03 டிசம்பர் 2020

பண்ணாரி அம்மன் சமுதாய வானொலி - BACR 90.4MHz

                                        


 

மரியாதைக்குரியவர்களே,

 வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.2-12-2020முதல் பண்ணாரி அம்மன் சமுதாய வானொலி(மக்களுக்கான உறவுப் பாலம்) 90.4MHz உடன் சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் இணைந்து  சாலைப் பாதுகாப்புத் தொடர் ஒலிபரப்பு தினமும் செய்துவருகிறது.




 


08 நவம்பர் 2020

நில் - கவனி - செல், BACR 90.4 MHZ

  மரியாதைக்குரியவர்களே,

 வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு  தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

 தினந்தோறும் சாலை பாதுகாப்பு கல்வி மக்களுக்கு வழங்கும் நோக்கத்தில்,

நில்-கவனி-செல் தலைப்பிலான ஒலிபரப்புக்காக இன்றுசத்தியமங்கலத்தில் மக்களுக்கான உறவுப்பாலமாக திகழும் 90.4 MHZ பண்ணாரி அம்மன் சமுதாய வானொலிநிலையத்தில் 'விபத்தின்றி பயணிப்பது சாத்தியமே!' என கலந்துரையாடல் நடைபெற்றது.சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.











திரு. S.P.T.கணபதிசோதரன் அவர்கள்,அரசுப் பள்ளி ஆசிரியர்,மெய் மறந்து பாடிய காட்சி!...

ரிலீப் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் நிர்வாகி திரு. N.ஆதில் அவர்களது விழிப்புரை...



 திரு. M.கோவிந்தராஜன்B.E., அவர்கள்,

அம்மன் ஹைடெக் டிரைவர் டிரெயினிங் இன்ஸ்டிடியூட் நிறுவனர்  உரை....



தினந்தோறும் சாலை பாதுகாப்பு கல்வி.......

          மரியாதைக்குரியவர்களே,

 வணக்கம்.தங்களை கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். கடந்த பத்தாண்டுகளாக ஜனவரி மாதத்தில் அரசு அறிவித்த சாலை பாதுகாப்பு வாரவிழாவை மட்டும் நடத்தினோம்.

இந்தாண்டு  சாலை பாதுகாப்பு  பற்றி மக்களுக்கு  தினமும் நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துண்டறிக்கைகள் விநியோகித்து பரப்புரை செய்து வருகிறோம்.அதன் தொடக்க நிகழ்வு பற்றிய பதிவு ..........

          தினந்தோறும் சாலை பாதுகாப்பு கல்வி!...
 

தொடக்கநிகழ்வு...
                       தலைப்பு: உறுதிமொழி
                    இடம்: ஊ.ஒ.ந.பள்ளி,தாளவாடி
                  நாள்:25-2-2020 செவ்வாய் காலை 9 மணி.
 

(1)தொடங்கி வைப்பு:

திரு.M.அன்பரசு அவர்கள்,காவல் ஆய்வாளர்,

காவல்நிலையம்,தாளவாடி
 

(2)வரவேற்பு: ஆசிரியர் டில்லிபாபு அவர்கள்,

ஊ.ஒ.ந.பள்ளி,தாளவாடி
(3)தலைமை: 

திருமதி.தனபாக்கியம் அவர்கள்,

வட்டார கல்வி அலுவலர்,தாளவாடி
முன்னிலை: 

(4)திரு.S.வினோத்குமார் B.E. அவர்கள்,
கிளை மேலாளர்,
TNSTC,தாளவாடி
(5)திரு.S.ஜம்புலிங்கப்பா அவர்கள்,

தலைமையாசிரியர்,ஊ.ஒ.ந.பள்ளி,தாளவாடி
(6)திரு.M.சுரேஷ்குமார் அவர்கள்,

தாளாளர்,KCT மெட்ரிக் பள்ளி,தாளவாடி
 

நோக்கம்: (7)திரு.C.பரமேஸ்வரன்
 

வழிகாட்டுதல்.
(8)திரு. மரிய அருள் வியானி அவர்கள்,TRED
(9)திரு.பாபு அவர்கள்,சங்கம் டிரைவிங் ஸ்கூல்,தாளவாடி
(10)திரு.N.சுந்தர் அவர்கள்,

விடியல் இளைஞர் மன்றம்,தாளவாடி
(11)திரு.சுஹைல் அகமது அவர்கள்,தாளவாடி
நன்றியுரை,
(12)திரு.பாலமுருகன்B.A. அவர்கள்,

முத்திரைத்தாள் விற்பனையாளர்,
தாளவாடி,
ஒருங்கிணைப்பு:
(13)திரு.முருகானந்தம் அவர்கள்,

செய்தியாளர்,தாளவாடி &

(14)சாலை பாதுகாப்பு உறுதி ஏற்பு:

 KCT மெட்ரிக் பள்ளி & ஊ.ஒ.ந.பள்ளி மாணவ,மாணவியர்,தாளவாடி.
              ==========

 




03 நவம்பர் 2020

வாகன இன்சூரன்ஸ்-அறிவோமா!

 

                                   வாகன இன்சூரன்ஸ் - 

மரியாதக்குரியவர்களே,

 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். காப்பீடு (1)ஆயுள் காப்பீடு,(2)ஆரோக்கிய காப்பீடு,(3)இருப்பிட காப்பீடு,(4)சொத்து காப்பீடு,(5)பயண காப்பீடு,(6)மோட்டார் வாகன காப்பீடு,(7)விபத்துக் காப்பீடு,(8) காயத்திற்கான காப்பீடு என பலவகை உள்ளன.இந்தப் பதிவில் வாகனக் காப்பீடு பற்றி அறிவோம்.

                   நாம் எல்லோரும் ஆண்டிற்கு ஒருமுறை நமது வாகனத்தின் இன்சுரன்சை புதிப்பித்து வருவோம். அதனுடைய முழு விவரமும் காப்பீட்டு ஆவணத்தை அனைவரும் அதை படித்து புரிந்துகொண்டால் நமது பிரிமியத் தொகையை நன்கு சேமிக்கலாம்.

               மோட்டார் வாகன இன்சூரன்ஸ் என்பது மோட்டார் வாகனச் சட்டம் (1988) கீழ் இந்தியாவில் அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களுக்கு எடுத்திட வேண்டும் என்பது சட்டம். வாகனச் சோதனை செய்யும்போது ஒருவருடைய ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று மற்றும் வாகனக் காப்பீடு ஆகிய மூன்றும் அவசியம்! என்பது அனைவரும் அறிந்ததே.

மோட்டார் வாகன இன்சுரன்ஸ் நோக்கம் என்ன?

மோட்டார் இன்சூரன்ஸ் என்பது ஒருவருடைய வாகனத்திற்கு பல்வேறு வகைகளில் ஏற்படும் சேதங்களிலிருந்தோ அல்லது வாகனம் திருடு போனாலோ அதன்மீது கிடைக்கபெறும் காப்பீடேயாகும்.

அதைவிட முக்கியமான நோக்கம் ஒன்றுள்ளது. அதுதான் மூன்றாம் தரப்புக் காப்பீடு.

மூன்றாம தரப்புக் காப்பீடு (Third Party Cover) என்றால் என்ன?

மோட்டார் வாகனச் சட்டம் (1988) முக்கியமாக வலியுறுத்துவது இந்த மூன்றாம் தரப்புக் காப்பீடைப் பற்றியேயாகும். வாகனச் சோதனையின்போது போக்குவரத்துக் காவல்துறையினர் நமது ஆயுள் காப்பீடைப் பற்றியோ அல்லது நமது விபத்துக் காப்பீடுபற்றியோ கேட்காமல் நமது வாகனக் காப்பீடு பற்றி கேட்பதன் நோக்கம் என்ன? வாகனக் காப்பீட்டின் முக்கிய நோக்கம்,

அடுத்தவருக்கு நம்மால் ஏற்படும் விபத்தினால் ஏற்படும் சேதத்திற்கு, முக்கியமாக விபத்தில் பாதிக்கப்படும் வேறு வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும் காப்பீடு தான் மூன்றாம் தரப்புக் காப்பீடு.

சரி, மோட்டார் இன்சூரன்ஸ் வகைகள் என்னென்ன?

1. லயபிலிட்டி ஒன்லி பாலிஸி (Liability only policy) - மேலே குறிப்பிட்ட மூன்றாம் தரப்புக் காப்பீடை குறிப்பது தான் இந்த லயபிலிட்டி ஒன்லி பாலிஸி. அடுத்தவருக்கு நம்மால் ஏற்படும் விபத்தினால் ஏற்படும் உடல் மற்றும் பொருள் சேதத்திற்கு வழங்கப்படும் காப்பீடு தான் மூன்றாம் தரப்புக் காப்பீடு. மோட்டார் வாகனச் சட்டம் (1988) கீழ் இந்த வகையான காப்பீட்டுத் திட்டங்கள் காட்டாயம் எல்லோரும் எடுத்திருக்கவேண்டும்.
பேக்கேஜ் பாலிசி (Package policy): வாழக்கமாக எல்லோரும் எடுக்கும் பாலிசி இந்த வகையைச் சேர்ந்தது தான். இந்தப் பாலிசி மூன்றாம் தரப்புப் காப்பீடும் சொந்த வாகனக் காப்பீடும் இணைந்தது. காப்பீடு ஆவணத்தில் இரண்டிற்குமுண்டான பிரிமியம் தொகை தனித்தனியே குறிப்பிடப்பட்டிருக்கும்.

காப்பீட்டுத் தொகை(Sum Insured)

ஒரு வாகனத்தின் காப்பீட்டுத் தொகை என்பது அந்த வாகனத்திற்கான ஐ டி வி (Insured’s Declared Value) என வழங்கப்படும் வாகனத்தின் தற்போதைய கணக்கீடு தான் வாகனக் காப்பீடாக எடுத்துகொள்ளப்படும். வாகனம் முழுவதும் சேதமடைந்தாலோ அல்லது திருடு போனாலோ கிடைக்கபெறும் காப்பீட்டுத் தொகைதான் தான் ஐ டி வி. சுருக்கமாகச் சொன்னால், வாகனத்தின் தற்போதைய மதிப்பு தான் ஐ டி வி என்பதன் பொருள்.

பிரிமியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

பிரிமியம் இரண்டுவகையாகக் கணக்கிடப்படுகிறது. சொந்தச் சேதாரம் மற்றும் மூன்றாம் தரப்புக் காப்பீடு ஆகும். இன்சுரன்ஸ் துறையை வழி நடத்தும் ஐ ஆர் டி ஏ (I R D A) தான் மூன்றாம் தரப்புக் காப்பீடுக்குண்டான பிரிமியம் தொகையை நிர்ணயம் செய்கிறது. ஆனால் சொந்தச் சேதாரப் பிரிமியத் தொகையை நிர்ணயிப்பது காப்பீட்டு நிறுவனங்கள் தான். போட்டி கருதி வெவ்வேறு நிறுவனங்கள் பிரிமியத்தில் தள்ளுபடி அதிமாகக் கொடுத்து வருவதால் இன்சுரன்ஸ் எடுப்பவர்கள் சில நிறுவனங்களின் பிரிமியத் தொகையை ஒப்பிட்டு பார்த்தல் அவசியம்.

பிரிமியத் தொகை கணக்கீடு செய்யும்போது ஐ டி வி யிலும் மாறுதல்கள் ஏற்படும். குறைவான பிரிமியம் வேண்டும் என்பதற்காக ஐ டி வியை குறைத்தால் அது வாகனத்தின் இழப்பீட்டில் பிரதிபலிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பிரிமியம் ஒப்பிட்டு பார்க்கும்போது எல்லா நிறுவனங்களின் பிரிமியம் கணக்கீடும் ஒரே மாதரியாக எடுத்திருக்கிறார்களா என்று பார்த்தால் தான் எந்த நிறுவனத்தின் பிரிமியம் குறைவு என்று முடிவு செய்யமுடியும்.

மோட்டார் இன்சுரன்ஸ் பிரிமியம் கணக்கீட்டில் கழிவுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கழிவுகள் இரண்டு வகைப்படும்: கட்டாயக் கழிவு மற்றும் விருப்பக் கழிவு. (Compulsory and Voluntary Deductibles)

சுருக்கமாகச் சொன்னால், நமது வாகனத்துக்கு ரூபாய் 1000 கழிவு என்று வைத்துக்கொள்வோம். இழப்பீடு வாங்கும்போது நமது பங்காக ரூபாய் 1000 செலுத்தவேண்டும்.

 


25 ஆகஸ்ட் 2020

Rubiks cube -ரூபிக்ஸ் கியூப் விளையாடுவது எப்படி?

 அன்புடையீர்,

வணக்கம்.அனைவரையும் கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு வரவேற்கிறேன்.இந்தப் பதிவில் ரூபிக்ஸ் கியூப் எனப்படும்  மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்விளையாட்டு பற்றி அறிந்துகொள்வோம்.

 

 

Rubik's cube  எனப்படும் கனசதுர விளையாட்டானது தற்போது உலகளவில் சங்கம் அமைத்து சதுரங்க விளையாட்டு போன்று விளையாடப்படுகின்றது.

 கன சதுர வடிவமைப்புடையதாதலால் ஆறு முகங்களைக் கொண்டது க்யூப் .

 இது வெள்ளை,மஞ்சள்,பச்சை,நீலம்,சிவப்பு,ஆரஞ்சு ஆகிய வண்ணங்களை கொண்டது.வெள்ளைக்கு எதிரில் மஞ்சள்.,பச்சைக்கு எதிரில் நீலம்.,சிவப்புக்கு எதிரில் ஆரஞ்சு என்றமைப்பில் இருக்கும்.

தொடரும்.....

21 ஜூன் 2020

உலக இசை தினம்-ஜூன் 21

                                                   WORLD MUSIC DAY - JUNE 21
 



  மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். சர்வதேச மொழியாம் இசையின் பெருமையை பறைசாற்றும்விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 உலக இசைதினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி இன்று ஜூன் 21 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை உலக நாடுகளில் இசை தினமாக கொண்டாடப்படுகிறது.

                 இசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை.  சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் ஒலிகளைப் பற்றிய கலையாகும். இது சிறந்த கலைகளில் ஒன்று.இசை இன்று பல்வேறு பயன்களைத் தருகின்றது.
        தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் இருபது விழுக்காடு இசை சம்பந்தமாகப் பார்க்கப்படும் காணொளிகளாகும்.
                    இந்நிலையில், இசைத்துறையில் சாதனைப்படைத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக  ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ந்தேதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இந்தியா உட்பட  110-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது.

 அன்புடன் இசை தினத்தை வாழ்த்தும் ,
 செ.பரமேஸ்வரன், சத்தியமங்கலம்.ஈரோடு மாவட்டம்.

16 ஜூன் 2020

பதிவு-5 நீங்களும் கீ போர்டு வாசிக்கலாம்!

                                                       MUSIC KEY BOARD-  
                             பதிவு-5    நீங்களும்  கீ போர்டு வாசிக்கலாம்.
                                                -----------------------------------
                                           மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.இந்தப் பதிவில் இசைக்கருவிகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் மியூசிக் கீ போர்டு வாசிப்பது பற்றி அறிந்துகொள்வோம் வாங்க.

                 கீ போர்டு வாசிக்க கற்றுக்கொள்வதற்கு முன்னாடி இசையைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
            இசையை எந்த கருவியில் வாசித்தாலும் , வாசிப்பதற்கு முன்னாடி இசையைப் பற்றிய புரிதல் வேண்டும்.ஐம்புலன்களில் காற்றின் மூலமாகவே ஒலியினை பரப்பமுடியும்.அதேபோல ஐம்புலன்களில் செவியின் மூலமாகவே ஒலியினை கேட்டுணர முடியும்.அவ்வாறு எழுப்பப்படும் ஒலிஅலைந்து நகர்ந்து  கேட்போரின் காதுகளுக்கு சென்றடைகிறது.இசைக்கருவிகளிலிருந்து எழுப்பப்படுகின்ற ஒலியானது ஒழுங்குபடுத்தப்பட்டு சீராக இனிமையாக சென்று கேட்பவர்களை இசையச் செய்கின்றது.
இவ்வாறு இசையச் செய்கின்ற ஒலிகளை நமது முன்னோர்கள் அவைகளின் அதிர்வுகளுக்கேற்ப சுரங்களாக வகையறிந்து உள்ளனர்.
அவைகளே ச,ரி,க,ம,ப,த,நி என்னும் ஏழு வகை சுரங்களாகும்.இந்த சுரங்களை ஒன்றுக்கொன்று கலந்து பல்வேறு ராகங்களை உருவாக்குகின்றனர்.
இனி இசையின் கீ போர்டு பற்றி அறிவோம் வாங்க!.
 இந்த கீ போர்டில் பல்வேறு இசைக்கருவிகளையும் அதாவது பியானோ,கிட்டார்,ட்ரம்ஸ்,புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளையும் வாசிக்கும் வசதிகளை கொடுத்துள்ளனர்.ஆதலால் கீ போர்டு வாசிக்கத் தெரிந்துகொண்டாலே பல்வேறு இசைக்கருவிகளையும் வாசித்து இன்புறலாம்.
 மியூசிக்  கீ போர்டில் வரிசையாக WHITE KEYS வெள்ளை பட்டன்களும், BLACK KEYS கருப்பு பட்டன்களும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.அவற்றில்  WHITE KEYS வெள்ளை பட்டன்கள் அனைத்தும்  NATURAL KEYS இயற்கையான ஒலியெழுப்பும் பட்டன்கள் என்கிறோம். BLACK KEYS  கருப்பு பட்டன்கள் அனைத்தும்  SHARP KEYS கூர்மையான ஒலிகளை எழுப்பும் பட்டன்கள் என்கிறோம்.BLACK KEYS கருப்பு பட்டன்களுக்கு  FLATE KEY குறைந்த ஒலி பட்டன்கள் என்றும் அழைக்கப்படுகின்றது.அதாவது ஷார்ப் கீ அல்லது பிளாட் கீ என்றழைக்கின்றோம்.
 கீ போர்டில் இடது  பக்கத்தில் கருப்பு பட்டன்கள்  இரண்டு சேர்ந்து ஒரு இணையாகவும்,அடுத்து மூன்று கருப்பு பட்டன்கள் சேர்ந்து ஒரு இணையாகவும் அமைந்திருக்கும்.இவைகளின் நடுவில் விட்டு விட்டு வெள்ளை பட்டன்கள் அமைந்திருக்கும்.இந்த பட்டன்களில்தாங்க இசைக்கு தேவையான சுருதிகள் அதாவது  நோட்ஸ் அமைந்து உள்ளன.
அதாவது  முதல் இரண்டு கருப்பு பட்டன்களின் முதல் பட்டனின் இடது அருகிலுள்ள வெள்ளை பட்டன் 'ச' சுருதி அதாவது 'C ' NOTE  என்று அழைக்கப்படுகிறது.அடுத்து உள்ள வெள்ளை பட்டன் ரி சுருதி D NOTE அடுத்து உள்ள வெள்ளை பட்டன் க சுருதி E NOTE, அடுத்து உள்ள வெள்ளை பட்டன் ம  F NOTE இவ்வாறாக தொடர்ந்து வரிசையாக உள்ள வெள்ளை பட்டன்களை ச,ரி,க,ம,ப,த,நி என சுருதிகள் வரிசை என்கிறோம்.ஆங்கிலத்தில் C,D,E,F,G,A,B   என ஏழு சுரங்களின் பெயர்களாக எழுதுகிறோம்.
                                      விரைவில்  (தொடரும்)

பகுதி - 4 இசையின் அடிப்படை

                                          பகுதி-4 இசையின் அடிப்படை.
                                           ----------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
      இந்தப் பதிவில் இசையின் அடிப்படை விசயங்களைத் தெரிந்துகொள்வோம் வாங்க..
            இசையின் முதல் பாகமே   சுதி எனப்படும் சுரங்கள் ஆகும். சுருதியை ஒலி அதிர்வுகள் என்போம்.மேற்கத்திய இசையில் சுரங்களை  NOTES நோட்ஸ் என்பர்.  https://konguthendral.blogspot.com

     இந்திய இசையில் ஏழு சுரங்களை ச,ரி,க,ம,ப,த,நி, (மறுபடியும்)ச என்று எட்டு சுரங்களாக வகைப்படுத்தியுள்ளனர்.இந்த எட்டு சுரங்களும் அடங்கிய ஒரு தொகுப்பு ஒரு ஸ்தாயி எனப்படும்.  https://konguthendral.blogspot.com
                 மேற்கத்திய இசையில் ச,ரி,க,ம,ப,த,நி, ஆகிய ஏழு சுரங்களையும் C,D,E,F,G,A,B ஆகிய எழுத்துக்களால் குறிக்கப்பட்டு ஒவ்வொரு எழுத்தும் ஒரு NOTE என்றழைக்கப்படுகின்றது.
          C,D,E,F,G,A,B, மறுபடியும் C   ஆகிய எட்டு NOTESகளும் அடங்கிய ஒரு தொகுப்பு  ஒரு  OCTAVE அல்லது ஒரு செட் என்றழைக்கப்படுகின்றது.
              இந்திய இசையில் எல்லாப் பாடலும் 'ச' என்ற முதல் சுருதியில்தாங்க தொடங்கும்.
             மேற்கத்திய இசையில் C,D,E,F,G,A,B,ஆகிய ஏழு (NOTES) நோட்ஸ்களில் எந்த ஒரு ( NOTE) நோட்ஸிலும்  தொடங்கும்.அந்த ஆரம்ப நோட்ஸின் ( SCALE) ஸ்கேல் என்று பெயரிட்டு அழைக்கப்படும்.உதாரணமாக  C யில் தொடங்கினால் அந்த பாடலுக்கு 'C' SCALE என்றழைப்பர்.G யில் தொடங்கும் பாடலுக்கு 'G' SCALE என்றழைப்பர்.   https://konguthendral.blogspot.com
         
            இந்திய இசையில் சுரங்களின் வரிசையை அதாவது ச,ரி,க,ம,ப,த,நி,ச ஆகிய அமைப்புகொண்ட சுரங்களை 'சுவராவளி' அல்லது 'சரளிவரிசை' என்றுதாங்க அழைப்பார்கள்.

                 இசையானது சுழற்சிமுறையில் பயணிப்பதால்தாங்க 'ச' மீண்டும் சேர்க்கப்படுகிறது.பயிற்சி பெற,பெற தெளிவாக புரிந்துகொள்வீர்கள்.ஆதலால் குழப்பம் விளைவிக்கும் பகுதியை விட்டு கடந்து செல்லுங்க.பின்னர் தாங்களாகவே புரிந்துகொள்வீங்க....

      ச,ரி,க,ம,ப,த,நி,சஆகிய எட்டு சுரங்களும் அடங்கிய தொகுப்பு ஒரு ஸ்தாயி எனப்படும் அல்லவா!.அந்த ஸ்தாயி ஆனது மத்திய ஸ்தாயி,மந்திர ஸ்தாயி,அனுமந்திர ஸ்தாயி ,தார ஸ்தாயி,அதிதார ஸ்தாயி என சூருதிகளை கூட்டி இசைப்பதற்கேற்பவும்,சுருதிகளை குறைத்து இசைப்பதற்கேற்பவும் விரிவுபடுத்தி அழைக்கப்படுகின்றது.
                 மேற்கத்திய இசையில் LOW OCTAVE,MIDDLE OCTAVE,HIGH OCTAVE என விரிவுபடுத்தி அழைக்கப்படுகின்றது.
                   சரளி வரிசையானது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.அதாவது ச,ரி,க,ம நான்கு சுரங்களும் - பூர்வாங்கம் எனவும்,ப,த,நி,ச நான்கு சுரங்களும்- உத்திராங்கம் எனவும் அழைக்கப்படுகின்றது.   https://konguthendral.blogspot.com

ஆரோகணம் எனப்படுவது  ச,ரி,க,ம,ப,த,நி,ச என்ற வரிசையில் அதாவது சுரங்களின் ஏறுவரிசையில் இசைக்கப்படுவது ஆகும்.இதனையே, ச,நி,த,ப,ம,க,ரி,ச என்ற வரிசையில் அதாவது இறங்கியவரிசையில் இசைக்கப்படுவது அவரோகணம் என்றழைக்கப்படுகின்றது.

                ஆவர்த்தனம் எனப்படுவது ச,ரி,க,ம,ப,த,நி,ச என சுரங்களின் ஏறுவரிசையில் இசைத்து மீண்டும், ச,நி,த,ப,ம,க,ரி,ச என்ற இறங்கு வரிசையில் சுரங்களை இசைக்கப்படுவது ஆகும்.

               ஒவ்வொரு சுரமும் இரட்டையாக பாடப்பட்டால் அதனை ஜண்டை வரிசை என்றழைப்பார்கள்.

               சுரங்களானது இராகத்தின் இடையிடையே தாண்டிச் சென்றால் அந்த சுரங்களின் வரிசையை தாண்டுவரிசை அல்லது தாட்டு வரிசை என்றழைப்பார்கள்.

                இராகம் எனப்படுவது நாம் கேட்பதற்கு இனிமையைத் தருகின்றவகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையே ஆகும்.

          தாளம் எனப்படுவது ஒரு பாடலின் நடைமுறையை வரைமுறைப்படுத்துவது ஆகும்.  https://konguthendral.blogspot.com

          அலங்காரம் எனப்படுவது வெவ்வேறு தாளங்களின் அமைப்புகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறுவிதமாக அமைக்கப்பட்ட சுரவரிசையாகும்.அதாவது உள்ளோசையாகும்.அலங்காரத்தை கமகம் என்றழைப்பாங்க.
சுருக்கமாக சொல்லப்போனால்...சுருதி எனப்படும் சுரங்களைக் கொண்டு இராகமும்,இராக விளக்கத்திற்கு ஆரோகணமும்,அவரோகணமும் கிடைக்கின்றது.இராகத்திற்கான கீர்த்தனை அதாவது பாடல் பல்லவி,அனுபல்லவி,சரணம் என மூன்று பகுதிகளாகப் பாடப்படுகின்றது.
இராக வகைகளை காலை,மதியம்,மாலை,இரவு,என காலத்திற்கேற்ற ராகங்களாகவும்,கருணை,அன்பு,கோபம்,வீரம்,மகிழ்ச்சி,மங்கலம்,விந்தை,வெறுப்பு,பயம்,சாந்தம் என இயல்பு நடைக்கேற்ற ராகங்களாகவும் பாடப்படுகின்றன.
வாயால் பாடப்படும்போது சப்தம்,அர்த்தம்,லயம் அனைத்தும் சேர்ந்து இன்பம் அளிக்கிறது.  https://konguthendral.blogspot.com
இசைக்கருவிகளால் இசைக்கும்போது அதாவது காற்று வாத்தியங்களிலும்,தந்திக் வாத்தியங்களில் சப்தமும்,லயமும் சேர்ந்து இன்பத்தைத் தருகின்றன.
தோல் வாத்தியங்களில் இசைக்கப்படும்போது சப்தமும்,தாளநடையும் சேர்ந்து இன்பத்தைத் தருகின்றன.
 பதிவின் நீளம் கருதி இந்தப் பதிவு இத்துடன் நிறைவு செய்கிறேன்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.இசைக்கு வசமாவோம்.
 என அன்புடன்,  https://konguthendral.blogspot.com
 செ.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.
 Facebook ID ; பரமேஸ்வரன் சிபிசாரதி
 தொடரின் நீளம் கருதி 
அடுத்த பதிவில்  (5) கீ போர்டு வாசிக்கலாம் வாங்க!
என்ற தலைப்பில்..............


விரைவில்  தொடரும்.



15 ஜூன் 2020

(3) இசைக் கருவிகள் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

                                   (பதிவு - 3 )         இசைக் கருவிகள்

                                       
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
                 தமிழர்களின் இசைக்கருவிகளின் எண்ணிக்கையே  நூற்றுக்கணக்கில் இருக்கும்போது,இந்தியா உட்பட உலக நாடுகளின் இசைக் கருவிகளை இங்கு பட்டியலிட இயலாத அளவுக்கு ஆயிரக்கணக்கில் உள்ளதாக அறிய நேரிடுகிறது. https://konguthendral.blogspot.comஆதலால் தமிழர்களின் மிக முக்கியமான இசைக் கருவிகளை மட்டும் இங்கு காண்போம்.

                மிடறு என்றழைக்கப்படும் கற்தூண்கள் இசையை எழுப்பும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது தமிழர்களின் கட்டிடக்கலையில் நுட்பமானதாகும்.மிடறு எனப்படும் இந்த இசைத்தூண்கள் இன்றும் கோயில்களில் உள்ளன.சென்னையில் உள்ள யானைக்கோயில் உதாரணமாகும். https://konguthendral.blogspot.comமேலும் இசைத்தூண்கள் மதுரை,சுசீந்திரம்,திருநெல்வேலி,புதுக்கோட்டையிலும் உள்ளதாக அறியமுடிகிறது.
 தமிழ் இலக்கியத்தில்  இசைக் கருவிகளின் பட்டியல்.....
 இசைப்புலவர்: தமிழிசை மரபின் ...

(1) விண் அதிர் இமிழ் இசை கடுப்ப,பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு,ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
மின் இரும்பீலி அணித்தழைக்க்க் கோட்டோடு,
கண் இடை விடுத்த களிற்று உயிர்த்தும்பின்,
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தும்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக்க குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி,
நொடி தரு பாணிய பதலையும்,பிறவும்
             என 'மலைபடுகடாம்' என்ற இலக்கியத்தில் தமிழ் இசைக்கருவிகளின் வகைகள் விளக்கப்பட்டுள்ளன.

(2)மண் குடங்களின் வாயில் தோல் கட்டி விலங்குகளையும்,பறவைகளையும் ஓட்டத் தினைப்புனத்தில்(கழனிகளில்) பயன்படுத்தப்பட்ட குடமுழவு என்ற கருவி  பின்னர் இது இசைக்கருவியாக விளங்கியது.
‘‘பாடுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே
இசையின் இசையா இன்பாணித்தே‘‘
                                                - குறுந்தொகை 291 (2–3)


(3) தூம்பு என்பது மூங்கிலை அறுத்து குழல் போன்று செய்யப்பட்ட கருவியாகும். இதனை வாங்கியம் என்றும் நெடுவாங்கியம் என்றும் கூறியுள்ளனர். இது யானையின் துதிக்கையைப் போன்றது.தற்காலத்தில் பித்தளையில் கொம்பு என்ற பெயரில் செய்யப்பட்டு இசைக்கப்படுகிறது. https://konguthendral.blogspot.com
‘‘விரல்செறி தூம்பின் விடுதுளைக் கேற்ப
முரல்குரல் தும்பி அவிழ்மலர் ஊத
யாணர் வண்டினம் யாழிசை பிறக்க‘‘
                          - பரிபாடல் 21 (31–35)

தமிழர் இசைக் கருவிகளை இரு கூறாகப் பிரிக்கலாம். பண்களை இசைக்கத் தகுந்தவற்றைப் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளத்தைப் பொருத்தமாகக் குறித்துச் சுவையுடன் ஒலிக்கும் கருவிகளைத் தாளக் கருவிகள் என்றும் குறிப்பிடலாம். மேலும் இசையெழுப்பும் வாயில்களைக் கொண்டு அவற்றை நரம்புக் கருவி, துளைக் கருவி, தோற் கருவி, கஞ்சகக் கருவி எனப் பிரிக்கலாம். அவை மரம், மூங்கில், நரம்பு, கயிறு, தோல் முதலியவற்றால் பல உருவில் செய்யப்பட்டுள்ளன.  https://konguthendral.blogspot.com
தற்காலங்களில் நான்கு வகை இசைக்கருவிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.அவை..
(1)நரம்புக் கருவிகள்
 உதாரணம்-யாழ்,தம்புரா,வீணை,வயலின்,கோட்டு வாத்தியம் முதலியன.,(2)தோல் கருவிகள் 
உதாரணம் - பறை,தவில்,மிருதங்கம்,கஞ்சிரா,உடுக்கை முதலியன,
(3)துளைக் கருவிகள்
 உதாரணம் - நாதசுரம்,புல்லாங்குழல்,கிளாரிநெட் முதலியன,
(4)கன கருவிகள் 
உதாரணம்- ஜால்ரா எனப்படும் பாண்டில்(தாளம்),சேமக்கலம், முதலியனவாகும்.

  என அன்புடன்,  https://konguthendral.blogspot.com
 செ.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.
 Facebook ID ; பரமேஸ்வரன் சிபிசாரதி
 தொடரின் நீளம் கருதி 
அடுத்த பதிவில்  (4) இசையின் அடிப்படை  
என்ற தலைப்பில்..............


விரைவில்  தொடரும்.

12 ஜூன் 2020

(2) இந்திய இசை மரபுகள்

                  ( பதிவு -2) இந்திய இசை மரபுகளும்,மேற்கத்திய இசையும்.
                                                                  ---------------------------------
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
             இசையானது   பண்டையகாலம் தொட்டே உலகமக்களின் வாழ்க்கையில்   ஒரு அங்கமாக திகழ்ந்து வருகின்றது.அவரவர் ரசனைக்கேற்ப   வாயால் பாடியும்,பல்வேறு கருவிகளால் மீட்டும் இசையை கேட்டு மகிழ்வுற்று வருகின்றனர்.இசைக் குறிப்புகளும் பல்வேறு நாடுகளில் பல்வேறு வடிவங்களைப் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் பல இசை மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.அவற்றுள் முக்கியமானவைகளில் சில...
(1)கருநாடக இசை,(2)இந்துஸ்தானி இசை,(3)கிராமிய இசை,(4)பழந்தமிழர் இசை என வகைப்படுத்தலாம்.
                

இசைக் குறியீடு அமைப்புகள் பல நூற்றாண்டுகளாக எழுத்துக்களின் எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன.https://konguthendral.blogspot.com
           இந்திய இசையில்  ச,ரி,க,ம,ப,த,நி ஆகிய இசைக்குறிப்புகளைப் பயன்படுத்திவருகின்றது. இந்த ஏழு இராகங்களையும் ச,ரி,க,ம,ப,த,நி,ச ஆகிய எழுத்துக்களால் அடையாளப்படுத்தி பயன்படுத்துகின்றனர்.மேற்கண்ட ஏழு ராகங்களும் சேர்ந்து ஒரு ஸ்தாயி என்றழைக்கப்படுகிறது.இயற்கையாக ஒலிகளைக் கொண்ட சுரங்கள் மத்திய ஸ்தாயி என்றும் குறைந்த ஒலிகளைக் கொண்ட சுரங்கள்  மந்த்ர ஸ்தாயி என்றும்,உயர்ந்த ஒலிச் சுரங்களை தாரா ஸ்தாயி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலம் & டச்சுமொழி பேசும் நாடுகள் இலத்தீன் எழுத்துக்களால் குறிக்கப்பட்டு இசைக்குறிப்புகளை C,D,E,F,G,A,B,C  ஆகிய ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.உலகின் பெரும்பாலான நாடுகளில் குறிப்பாக இத்தாலி,ஸ்பெயின்,பிரான்சு,ருமேனியா,ரஷ்யா,மற்றும் அரபுநாடுகளில்  (Doh,Re,Mi,Fa,So,La,Ti,Doh)  டோ,ரீ,மி,ஃபா,சோ,லா,டி  என Solfege முறையில் இசைக்கின்றனர்.இந்த ராகங்களை  C,D,E,F,G,A,B,C ஆகிய ஆங்கில எழுத்துக்களால் அடையாளப்படுத்தி வருகின்றனர்.
 ஆக முதல் பதிவில் குறிப்பிட்டது போன்று இசையானது கடலுக்கு ஒப்பானது.பல்வேறு நாடுகளில் அவரவர் விருப்பத்திற்கேற்ப இசைக் குறிப்புகளை பயன்படுத்தி இசைக்கின்றனர்.இந்த தகவல்களெல்லாம் நமது அடிப்படைப் புரிதலுக்காக மட்டுமே.ஆதலால் நாம் அவற்றை கருத்தில் கொள்ளாமல் நமக்கேற்றவாறு இசைத்துப் பழகுவோம் வாங்க.

இனி தொடர்ந்து இசைப்பதிவுகளைப் பார்வையிடுங்க...குறைகள் இருப்பின் திருத்தம் செய்ய ஆலோசனை கூறுங்க!..
என அன்புடன்,  https://konguthendral.blogspot.com
 செ.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.
 Facebook ID ; பரமேஸ்வரன் சிபிசாரதி
 தொடரின் நீளம் கருதி 
அடுத்த பதிவில்  (3) இசைக் கருவிகள் என்ற தலைப்பில்..............


விரைவில்  தொடரும்.

09 ஜூன் 2020

இசை பழகலாம் வாங்க!

                                        மியூசிக் என்னும் இசை...
                                                         [MUSIC ]

                                         ---------------------------------
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

                      வழிப்போக்கர்கள்  சுற்றுலா,திருவிழா போன்ற நிகழ்வுகளில் தேங்காய்த்தொட்டி,பெயிண்ட் காலிடப்பா போன்ற வீணான பொருட்களில் வீணைபோல செய்யப்பட்ட கருவியில் இனிமையான பாடல்களை இசைப்பதைக் கேட்டு வியப்படைந்திருப்போம்.அதாவது கையில் கிடைத்த பொருட்களில் இனிமையாக தாளமிடுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருப்போம்.
(சுற்றுலாத் தளங்களான மைசூரு,பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் தற்போதும் காணலாம்.)இசைக் கச்சேரிகளில் இசைகளைக் கேட்டு இன்புறுவோம்.
இதனால் நம்மவர்களும்  இசையின் மீது ஆர்வம்கொண்டு மௌத் ஆர்கன்,புல்லாங்குழல்,எலக்ட்ரானிக் கீபோர்டு என வாங்கி வருவோம். அவற்றை வாசிக்கத் தெரியாமல் வீட்டில் கிடப்பில் போட்டுவிடுவோம்.இவ்வாறாக ஆர்வமிருந்தும் தக்க வழிகாட்டுதல் இல்லாமல், வாசிக்க இயலாமல் ஏக்கமுறும் இளைய சமூகத்திற்கு உதவலாம் என்ற எண்ணத்தில் ....
       கொரோனா ஊரடங்கு காலத்தில் இணையத்தில் நான் கற்ற பாடங்களை தங்களுக்காக  பதிவிடுகிறேன்.
   இசைக்கு காரணமே ஒலியலைகள் (Frequency) என்னும்  அதிர்வுதாங்க.அவ்வாறான ஒலியலைகளை ஒழுங்குபடுத்தும்போது செவிக்கு இனிய ஒலியான இசையை தருகிறது.
 (ஒலியலைகள் ஒழுங்கற்றுப்போனால் அதனை சப்தம் என்றும் இரைச்சல் என்றும் அழைக்கிறோம்)
                     இசையானது மகிழ்ச்சையைத் தரவும், மனதை ஒருநிலைப்படுத்தவும்,உயர்சிந்தனை பெறவும்  உதவுகிறது.
                        இசை என்பது கடல் போன்றது.நீர்த்தேக்கத்தைப்போன்றது.நமது தாகத்திற்கேற்ற அளவுதாங்க நீரை பருகமுடியும்.அதுபோல நமக்குத் தேவையான அளவு அறிந்துகொள்ள,இசை பற்றிய அடிப்படை அறிந்துகொள்ள வாங்க.
நான் கற்றறிந்தவைகளை ......
கீழ்கண்டவாறு
(1)அறிமுகம் - இசையான இயற்கை ஒலிகள்
(2)இந்திய இசைமரபுகள்,
(3)இசைக் கருவிகள்,
(4) இசையின் அடிப்படையே ஏழுசுரங்கள்,
(5) கீ போர்டு வாசிப்பது ஒரு கலை,
(6)புல்லாங்குழல்,மௌத் ஆர்கன் ஆகிய கருவிகளிலும் இசைத்து மகிழலாம்,(7)எனக்கு உதவிய இசைக்கலை இணையதள முகவரிகள் பட்டியல்.............
     என தொடர்ந்துபல பதிவுகளாக இடுகையிடுகிறேன் https://konguthendral.blogspot.com.அதாவது  இசை பற்றி என்னறிவுக்குப் பட்டதை பகிர்ந்தளிக்கிறேன்.
           
    (1)இயற்கை ஒலிகளே இசையாக.....

                          பழங்காலத்தில் நாடோடிகளாகத் திரிந்த மனிதன்  ஓய்வு நேரங்களில்  தன்னைச் சுற்றி கவனத்தை செலுத்தினான்.வனவிலங்குகளின் சப்தங்களையும்,பறவைகளின் கத்துதலையும்,தாவரங்களிலும்,பாறைகளிலும், மோதும் காற்றலைகள் ஏற்படுத்தும் ஓசைகளையும் உன்னிப்பாக கேட்டபோது அந்த ஓசைகளிலும் இனிமையைக் கண்டான்.அவைகளில்  தன்னை மயக்கும் இனிய ஓசைகளைத் தேர்ந்தெடுத்தான்.
     ரிக் வேத காலத்தில்
                  மாடுகளின் சப்தத்திலிருந்து (துத்தம்) 'ரி' ,யானைகளின் சப்தத்திலிருந்து (தாரம்) 'நி', மயில்களின் சப்தத்திலிருந்து (குரல்) 'ஸ' ஆகிய ஒலிகளை தேர்ந்தெடுத்து 'ரி,நி,ஸ' இந்த மூன்று ராகங்களில் இசைத்து மகிழ்ந்தான்.
(ரிக் வேத காலத்தின் இசைகள் யாவும் ரி,நி,ஸ ஆகிய மூன்று ராகங்களில்தாங்க கேட்கமுடியும்).
யஜூர் வேதகாலத்தில்
                  ஆடுகளின் சப்தத்திலிருந்து (கைக்கிளை) 'க',     குதிரைகளின் சப்தத்திலிருந்து (விளரி) 'த' ஆகிய ஒலிகளை பிரித்தேடுத்து 'ரி,நி,ஸ,க,த', ஆகிய ஐந்து ராகங்களின் துணையோடு இசைத்து மகிழ்வுற்றான்.
 சாமவேத காலத்தில்
   கூடுதலாக குயில்களின் சப்தத்திலிருந்து (இளி) 'ப', புறாக்களின் சப்தத்திலிருந்து (ஊழை) 'ம',  ஆகிய ஓசைகளைப் பிரித்தெடுத்து  ஸ,ரி,நி,க,த,ப,ம, ஆகிய ஏழு ராகங்களை பயன்படுத்தி இசைத்தும்,பாடியும் மகிழ்ந்தான். https://konguthendral.blogspot.com

   இவ்வாறாக கேட்பதற்கு இசைவான ஏழு  ஸ,ரி,நி,க,த,ப,ம, ஓசைகளையும் பிற்காலத்தில் தனக்கு வசதியாக  ஒழுங்குபடுத்தினான். இசைப்பதற்கேற்ப ச,ரி,க,ம,ப,த,நி என்று வரிசைப்படுத்தினான்.

         காலங்காலமாக இசையையும் குருகுலவழியில் கற்று பயன்படுத்திய மனிதன்  இசையொலிகளை அடையாளப்படுத்தி குறியீடுகளாக்கி  பிற்காலத்தில் கற்றுக்கொள்வதற்கேற்ற இசைச்சொற்களாக்கி எழுதிவைத்து இசைக்கத் தொடங்கினான்.

            
                          ஒரு பாடலின் பொருள் உணர்வதைவிட அந்தப் பாடலின்  நயமான ஒலிதாங்க நமக்கு மகிழ்வினைத் தருகின்றது.அதனால்தாங்க எந்தமொழிப் பாடலாக இருந்தாலும்  நாம் ரசித்து இன்புறுகிறோம்.ஆகவே இசையை உலகப் பொதுமொழி என்கிறோம்.

இனி தொடர்ந்து இசைப்பதிவுகளைப் பார்வையிடுங்க...குறைகள் இருப்பின் திருத்தம் செய்ய ஆலோசனை கூறுங்க!..
என அன்புடன்,  https://konguthendral.blogspot.com
 செ.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.
 Facebook ID ; பரமேஸ்வரன் சிபிசாரதி
 தொடரின் நீளம் கருதி 
அடுத்த பதிவில்  (2) இந்திய இசை மரபுகள் தலைப்பில்..............

விரைவில்  தொடரும்.


10 மே 2020

அரிப்பு (சொரிதல் நோய்) FUNGAL INFECTIONS.....

                        படர்தாமரை,பூஞ்சை தொற்று,தோல் நோய்கள்...
                                                             Fungal Groin Infection 
                                       -------------------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.அனைவரையும் கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்.


   தொடை இடுக்குகள்,அக்குள் பகுதிகள்,தோல் பகுதிகள்,விரல் இடுக்குகள் போன்ற இடங்களில் நமக்கு பூஞ்சை தொற்று தாக்குகின்றன.அவை  படர் தாமரை,சேற்றுப் புண்,கரப்பான் நோய்,தோல் மடிப்பு நோய்,ஜாக் தொற்று,(konguthendral.blogspot.com)

                    இந்தப் பதிவில் பூஞ்சை தொற்றுகள் பற்றி அறிவோம்.
நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியால் எதிர்க்கமுடியாதபோது நம்மை பூஞ்சைதொற்று பாதிக்கிறது.
  பூஞ்சை தொற்றுகள் காற்று,மண்,தண்ணீர்,தாவரங்கள்,விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் காணப்படுகின்றன.

அரிப்பு எதனால் ஏற்படுகிறது?
   அரிப்பு;
                  நமது உடலில் வேண்டாத பொருட்கள் நுழையும்போது நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் அலாரம் போன்றது அரிப்பு.அதாவது ஒவ்வாமையின் வெளிப்பாடு அரிப்பு வாயிலாக நமக்கு உணர்த்துகிறது.
பேன்,பொடுகு,தேமல்,சிரங்கு,சொரியாசிஸ் போன்ற தோல்நோய்களால் அரிப்பு ஏற்படுகின்றன.
எறும்பு,குளவி,தேனீ,வண்டு,சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும் அந்த பகுதி சிவந்தும்,தடித்தும் அரிப்பு ஏற்படுகின்றன.
 பூஞ்சை தொற்றுகளும் நமக்கு அரிப்பை ஏற்படுத்துகின்றன.

 பூஞ்சை தொற்று...(konguthendral.blogspot.com)

         ஆண்களுக்கு குதம்,பிட்டம்,இடுப்பு பகுதிகளிலும்,உள்தொடை இடுக்கிலும்,அக்குள் பகுதிகளிலும் ஏற்படுகின்றன.

                 பெண்களுக்கு குதம்,பிட்டம்,உள்தொடை இடுக்குகளிலும்,இடுப்பு பகுதிகளிலும், அக்குள் பகுதிகளிலும், மார்புகளின் கீழ்ப்பகுதிகளிலும் ஏற்படுகின்றன.

இதன் அறிகுறி..
          எரிச்சல்,அரிப்பு,வெடித்த செதில் செதிலான தோல்,வட்ட வடிவில் சிவந்து இருத்தல்,தடித்தல் போன்றவையாகும்.

 பூஞ்சை தொற்று ஏற்பட காரணம்....
                    ஈரமான ஆடைகளை அணிவதாலும்,தற்போது நாகரீகம் என  நாம் அணியும் ஆடைகளாலும் பூஞ்சை தொற்று ஏற்படுகின்றன.மற்றும் பரவுகின்றன.(konguthendral.blogspot.com)

                 .அதாவது இறுக்கமான ஆடைகள், ஜட்டி,  பனியன் போன்ற உள்ளாடைகள் , டெனீம்ஜீன்ஸ்,  லெகின், போன்ற இறுக்கமான ஆடைகளை அணிவதால் காற்றோட்டமில்லாமல் பூஞ்சை தொற்று எளிதில் தாக்குகின்றன.
    மற்றவர்களின் ஆடைகள்,துண்டுகள்,சோப்புகளை பயன்படுத்துவதாலும் பூஞ்சை தொற்று பரவுகின்றன.அதிக வியர்வை,பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிப்  பெருக்கம்,அதிக வெப்பம்,ஈரப்பதம்,சுத்தமில்லமை,சுகாதாரமில்லாமை போன்றவற்றாலும் ,சொறிவதாலும் பரவுகின்றன.
     குறிப்பாக படர்தாமரை போன்ற பூஞ்சைகள்  தலை உட்பட உடலின் எல்லா பாகங்களிலும் பரவி அரிப்பை தந்து வேதனைக்கு ஆளாக்குகின்றன.
           
     பூஞ்சை தொற்றுகள் உட்புற பூஞ்சைதொற்று ,வெளிப்புற பூஞ்சைதொற்று என இரு பெரும்பிரிவுகளாக பரவுகின்றன.
                இவைகள் மொத்தம் 20இலட்சம் பூஞ்சை இனங்கள் இருப்பதாக தெரிகிறது.இவற்றில் 600க்கும் மேற்பட்டவை நோய்களை உருவாக்குபவை என்கிறார்கள்.பூஞ்சை தொற்றுகள் காற்றில் எளிதாக பரவும்.

                   பூஞ்சைக்கு சாதகமான இடங்களாவன....
            காற்றோட்டம் இல்லாத இடங்கள், ஈரப்பதம் உள்ள இடங்கள், வெதுவெதுப்பான சூடு உள்ள பகுதிகள் ஆகும்.(konguthendral.blogspot.com)

வெப்பமண்டல பகுதியான நம்ம தமிழ்நாட்டில் பருத்தி ஆடைகளே சிறந்தது.
சுகாதாரம் காத்தல் அவசியம் ஆகும்.மற்றவர்களின் ஆடைகள் மற்றும் சோப்பு போன்றவற்றை பயன்படுத்துவது தவிர்க்கவேண்டும்.ஈரப்பதமில்லாமல் துடைக்க வேண்டும்.காற்றோட்டத்திற்கான லேசான ஆடைகளை அணிதல்  வேண்டும்.இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிதல் வேண்டும்.
இனி மருத்துவ முறைகளை காண்போம்....
 (1)உப்பு குளியல்
 கடல்நீரில் குளிக்கு வேண்டும்.அல்லது  200கிராம் உப்பு கலந்த நீரில் குளித்து சிறிது நேரம் விட்டு நல்ல தண்ணீரில் குளிக்கவேண்டும்.உப்பு பூஞ்சையை ஒழிக்கும் தன்மையுடையது.
(2)தேங்காய் எண்ணெய் சிறந்த பூஞ்சை கிருமி நாசினியாகும்.ஆதலால் தேங்காய் எண்ணெய் தொடை இடுக்குகளிலும்,வெளிச்சமில்லாத மறைவிடங்களிலும் தடவி வரவேண்டும்.பூண்டு நசுக்கி போட்டு காய்ச்சியும் தடவலாம்.
(3)சோற்றுக் கற்றாழை ஜெல்.....(konguthendral.blogspot.com)

 சோற்றுக்கற்றாழை கூழ் (ஜெல்) எடுத்து நேரடியாக தடவி வரலாம்.
(4)வெங்காயம்...
 வெங்காயத்தை அரைத்து தடவி வரலாம்.
(5)பூண்டு தனியாக நசுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு வதக்கி வடித்து எடுத்த எண்ணெயை தடவி வரலாம்.
(6)குப்பைமேனி இலை...
 பெயரைக்கேட்டாலே அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும்.குப்பையான மேனியையும் சுத்தப்படுத்தும் மூலிகை என்று...
குப்பைமேனி இலை20 எடுத்து மஞ்சள்தூள்அரை டீ ஸ்பூன் சேர்த்து நன்கு இடித்து இரும்புச்சட்டியில் தேங்காய் எண்ணெய் இரண்டு டீ ஸ்பூன் ஊற்றி குப்பைமேனி இலையை போட்டு நன்றாக வதக்கி எடுத்து ஆறவைத்து வடித்து எடுத்த எண்ணெயை பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு ஒரு வாரம் காலை,மாலை என இரு வேளைகள் சொறி,அரிப்பு,சிரங்கு உள்ள இடங்களில் தடவி வர குணமாகும்.
(7)முருங்கை இலை..
 முருங்கை இலை எடுத்து நன்கு பிழிந்து  எடுத்த சாற்றில் சிறிது உப்பு சேர்த்து படை உள்ள இடத்தில் இருவேளையும்  தடவி வந்தால் குணமாகும்.
(8)நல்லெண்ணெய்..
 நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து பூண்டு 25பல் எடுத்து நசுக்கி சேர்த்து காய்ச்சி எடுத்துக்கொண்டு காலையிலும்,மாலையிலும் இருவேளை படர்தாமரையில் தடவி 15நிமிடங்கள் கழித்து கழுவி வர குணமாகும்.
(9) கருந்துளசி..(konguthendral.blogspot.com)

கருந்துளசியுடன் மூன்று மிளகு சேர்த்து தினமும் காலையிலும்,மாலையிலும் சாப்பிட்டு வந்தால் அரிப்பு,தடிப்பு குணமாகும்.
(10)மருதாணி இலை..
மருதாணி இலை உடலுக்கு குளிர்ச்சியையும் தரும்,பூஞ்சைகளையும், பாக்டீரியா எனப்படும் நுண்கிருமிகளையும் அழிக்கும் மருத்துவ குணமுடையது.தோல் நோய்களையும் தடுக்கும்.
(11)பூவரசு...
 பூவரசு காய் பூஞ்சைகள்,நுண்கிருமிகளை அழிக்கும்.
(12)பனைமரத்துப் பால்..
 வண்டு கடி போன்ற பூஞ்சைகளுக்கு தினமும் பனைமரத்தை கொட்டினால் வடியும் பாலை எடுத்து தடவி வந்தால் ஒரு வாரத்தில் குணமாகும்.
(12)கருந்தும்மட்டிக்காய்
 இந்த காயை பறித்து புழுவெட்டு உள்ள இடத்தில் மூன்று நாட்கள்,இருவேளை  தடவி வந்தால் விரைவில் குணமடைந்து முடி நன்கு வளரும்.(konguthendral.blogspot.com)

இவை தவிர
(13) சித்த மருத்துவம்,
(14)ஆயுர்வேத மருத்துவம் சிறந்த பலனை கொடுக்கும்.
(15) அல்லோபதி  எனப்படும் ஆங்கில மருத்துவத்தில்  TABLETகளாலும்,CAPSULகளாலும்,CREAMகளாலும்,INJECTIONகளாலும்  குணப்படுத்தலாம்.


பொறுப்பாகாமை அறிவிப்பு...
                   (konguthendral.blogspot.com)
      அனுபவப்பட்டவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தகவல் நோக்கத்துடன் வாசகர்களுக்கு பயன்படும்வகையில் இங்கு பதிவிடப்படுகிறது.இந்த பதிவுக்கு துல்லியம்,மற்றும் நம்பகத்தன்மை மற்றும் காலவரையறை உத்தரவாதம் தர இயலாதுங்க.ஆதலால் நம்பிக்கை இல்லாதபோது அருகிலுள்ள சித்த,ஆயுர்வேதம் அல்லது அல்லோபதி எனப்படும்  ஆங்கில மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுங்க.(konguthendral.blogspot.com)

30 ஏப்ரல் 2020

kidney stone-சிறுநீரகக் கல்&பித்த கல்

                                          சிறுநீரகக் கல் மற்றும் பித்தப்பை கல்
                                                Kidney Stone And Gallbladder Stone
                                                          -----------------------------
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
 இந்தப் பதிவில் நமக்கு அதிக தொந்தரவை தருகின்ற... சிறுநீரகத்திலும்,பித்தப் பையிலும்  கல்  உருவாவதற்கு காரணங்களும்,தீர்வுகளும் பார்ப்போம்.
                 நமது உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றிநாம் அறியவில்லை என்பதே உண்மை..இவற்றில் சிறுநீரகக்கல் அதிகமாக நம்மை பாதிக்கிறது.அடுத்ததாக பித்தப் பையில் தோன்றும் கல் நம்மை பாதிக்கிறது.

                கல்லடைப்பை நீக்க நம்பிக்கை,பொறுமை,கடைப்பிடிக்கும் தன்மை மனதில் உறுதியாக இருத்தல் அவசியம்....

(1)சிறுநீரகக் கல் உருவாக காரணங்களும்,தீர்வுகளும்....
 சிறுநீரகங்கள் (kidneys) 
                நமது உடலின் இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் அவரை விதை வடிவில் அமைந்த உறுப்புகளாகும். தன்னுள் பாய்ந்த ரத்தத்திலிருந்து சத்துப்பொருட்களையும்,கழிவுகளையும் வடித்தல், மீண்டும் உறிஞ்சுதல், சுரத்தல், கழிவகற்றல்ஆகிய நான்கு பணிகளைச் செய்தாலும் இதன் முக்கிய பணி  யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்றுவது ஆகும்.
                மேலும் அமில-காரங்களை சமன் செய்வதோடு ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

 கிட்னி ஸ்டோன் எனப்படும்
சிறுநீரகக்கல் உருவாகுவதற்கான  காரணங்கள்...
       
               தண்ணீர் சரிவர குடிக்காதது,ஊறுகாய்,அப்பளம்,மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுகள்,நொறுக்குத்தீனிகள்,அதிக காரமுள்ள உணவுகள்,அசைவ உணவுகளை காரமாக சாப்பிடுவது,ஒரே நேரத்தில் அதிகமான காரத்தை சேர்ப்பது போன்றவைகளும் சிறுநீரகத்தில் கல் உருவாக காரணங்களாகின்றன.(konguthendral.blogspot.com)

 தீர்வு......
            ரணகள்ளி இலை துளிர் இலையில் ஆரம்பித்து தினமும் ஒரு இலை வீதம் பறித்து நான்குமிளகு,இந்துப்பு சேர்த்து  ஏழுநாட்களுக்கு அடுத்தடுத்து கீழே உள்ள இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வாங்க.எப்பேர்பட்ட கல்லும் கரைந்துவிடும்.
                  வாழைத்தண்டு,பெருநெருஞ்சில்,சுரைக்காய்,வெண்பூசணி,கேரட்சாறு,பீட்ரூட்சாறு,எலுமிச்சைச் சாறு,நெல்லிச்சாறு,இவைகளை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறையாவது அதிகமாக குடித்துவாங்க.துளசிச்சாறு 100மில்லி காலையிலும்,மாலையிலும் குடித்து வாங்க.சப்போட்டா விதை 10 எடுத்து அரைத்து தண்ணீரில் கரைத்து அருந்திவாங்க.ஆனால் சப்போட்டா பழம் சாப்பிடக்கூடாது..
(konguthendral.blogspot.com)
 .கவனியுங்க.உப்பு,சர்க்கரை,ஐஸ் சேர்க்கக்கூடாது.


(2)பித்தப் பை கல் உருவாக காரணங்களும் தீர்வும்...
                        பித்தப்பை என்பது கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். கரும்பச்சை நிறத்தில் காணப்படும் இது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவை ஜீரணிப்பதற்குத்  தேவையான பித்தநீரைச் சேமித்து வைத்திருந்து தேவைப்பட்டபோது குடலுக்குள் செலுத்துகிறது(konguthendral.blogspot.com).அதாவது...
   தினமும் ஒரு லிட்டரிலிருந்து ஒன்றரை லிட்டர் வரை பித்தநீர் சுரக்கும் கல்லீரலானது நமது உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளில் மிகவும் பெரியது ஆகும்.கல்லீரலில் சுரக்கும் பித்தநீரானது முன்சிறுகுடலுக்கு பித்தநீர்க்குழாய்கள் வழியாக வருகிறது.கூடுதலாக   பித்தப்பையிலும் சென்று தேங்குகிறது.
பித்தப்பையானது பித்தநீரைப் பெற்றுக்கொண்டு, அதன் அடர்த்தியை அதிகரித்து, உணவு செரிமானத்துக்குத் தயாராக வைத்திருக்கும்.
அதிகப்படியான கொழுப்புச்சத்துக்களை செரிப்பதற்கு தன்னை சுருக்கி பித்தநீரை முன்சிறுகுடலுக்கு அனுப்பி உணவுக் கூழில் உள்ள கொழுப்பைச் சரியாகச் செரிக்க வைக்கும்.

 படத்தின் பாகங்கள் (1) கல்லீரல், (2) பித்தநீர் குழாய், (3)பித்தப் பை

பித்தப்பை கல்...
ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது..
        பித்தப் பையில் தோன்றும் கற்கள் மூன்று வகைப்படும்.அவை             (1)பித்தநீரில் கொலஸ்ட்ரால் அளவு மிகுவதால் உண்டாகும் கற்களுக்குக் 'கொழுப்புக் கற்கள்' அல்லது 'கொலஸ்ட்ரால் கற்கள்' என்று பெயர். இது பெரும்பாலும் ஒரே ஒரு கல்லாகவே இருக்கும். வெண்மை கலந்த மஞ்சள் நிறம் கொண்டதாக இது காணப்படும்.(konguthendral.blogspot.com)
(2) கறுத்த நிறமிக் கற்கள். இவ்வகை கற்கள் கறுத்த நிறமுடையவை. கால்சியம் கார்பைடால் இவை உருவாகின்றன.
(3) கலப்படக் கற்கள் என்று பெயர். பெரும்பாலான பித்தப்பைக் கற்கள் கலவைக் கற்களால் ஆனவையே.
கொலஸ்ட்ரால், கால்சியம் கார்பனேட், கால்சியம் பிலிருபினேட் போன்றவற்றால் உருவானவை. இவை எண்ணிக்கையிலும் அதிகமாக இருக்கும், பித்தக் குழாயை விரைவில் அடைத்துப் பிரச்சினைகளை உருவாக்கும். சுமார் 80 சதவீதம் பேருக்கு இவ்வகை கற்களே காணப்படுகின்றன.
 பித்தப்பை கல் கரைப்பதற்கு அதிக காலம் தேவைப்படும் ஆதலால் பொறுமை வேண்டும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்திடுங்க.இனிப்பு,காரம்,அசைவம் சாப்பிடவேண்டாம்.சீரகம் போட்டு கொதித்த தண்ணீரை அருந்திவாங்க.கேரட் மற்றும் பீட்ரூட் மற்றும் வெள்ளரிக்காய் இவைகளை சம அளவு எடுத்து மைய அரைத்த விழுதினை காலையிலும்,மாலையிலும் சாப்பிட்டு வாங்க.
தினமும் உணவுக்கு முன் காலையில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் மாலையில் ஆலிவ் எண்ணெய் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வாங்க..சாப்பிடுங்க.
(konguthendral.blogspot.com)
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு...
   கூடுதலாக விபரங்களை சேர்க்கும்வரை பொறுமை காக்க வேண்டுகிறேன்.
தாங்கள் அறிந்த தகவல்களையும் கருத்துப்பெட்டியில் பதிவிட்டு உதவுங்க.

பொறுப்பாகாமை அறிவிப்பு...
                         அனுபவப்பட்டவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தகவல் நோக்கத்துடன் வாசகர்களுக்கு பயன்படும்வகையில் இங்கு பதிவிடப்படுகிறது.இந்த பதிவுக்கு துல்லியம்,மற்றும் நம்பகத்தன்மை மற்றும் காலவரையறை உத்தரவாதம் தர இயலாதுங்க.ஆதலால் நம்பிக்கை இல்லாதபோது அருகிலுள்ள சித்த,ஆயுர்வேதம் அல்லது அல்லோபதி மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுங்க.

அன்புடன்
செ.பரமேஸ்வரன்,
 (konguthendral.blogspot.com)

குமார் பணிநிறைவு பாராட்டுவிழா-2020

              M. குமார் பணி நிறைவு பாராட்டுவிழா நிகழ்வு-30-4-2020
                                       -------------------------------------

26 ஏப்ரல் 2020

PILES மூலநோய்

                                                               மூலநோய்

                                                                  ------------
 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
                கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனக்கு எற்பட்ட மூலநோய்அனுபவத்தை இங்கு பகிரலாம் என்ற எண்ணத்தில்......... (konguthendral.blogspot.com)

 ஆமாங்க!.........................
                        கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசாங்கம் விதித்த ஊரடங்கு உத்தரவுக்கு பணிந்து வீட்டிலேயே 23-3-2020 அன்று முதல் அடைபட்டுக்கிடந்தபோது  ஊர் சுற்றிய உடம்பு அல்லவா! அதனால் ஓரிடத்தில் அடங்க மறுக்கவே? இந்த ஓய்வுநாட்களை பயனுள்ளவகையில் கழிக்கலாம! என்ற எண்ணத்தில்
முதலில் திருக்குறள் பெருமை அறிவோம் என்ற தொடரை எழுதி வந்தேன்.
தொடர்ந்து சமையல் கலை பற்றிய தொடரை எழுதி வந்தேன்.
அதன் பிறகு மூலநோய் தாக்குதலால் கணினி முன் உட்காரக்கூட முடியவில்லைங்க.....
 
 22-4-2020அன்று ஆசனவாயில் ஏற்பட்ட வீக்கத்தினால்  உட்காரக்கூட முடியாமல் வலியால் அவதிப்பட்டபோது......

          மற்றவர்களைப்போன்றே  கூச்சப்பட்டு  வெளியில் சொல்லாமல் தாக்குப்பிடிக்க முயற்சித்தும் தோல்வியைத் தழுவியதால் வெட்கமில்லாமல் வெளியில் சொன்னபோதுதாங்க  ........
     அதுதாங்க மூலவியாதி என்றார்கள். (konguthendral.blogspot.com)

              மூலவியாதியில் 21 வகை இருப்பதாக சித்தர்கள் கூறுகிறார்கள்.
தற்போது நவமூலம் அதாவது 9மூலநோய்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.
அவைகளை வெளி மூலம்,உள்மூலம்,ரத்த மூலம் என வகைப்படுத்திக்கொண்டே செல்கிறார்கள்.

 சரிங்க!..
அதுவல்ல  நமக்கு முக்கியம்?
மூலநோய் யாருக்கெல்லாம் வரும்?
மூலநோய் வருவதற்கு காரணங்கள் என்ன?
மூலநோய் வந்துவிட்டால் வேதனை எப்படி இருக்கும்?
மூல நோய் குணமடைய என்ன செய்ய வேண்டும்?
என்ற காரணங்களையும் தீர்வுகளையும்  இங்கு காண்போம்!


மூலநோய் என்பது.. (konguthendral.blogspot.com)
                ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாயில் முளைப்பு, புண், ரத்தப்போக்கு, சதை போன்று வளர்ச்சி, பலூன் போல வீக்கம், உட்புறமாக திட்டுதிட்டாக கட்டிகள் என பல்வேறு வடிவங்களில் உருவாகின்றன.
ஆண்,பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் வருகின்றன.
தற்சமயங்களில் இளைய சமூகத்திற்கும் மூலநோய் வருவது வேதனைக்குரியது.நம்பிக்கை இருந்தால் எனது அனுபவத்தைக்கூறியுள்ள சிகிச்சைகளை மேற்கொள்ளுங்க...சந்தேகமிருந்தால் அரசு சித்த மருத்துவமனைக்கு செல்லுங்க.வெட்கப்படாமல் சொல்லுங்க..ஆயுர்வேதம் மருத்துவமும்,ஓமியோபதி மருத்துவமும்  நல்ல பலனளிக்கிறது....



                     மூலநோய் வருவதற்கு காரணமே மலச்சிக்கல் மற்றும் உடல் சூடுதாங்க.
                      மலச்சிக்கல் வருவதற்கு காரணம் நமது  சமீபத்திய உணவுமுறைகள்.
பருவகாலத்திற்கேற்ற உணவுகளை எடுக்கத் தவறுவதும்,சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதும்,காரசாரமான உணவுகளை உட்கொள்வதும்,மசாலாப்பொருட்களை சாப்பிடுவதும்,விரைவு உணவுகளை சாப்பிடுவதும், கடைகளில் வணிக நோக்கத்தில் கலக்கப்படும் நிறமூட்டிகள்,சுவையூட்டிகள்,கெடாமலிருக்க பயன்படுத்தும் ரசாயனப்பொருட்கள் இவைகளை உண்பதாலும் மூலநோய் வருகிறது.

                 இயற்கை உணவுகளையும்,நார்ச்சத்து மிகுந்த உணவுகளையும்,தானியவகை உணவுகளையும்,சிறுதானிய உணவுகளையும்,காய்கறி பழங்களையும் அதிக அளவில் உண்ணவேண்டும். மோர்,எலுமிச்சை சாறு,நன்னாரி சர்பத்,இளநீர் கம்மஞ்சோறு, பழைய சோறு இவைகள் சின்னவெங்காயத்துடன் தினமும் சாப்பிட்டுவரவேண்டும்.நெல்லிக்காய்,மாங்காய்,கொய்யா,பப்பாளி,முள்ளங்கி,பாகற்காய்,கேரட்,பீட்ரூட்,வெண்பூசணி,சுரைக்காய்.இவைகளை சாப்பிட்டு வரவும். (konguthendral.blogspot.com)

(கவனியுங்க;...கத்தரிக்காய்,முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரை போன்ற வெப்பத்தை தரும் உணவுகளை  கோடைகாலங்களில் சேர்க்கவேண்டாம்...SEASON  என்னும் பருவகாலங்களில் கோடைகாலமானது வெயில் வாட்டும் வெப்ப நாட்களோடு வருடத்தின் காலாண்டாக இருக்கிறது.அதாவது ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில்தாங்க மூலநோய் நம்மை பெரும்பாலும் தாக்குகிறது..)

மோட்டார் வாகன ஓட்டுனர்கள், வங்கி போன்ற அலுவலகங்களில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் காசாளர்கள்,கணினி இயக்குநர்கள்,எழுத்தர்கள்,தையல்கலைஞர்கள், நின்றுகொண்டே வேலை செய்யும் லேத் டெக்னீசியன்கள் போன்ற பணிகளில் ஈடுபடுவோர்களுக்குத்தாங்க அதிகளவில் பாதிப்பை எற்படுத்துகிறது.
ஆதலால் உடல் உஷ்ணமடையாமல் இருக்க
பருத்திநூலாலான துண்டு போட்டு உட்காருங்க.
            கோடைகாலங்களில் பருத்தி ஆடைகளை அதுவும் இளக்கமாக அணியுங்க.ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை இரண்டு நிமிடங்களாவது எழுந்து நடைபயிற்சி செய்து ஆசனவாய்க்கு காற்றோட்டம் கொடுங்க. (konguthendral.blogspot.com)
     பெண்கள் கருத்தரிப்பு காலத்தில் அதிக எடை கூடி மலக்குடலை அழுத்துவதால் பெண்களுக்கு மூலநோய் ஏற்படுகிறது.
சிலருக்கு பரம்பரைநோயாகவும் வருகிறது.

மூலநோய் குணமாக...

                

    துத்தி இலையை ஒரு கைப்பிடி எடுத்து புழு,பூச்சி இல்லாமல் நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளுங்க.சின்னவெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து பொடியாக நறுக்கிக்கொள்ளுங்க.நல்லெண்ணெய்,அல்லது விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சீரகம்,வெந்தயம் போட்டு தாளித்து சின்ன வெங்காயத்தையும் துத்திகீரையையும் போட்டு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி ஐந்து, ஆறு நிமிடங்கள்  வேகவையுங்க (konguthendral.blogspot.com).பிறகு எடுத்து ஆறவைத்து காலையில் வெறும் வயிற்றிலும்,மாலையிலும் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிடுங்க.எப்பேற்பட்ட மூலநோயும் இருக்குமிடம் தெரியாமல் ஓடிவிடும்.

                    துத்தி இலையை சின்னவெங்காயத்துடன் சேர்த்து பச்சையாகவும் காலை வெறும்வயிற்றில் ஒருவாரம் சாப்பிடலாம்.

                   துத்தி இலையை பறித்து வந்து மிக்சியில் அரைத்து சாறு பிழிந்து  ஒர டம்ளர் (200மில்லி) தேங்காய்ப்பாலில் அல்லது மோரில் சேர்த்தும் காலையில்வெறும் வயிற்றில் ஒருவாரம்  குடித்து வரலாம். (konguthendral.blogspot.com)

                    சோற்றுக்கற்றாழையின் ஒரு மடலை எடுத்து தோலை சீவி உள்ளிருக்கும் ஜெல் எனப்படும் ஊண் பகுதியை  காலை வெறும் வயிற்றிலும்,மாலையிலும்  ஒரு வாரம் சாப்பிட்டுவந்தால் மூலநோய் குணமாகும்.

                கருணைக்கிழங்கு மூலநோய்க்கு அற்புத மருந்தாகும்.கருணைக்கிழங்கை நறுக்கி சமைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.

                துத்தி இலையையும்,நாயுருவி இலையையும் சேர்த்து மைபோல அரைத்து இரவில் ஆசனவாயில் வைத்து கோவணம் கட்டி வந்தால் வெளிமூலம் சுருங்கும். (konguthendral.blogspot.com)

                சோற்றுக்கற்றாழை ஒரு மடலை எடுத்து இரண்டாக பிளந்து  தீயில் லேசாக வாட்டி இளஞ்சூட்டில் மலவாயில் வெளிமூல வீக்கத்தின்மேல்  கட்டி வரலாம்.
                  தொட்டால்சுருங்கி இலையை ஒரு கைப்பிடி எடுத்து அம்மியில் மைபோல அரைத்து ஆசனவாயில் கட்ட மூலநோய் வீக்கம் குறையும்.
 (konguthendral.blogspot.com)
                தினமும் இரவில் ஒரு ஸ்பூன் ஊறவைத்த வெந்தயம் சாப்பிட்டுவரலாம்.
வெள்ளை முள்ளங்கியும் அற்புத மருந்தாகும்.வெண்பூசணிச்சாறு அருந்திவர மூலநோய் குணமாகும்.தினமும் சுண்டைக்காய் சாப்பிட்டுவாங்க.தினமும் காலையில் 4 பச்சைவெண்டைக்காய் சாப்பிட்டு வாங்க.கனிந்த செவ்வாழைப்பழம் தினமும் சாப்பிட்டு வாங்க..

                      
கேரட் சாறு,எலுமிச்சை சாறு,நன்னாரி சர்பத்,இளநீர், பீட்ரூட் சாறு,கரும்புச் சாறு,அருகம்புல்சாறு இவைகளை பருகிவந்தால் உடல் உஷ்ணத்தைக்குறைத்து மூலநோய் வராமல் தடுக்கும். (konguthendral.blogspot.com)


 2020 மார்ச் 16ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அறியப்பட்டு மார்ச் 23 முதல் ஊரடங்கு அமல்படுத்தியது ஒருபுறமிருந்தாலும் நம்மை நாமே பாதுகாக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டபடியால் சமூக விலகலைக் கடைப்பிடித்து தனியாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தபோது தாங்க... உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டியதாயிற்று.அதன் விபரத்தை மற்றவர்களுக்கும் தெரிவிக்கலாமே என்ற எண்ணத்தினால் மூலநோய் பற்றிய பதிவு இட்டுள்ளேன்.இனி கல்லீரல்,மண்ணீரல்,கணையம்,பித்தப்பை,சிறுநீரகம் இருதயம்,நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை பாதுகாப்பது பற்றியும் இதிலிருந்து தொடராக  பதிவிடவுள்ளேன்.நான் பெரிய அறிவியலாசான் இல்லையென்றாலும் இணையங்களில் தேடித்தேடி தகவல்களை நோட்டில் எழுதி குவித்து பின்னர் தாங்கள் விரும்பி வாசித்து ஏற்குமளவு கருத்து மாறாமல்  சுருக்கி பதிவிடுகிறேன்.தங்களுக்குத் தெரிந்த கருத்துக்களையும் எனக்கு அனுப்புங்க.இதே பக்கத்தில் கீழே உள்ள கருத்துரை வழங்கும் பெட்டியில்  பின்னூட்டமிடுங்க.

பொறுப்பாகாமை அறிவிப்பு...
                         அனுபவப்பட்டவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தகவல் நோக்கத்துடன் வாசகர்களுக்கு பயன்படும்வகையில் இங்கு பதிவிடப்படுகிறது.இந்த பதிவுக்கு துல்லியம்,மற்றும் நம்பகத்தன்மை மற்றும் காலவரையறை உத்தரவாதம் தர இயலாதுங்க.ஆதலால் நம்பிக்கை இல்லாதபோது அருகிலுள்ள சித்த,ஆயுர்வேத மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுங்க.
என
  சமூக நலன் கருதி..
 அன்பன் செ.பரமேஸ்வரன்,
  கொங்குத்தென்றல் வலைப்பக்கம்,
 சத்தியமங்கலம்..ஈரோடு மாவட்டம்.
-------------------------------------------------------------------------------------------------------------

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...