஆகிய ஐந்து நாடுகளிலிருந்துதான் வருகின்றன. இந்த நன்கொடைகளில் 80 சதவீதம் கிறிஸ்துவ அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஏறத்தாழ 20 லட்சம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள் அல்லது அறக்கட்டளைகள் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இவை பற்றிய துல்லியமான புள்ளிவிவரமோ, ஒவ்வொரு அமைப்பும் எவ்வளவு நன்கொடை யாரிடமிருந்து பெறுகிறது, எப்
படிச் செலவு செய்கிறது போன்ற விவரமோ மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இல்லை. இவற்றில் வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்காற்றல் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்
2 சதவீதமாவது இருக்குமா என்பது சந்தேகம்தான்.
இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முறையாக கணக்கு வைத்திருப்பதோ, வருமான வரித் துறையிடம் கணக்குத் தாக்கல் செய்வதோ இல்லை என்று மத்தியப் புலனாய்வுத் துறை உச்சநீதி
மன்றத்தில் தெரிவித்திருக்கிறது. நீதிமன்ற வழிகாட்டுதல்படி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் அந்தந்த மாநிலங்களில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்
களையும், அவை பெறும் நன்கொடைகள் பற்றியும் ம.பு.து. விவரம் கேட்டது. ஆந்திரப் பிரதேசம், பிகார், தில்லி, ஹரியாணா, கர்நாடகம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் எந்தவிதப் புள்ளிவிவரங்களையோ, தகவல்களையோ தந்து உதவவில்லை என்று ம.பு.து. உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
கிடைத்திருக்கும் தகவல்படி, உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 5,48,194 நிறுவனம், கேரளத்தில் 1,07,797, மத்தியப் பிரதேசத்தில் 1,40,000, குஜராத்தில் 75,729 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெருவாரியானவை மத்திய அரசிடமிருந்து தொடர்ந்து மானியங்கள் பெற்று வருகின்றன.
முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்கள் உறவினர்கள், பினாமிகள் பெயரில் இதுபோன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பதிவு செய்து, மத்திய அரசின் நிதியுதவி பெற்று வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து நன்கொடையாக வரும் பணம் ஹவாலா மூலமாக இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அரசியல்வாதிகளின் கருப்புப் பணமாக இருந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. தன்னார்வம் பாராட்டுக்குரியது. தொண்டும்தான். ஆனால் அந்த நிறுவனங்கள் முறை
யாகச் செயலாற்றுகின்றனவா என்பதும், நன்கொடையாகப் பெறும் பணம் முறையாக செலவிடப்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்
படாவிட்டால், அரசு எதற்கு, நிர்வாகம்தான் எதற்கு?
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முறையான விசாரணைக்கும், கணக்குத் தணிக்கைக்கும் உட்படுத்தப்பட்டு, போலிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால் மட்டுமே, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சுயலாப தொண்டு நிறுவனங்களாக செயல்படுவது தடுக்கப்படும்.
                                                             நன்றிங்க.
                                     என அன்பன்.பரமேஸ்வரன்.C.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...