நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும்! ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம்.
15 ஜூன் 2015
13 ஜூன் 2015
sathypressclub ஐ வாழ்த்தலாம் வாங்க....
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். சத்தியமங்கலம் தாலூக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினை வாழ்த்தலாம் வாங்க..
என அன்பன்
C.பரமேஸ்வரன்.
சத்தியமங்கலம்.
7 மணிகள் · தேதி;14.06.2015
sathypressclub@gmail.com
அன்புடன்
#சத்தியமங்கம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கம்.
YOUTH RED CROSS - CHENNAI ANNA UNIVERSITY (DEPARTMENT OF ARCHITECTURE&PLANNING
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
சென்னை,அண்ணா பல்கலைக்கழகம் Department of Architecture and planning துறையின் பேராசியர் மதிப்புமிகு. S.K.ராஜசேகர் ஐயா அவர்களது தலைமையில் உதவி பேராசியர் சிவசங்கரன் துணையுடன் YOUTH RED CROSS (YRC)அமைப்பின் ஐம்பது மாணவ,மாணவியர் சத்தியமங்கலம் பகுதிக்கு வருகை புரிந்து ஶ்ரீராகவேந்திரா பள்ளி விடுதியில் சமூக சேவை ஆற்றி வருகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் கட்டடக்கலைப்பிரிவின் இளஞ்செஞ்சிலுவை சங்கத்தின் குழுவினரை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு அமைப்புடன் 14.06.2015 இன்றும்15.06.2015நாளையும் இணைந்து சத்தியமங்கலம் மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகளை கேட்டறிதல் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு கொடுத்தல் சுற்றுச்சூழல் காத்து வனவளம் காத்தல் என பல்வேறு தளங்களில் சமூக சேவை செய்கின்றனர்.
முதல் நாளான 14ந் தேதி இன்று ஆசனூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியருடன் உயர் கல்வி வழிகாட்டுதல் சம்பந்தமான கலந்துரையாடல்,மாணவ,மாணவியருக்கு உதவிகள் செய்தல்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிளாஸ்டிக் தீங்குகள்,வனவளம் காப்பது மற்றும் இயற்கைவளம் காப்பது,மழை நீர் சேகரிப்பது,மருத்துவத்தாவரங்கள் காப்பது, சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு,புகை,மது,போதைப்பொருட்கள் தவிர்த்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து சுகாதாரம் காப்பது பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வது போன்ற நிகழ்வுகளும்.பிறகு அருகிலுள்ள பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு சென்று அவர்களது வாழ்க்கைச்சூழல் பற்றிய விவரம் அறிதல்,புகை,மது,போதையின் தீங்குகள் பற்றிய விழிப்புணர்வு கொடுத்தல்,சிறுதானிய உணவு வகைகள் பற்றியும் மருத்துவ மூலிகைகள் பற்றியும் கலந்துரையாடல் செய்தல் நடத்த உள்ளோம்.
இரண்டாவது நாளான 15ந் தேதி குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள பழங்குடி மக்களின் வாழ்வியல்முறைகள் புளியங்கோம்பை பழங்குடி மக்களின் வாழ்வியல் முறைகள் சந்திக்கும் பிரச்சினைகள்,கல்வி,சுகாதாரம்,வாழ்க்கை முன்னேற்றம் என கரளையம் திரு.தங்கவேல் ஐயா அவர்கள் உதவியுடன் விழிப்புணர்வு கொடுக்க உள்ளோம்.
என்றும் சமூகப்பணியில் அக்கறையுள்ள
அன்பன்,
C.பரமேஸ்வரன்,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு
(அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பு)
மின்னஞ்சல் முகவரி;consumerandroad@gmail.com
தொடர்பு எண்;+91 9585600733
வலைப்பதிவு முகவரி; http://consumerandroad.blogspot.com

11 ஜூன் 2015
நமது பணம்! நல்ல நோட்டா? கள்ள நோட்டா?
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நாம் தினந்தோறும் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்கள் நல்ல நோட்டுக்களா? கள்ள நோட்டுக்களா? என அறிந்துகொள்வது பற்றி இங்கு பதிவிடுகிறேன்.
நல்ல நோட்டுக்களுக்கென்றே சில பாதுகாப்பு அம்சங்களை இந்திய ரிசர்வ் வங்கி சில குறிப்புக்களையும்,நுணுக்கங்களையும் வெளியிட்டுள்ளது.
இதோ தங்களது கவனத்திற்காக....
(1) பாதுகாப்பு இழை;
நமது ரூபாய் நோட்டுக்களான 10ரூபாய் முதல் 20ருபாய்,50ரூபாய் ஆகிய நோட்டுக்கள் பார்க்கத்தக்க ஆனால் முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்புச் சாளரம் கொண்ட பாதுகாப்பு இழையைக் கொண்டுள்ளன்ன.100ரூபாய் மற்றும் 500ரூபாய் நோட்டுக்களிலும் பார்க்கத்தக்க சாளரமுள்ள பாதுகாப்பு இழையைக் கொண்டுள்ளன.ஆனால் இவற்றில் பதிக்கப்பட்ட இழை பாதி வெளியில் தெரிவதாகவும்,பாதி உள்ளே பதிக்கப்பட்டதாகவும் உள்ளது.வெளிச்சத்தில் பிடித்துப்பார்க்கும்போது இந்த இழை தொடர்ச்சியான ஒரு கோடாகத்தெரியும்.1000ரூபாய் தாட்களைத்தவிர மற்ற ரூபாய் நோட்டுக்களில் இந்த இழையில்தேவநாகரி எழுத்து வடிவத்திலுள்ள 'பாரத்' என்ற வார்த்தையும் "RBI" என்ற ஆங்கில வார்த்தையும் மாறி மாறித் தோற்றமளிக்கும்.ஆயிரம் ரூபாய் தாளில் மட்டும் 'பாரத்' என்ற தேவநாகரி வார்த்தையுடன் '1000' மற்றும் 'RBI' ஆகிய வார்த்தைகளும் இருக்கும்.பழைய நோட்டுக்களில் எழுத்துக்கள் எதுவும் இல்லாமல் பார்க்க இயலாத முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்பு இழைகளைக் கொண்டிருந்தன.
(2) மறைந்திருக்கும் மதிப்பெண்;
மகாத்மா காந்தியின் உரவப்படத்துக்கு வலது பக்கத்திலுள்ள செங்குத்துப்பட்டைக்கோட்டில் அந்தந்த இலக்க மதிப்புக்கு ஏற்ற எண்கள் அதாவது ரூபாய் மதிப்புக்கேற்ற எண்கள் 20 , 50, 100,500,1000 என அந்தந்த எண்கள் மறைந்திருக்கும்.உள்ளங்கையில் பிடித்து அதன்மேல் 45 டிகிரி கோணத்தில் வெளிச்சம் விழுமாறு செய்தால் மட்டுமே அந்த மதிப்பினைக் காண முடியும்.இல்லாவிட்டால் இந்தத்தோற்றம் வெறும் செங்குத்துக்கோடாகவே தெரியும்.
(3)நுண்ணிய எழுத்துக்கள்;
மகாத்மா காந்தி உருவப்படத்துக்கும் செங்குத்துப்பட்டைக்கோட்டுக்கும் இடையில் இந்த நுண்ணிய அம்சம் உள்ளது.10ருபாய் 20ரூபாய் தாள்களில் இந்த இலக்க மதிப்புகளும் RBI என்ற எழுத்துக்களும் உள்ளன.உருப்பெருக்கக்கண்ணாடியின் வழியாகப் பார்த்தால் இதனை தெளிவாகக்காணலாம்.
(4)அடையாளக்குறியீடு;
பத்து ரூபாய் தாளைத்தவிர மற்ற ரூபாய்களில் நீர்க்குறியீட்டுச்சாளரத்திற்கு இடது புறத்தில் ஒரு செதுக்கு உருவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்தத்தோற்றம் பல்வேறு இயக்க மதிப்புத்தாள்களில் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன.ரூ20 இல் செங்குத்து நீள் சதுரம்,ரூ 50 இல் சதுரம், ரூ100 இல் முக்கோணம், ரூ500 இல் வட்டம், ரு1000 இல் சாய் சதுரம் என மதிப்புக்கேற்ப பல்வேறு தோற்றங்களில் இருக்கும்.இதனால் பார்வை இல்லாதவர்கள் அத்தாளின் இலக்க மதிப்பினை அடையாளம் காண உதவுகிறது.
(5)செதுக்கு உருவம்;
மகாத்மா காந்தி உருவப்படம்,ரிசர்வ் வங்கி முத்திரை, உத்தரவாத உறுதிமொழி வாசகம்,இடது பக்கத்தில் அசோகா தூண் சின்னம்,ரிசர்வ் வங்கி கவர்னர் கையொப்பம் ஆகியன செதுக்கு உருவத்தில் அச்சிடப்பட்டுள்ளன.அதாவது தூக்கலான அச்சுக்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
(6) ஒளிரும் தன்மை;
தாள்களின் எண் பதிக்கப்பட்டுள்ள இடம் ஒளிரும் மையினால் அச்சிடப்பட்டுள்ளது.தாள்களில் ஒளியிழைகளும் உள்ளன.புற ஊதாக்கதிர் விளக்கின் ஒளியில் பார்க்கும்போது இந்த இரண்டையும் காணலாம்.
(7) பார்வைக்கோணத்தில் மாறுபடும் மை;
ரூ 500 மற்றும் ரூ 1000 பணத்தாள்களில் ரூ500 மற்றும் ரூ1000 இவற்றின் மேல் வண்ணம் மாறித்தோன்றும் மையினால் அச்சிடப்பட்டுள்ளன.அதாவது லேசான மஞ்சள்,லேசான ஊதா,பழுப்பு ஆகிய மாற்றப்பட்ட வண்ணத்திட்டங்களில் அச்சிடப்பட்டுள்ளன.இந்தத்தாள்களை கிடைமட்டமாகப் பிடித்துப் பார்த்தால் இந்த எண்களின் வண்ணங்கள் பச்சையாகவும் ஒரு கோணத்தில் பிடித்துப்பார்த்தால் நீல நிறமாகவும் காணப்படும்.
உதாரணமாக
ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து படத்தில் உள்ளவாறு அறிய முடிகிறதா என பார்க்கலாம்.இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும் அவை கள்ள நோட்டுத்தான்.
முக்கியமான தகவல்
தங்களிடமுள்ள அழுக்கடைந்த அல்லது சேதமடைந்த பணத்தாள்களை வங்கிகளில் செலுத்தி அதற்குண்டான முழுத்தொகையினையும் மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால்
பணத்தின் பரப்பு குறைவாக இருப்பவை.வரிசை எண்ணின் பெரும்பகுதி இல்லாதவை,ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மதிப்பிழக்கச் செய்யப்பட்டு இருந்தால்,கள்ள நோட்டு என கண்டறியப்பட்டால்,வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டிருந்தால்,வேண்டுமென்றே சேதப்படுத்தி இருந்தால்,வேண்டுமென்றே திருத்தப்பட்டிருந்தால்,தேவையற்ற வார்த்தைகளை எழுதி இருந்தால்,அரசியல் பண்புகளுக்கான நோக்கங்களையுடைய வார்த்தைகளை எழுதி இருந்தால்,படங்களை வரைந்திருந்தால் எந்த வங்கிகளிலும் மாற்ற இயலாது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஒபட்ஸ்மேன் திட்டம்.
இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" (Ombudsman) என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.
XXXX (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார். அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது. உடனே அந்த வாடிக்கையாளர் வங்கியை அணுகி உள்ளார். வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர். இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி, வாடிக்கையாளர் மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக பொறுமை இழந்த XXXXXXX என்ற வாடிக்கையாளர் பின்னர் தனியார் வங்கியில் வேலை செய்யும் தனது நண்பரிடம் கூறி உள்ளார். அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" {Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.
அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html ஆதங்கமாக தெரிவித்துள்ளார். மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது. பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.
அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர். மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் {Ombudsman} https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செய்யுங்கள்.
நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யப்பட்டால் சமபந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்ப்ப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது. மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளையையே மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.
PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
https://www.rbi.org.in/commonman/Tamil/Scripts/AgainstBankFAQs.aspx
08 ஜூன் 2015
உடல் வலி நீக்க
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.சித்த வைத்தியத்தில் வலி நீக்கும் மருத்துவமுறைகள் அதற்கான பயிற்சி முறைகளை கற்போம்.
உடலில் வலி வந்தால் உடனே மருத்துவரிடம் சென்று 'வலி நீக்க' ஊசி போட்டுக் கொள்வது இன்றைய நாகரீக தலைமுறையின் நடைமுறை.
வலிநீக்க ஊசிகள் உடலில் ஏற்படுத்தும் பின்விளைவுகள் மிகவும் பயங்கரமானவை என்பது அந்த ஊசிகள் பற்றி அறிந்த மருத்துவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
கடுமையான உழைப்பு என்பது தமிழர்களின் கலாச்சாரம். நிலத்தினில் உழுதார்கள்; கதிரடித்தார்கள்; களத்திற்கு கொண்டு வந்தார்கள்; உலக்கை அல்லது திருகையால் உதிர்த்து பொங்கி சாப்பிட்டார்கள்.இப்போது டிராக்டர், கதிரடிக்க எந்திரம், கிரைண்டர், குக்கர், மிக்சி என்று ஆகிவிட்டதால் மனிதர்களின் வேலை குறைந்து விட்டது. நோய்களும் பெருகி வருகின்றன.
அலோபதி வைத்தியம் என்பது பொதுவாக அவசர நிலைமைகளுக்கு தற்காலிக தீர்வை தருவதாக இருக்கிறது. எதெற்கெடுத்தாலும் மருத்துவரிடம் ஓடுவதை விடுத்து உடலில் ஏற்படும் வலிகளை நாமே சரி செய்து கொள்ள முடியும். இதற்கு நம் முன்னோர்கள் சொல்லி வைத்த சில எளிய பயிற்சிகள் உதவும்.
பழங்கால சித்த வைத்தியர்கள், முழங்கால் வலி, முதுகுவலி என்று வரும் நோயாளிகளுக்கு அவர்கள் கையால் மூலிகை எண்ணெயை தடவச் செய்து சூரிய ஒளியில் 10 முறை சுற்றி சூரிய வணக்கம் செய்யவும், காதுகளை பிடித்து பிள்ளையார் கோவிலில் தோப்புக் கரணம் போடச் சொல்வதும், பெருமாள் கோவலில் அங்கப்பிரதட்சணம் செய்யச் சொல்வதும், முருகன் கோவலில் காவடி எடுப்பதும், அம்மன் கோவலிலில் முளைப்பாரி எடுப்பதும், விளக்கு பூஜை செய்யவும் சொல்வார்கள்.
நம் உடலின் பல்வேறு பாகங்களில் தோன்றும் வலிகளை மருந்தின்றியோ, மருந்துகளை உட்கொண்டே சில எளிய பயிற்சிகள் மூலம் குணப்படுத்துவதை தான் தற்போது பிசியோதெரபி என்று அழைக்கிறார்கள். உடலில் வலிகளே வராமல் உடல் எந்த கோணத்திலும் வளைவதற்கான உத்தியாகவே யோகாசனங்கள் விளங்கி வந்திருக்கின்றன.
உடலில் எலும்புகள், மூட்டுகள், தசைகள், நரம்புகள் ஆகியவற்றின் தோற்றம், அமைப்பு, மூட்டுகளின் அமைப்பு, பல்வேறு இடங்களில் தோன்றும் வலிகள், அவற்றை நீக்கும் பயிற்சிகளை கற்றுக் கொண்டு, நீங்களே வலிநீக்கும் பயிற்சி மருத்துவராக செயல்படலாம். இவை எல்லாம் எளிய பயிற்சிகள் தான்.

பழங்காலத்தில் சித்த வைத்தியர்களே
ஜோதிடர்களாகவும், சாமியார்களாகவும், ஊர் பெரியவர்களாகவும்,
முதியவர்களாகவும், அருள்வாக்கு சொல்பவர்களாகவும், தர்மகாரியம்
செய்பவர்களாகவும் இருந்து வந்தனர். அவர்களின் அறிவுரைப்படியே ஒவ்வொரு
ஆண்டும் மாலையணிந்து பாதயாத்திரை செல்வதும், ஊர்கூடி தேர் இழுப்பதும்,
தீச்சட்டி தூக்குவதும், நெருப்பு மிதிப்பதும் வழக்கமாக இருந்தது. இது
உடற்பயிற்சி மட்டுமின்றி மனதை ஒருநிலைப்படுத்தும் உளரீதியான பயிற்சியுமாக
இருந்து வந்தன.
அகத்தியர், யூகிமுனிவர் போன்ற சித்தர்களின் நூல்களை படிக்கும் போது நோய்களுக்கான மருந்து முறைகளை மட்டும் அவர்கள் குறிப்பிடுவதில்லை. மாறாக, மந்திரம் ஓதுதல், உடலை வளைத்து வணக்கம் செய்தல், உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுதல் ஆகியவற்றையும் கூடுதலாக குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதியவர்கள் கால்மேல் கால் போட்டு காலாட்டுவதும், இளையவர்கள்
முதியவர்கள் முன்பு கைகட்டி நிற்பதும், சோம்பேறி மகனை முழங்கால் போடச்
சொல்வதும் உடலை சுறுசுறுப்பாக்கவும், மனதை அமைதிப்படுத்தவும்
உதவியிருக்கிறது. அகத்தியர், யூகிமுனிவர் போன்ற சித்தர்களின் நூல்களை படிக்கும் போது நோய்களுக்கான மருந்து முறைகளை மட்டும் அவர்கள் குறிப்பிடுவதில்லை. மாறாக, மந்திரம் ஓதுதல், உடலை வளைத்து வணக்கம் செய்தல், உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுதல் ஆகியவற்றையும் கூடுதலாக குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நம் உடலின் பல்வேறு பாகங்களில் தோன்றும் வலிகளை மருந்தின்றியோ, மருந்துகளை உட்கொண்டே சில எளிய பயிற்சிகள் மூலம் குணப்படுத்துவதை தான் தற்போது பிசியோதெரபி என்று அழைக்கிறார்கள். உடலில் வலிகளே வராமல் உடல் எந்த கோணத்திலும் வளைவதற்கான உத்தியாகவே யோகாசனங்கள் விளங்கி வந்திருக்கின்றன.
உடலில் எலும்புகள், மூட்டுகள், தசைகள், நரம்புகள் ஆகியவற்றின் தோற்றம், அமைப்பு, மூட்டுகளின் அமைப்பு, பல்வேறு இடங்களில் தோன்றும் வலிகள், அவற்றை நீக்கும் பயிற்சிகளை கற்றுக் கொண்டு, நீங்களே வலிநீக்கும் பயிற்சி மருத்துவராக செயல்படலாம். இவை எல்லாம் எளிய பயிற்சிகள் தான்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
வாசிப்பை நேசிப்போம்.... வீட்டிற்கு வெளிச்சம் சாளரத்தின் ஊடே.... அறிவிற்கு வெளிச்சம் வாசிக்கும் நூலே!!!! வாசிக்காமல் யார்க்கும் வ...
-
மரியாதைக்குரியவர்களே, வணக்கம். 'கொங்குத்தென்றல்' வலைப்பக்கத்திற்கு அனைவரையு...