அன்பான சத்தி கரட்டூர் மக்களே நம்ம உறவுகளுக்கு உதவுங்க!
15-08-2018 நேற்று (50,000கன அடி தண்ணீர்)பவானிசாகர் ஆற்றில் அதிகப்படியான தண்ணீரை திறந்துவிட்டதால் எங்க கரட்டூரின் ஒருபகுதியான ஜே.ஜே.நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் அனைவரும் கட்டிய துணியோடு எந்தப்பொருட்களையும் எடுக்கமுடியாமல் தற்போது கரட்டூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கண்ணீரும்,கம்பலையுமாக தவித்த காட்சி என்னை நிலைகுலையவைத்துவிட்டது.கரட்டூர் நண்பர்கள் அனைவரும் கட்சி வேறுபாடில்லாமல் நிதியும்,உணவுப்பொருட்களும் சேகரித்து வழங்கி வருகின்றனர்.எனது சகோதரரும் நானும் சேர்ந்து தற்போதைக்கு ரூபாய் இரண்டாயிரம் நிதி வழங்கி உதவினேன்.
வெள்ளப்பாதிப்பால் துன்பப்படும் மக்களைப் பார்க்கவே கடும் வேதனையாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக