கொளப்பலூரில் முகாமிட்டு நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சையும்....
தேவைகளும்...
23-11-2024 சனிக்கிழமை இன்று கொளப்பலூர் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஸ்ரீகாளீஸ்வரா ரைஸ்மில் வளாகத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தினர்.குன்னூர்- மேட்டுப்பாளையம் GMகண் மருத்துவமனையிலிருந்து 15 நபர்கள் அடங்கிய மருத்துவக்குழு போதிய உபகரணங்களுடன் ஆம்னி பேருந்தில் வருகைபுரிந்து காலை8.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை கண்பரிசோதனை செய்தது.சமூக ஆர்வலர்களாக திரு.MG என்கின்ற K.P.முத்துச்சாமி அவர்கள் தலைமையில் தேனீ பார்த்திபன்,EBசந்தரசேகரன், PTAராமன், இராம.இளங்கோவன், K.முருகன், ஜவஹர் ராஜா, P.கோபால், ஸ்ரீவெங்கடேஸ்வரா பவர்பிரஸ் குமரேசன், வசந்தம்எடைநிலையம் பழனிச்சாமி, கேமரா குமரேசன், காளீஸ்வரன் மகன் சீனிவாசன் உட்பட பலர் களமிறங்கி தீவிரமாக பணியாற்றினர்.பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்கள் உத்தரவின்பேரில் தூய்மைப்பணியாளர்கள் களமிறங்கி மக்களின் நலன் கருதி முகாம் சுற்றுப்பகுதிகளில் சுத்தப்படுத்தி மருந்துதெளித்து சுகாதாரப்படுத்தியிருந்தனர்.100 க்கும் அதிகமானோர் கண்பரிசோதனை செய்துகொண்டனர். 36 நபர்களுக்கு கண்புரை அறுவைசிகிச்சை தேவைப்பட்டது.இவர்களில் 15 நபர்களுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்த காரணத்தால் சர்க்கரை அளவு குறைத்தபிறகு கண்புரை அறுவை சிகிச்சை செய்யலாம் என தவிர்க்கப்பட்டு மற்ற 21 நபர்கள் கண்புரை அறுவை சிகிச்சைக்காக GMகண் மருத்துவமனைக்கு சொந்தமான பேருந்தில் மேட்டுப்பாளையம் அழைத்துச்செல்லப்பட்டனர்.
இங்கு கவனிக்க வேண்டிய விசயம்..
கிராமப்பகுதியிலேயே அதுவும் கடுமையான உடலுழைப்பாளிகளுக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் அதிகமாக இருப்பதை கண்கூடாக தெரிந்துகொண்டோம். வருத்தத்துடன் சிந்திக்க வேண்டியுள்ளது. சர்க்கரை அளவு அதிகமானதற்கு என்ன காரணம்? என தீவிரமாக ஆய்வுசெய்யவேண்டியுள்ளது. தீர்வு காண வேண்டியுள்ளது.
இந்த நிலை கொளப்பலூரில் மட்டுமா? அல்லது மாவட்டம், மாநிலம் ,தேசம் என பரந்து காணப்படுகிறதா ? என கவனமாக ஆராய வேண்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக