21 மார்ச் 2014

உலக வன தினம் மார்ச் 21

மரியாதைக்குரியவர்களே,
                           வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
 உலக வன தினம் மார்ச் 21
ஆண்டு தோறும் மார்ச் 21 ஆம் தேதி சர்வதேச வன தினம் (World Forestry Day, March 21) அனுசரிக்கப்படுகிறது.

இந்தத் தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது.

மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன.

காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும்.

வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50% உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன

மனித இனம அதன் வரலாற்றில் சந்தித்துள்ள நெருக்கடியான பிரச்னைகளில் இது வரை சந்திக்காதது புவி வெப்பமடைதலால் ஏற்படும் பல்வேறு அழிவுகள். முக்கியமாக காடுகளை அழிப்பதை நிறுத்துவது மற்றும் புதிதாக அதிக மரங்களை வளர்ப்பது மூலம்தான் புவி வெப்பம் அடைதலை தடுக்க முடியும்.

வனம் என்பது காட்டு விலங்குகளுக்கு உரியது. அங்குள்ள மரங்களை நாம் வெட்டி விடுவதால் மழை குறைந்துவிடுகிறது. இதனால், விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக நாட்டுக்குள் நுழைந்து விடுகின்றன.

நம் இந்தியாவில் சுமார் 24% காடுகள் மற்றும் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது. சுமார் 2.2 கோடி பேர் வன நிர்வாகத்தில் பங்கேற்றுள்ளார்கள். சுமார் 100 தேசிய பூங்காக்கள், 515 வன விலங்கு சரணாலயங்கள் இருக்கின்றன. நாட்டில் நில பரப்பில் 35 சதவிகிதத்தை காடு வளர்ப்பு மற்றும் மர வளர்ப்பின் கீழ் கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. காடுகளை அவைகளின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அக்கறையுடன் வளர்க்கப்பட இருக்கிறது. தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் மழை பெய்வதில் காடுகள் மற்றும் மரங்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது.

http://www.un.org/esa/forests/international-day-of-forests.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...