நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும்! ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம்.
15 டிசம்பர் 2024
03 டிசம்பர் 2024
தமிழியக்கம், அரியப்பம்பாளையம் பேரூராட்சி .
தமிழியக்கம், அரியப்பம்பாளையம் பேரூராட்சி சத்தியமங்கலம்-638402 .
தமிழியக்கம்,
அரியப்பம்பாளையம் பேரூராட்சி
(ஈரோடு மாவட்டம்)
(1) செயலாளர்:
திரு.செ.பரமேஸ்வரன், (சிபிசாரதி)
(2) இணைச் செயலாளர் :
திரு.N.வேலுசாமி (ரிப்போர்ட்டர் வேலு)
(3) துணைச் செயலாளர்:
செல்வி. அக்ஷயா கிருஷ்ணமூர்த்தி B.B.A(RM) MSW.,
(4) துணைச் செயலாளர்:
திரு.R.நாகராஜன்,
(5) பொருளாளர்:
திரு.K.சுரேஷ்குமார்,
(6) செய்தித் தொடர்பாளர்:
திரு. K.வேல்முருகன் MBA,
(7) மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர்:
செல்வன்: V.இலக்கியன்
(8) வாசிப்பு அணி ஒருங்கிணைப்பாளர்:
திருமதி: மணிமேகலை பன்னீர்செல்வம் M.A.,M.Phil.,B.Ed.,
(9) பேரூராட்சி ஒருங்கிணைப்பாளர்:
முனைவர்.S.K.உமா மகேஸ்வரி, M.A.,M.Ed.,M.Phil.,DCS.,Ph.D.
(10)இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர்:
Rtn.தாமோதரன்.மோ.
(11) மகளிரணி ஒருங்கிணைப்பாளர்:
23 நவம்பர் 2024
கொளப்பலூர் இலவச கண் சிகிச்சை முகாம் ஒரு அலசல்...
கொளப்பலூரில் முகாமிட்டு நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சையும்....
தேவைகளும்...
23-11-2024 சனிக்கிழமை இன்று கொளப்பலூர் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஸ்ரீகாளீஸ்வரா ரைஸ்மில் வளாகத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தினர்.குன்னூர்- மேட்டுப்பாளையம் GMகண் மருத்துவமனையிலிருந்து 15 நபர்கள் அடங்கிய மருத்துவக்குழு போதிய உபகரணங்களுடன் ஆம்னி பேருந்தில் வருகைபுரிந்து காலை8.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை கண்பரிசோதனை செய்தது.சமூக ஆர்வலர்களாக திரு.MG என்கின்ற K.P.முத்துச்சாமி அவர்கள் தலைமையில் தேனீ பார்த்திபன்,EBசந்தரசேகரன், PTAராமன், இராம.இளங்கோவன், K.முருகன், ஜவஹர் ராஜா, P.கோபால், ஸ்ரீவெங்கடேஸ்வரா பவர்பிரஸ் குமரேசன், வசந்தம்எடைநிலையம் பழனிச்சாமி, கேமரா குமரேசன், காளீஸ்வரன் மகன் சீனிவாசன் உட்பட பலர் களமிறங்கி தீவிரமாக பணியாற்றினர்.பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்கள் உத்தரவின்பேரில் தூய்மைப்பணியாளர்கள் களமிறங்கி மக்களின் நலன் கருதி முகாம் சுற்றுப்பகுதிகளில் சுத்தப்படுத்தி மருந்துதெளித்து சுகாதாரப்படுத்தியிருந்தனர்.100 க்கும் அதிகமானோர் கண்பரிசோதனை செய்துகொண்டனர். 36 நபர்களுக்கு கண்புரை அறுவைசிகிச்சை தேவைப்பட்டது.இவர்களில் 15 நபர்களுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்த காரணத்தால் சர்க்கரை அளவு குறைத்தபிறகு கண்புரை அறுவை சிகிச்சை செய்யலாம் என தவிர்க்கப்பட்டு மற்ற 21 நபர்கள் கண்புரை அறுவை சிகிச்சைக்காக GMகண் மருத்துவமனைக்கு சொந்தமான பேருந்தில் மேட்டுப்பாளையம் அழைத்துச்செல்லப்பட்டனர்.
இலவச கண் சிகிச்சை முகாம் - 2024
கொளப்பலூரில்
கடந்த 23-11-2024 சனிக்கிழமையன்று சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்திய கண்சிகிச்சை முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முடிந்து கொளப்பலூர் திரும்பியதருணத்தில் வரவேற்று நலம் விசாரித்த சமூக ஆர்வலர்கள் பயனாளிகளாகிய பொதுமக்களை அவரவர் வீட்டிற்கு அக்கரையோடு அனுப்பி வைத்தனர்.காத்திருந்து வரவேற்று நலம்விசாரித்த சமூக ஆர்வலர்களில் கொளப்பலூர் பேரூராட்சி மன்றத் தலைவர் மரியாதைக்குரிய அன்பரசு ஆறுமுகம் MBA அவர்கள் முன்னின்று கவனம் செலுத்திய நிகழ்வு பாராட்டுக்குரியது 🙏 🙏 🙏
-------------------------------------------------------------------------------------------
கொளப்பலூரில் இலவச கண்சிகிச்சை முகாம்..23-11-2024 சனிக்கிழமை
கடல்நீர் யாருக்கும் பயன்படாது? உலகமே அறிந்த விசயம்...
அதேவேளை , கங்கைநதியாக இருந்தாலும், காவிரி நதியாக இருந்தாலும் மக்கள் குடிக்க பயன்பட்ட தண்ணீரே புண்ணியம் பெற்ற நீர்...
மக்களின் நலனுக்காக...சமூகப் பணிகளுக்கு உதவியவரே பாக்கியவான் 🙏
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். (௩௱௩௰௩ - 333)
தலைமையுரை ; திரு.M.G.(எ) K.P.முத்துச்சாமி அவர்கள்
இதழியல் அறிவோம் தொடர் 17 முதல் 22 வரை
😊
18-11-2024
இதழியல் அறிவோம்.
தொடர் - 17
(செய்தியாளர் C.பரமேஸ்வரன்)
இதுவரையிலான 16 தொடர்களையும் எமது https://konguthendral.blogspot.com வலைப்பக்கத்தில் பார்வையிடலாம்.🙏
இந்த தொடரில்...
செய்தியாளர்களை அவர்களுடைய பணி இயல்பினைப் பொறுத்து பலவகைப்படுத்தலாம்.
(1) நகரச் செய்தியாளர்கள் : செய்தித்தாள் வெளியிடப்படுகின்ற இடத்தில் செய்திகளை திரட்டுபவர் நகர அல்லது உள்ளூர் செய்தியாளர் என்கின்றனர்.
(2) நகர்ப்புறச் செய்தியாளர்: மாவட்டங்களின் தலைநகரில் இருந்துகொண்டு செய்திகளைத் திரட்டி அனுப்புவோர் நகர்ப்புற செய்தியாளர் எனப்படுகின்றனர்.
(3) தேசியச் செய்தியாளர்: நாட்டின் மாநிலங்களின் தலைநகரங்களில் இருந்துகொண்டு செய்திகளைத் திரட்டித் தருபவர் தேசியச் செய்தியாளராவார்.
(4) வெளிநாட்டுச் செய்தியாளர்: வெளிநாடுகளில்
தங்கி உலகச் செய்திகளைத் திரட்டித் தருகின்ற பணியைச் செய்பவர் வெளிநாட்டுச் செய்தியாளர் ஆவார்.
பொதுவாக ஒரு செய்தித்தாளில் நேரடிப் பணியாளராக இல்லாமல் அனுப்புகின்ற செய்திகளுக்கேற்ப பணம் வாங்குபவர்களை, " பகுதிநேர செய்தியாளர்" எனப்படுகின்றனர்.
ஒரு இதழின் முழுநேர செய்தியாளராக இருந்துகொண்டு செய்தி திரட்டுபவரை ," செய்தியாளர்" என்கின்றனர். நாடாளுமன்றசெய்திகளையும் சட்டமன்ற செய்திகளையும் வழங்குபவர்," மன்றச் செய்தியாளர்" எனப்படுகிறார்.
ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியையோ, வெளிநாடு செல்லும் தலைவர்களைத் தொடர்ந்து சென்று செய்தி திரட்டுபவரோ, எல்லோரும் அறியும்வகையில் நாட்டு நடப்புகளைப் பற்றிய செய்திகளைத் திரட்டித் தருபவர், " சிறப்புச் செய்தியாளர்" எனப் பெயர் பெறுகின்றார்.
செய்தியாளர்களைச் செய்யும் தொழில்திறமையின் அடிப்படையிலும் வகைப்படுத்துவதும் உண்டு.
(1) பார்ப்பதை அப்படியே எழுதுபவர் "செய்தியாளர்" எனவும், (2) பார்த்தவற்றுடன் தன்னுடைய ஊகத்தினையும் சேர்த்துத் தருபவர்," விளக்கச் செய்தியாளர்" எனவும்,
(3)பார்க்காதவற்றைக்கூட அதன் பொருள் இன்னதுதான்! என்று தீர்மானித்து அதனையும் உண்மைச்செய்தியாகவே திரட்டி நயம்படத் தருபவர்," செய்தி வல்லுநர்" எனவும் வகைப்படுத்திக் கூறுவர்.
தொடரும்...
19-11-2024
இதழியல் அறிவோம்.
தொடர் - 18
செய்தியாளர் பணிகளும், பொறுப்புக்களும்...
செய்தியாளர் தகவல்களைப் பரப்பும் சமுதாயத் தொண்டாற்றுவதால் சமுதாயக் கல்வியாளராவார்.
(1) கடினமான பணி: ஒருசெய்தி எங்கிருந்து எப்போது எப்படி வெடித்துச் சிதறும்? என்று கணிக்கமுடியாது ஆகையால் 24 மணிநேரமும் விழிப்போடு செய்திகளை எதிர்பார்த்து தேடி அரிய வேண்டும்.
கல்வி, தூங்காமை, துணிவுடைமை உள்ள செய்தியாளர்கள் கருமமே கண்ணாக உழைத்தால் சிறப்பான செய்திகளைத் திரட்டித் தந்து புகழ்பெற முடியும்.
(2) ஆபத்தான பணி : செய்தியாளர்கள் பணி உண்மைகளை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டும் பணியாதலால் அதனால் பாதிக்கப்பட்டவர்களால் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகும் நிலையும் வரலாம்.செய்தியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்று உள்ளன.ஆதலால் எதற்கும் துணிந்தவர்களாக இருக்க வேண்டும்.
தொடரும்...
16 நவம்பர் 2024
இதழியல் அறிவோம் தொடர் 14 முதல் 16வரை
அனைவருக்கும் வணக்கம்.
இதழியல் பற்றி அனைவரும் அறிந்துகொள்வதற்கு வசதியாக தினமும் தொடராக
நுகர்வோர் அறிக்கை வாட்ஸ்அப் குழுவில் கடந்த 2024நவம்பர் 2 ஆம் தேதி முதல் பதிவிட்டு வருகின்றேன்.அதன் நகலை கொங்குத்தென்றல் வலைப்பக்கத்தில் பகிர்ந்து வருகிறேன்.அந்த வகையில்
இங்கு தொடர் 14 முதல் 16வரை பகிர்ந்துள்ளேன்.தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டி பிழைதிருத்த உதவுங்க.....
15-11-2024
இதழியல் அறிவோம் -தொடர் 14
ஒவ்வொரு ஆண்டும் அரசு செய்தி அச்சுத்தாள் ஒதுக்கீட்டுக் கொள்கையை அறிவிக்கிறது. இதழ்களை வெளியிடுவோர் அரசின் கட்டுப்பாட்டுவிலையில் அச்சுக் காகிதம் பெற குறிப்பிட்ட படிவத்தில் எழுதி இந்தியாவின் செய்தித்தாள்களின் பதிவாளருக்கு விண்ணப்பித்து குறைந்தவிலையில் காகிதம் பெறலாம்.
ஆண்டறிக்கையும் சோதனையும்...
ஒவ்வொரு பதிப்பாளரும் அவர் வெளியிடும் ஒவ்வொரு செய்தித்தாள் பற்றிய ஆண்டுவிவரங்களை பத்திரிகைப் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.
ஆண்டுவிவரங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்பாமல் விட்டால் 1867 ஆம் ஆண்டின் பத்திரிகை, புத்தகங்களின் பதிவுச்சட்டத்தின் 19K பிரிவின்படி தண்டனை வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கலாம்.
சோதனைமுறை...
பத்திரிகை,புத்தகங்களின் பதிவுச் சட்டத்தின் 19F பிரிவின்படி பத்திரிகைப் பதிவாளரோ, அல்லது அவர் அதிகாரமளிக்கும் பதிவுபெற்ற அலுவலரோ எந்த இதழின் அலுவலகத்திற்கும் சென்று இதழ் வெளியீடு பற்றிய விவரங்களை சரிபார்க்க உரிமை உண்டு. சுற்றிலிருக்கும் இதழ்களின் எண்ணிக்கையில் சோதனையிடும்பணியை திறமையாகச் செய்வதற்காக வடக்கு மண்டலத்திற்கு புதுடெல்லியிலும்,தெற்கு மண்டலத்திற்கு சென்னையிலும், மேற்கு மண்டலத்திற்கு பம்பாயிலும், கிழக்கு மண்டலத்திற்குக் கொல்கத்தாவிலும் என நான்கு மண்டலங்களாகப் பிரித்து செயல்படுகின்றனர்.
ஒரு இதழைத் தொடங்குவதைப் போன்றே நிறுத்துவதாக இருந்தாலும் மாவட்ட நீதிபதியிடம் இதழ் வெளியீட்டாளரும், அச்சிடுபவரும் அதற்குரிய விண்ணப்பத்தில் எழுதி தரவேண்டும்.இல்லையேல் இது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
-
வாசிப்பை நேசிப்போம்.... வீட்டிற்கு வெளிச்சம் சாளரத்தின் ஊடே.... அறிவிற்கு வெளிச்சம் வாசிக்கும் நூலே!!!! வாசிக்காமல் யார்க்கும் வ...
-
மரியாதைக்குரியவர்களே, வணக்கம். 'கொங்குத்தென்றல்' வலைப்பக்கத்திற்கு அனைவரையு...






























