07 ஆகஸ்ட் 2018

பசுமாடு?

மனித மனதின் இரட்டைவேடம்!...
மனிதர்களே,கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்க! தெய்வமாக வணங்கும் மாட்டினை அடிமாட்டுக்கு அனுப்பும்போதாவது சித்திரவதை செய்யாதீங்க!

                         வீடுகளில் மாடு வளர்ப்பவர்கள் அவைகளை, கோமாதா லக்ஷ்மி போலவும் தன் பிள்ளைகளைப் போலவும் பாவிக்கின்றோம்
தன் இரத்தத்தை பாலாக மாற்றி நம் தாய்க்கு நிகராக தங்கள் வீட்டில் வளர்ந்த மாட்டை வயதான பின்பு அடிமாட்டுக்கு விற்பனை செய்துவிடுகின்றனர், சிலர் கோவிலுக்கு காணிக்கையாக விட்டு விடுகின்றனர், கோவிலிலும் நிறைய மாடுகள் சேர்ந்ததும் அவைகளை மொத்தமாக ஏலம் விட்டுவிடுகிறார்கள்....
கோவில்களில் ஏலம் விடும் மாடுகளை அடிமாட்டுக்கு அதாவது அறுப்பு மாட்டுக்கு எடுத்து சென்று விடுகிறார்கள், இப்படி அறுப்பு மாட்டுக்கு எடுத்துச்செல்பவர்கள் மாடுகளை பலவித சித்தரவதைகளுக்கு ஆளாக்குகின்றனர்....
லாரியில் நிறைய மாடுகளை ஏற்றி பல நாட்கள் அவைகளை பட்டினி போட்டு மழையிலும் வெய்யிலிலும் நிற்கவைத்தே
கஷ்டப்படுத்தி மாடுகள் குறும்பு செய்யாமலிருக்க பச்சைமிளகாயை அதன் கண்களில் வைத்தும், இரண்டு மூன்று நாள் மாடுகள் லாரியில் படுக்காமலிருக்க அதன் பிறப்பு உறுப்பின் வழியாக மிளகாய் பொடிகளை உள்ளே போட்டும், மாடுகள் லாரியில் கத்தாமலிருக்க அதன் தொண்டையில் ஆயுதத்தால் குத்தியும் ஓட்டைபோட்டும் , இப்படி கொடுமைபடுத்தி மாடு அறுக்கும் இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
இறுதியில் அவைகளின் கழுத்தை அறுப்பதற்கும் முன் பெரிய சுத்தியால் அவைகளின் மண்டையில் ஓங்கி பலமுறை அடிக்கின்றனர், ஏனெனில் நல்ல நிலையில் இருக்கும் மாடுகளின் கழுத்தை அறுத்தால், அவை கழுத்து அறுபட்ட பின்பு வெகுநேரம் துள்ளி துடித்து அறுப்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால்.
தன் இரத்தத்தையே பாலாக மாற்றி தாய்க்கு நிகராக விளங்கும் மாடுகளின் நிலையை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்..
நம் வீட்டு தோட்டத்தில் நமக்காகவே வளர்ந்த மாட்டை அதன் ஆயுள் முடியும் வரை வளர்ப்போம், இறந்தபின்பு
தோட்டத்தில் ஏதோ ஒரு மூலையில் புதைத்து அதன் மீது இரண்டு கனிதரும் மரக்கன்றுகளை நடுவோம்...
இறந்த மாட்டின் உடல் அந்த மரங்களுக்கு நல்ல, சிறந்த எருவாகிவிடும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...