21 டிசம்பர் 2018

கணிதமேதை ராமானுஜன் பிறந்த தினம் டிசம்பர் 22 ஆம் தேதி.



உலகமே கொண்டாட வேண்டிய ஒரு மாபெரும் கணித மேதை எப்படி வாழ்ந்தார் என்பதை படியுங்கள்.

கணித மேதையான இராமானுஜன் அவர்கள் தமது பன்னிரண்டாம் வயதில் “லோனியின் மட்டத் திரிகோணவியல்” கணித நூலில் [Loney’s Plane Trigonometry] கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராமானுஜன் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணியின் தொகுப்பு, அதன் பெருக்கம் [Sum & Products of Infinite Sequences] பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு ஒன்று [Formula], உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம். அத்தொடரோடு வேறோர் எண்ணைக் கூட்டியோ, பெருக்கியோ, முடிவற்ற சீரணியை முடிவுள்ள சீரணியாக மாற்றி விடலாம்.
பதினைந்தாம் வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித வல்லுநர், கார் [G.S.Carr] தொகுத்த “தூய கணித அடிப்படை விளைவுகளின் சுருக்கம்” [Synopsis of Elementary Results in Pure Mathematics] என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 கணித மெய்ப்பாடுகளை [Theorems] ஆழ்ந்து கற்றுக் கொண்டார்.  இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்டது.  அவைகளே அவரது பிற்கால அபாரக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்தன.

சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் நூலகத் தலைவராக இருந்தஇந்திய நூலகத் தந்தையான  பேராசிரியர் S.R.ரங்கநாதன்கணிதவியலார்அவர்கள் இராமானுஜனைப் பற்றி எழுயதாவது “உள்ளிருந்து அவனை ஒரு ஜோதி ஊக்குவித்த வண்ணம் இருந்தது. கணித ஆய்வுகள் அவனுக்கு தெவிட்டாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. F.A.தேர்வு கூட தேறமுடியவில்லையே என்ற ஏக்கம் அவனுடைய கணித ஊக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. வேலையில்லாமல் வளய வருவதும் அவனுடைய ஆய்வுகளின் தரத்தையோ அளவுகளையோ குறைக்கவில்லை. சூழ்நிலை, பொருளாதாரம், சமூக கௌரவம் ஒன்றும் அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவன் மனதிலும் கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச்சதுரங்கள் (Magic Squares) , தொடர் பின்னம் (Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series), இவையும், மற்றும் இவையொத்த மற்ற உயர்தர கணிதப்பொருள்கள் தாம். இவைகளைப் பற்றிய அவனுடைய கண்டுபிடிப்புகளை யெல்லாம் தன்னுடைய மூன்று நோட்புக்குகளில் எழுதினான். நிறுவல்கள் அநேகமாக எழுதப்படவில்லை. தற்காலத்தில் இந்த நோட்புக்குகளின் நகல்கள் (212, 352, 33 பக்கங்கள் கொண்டவை) டாடா அடிப்படை ஆய்வுக் கழகம், சென்னைப்பல்கலைக் கழகம், ஸர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்புகளின் ஒத்துழைப்பினால் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. 1985இலிருந்து 2005 வரையில், ப்ரூஸ் பர்ண்ட் என்பவருடைய விரிவான குறிப்புகளுடன் ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.

பிறப்பு
  • பிறப்பு: 22.12.1887
  • ஊர்: ஈரோடு
  • பெற்றோர்: சீனுவாசன் - கோமளம்
  • இவர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.
  • தனது தாயாரின் தந்தை ஊரான காஞ்சிபுரத்தில் திண்ணை பள்ளியில் படித்தார்.
கும்பகோணம்:
  • இராமனுஜனின் தாத்தாவின் பணிநிமித்தம் "கும்பகோணம்" வந்தால், பின்பு அவரின் கல்வி கும்பகோணத்தில் தொடர்ந்தது.
பூஜ்யத்திற்கு மதிப்புண்டு:
  • ஒருமுறை வகுப்பில் அவரின் ஆசிரியர் "பூஜ்யத்திற்கு மதிப்பில்லை" என கூற, அதற்கு இராமானுஜன்  பூஜ்யத்திற்கு மதிப்புண்டு என்று விளக்கி எடுத்துரைத்தார்.
  • இராமானுஜர் தமது சிறுவயது முதலே கணிதப்பாடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
கார்:
  • 1880இல் இலண்டன் நகரில் "கார்" என்பவர் பதினைந்தாவது வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கியதுப்போல, இவரும் சிறு வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கினார்.
எழுத்தர் பணி:
  • தந்தை சீனுவாசனின் முயற்சியால் இவருக்கு சென்னை துறைமுகத்தில் "எழுத்தர்"பணியில் சேர்ந்து சிறந்து விளங்கினார்.
பெர்னெளலிஸ் எண்கள்:
  •  தான் கண்டுபிடித்த தேற்றங்களையும், எடுகோள்களையும் கேள்விகளாகத் தொகுத்து இந்தியக் கணிதக் கழகப் பத்திரிகைக்குச் சென்னை துறைமுகத்தின் தலைமை பொறியாளர் ஃபிரான்சிஸ் ஸ்ப்ரிங் என்பார் மூலம் அனுப்பினார். "பெர்னெளலிஸ் எண்கள்" எனும் தலைப்பில் வெளியான அவரது கட்டுரை, மிகுந்த வரவேற்பை பெற்றது.
  • தனது கண்டுப்பிடிப்புகளை இந்தியக் கணிதக் கழகப் பத்திரிக்கைக்கு இராமானுஜன்  ஃபிரான்சிஸ் ஸ்பிரிங் மூலம் அனுப்பினார்
  • பெர்னெளலிஸ் எனும் தலைப்பில் வெளியான இராமானுஜத்தின் கட்டுரை கணித வல்லுநர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
  • இராமானுஜன் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார்.
  •  இராமானுஜன் தனது கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சிகள் ஆகியவற்றை விவரமாக எழுதி இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹார்டி என்பவருக்கு கடிதமாக அனுப்பினார்.
  • இலண்டன் கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரியின் பெயர் - திரினிட்டி கல்லூரி.
  •  கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தைப் பெற்ற பிறவிக் கணித மேதை ராமானுஜன் என்று கூறியவர் - இந்திரா காந்தி.
  •  ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமானுஜன் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர் - லிட்டில் வுட்டு
  • கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804–1851). ஜெர்மனி நாட்டில் வாழ்ந்தார்
  • ஜாகோபி 19 ஆம் நூற்றாண்டின் கணிதமேதை
  • லியோனார்டு ஆய்லர் (1707–1783) சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்
  • ஆய்லர் 18 ஆம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை ஆவார்.
  •  திரினிட்டி கல்லூரியின் பேராசிரியர் ஈ.எச். நெவில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சொற்பொழிவாற்ற வந்தார்.
  •  இராமானுஜன்  1914 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் நாள் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார்.
  • திரினிட்டி கல்லூரியில் 18.04.1914 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார்.
  •  கிங்ஸ் கல்லூரியின் கணிதப் பேராசிரியர் - ஆர்தர் பெர்சி.
  •  இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்ந்தவர் - ஹார்டி
  • ஹார்டி ரோசரஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டார்.
  •  இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் உறுப்பினராக இராமானுஜம் 1918 ஆண் ஆண்டு சேர்க்கப்பட்டார்.
  •  இங்கிலாந்து பல்கலைக்கழகம் இராமானுஜத்திற்கு 1918 இல் F.R.S. (Fellow of the royal Society)  பட்டம் வழங்கியது.
  •  F.R.S. பட்டம் பெற்ற இராமானுஜத்தை திரினிட்டி கல்லூரி பாராட்டிச் சிறப்பித்தது.
  •  பால் ஏர்டோசு என்ற புகழ்பெற்ற கணித மேதை-வல்லுனர் பேரா. ஹார்டி சொன்னதாக பின்வருமாறு சொல்கிறார்: ‘நாம் எல்லா கணித இயலர்களையும் அவர்களுடைய மேதைக்குத் தகுந்தாற்போல் வரிசைப்படுத்தி சூன்யத்திலிருந்து 100 வரை மதிப்பெண் கொடுத்தால் எனக்கு 25ம், லிட்டில்வுட்டுக்கு 30ம், ஹில்பர்ட்டுக்கு 80ம் இராமானுஜனுக்கு 100ம் கொடுக்க வேண்டி வரும்’.என்பதே ஆகும்.
  •  ஹார்டியின் பரிந்துரையின் பேரில் சென்னைப் பல்கலைக் கழகமும் 250 பவுண்டுத் தொகையை ஐந்து ஆண்டுக்கும் கொடுக்க முன்வந்தது.
  • இராமானுஜம் 50 பவுண்டைத் தம் பெற்றோருக்கும் 200 பவுண்டை ஏழை எளிய மாணவர்களுக்கும் வழங்கி வருமாறு கடிதம் எழுதினார்.
  •  இராமானுஜத்தைப் பார்க்க வந்த ஹார்டி 1729 என்ற எண் கொண்ட வாடகை மகிழுந்தில் வந்தேன் எனக் கூறினார்.
  •  இராமானுஜம் இந்தியாவிற்கு திரும்பி வந்த ஆண்டு - 1919 ஆம் ஆண்டு மார்ச் 27ம் தேதி.
  • இராமானுஜம் மறைந்த ஆண்டு 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி.
  • இராமானுஜம் சாதாரண மனிதரல்லர் அவர் இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் - பேராசிரியர் ஈ.டி. பெல்
  •  இராமானுஜன் முதல்தரமான கணித மேதை என்று கூறியவர் - பேராசிரியர் சூலியன் கக்சுலி
  • இராமானுஜத்தின் குறிப்பேடுகளில் 3000 முதல் 4000 தோற்றங்கள் இருந்தன.
  •  1957 ஆம் ஆண்டு டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையம் இராமானுஜத்தின் தேற்றங்களை ஒளிப்படம் எடுத்து நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
  •  1962 டிசம்பர் 22 ஆம் தேதி இராமானுஜத்தின் 75வது பிறந்த நாள் ஆகும்.
  •  இராமானுஜத்தின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு நடுவணரசு பதினைந்து காசு அஞ்சல்தலை இருத்தைந்து இலட்சம் வெளியிட்டது.
  • சென்னையில் 03.10.1972 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.
  •  சென்னை துறைமுகம் சார்பில் புதிதாக வாங்கிய குடிநீர்க்கப்பலுக்கு, சீனுவாச இராமானுஜன் எனப் பெயர் சூட்டப்பட்டது.
  • ரிச்சர்ட்டும் ஆஸ்லேயும் இணைந்து 1984 ஆம் ஆண்டு இராமானுஜத்தின் மார்பளவு வெண்கலச் சிலையை இந்தியாவிற்குக் கொண்டு வந்து வழங்கினர்.
  • கணிதக் குறிப்புகள் அடங்கிய எத்தனை குறிப்பேடுகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இராமானுஜம் விட்டுச் சென்றுள்ளார்.
  • இராமானுஜன் எண்: 1729 என்பதை இராமானுஜன் எண் என்பர்.
  •  *ஈரோட்டின் பெருமைமிகு அறிவின் அடையாளம்*
    ஏ.டி.எம். இயந்திரம் நாம் கார்டை சொருகியவுடன் பணத்தை தருகிறதே… ராமானுஜம் கண்டுபிடித்த தேற்றத்தின் அடிப்படியில் தான் அது இயங்குகிறது என்பது தெரியுமா?
    பள்ளி செல்லும் நாட்களில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு, தினமணிக் கதிரில் ரகமி எழுதிய ராமனுஜன் பற்றிய தொடரை படித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன்.
    உலகமே கொண்டாட வேண்டிய ஒரு மாபெரும் கணித மேதை எப்படி வாழ்ந்தார் என்பதை படியுங்கள். இன்றைக்கு அனைத்து சௌகரியங்களும் கிடைக்கப்பெற்றுள்ள நம் மாணவர்கள் நம் சகோதரர்கள் நம் பிள்ளைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சிந்தியுங்கள்.
    இராமானுஜனின் தந்தை சீனிவாச அய்யங்கார், கும்பகோணத்தில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மாத ஊதியம் ரு.20 ஆகும். இராமானுஜனின் தாயார் கோயில்களில் பஜனைப் பாடல்களைப் பாடுவதன் வாயிலாக மாதம் ருபாய் 10 சம்பாதித்து வந்தார்.குடும்பமே போதிய வருமானமின்றித் தவித்தது. பல நாட்கள் உண்ண உணவின்றித் தண்ணீரை மட்டுமே குடித்து வளர்ந்தவர் இராமானுஜன்,
    ஒரு நாள் இராமானுஜன் பள்ளிக்குச் செல்வதற்கு முன் உணவுத் தட்டுடன் சாப்பிடத் தயாரானான். ஆனால் தாய் கோமளத்தம்மாளோ, அய்யா சின்னசாமி அம்மா எப்படியும் மாலைக்குள் அரிசி வாங்கி சமைத்து வைக்கிறேன் இரவு சாப்பிடலாம். அதுவரை பொறுத்துக் கொள் என வேண்டினாள். இராமானஜனோமறு வார்த்தை பேசாமல் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு. அம்மா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன் என்று கூறி பள்ளிக்குச் சென்று விட்டான்,
    ஆனால் அன்று மாலை பள்ளியில் இருந்து இராமானுஜன் வீடு திரும்ப வில்லை, கவலையில் கண்ணீர் விழிகளுடன் கோமளத்தம்மாள் இராமானுஜனைத் தேட ஆரம்பித்தாள், எங்கு தேடியும் காணவில்லை. அச்சமயம் இராமானுஜனின் நண்பன் அனந்தராமனின் தாயார் அங்கு வந்து விசாரிக்க, இராமானுஜனைக் காணவில்லை எனக் கூறி, தன் மகன் காலையும் சாப்பிடவில்லை, மதியமும் சாப்பிடவில்லை, மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறி அழத் தொடங்கினாள், கோமளத்தம்மாளை சமாதானம் கூறி வீட்டில் அமரவைத்து விட்டுத் தானும்,அனந்தராமனும் ஆளுக்கொரு பக்கமாக இராமானஜனைத் தேடத் தொடங்கினர்.
    அனந்தராமன் பல இடங்களில் தேடி அலைந்தான். எங்கும் இராமானுஜனைக் காணவில்லை, திடீரென்று அனந்தராமனுக்கு ஒரு சந்தேகம். ஒரு வேளை சாரங்கபாணிக் கோயிலுக்குச் சென்றிருப்பானோ? என்று. உடனடியாக கோயிலுக்குச் சென்று தேடினான், கோயிலின் ஒரு மண்டபத்தில் கணக்குப் புத்தகங்களைத் தலைக்கு வைத்துக் கொண்டு இராமானுஜன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் படுத்திருந்த தரை முழுவதும் சாக்கட்டியால் கணக்குகள் போடப்பட்டிருந்தன, அனந்தராமன் அவனைத் தட்டி எழுப்பினான், திடுக்கிட்டு எழுந்த இராமானுஜன், என்ன அனந்தராமா அதற்குள் எழுப்பிவிட்டாயே, நேற்று நமது கணக்கு வாத்தியாருக்கே விடை கண்டுபிடிக்கத் தெரியாத. அந்தக் கணக்கை நான் மனதிலேயே போட்டுப் பார்த்தேன். போட்டு முடிப்பதற்குள் எழுப்பிவிட்டாயே, என்றவன், இரு கனவில் நான் போட்ட பாதிக் கணக்கையாவது இந்த நோட்டில் எழுதிவைத்துவிட்டு வருகின்றேன் என்று கூறி எழுதத் தொடங்கினான்,
    எழுதி முடித்தவுடன் அனந்தராமன், இராமானுஜனைத் தன்வீட்டிற்கே அழைத்துச் சென்றான், இராமானுஜனைக் காணாமல் அனந்தராமனும் சாப்பிடாமல் இருக்கின்றான் என்ற செய்தியைக் கூறி, அனந்தராமனின் தாயார் தன் வீட்டிலேயே இராமானுஜனுக்கும் உணவிட்டாள்,
    இராமானுஜன் கணிதத்தில் மட்டுமே கவனம் செலுத்தியதால் கும்பகோணம் அரசு கல்லூரியிலும், தொடர்ந்து சென்னை பச்சையப்பா கல்லூரியிலும் கணிதத்தைத் தவிர மற்ற பாடங்களில் தோல்வியையே சந்தித்தார்,
    1910 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியக் கணிதவியல் கழகத்தின் செயலாளர் இராமச்சந்திர ராவ் அவர்களை இராமானுஜன் சந்தித்தார். இராமானுஜனின் கணிதத் திறமையினைக் கண்டு வியந்த இராமச்சந்திரராவ் அவர்கள் இராமானுஜனைப் பார்த்து தற்சமயம் உமது தேவை என்ன? என்று கேட்க, இராமானுஜன் ஓய்வு தேவை என்று பதிலளித்தார், அதாவது உணவு பற்றிய கவலையின்றி கணிதம் பற்றிய கனவு கான ஓய்வு தேவை என்றார். யாருக்குமே விளங்காத கணக்குகள் எல்லாம் இராமானுஜனிடம் கைக்கட்டி சேவகம் செய்தாலும், உணவு மட்டுமே அவர் இருக்குமிடத்தை அனுகாதிருந்தது.
    1913 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 ஆம் தேதி, இராமானுஜன் அவர்கள், இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி என்பாருக்கு ஒரு கடிதம் எழுதினார், தான் கண்டுபிடித்த தேற்றங்கள் சிலவற்றையும் இணைத்து அனுப்பினார். இராமானுஜனின் தேற்றங்களால் கவரப் பட்ட ஹார்டி, இராமானுஜனை இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு வருமாறு அழைத்தார், பிப்ரவரி 27 இல் ஹார்டிக்கு இராமானுஜன் எழுதிய கடிதம், படிப்போரை நெகிழச் செய்வதாகும். நான் தற்சமயம் தங்களிடம் வேண்டுகோளாக வைப்பதெல்லாம் ஒன்றுதான், நான் உண்ண உணவின்றி அரைப் பட்டினியாக இருக்கும் ஒரு மனிதன். எனது மூளையைப் பாதுகாக்க . எனது வயிற்றிற்கு உணவு தேவையாக உள்ளது. இதுவே எனது முதல் தேவையாகும் என்று எழுதினார், இராமானுஜனின் உண்மை நிலையை, வறுமையில் உழன்ற அவல நிலையை விளக்க இக்கடிதம் ஒன்றே போதுமானதாகும்.
    இராமானுஜன் இளமைக் காலம் முதல் தான் கண்டுபிடித்த கணக்குகளை நான்கு நோட்டுகளில் பதிவு செய்துள்ளார். ஊதா நிற மையினால் கணக்குகளை தாளில் எழுதிவரும் இராமானுஜன், ஒரு பக்கம் முடிந்ததும், அடுத்த பக்கத்தில் எழுதாமல், அதே பக்கத்திலேயே, மேலிருந்து கீழாக, ஊதா நிற வரிகளுக்கு இடையே சிகப்பு நிற மையினால் எழுதுவார். நோட்டு வாங்கக் கூட காசில்லாத நிலையில் இராமானுஜன் இருந்தமைக்கு இந்த நோட்டுகளே சாட்சிகளாய் இருக்கின்றன.
    ஐந்து வருடம் இலண்டனில் தங்கி உலகையேத் தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தப் பெருமையுடன் தாயகம் திரும்பினார் இராமானுஜன். அவருடன் இரண்டறக் கலந்து காசநோயும் வந்தது. காச நோயால் பாதிக்கப் பட்டு எழும்பும் தோலுமே உள்ள உருவமாய் இளைத்த இராமானுஜன், அந்நிலையில் கூட தனது கணித ஆய்வை நிறுத்தவில்லை. 1920 ஆம் ஆண்டு சனவரி 12 ஆம் நாள் ஹார்டிக்குத் தனது இறுதிக் கடிதத்தை எழுதினார்.
    இந்தியாவிற்குத் திரும்பியபின் இதுநாள் வரை தங்களுக்குக் கடிதம் எழுதாததற்கு மன்னிக்கவும். நான் ஆச்சரியப்படும் வகையில் ஒரு சார்பினைக் கண்டுபிடித்துள்ளேன். அதற்கு மாக் தீட்டா சார்பு எனப் பெயரிட்டுள்ளேன். இக்கடிதத்துடன் சில சார்புகளை அனுப்பியுள்ளேன் என்று எழுதினார்,
    தனது கடைசி மூச்சு உள்ளவரை கணிதத்தை மட்டுமே நேசித்த, சுவாசித்த மாபெரும் கணித மேதை சீனிவாச இராமானுஜன். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் 1946 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட Discovery Of India எனும் நூலில் இராமானுஜன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்,
    இராமானுஜனின் குறுகிய கால வாழ்வும் மரணமும் இந்தியாவின் நிலையினைத் தெளிவாகக் காட்டுகிறது. கோடிக் கணக்காண இந்தியர்களுள் சிலருக்கே கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. வறுமையின் பிடியில் சிக்கி உண்ண உணவின்றி, பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு உண்ண உணவும், கற்க கல்வி வசதியும் ஏற்படுத்தப் படுமேயானால், இந்தியாவில் இருந்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் இலட்சக் கணக்கில் தோன்றிப் புதிய பாரதத்தைப் படைப்பார்கள் என்பது உறுதி.
    உணவிற்கே வழியின்றி வாழ்வில் வறுமையை மட்டுமே சந்தித்த போதும், கணிதத்தையே சிந்தித்து, சுவாசித்து, சாதித்துக் காட்டிய கணித மேதை சீனிவாச இராமானுஜனின் நினைவினைப் போற்றுவோம்.
    எது எப்படியோ ……… கணிதத்தையும் கணிதமேதையும் கொண்டாட ஒரு வாய்ப்பு. மிக எளிய குடும்பத்தில் பிறந்து “கொடிது கொடிது வறுமை கொடிது” என அவ்வை பாடிய இளமையில் வறுமையோடு வளர்ந்து கணித உலகின் சக்கரவர்த்தியாகப் பிரகாசித்த ராமானுஜம் ஒரு கணிதமேதை என்று மட்டும் தெரியும்.
    கல்லுரி மாணவர்க்கு அவரது கணித பங்களிப்பு பற்றி எதுவும் தெரியாது. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததுபோல் ராமானுஜம், ராமானுஜம் நம்பர் என்கிற ஒன்றை கண்டுபிடித்தார் என்று சில பேராசிரியர்களே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அவலம் ஒரு புறம். அவர் பிறந்து வாழ்ந்த வீட்டை அவர் ஊர்க்காரர்களாலேயே அடையாளம் காட்ட முடியாமல்போன அவமானம் ஒரு புறம்.
    பாரதி… ராமானுஜம்… இவர்களை போன்றவர்களை இறைவன் செல்வந்தர்களாக படைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் பசித்தால் சாப்பிட சோறு கிடைக்கும் நிலையிலாவது படைத்திருக்கக்கூடாதா? ஒரு வாய் சோறு பாரதிக்கும் ராமானுஜத்துக்கும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்திருந்தால் இன்னும் எத்தனை எத்தனையோ பொக்கிஷங்களை அவர்கள் இந்த உலகிற்கு தந்திருப்பார்களே…..ஏன் கிடைக்கவில்லை? இவர்களுக்கு அப்படி செய்தததன் மூலம் நமக்கு ஏதாவது சொல்ல வருகிறானா இறைவன்? இங்கே தான் இறைவனை புரிந்துகொள்ளமுடியாது தவிக்கிறேன்.
    நன்றி...

பிறப்புச் சான்றிதழ் இனி உடனுக்குடன்!

Selvam Palanisamy
20 டிசம்பர், பிற்பகல் 7:09
 
`இனி பிறப்புச் சான்றிதழுக்காக அலைய வேண்டாம்' - சுகாதாரத்துறையின் அசத்தல் முயற்சி
''ஜனவரி ஒன்றாம் தேதி முதல், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ஜ் ஆகும்போதே பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்'' என தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புதுறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
பிறப்புச் சான்றிதழ் பெற, குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள், அந்தப் பகுதியின் உள்ளாட்சி அமைப்புகளில் (ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி ) பதிவு செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் இருந்தும் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பிறப்பு பற்றிய தகவல்கள் அனுப்பப்பட்டிருக்கும். அந்தத் தகவல்களை சரிபார்த்து, பதிவு செய்த பதினைந்து நாள்களுக்குள் பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். குழந்தையின் பெயரை ஒரு வருடத்துக்குள் சான்றிதழில் சேர்த்துக்கொள்ளலாம். இதுதான் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை.
இந்த நிலையில், வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ஜ் ஆகும்போதே பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அந்த மருத்துவமனைகளின் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, 21 நாள்களுக்குள் ஆன் லைனில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்கிற புதிய வசதியைத் தமிழக சுகாதாரத்துறை அறிமுகப்படுத்தவுள்ளது.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, ஏற்கெனவே இருக்கும் முறைப்படி ஆன் லைனிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
நன்றி : விகடன் செய்திகள் - 20.12.2018
https://www.vikatan.com

19 டிசம்பர் 2018

கர்ப்ப பதிவு கட்டாயம் நம்ம தமிழ்நாட்டில்!

Pregnant Women Registration in Tamil Nadu for Birth Certificate Under RCH Scheme

 Department of Public Health, Tamil Nadu has  now made registration of Pregnant Women compulsory. Subsequently, pregnant women will have to make online registration at various health centers for birth certificates of their child. They will get registered under the Reproductive and Child Health (RCH) Scheme. Accordingly, mothers will have to make online registration at picme.tn.gov.inFor birth certificates, women have to submit 12 digit RCH ID Number which they receive from village health nurses on ante-natal registration, at the hospital where the child is born. Moreover, these women can also avail the benefits of Dr. Muthulakshmi Reddy Maternity Assistance Scheme. Under this scheme, the financial assistance is now increased to Rs. 18000 (as on 13 March 2018).
Govt. will make sure that all pregnant women in the TN state are registered. Accordingly, this step is necessary to provide them appropriate care which the pregnant women needs. Moreover, this move will lead to reduction in Infant Mortality Rate (IMR) and Maternal Mortality Rate (MMR) in TN.

 

Pregnant Women Registration in Tamil Nadu

Department of Public Health is the sole body for Registration of Pregnant Women under RCH Scheme. Accordingly, various government hospitals, primary health centers and health sub-centers provides ante-natal care in case of a new born baby. Moreover, Village Health Nurses (VHN) carry out this work in the rural areas while the Urban health Nurses (UHN) carry out this task in urban areas.
In addition to this, they make registration of the pregnant ladies and also monitor several expectant mothers. For this, these hospitals and nurses observes the details of ante-natal care being given to them. Afterwards, VHNs uploads the documents of the pregnant ladies on the Pregnant and Infant Cohort Monitoring and Evaluation (PICME) software to obtain a 12 digit number – RCH ID.
 Moreover, candidates can also get this RCH ID at PHCs, Urban PHCs and other govt. hospitals through online registration at PICME. In addition to this, candidates can obtain this RCH ID from Common Service Centers (CSCs) in rural & urban areas or by calling Helpline Number 102.
Now Pre-registration facility is also available for pregnant women on the official website picme.tn.gov.in to get their RCH ID.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மருத்துவ சேவை...

 யாருக்கு நன்மை?
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் அதிகார வரம்புக்குள் மருத்துவர்கள் வந்த பிறகு, அவர்கள் ஒருவித மனஅழுத்தத்துடன், தற்காப்பு மருத்துவம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. அதனால் நோயாளிகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மருத்துவ சேவை... யாருக்கு நன்மை?
10 ஆண்டுகளுக்கு முன்புவரை மக்கள் மத்தியில் மருத்துவர்களுக்கு மதிப்பு, சமூகத்தில் தனி அந்தஸ்து இருந்தது. அதுபோலவே நோயாளிகளின் மீது மருத்துவர்களும் தனி அக்கறை செலுத்தினர். அவர்கள் நலம் பெறவேண்டும் எனக் கருதி மருத்துவம் செய்தனர். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இதற்குக் காரணம் யார்? ஏன் இந்த மாற்றம்?
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்.
கடந்த 10 அல்லது 15 வருடங்களில் மருத்துவர்- நோயாளி உறவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அனைத்துத் துறைகளும் வணிகமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்ற பிடிக்குள் சிக்கியது. இதில் மருத்துவத் துறையும் அடங்கும். அதனால், நோயாளிகளுக்குப் பொருளாதார ரீதியாக பெரும் சுமை ஏற்பட்டது. இதன் விளைவு மருத்துவர், நோயாளிகளுக்குள் இருந்த புனித உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டு நம்பிக்கையற்ற தன்மை, வியாபார ரீதியான உறவு என்று மாறியது.
ஏற்கெனவே மருத்துவர்கள், பல சட்டத்தின் வரம்புக்குக் கீழ் வருபவர்களாக இருந்தாலும், அவர்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட (1986) அதிகார வரம்புக்குக் கீழ், கொண்டு வந்து நவம்பர் 1995-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. இதைப் பல அமைப்புகள் வரவேற்றாலும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அமைப்புகள் இடையே இது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
அதன்படி, நோயாளிகளிடம் கட்டணம் பெற்று மருத்துவச் சேவை அளிக்கும் மருத்துவர்கள், இந்த நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் அதிகார வரம்புக்குள் வருவர். இதுதொடர்பாக பல விவாதங்கள் நடந்தன. தனது மருத்துவ அறிவைக் காலத்துக்குத் தகுந்தவாறு புதுப்பிக்காத மருத்துவர்களுக்குப் புதிய மருத்துவக் கண்டுபிடிப்பின் அடிப்படை தெரிவதில்லை.
ஒரு சிறப்புப் பிரிவில் இருக்கும் மருத்துவருக்கு, மற்றொரு சிறப்புத் துறையின் எல்லா விவரங்களும் தெரிவதில்லை. எனவே, நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு மருத்துவ இயல் வழக்கு சம்பந்தமான நுணுக்கமான, சிக்கலான மருத்துவ விஷயங்கள் ஆழமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆகவே, இந்தப் பிரச்னையில் சரியான நியாயம் கிடைக்காமல் போக அதிகம் வாய்ப்பு உள்ளது. இந்தச் சட்டத்தால் பல மருத்துவர்கள், 'தற்காப்பு மருத்துவத் தொழில்' செய்ய ஆரம்பிக்கும்போது, நுகர்வோரின் செலவு அதிகரிக்கிறது.
ஏற்கெனவே மருத்துவத் தொழிலை நெறிமுறைப் படுத்த `இந்திய மருத்துவ கவுன்சில்' என்ற அதிகாரம் படைத்த உயரிய அமைப்பு உள்ளது. இந்த அமைப்பை ஒழுங்குபடுத்தி, வெளிப்படைத்தன்மை கொண்டதாக ஆக்கி, அதிக அதிகாரங்களைக் கொடுத்தாலே போதும். மருத்துவ நுகர்வோர் நலன் காக்கப்படும்.
ஏனெனில், இந்த அமைப்பின் உறுப்பினர்கள் மருத்துவப்புலம் உள்ளவர்களாக இருப்பதால் வழக்கில் அநீதி கிடைக்க வாய்ப்பு இல்லை. ஆனால், இந்த அமைப்பின் செயல்பாடுகள், பல வருடங்களுக்கு முன்புவரை கேள்விக்குரியதாகவே இருந்தது.
காரணம், `அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என்பதுதான். பொதுவாக இந்தச் சட்டத்தின்படி சேவை என்ற பிரிவின் கீழ் மருத்துவச் சேவையும் வரவேண்டுமா' என்று பல விவாதங்கள் நடந்தன.
ஏனெனில், இந்த சேவை மற்ற துறை சேவைகளைவிட வித்தியாசமானது. மனித உடலியக்கம் மற்றும் உயிருடன் தொடர்புள்ளது. இதற்காக மருத்துவர் சேவைக் கட்டணம் பெற்றாலும், ஒரு குறிப்பிட்ட தொகைக்குள் அதை வரையறுக்க முடியாது. இந்தத் துறையில் உள்ளவர்கள் தவறு செய்யாமல் இருக்க, அதிக விதிமுறைகளை விதிக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவ வல்லுநரின் சேவையை நுகர்வோர் நீதிமன்றங்கள் பெறலாம் என்ற ஷரத்தும் உள்ளது.
இதன் அடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, மும்பையைச் சேர்ந்த ஒரு நோயாளி, `தனக்கு அளித்த சிகிச்சை சரியில்லை' என மருத்துவருக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார்.
அப்போது, `அவரின் புகாரை வழக்காக அனுமதிக்கவும், ஏற்கவும் முகாந்திரம் உள்ளது. அதனால் இருவேறு மருத்துவர்களின் உறுதிச்சான்றை (affidavit) புகார்தாரரே பெற்று வரவேண்டும்' என்று உத்தரவிட்டது நீதிமன்றம்.
இப்படி இந்தச் சட்டத்தில், வழக்கின் ஆரம்பநிலையே சற்றுக் குழப்பமாக உள்ளது. தன் சக மருத்துவருக்கு எதிராக எந்த மருத்துவர்கள் உறுதிச்சான்று தருவார்கள்?.
ஒருவேளை அந்தப் புகார், வழக்காக ஏற்கப்பட்டாலும் புகார்தாரர் தவறான வழக்கைத் தொடர்ந்தார் என எதிர்தரப்பால் நிரூபிக்கப்பட்டால் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வழி இருக்கிறது.
அநேக மருத்துவம் சார்ந்த வழக்குகளை, மருத்துவருக்குச் சாதகமாக `மனுதாரர் தவறாகத் தொடர்ந்தார்' என்று நிரூபிப்பது மிகவும் எளிது. எந்த மருத்துவரும் தன்னை நாடிவரும் நோயாளியின் உடல்நிலையைப் பாதிக்கக் கூடிய செயலைச் செய்யமாட்டார். `ஒரு புனிதமான தொழிலில் உள்ளோம்' என்ற மனசாட்சி அவருக்கு உள்ளது. சில தவறுகள், எதிர்பாராத விதமாகவோ, அலட்சியத்தாலோ ஏற்படுகிறது.
எனவே, இந்தச் சட்டத்தின்கீழ் மருத்துவர்கள் வந்து விட்டபின், பலர் `defensive medicine' என்னும் தற்காப்பு மருத்துவ முறையைப் பின்பற்றுகிறார்கள். இந்த முறையால், நோயாளிகளின் செலவு, அலைச்சல் போன்றவை மறைமுகமாக அதிகரிக்கிறது.
இந்தச் சட்டத்திலிருந்து தன்னைப் பாதுகாக்கவும், ஒருவேளை அபராதத் தொகை செலுத்த வேண்டியது வந்தால், அதைச் சமாளிக்க அநேக மருத்துவர்கள், மருத்துவக் காப்பீடு எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த பிரீமியம் தொகையை, மறைமுகமாக நோயாளியிடம் வசூலிக்கும் நிலை ஏற்படும்.
இதுபோக இந்தச் சட்டத்தை எதிர்கொள்ள, ஒவ்வொரு நோயாளிக்கும் பல ஆவணங்கள் தயார் செய்து, அதைப் பாதுகாக்கும் செலவு அதிகமாக இருக்கும். இதை அந்த மருத்துவர் , நோயாளியிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வசூலிப்பதே இயல்பாகும்.
இதுதவிர, இந்தச் சட்டத்தின் கீழ் மருத்துவர்கள் வரும் முன்னர், ஆய்வுக்கூட பரிசோதனை, ஸ்கேன் போன்றவை இல்லாமலே சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால், தற்போது தன்னை மருத்துவ அலட்சியக் குற்றச்சாட்டிலிருந்து தற்காக்க, நோயாளிக்குப் பல்வேறு பரிசோதனைகளை பரிந்துரைக்கத் தொடங்கிவிட்டனர்.
இதற்குக் காரணம், சரியான ஆதாரமில்லாமல் சிகிச்சை அளித்ததாக வழக்கு வந்துவிடுமோ என்ற பயமே ஆகும். முன்பெல்லாம் நோயாளிகள் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் தனி முயற்சி எடுத்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இன்று பெரிய மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர். இதில் மருத்துவர்களைக் குற்றம் சொல்லி பயனில்லை. அவர்கள் தங்களை நுகர்வோர் சட்டத்தின் பிடியிலிருந்து காக்க இவ்வாறு செய்கின்றனர்.
இப்படி மருத்துவர்களைத் தண்டிக்கும் நுகர்வோர் சட்டம் நோயாளிகளின் பாதுகாப்புக்குத் துணையாக இருக்கிறது. ஆனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்குப் பாதுகாப்போ நிவாரணமோ அரசோ நீதிமன்றங்களோ அளிப்பதில்லை. அநேக மருத்துவர்களின் மரணத்துக்குக் காரணம், மருத்துவத் தொழிலில் ஏற்படும் கடும் விளைவுகள்தாம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. நோயாளிகளை வைத்து மருத்துவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பது மட்டுமே சமூகத்துக்குத் தெரியும்.
ஆனால், இந்தத் தொழிலால் உடல்நலம், குடும்ப சந்தோஷம், மனநலம் போன்றவற்றை இழப்பது யாருக்கும் தெரிவதில்லை. அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் மனஅழுத்தம், ஹார்ட் அட்டாக், பக்கவாதம் இவற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் ஏராளம்.
இந்தத் தொழிலால் மருத்துவர்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள் என்று கூறும் சமூகம், அதே தொழிலால் மருத்துவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டுகொள்வதில்லை.
எனவே, இந்த நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் அதிகார வரம்புக்குள் மருத்துவர்கள் வந்த பிறகு, அவர்கள் ஒருவித மனஅழுத்தத்துடன், தற்காப்பு மருத்துவம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. அதனால் நோயாளிகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டாக்டர் டி.முஹம்மது கிஸார்
நன்றி : விகடன் செய்திகள் - 19.12.2018
https://www.vikatan.com
 பதிவிட்ட வழக்குரைஞர் செல்வம் பழனிச்சாமி அய்யா அவர்களுக்கு நன்றிங்க!.

17 டிசம்பர் 2018

வாழ்க்கை ஒரு வரம்💥


வாழ்க்கையே ஒரு வரமாகும்
வரமாக வந்த அந்த வாழ்க்கையை
வளமான வழிகளில்
வாழ்ந்து பார்த்திடுவோம்
வாருங்களேன்!

நமக்குள்ளே மண்டிக் கிடக்கும்
கவலை என்ற களைகளை
கவனமாய் களையெடுத்து!
உயர்ந்த சிந்தனைகளால்
உள்ளமதை உழவு செய்து....
நேர்த்தியுடனே விதை பாவி
நம்பிக்கை என்ற உரம் தூவி!
முளைத்து நிற்கும்
நம் லட்சியப் பயிர்கள்
தழைத்து தினம்
உயிர் வாழ்ந்திட....
சளைக்காமலே
உழைத்திடுவோம்
சிறப்பான மகசூல் பெற்று
பகையாளிக்கும் பந்தி வைத்திடுவோம்!
 Kavi Rasigan





ஓய்வூதியம் என்பது பிடிபணத்தை தருவது!



ஓய்வூதியம் ஒரு கருணைச் செயலாகப் பார்க்கப்படுகிறது. 1977ல் தாராள ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. ஆனால், 1979 ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்குத்தான் அது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து டி.எஸ். நகரா என்பவர் வழக்குத் தொடுத்தார். 1982ல் உச்சநீதிமன்றம், “ஓய்வூதியம் என்பது அரசாங்கத்தால் கருணையோடு அளிக்கப்படுகிற பிச்சையல்ல. மாறாக வியர்வை சிந்தி உழைத்த உழைப்பிற்குக் கொடுபடாமல் நிறுத்திவைக்கப்பட்ட ஊதியமேயாகும்,” என்று தீர்ப்பளித்தது. அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு எழுதப்பட்ட டிசம்பர் 17 நாடு முழுவதும் ஓய்வூதியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
நான் ஒன்றும் அரசாங்க ஊழியராக இருந்து ஓய்வுபெற்றவனல்ல. ஆனால் இதை ஏன் இங்கே பதிவிடுகிறேன்?
இன்று காலை 10.30 மணிக்கு, திருவள்ளூர் கோட்டாட்சியர் வளாகத்தில் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் ஓய்வூதியர்களுடன், “ஓய்ந்துகிடப்பதல்ல ஓய்வு” என்ற தலைப்பில் உரையாடுகிறேன். என்னோடு சேர்ந்து அவர்களும் உள்ளூர் நண்பர்களை வரவேற்கிறார்கள்.

ஒரு தாயின் புலம்பல் கவிதை,,,,,,,,,,,,


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். குடும்ப உறவை பேணி காப்பது நமது தலையாய கடமை!
இது  நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அடுத்தடுத்து நடக்கப்போவது..!!
நமது தாய், தந்தையை பேணி காப்பது நமது தலையாய கடமை,
நமது உயிர் இருக்கும் வரை நாம் அவர்களை பேணி காப்போம்.
நமக்கும் ஒரு நாள் இந்த முதுமை வரும் அதற்குள் நமது பணியை சிறப்பாக செய்து நமது பெற்றோரையும் சிறப்பாக வாழ வைப்போம்.

ஓர் தாய் முதுமையில்
மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை..
எனதருமை மகனே !
எனதருமை மகனே !
நான்
உன்னை
மிகவும் நேசிக்கிறேன்..
முதுமையின் வாசலில் - நான்
முதலடி வைக்கையில்
தள்ளாட்டம்
என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்...
கொஞ்சம் பொறுமை கொள்க !
அதிகம் புரிந்து கொள்க !
என்முதுமை பார்த்து
முகம் சுளிக்காதே !
நான்
சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா?
சத்தம் போடாதே.....
உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு
கூர்க !
ஆடை மாற்றுகையில்
அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்திரப்படாதே.....
படுக்கை முழுதும்
நீ பண்ணிய ஈரங்களின்
ஈர நினைவுகளை
இதயம் கொள்க !
ஒரே பேச்சை, தேய்ந்த
ஒலிநாடா போல்
ஓயாமல் சொல்கிறேனா?
சலித்துக் கொள்ளாதே....
ஒரே
மாயாவி கதையை
ஒரு நூறு முறை
எனை படிக்கச் சொல்லி
நீ
உறங்கிய
இரவுகளை ஞாபகம்
கொள்க !
நான் குளிக்க மறுக்கிறேனா?
சோம்பேறித்தனம் என்று
சுடுசொல் வீசாதே....
உன்னை
குளிக்க வைக்க
நான் செய்த யுக்திகளை
எனக்காக புதுப்பித்துத் தருக!
புதிய தொழில்நுட்பம்,
புதிய பயன்பாடுகள் - உன்
புயல் வேகப் புரிந்துகொளல்
சத்தியமாய் எனக்குச்
சாத்தியமில்லை !
கேவலப் படுத்தாதே....
கற்றுத் தருக ! கவனித்துப்
பழக அவகாசம் தருக !
இனி,
சில நேரங்களில் -
என்
நினைவுப் பிரழ்ச்சியால்
ஞாபங்கள் அறுந்து போகலாம்,
உரையாடல் உடைந்து போகலாம்!
நிறைய வேலை இருக்கிறதென்று
நேரம் பார்க்காதே.....
என் அருகிருந்து
ஆற்றாமை தேற்றுக!
ஆசுவாசப் படுத்துக!
என் கால்கள்
என்னை ஏமாற்றுகையில்
நீ
முதல் நடை பழக
என் விரல்
நீண்டது போல்
கைகொடுத்து
எனக்கு உதவி செய்க !
ஒரு நாள் சொல்வேன் நான்,
வாழ்ந்தது
போதுமென்று !
வருத்தப் படாதே.....
சில
வயது வரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை...
சில
வயதுக்கு மேல்
வாழ்வதில் அர்த்தமில்லை...
காலம்
வரும்போது - இதை
நீயும்
புரிந்து கொள்வாய் !
இனி நான் வேண்டுவதெல்லாம்
நீ எனை
புரிந்து கொண்ட
புன்னகை !
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் !
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்.....
என் வாழ்வு
அமைதியோடும் - உன்
அரவணைப்போடும்
முற்று பெற
முயற்சியேனும் செய்வாயா..????

கணிதம் தொடர்பான சந்தேகம் எதுவானாலும் கேளுங்க!

கணிதம் தொடர்பான சந்தேகம் எதுவானாலும் கேளுங்க!
  Maths Hero
16 டிசம்பர், பிற்பகல் 2:02
வணக்கம் நண்பர்களே..
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியா லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அதில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து இணைந்து கொள்ளலாம் கணிதம் தொடர்பான சந்தேகங்களை மட்டும் பகிரவும்
நன்றி
மேலும் தகவலுக்கு
9566954702

மதுரை
https://chat.whatsapp.com/IDd2dMZOV3N94P6UB9O0BT
ராமநாதபுரம்
https://chat.whatsapp.com/KdBsQG3pRo14Vdv26jG8vn
திருவண்ணாமலை
https://chat.whatsapp.com/B5W5C7m6NuI8MYerXoCOmR
பெரம்பலூர்
https://chat.whatsapp.com/GUn3TFSB5Qr22IqIyQEhwe
கரூர்
https://chat.whatsapp.com/Gaz1tagaBZBEPVzKGv15da
திருவள்ளூர்
https://chat.whatsapp.com/Kb02P6W5EpA2EYaPZJZ96Z
காஞ்சிபுரம்
https://chat.whatsapp.com/FQFQN3A19aBDtFooGvSl3q
சேலம்
https://chat.whatsapp.com/BaLvXg7vyNjKJW7c5oBPCj
தஞ்சாவூர்
https://chat.whatsapp.com/GKm3jO3VeEUHIRhQ9Zwipq
சென்னை
https://chat.whatsapp.com/E7obVfotly9LDSVVx02FDc
நாமக்கல்
https://chat.whatsapp.com/FZ87dngZyyL5lFN7oL67EB
திருச்சி
https://chat.whatsapp.com/DZAAWX1rwNxIrXhisuqPKJ
கடலூர்
https://chat.whatsapp.com/Dguey98fAnTAla0rWnxUKy
தர்மபுரி
https://chat.whatsapp.com/DMOqq2s5vjm1SpvyuauCen
விழுப்புரம்
https://chat.whatsapp.com/DaocxiBsHEi90GNX362bRO
கோவை
https://chat.whatsapp.com/LvUOMpPzfdt4nmkIgvvLUT
ஈரோடு
https://chat.whatsapp.com/EluUS3JtLtcClwbXEHleW5
திருநெல்வேலி
https://chat.whatsapp.com/DH3XGBMG4jYF8GPUU4Ief3
நாகை
https://chat.whatsapp.com/DB5DQxWTC6eAqmjz7029I0
திருப்பூர்
https://chat.whatsapp.com/CbFfbxs1ZnwBhIh04aIRou
அரியலூர்
https://chat.whatsapp.com/G8YkAr6RmPJFFe0ebrgtqY
கிருஷ்ணகிரி
https://chat.whatsapp.com/D2Lm84Gt7pjJpGD31TG1Xu
தேனி
https://chat.whatsapp.com/L1c5XMa01UnIxT9TINRXFS
திண்டுக்கல்
https://chat.whatsapp.com/DNEkMJ9NblFB9NxoPji0Kj

8595959595 சென்னைக்கு போனா கேளுங்க!

 8595959595 எண்ணுக்கு போன் செய்து நீங்க செல்லவேண்டிய இடத்தைக் கூறுங்க! அதற்கான வழித்தடம் மற்றும் ரயில்,பஸ்,என தேவையான வாகனம்பற்றியவிபரமும் கூடவே நேரத்தையும் சொல்லுவாங்க!!
மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.
                                 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். நீங்க சென்னைக்கு புதியவரா?சென்னைக்கு சென்று வழிதெரியாமல் தவிக்கிறீர்களா? உங்களுக்காகவே வழித்தடம் வழிகாட்டும் அலைபேசி எண் 8595959595 காத்துக்கிட்டு இருக்குது.

"நான் சென்ட்ரல் வந்துட்டேன்.
கே.கே.நகருக்கு நான் எப்படி வரணும்?
பஸ் பிடிச்சு வரணுமா இல்லை ஆட்டோவா?''
இனி அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கியதும் யாருக்கும் போன் செய்து வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
உங்களுக்கே உங்களுக்காக வந்துவிட்டது *'ரூட்ஸ்’*. சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.
''இந்த ஐடியா நல்லா இருக்கே?'' என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமாரிடம் கேட்டால்,
''ஒரு நாள் ராத்திரி கிண்டி பக்கத்துல டீக்கடையில நின்னுட்டு இருந்தேன். அந்த டீக்கடைக்காரர்கிட்ட வெளியூர்க்காரங்க வந்து வழி கேட்டுட்டுப் போனாங்க.
அவருக்கும் ரூட் தெரியலை. அந்த நொடிதான் 'சென்னையில தினமும் இப்படி எத்தனை பேரு பஸ் ரூட் தெரியாம தவிக்குறங்க?
அவங்களுக்கு வழிகாட்ட ஏதாவது செய்யணும்’னு முடிவுபண்ணி, என்னோட நண்பர் பரத் சோமானிகிட்ட இதுபத்திப் பேசினேன்.
ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில் ஒட்டுமொத்த பஸ் ரூட் சம்பந்தமான அத்தனை தகவல்களையும் சேகரிச்சோம்.
.
திரட்டின தகவல்களை நெட்டுல போடுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. நடுரோட்டுல நிற்கிறவங்களால இன்டர்நெட் பார்க்க முடியாது.
அதனால நம்பர் கொடுத்து, நீங்க எங்கே போகணுமோ நாங்க ரூட் சொல்றோம்னு விளம்பரப்படுத்தினோம்.
.
ஒரு நாளைக்கு 2,500 கால்கள் வர ஆரம்பிச்சுருச்சு.
.
அப்புறம்தான் இந்த 'ரூட்ஸ்’ கம்பெனியை ஆரம்பிச்சிட்டோம்.
.
*Cell No., -> 86 95 95 95 95*
.
நம்பருக்கு யார் போன் செஞ்சாலும், அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம்.
அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை தகவல்களும் கொடுப்போம்'' என்றார்.
நல்ல தொடக்கம்!
                   தகவல்
                 திரு.நாகூர்கனி காதர் மைதீன் பாஷா அவர்கள்...

16 டிசம்பர் 2018

ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சவுண்டம்மாள் அவர்கள் கவனிப்பாரா?...

மலையைத் தோண்டி எலி பிடிக்கும் கதையாக!
                                            நன்றி! நன்றி!! நன்றி!!!
     ஈரோடு மாவட்ட கர்ப்பிணிகளின் துயரைப்போக்க உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து தற்போது மாவட்ட அளவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சவுண்டம்மாள் அம்மையார் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.               



            பெருந்துறை வட்டார கிராம மக்களை அவதிக்குள்ளாக்கும் அவலநிலையை போக்க உரிய நடவடிக்கை எடுப்பாரா??

                                      இந்தியாவில் உள்ள 23,109 Primary Health Centre  என்னும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன்றான ஈரோடு மாவட்டம்,பெருந்துறை,விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிற கிராம சுகாதார செவிலியர் மலர்விழி VHN(மொபைல் எண் 9442525385) நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று சேவை வழங்க கடமைப்பட்டுள்ள மலர்விழி VHN ,இருபத்திநான்கு மணி நேரமும் சேவையாற்ற தயாராக இருக்கவேண்டிய கடமையுள்ள மலர்விழி VHN கர்ப்ப பதிவு எண் பெற்று அனுப்பிய RCH ID  என்னும்  Reproductive and Child Health  எண்ணை அதற்கான அடையாளஅட்டையில் எழுதித்தருவதைக்கூட செய்யாமல்  ஏதோ ஒன்றை எதிர்பார்ப்பதன் காரணமாக ஒருமாதமாக அங்குமிங்கும் அலையவைத்து  சுகாதார செவிலியர் பணியின் புனிதத்தன்மைக்கே களங்கம் ஏற்படுத்தி வருகிறார். பலமுறைவாடகைக்கார் எடுத்து  நேரில் சந்திக்க சென்றும் அவரது 9442525385 வாட்ஸ் அப் எண்ணுக்கு போன் செய்தும் பணிக்கே வராமல் (வீட்டில் இருந்துகொண்டே ) அவசரவேலையில் இருப்பதாகவே கூறி வருகிறார். கர்ப்பிணி நோயாளிகளின் இருப்பிடம் செல்லாமல் தான் இருக்கிற இடம் தேடி வந்து சிகிச்சைபெற வேண்டும் என்றும் கூறிவருகிற செவிலியரான மலர்விழி VHNபோன் எண் 9442525385....
இதனால் பொது மக்கள் மருத்துவ சேவை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்களாம்.குறிப்பாக கர்ப்பிணிகள் மிகவும் தொல்லைகளுக்கு ஆளாகி வருகிறார்களாம்..
        நான்பட்ட துன்பத்தை படியுங்க!..  எனது மகளின் கர்ப்பத்தினை பதிவு செய்து ஆன்லைனில் பதிவெண் பெறப்பட்டு மேற்படியான செவிலியர் மலர்விழி கிராம சுகாதார செவிலியர் வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த டிசம்பர் 21 ஆம் தேதியே அனுப்பியும் அலைபேசியில் கூறியும் உள்ள நிலையில் அதற்கான அதாவது RCH ID அடையாள அட்டையை வழங்காமல் போன் செய்த போதெல்லாம் திங்கட்கிழமை நான் இருக்கிற இடத்துக்கு வா என்றும்,சனிக்கிழமை நான் இருக்கும் இடம் சொல்கிறேன் அங்கு வந்து வாங்கிச்செல் என்றும் கூறிவிட்டு மீண்டும்,மீண்டும் போனில் கேட்டால் இன்றைக்கு அவசரவேலை இருக்கிறது பிறகு பார்ப்போம் என்றும் ஆணவமாக பதிலளிப்பதோடு அலைக்கழிக்கவைத்துக்கொண்டே இருக்கிறார்.போதாக்குறைக்கு நர்ஸ் என்று கூப்பிடக்கூடாதாம்! சிஸ்டர் என்றுதான் கூப்பிட வேண்டுமாம்!என்றும் கண்டிசன் போடும்  மலர்விழி VHN 9442525385.செவிலியரிடம் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கி கடந்த 15-12-2018 ஆம் தேதிசனிக்கிழமைவரை ஒரு மாதமாக உரையாடியவற்றில் நான் பதிவு செய்த எட்டுஆடியோ உட்பட புகார் மனு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுப்பியுள்ளேன்.அவற்றின் ஆதாரத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்.அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கடமைகளும்,பணிகளும் பற்றிய விபரத்தை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக கேட்டுப்பெற்று அடித்தட்டு மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் உள்ளோம் என்பது மட்டும் உணர முடிகிறது.ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் வங்கி கணக்கு ஆரம்பித்து அதன் எண்ணை பதிவு செய்து அதனால் ஏழை தாய்மார்களுக்கு உதவிப்பணம் கிடைக்குமாம்.அவ்வாறு வங்கி கணக்கை பதிவு செய்ய ஒரு கர்ப்பிணிக்கு சூழலுக்கேற்ப இரண்டாயிரம்,மூவாயிரம் ரூபாய்வரை அன்பளிப்பாக கேட்பதாக தகவல்???மலர்விழி கண்காணிக்கும் பகுதியிலுள்ள கர்ப்பிண தாய்மார்களை விசாரித்துப்பாருங்க,அவர்களது வேதனையை  போக்க உதவுங்க.
இருபத்திநான்கு மணிநேரமும் மருத்துவசேவை புரியவேண்டிய செவிலியர்கள் பணியே செய்யாமல் அதிகாரத்தோரணையில் பேசியும் கடமை தவறியும் இருப்பதால்தாங்க இன்னும் கிராம மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

சத்தியமங்கலத்திலிருந்து பெருந்துறைக்கும்,விஜயமங்கலத்திற்கும்,திங்களூருக்கும்,பயணித்த வாடகைக்கார்...திங்களூர் ஆரம்ப சுகாதார மருத்துமனை முன்பாக நின்றபோது..
திங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்..








06 நவம்பர் 2018

துளசி நாற்றுகள் வழங்கி,பசுமைத்தீபாவளி கொண்டாடப்பட்டது..


பசுமைத் தீபாவளி நம்ம சத்தியமங்கலத்தில் .........


மரியாதைக்குரியவர்களே,
            அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.கட்டணமில்லா தனியார் ஆம்புலன்ஸ் சேவையான RELIEF AMBULANCE SERVICE சார்பாக 6-11-2018இன்று காலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்துநிலையத்தில் துளசியின் மருத்துவக்குணத்தை எடுத்துக்கூறி பொதுமக்களுக்கு துளசிநாற்றுகள் வழங்கப்பட்டன.அதன்விளக்கம் கீழே படியுங்க....












மரியாதைக்குரியவர்களே,
                                   வணக்கம்.மூலிகைகளின் ராணியான துளசிச்செடி இந்துக்களின் புனித செடியாகவும் வணங்கப்படுகிறது.சித்த மருத்துத்திலும்,ஆயுர்வேத மருத்துவத்திலும்,இயற்கை மருத்துவத்திலும்,நாட்டு மருத்துவத்திலும் முக்கிய பங்காற்றும் பலநோய்களை வராமல் பாதுகாக்கிறது.வந்த நோய்களை போக்குகிறது.
துளசிச்செடி விதை,வேர்,இலை,பூ, என சமூலமே மருத்துப்பயன்கொண்டது.துளசிவாசனையை நுகர்ந்தாலே நிறைய பயன்களைத் தருகிறது.நமது உடலின் பாதுகாப்புக் கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தும் ஆற்றல்மிக்கது.தினசரி20மணிநேரம் ஆக்சிஜனையும் 4மணிநேரம் ஓசோனையும் வெளியிடுகிறது அதிகாலை 2மணி முதல் 6மணிவரை ஓசோனை வெளியிடுகிறது..(பரமேஸ்வரன் டிரைவர் சத்தியமங்கலம்) நான்காயிரம் விதமான நோய்களைகுணமளிக்கும் அருமருந்தாகப் பயன்படுகிறது.எனவே மூலிகைகளின் ராணி என அழைக்கப்படுகிறது.மன அழுத்தத்தை குறைக்கிறது.இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.சளி,இருமல்,ஆஸ்த்துமா,கல்லீரல் நோய்கள்,தொண்டைவலி,வயிற்றுவலி,சிறுநீரகக்கோளாறு,மார்புவலி,மலச்சிக்கல்  என பெரும்பாலான நோய்களை தனிமருந்தாகவோ,கூட்டுமருந்துப்பொருட்களில் சேர்ந்தோ போக்குகிறது.கிருமிநாசினியாகவும் விளங்குகிறது.பலநோய்களை வராமல் தடுக்கிறது.இந்துக்களின் கோயில்களில் துளசிஇலை சேர்க்கப்பட்ட தீர்த்தம் வழங்கப்படுகிறது.பெருமாள்கோயில்களில் துளசி இலைஇல்லாமல் வழிபாடே இல்லை.மகாவிஷ்ணுவாக போற்றி வணங்கப்படுகிறது.மகாலட்சுமியாக வணங்கப்படுகிறதுஆதலால் துளசியை தெய்வீக மூலிகையாகவும் போற்றப்படுகிறது.காயகற்ப மூலிகையாக போற்றப்படுகிறது. தினசரி 4இலைகள் காலையில் தின்றுவந்தால் உடல் ஆரோக்கியம்பெறும்.இதனாலேயே சத்தியமங்கலம் பேருந்துநிலையத்தில் ரிலீப் ஆம்புலன்ஸ் இலவச சேவை அமைப்பு  சார்பாக தீபாவளியன்று(06-11-2018) பொதுமக்களுக்கு ஆயிரம் துளசிச்செடிகளை வழங்கி துளசியின் பெருமையை போற்றியது.














31 அக்டோபர் 2018

கோவை கோலிவுட்டான கதை.....

                


முகநூல் நண்பர்   Abdul Samath Fayaz
அப்துல் சமத் பயஸ் அவர்களுக்கு உளம் கணிந்த பாராட்டுக்கள், மற்றும் வாழ்த்துக்கள்.. தங்கள் பதிவுகள் அனைத்தும் ஆஹா, அருமை, அற்புதம், அபாரம், அதிசயம் எனக் கூறவைக்கின்றன. நீங்கள், அந்தக்கால வெள்ளித்திரை பற்றிய தகவல்களின் அபூர்வ களஞ்சியம். கலைஞர், ஒரு நாளில் 16 மணி நேரம் உழைப்பது வழக்கம் எனக் கூறுவார்கள். ஆனால் நீங்கள் இத்தனை சேதிகளைத் திரட்ட எவ்வளவு நேரம் உழைத்திருந்து எங்களுக்குஅளித்திருக்கிறீர்கள் என எண்ணும்போது மிகவும் வியப்பளிக்கிறது.

                        ஆங்கிலேய அரசின் ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்த ஒருவர் பணி ஓய்வு முடிந்து பேக்கரி ஒன்றை கோவையில் தொடங்கினார்.அவர் பணியாற்றிய திருச்சியிலிருந்து தன் குடும்பத்தை மொத்தமாகக் கொண்டு வந்து கோவையில் போட்டார். அவரது பெயர் முனிசாமி நாயுடு.
கோவை ரயில் நிலையம் எதிரே தேவி பேக்கரி என்ற பெயரில் ஒரு ஹோட்டலை நிறுவி நடத்திக்கொண்டிருந்தவருக்கு ஒரு மகன்.படித்துக்கொண்டே தந்தைக்கு உதவியாக அவரும் பேக்கரித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.அவரது பெயர் ஸ்ரீராமுலு.
அது இந்திய சினிமா பேசத் தொடங்கிய காலகட்டம்.முதல் பேசும் படம் காளிதாஸ் தமிழகத்தில் வெளியாகி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.ஏற்கனவே ஆலம் ஆரா என்ற படம் இந்தி மொழி பேசி இந்தியாவை வியக்க வைத்தது.இந்த காலகட்டத்தில் தான் இளைஞர் ஸ்ரீராமுலு தனது பேக்கரி போரடிக்க கோவை காஸ்மோபாலிட்டன் கிளப்பில் தனது ஓய்வு நேரத்தைக் கழிப்பார். நகரத்தின் பெரிய மனிதர்கள் கூடும் இடமானதால் அன்றைய பெரிய மனிதர்களான ரங்கசாமி நாயுடு ஆர்.கே.ராமகிருஷ்ணன் செட்டியார் சாமிக்கண்ணு வின்சென்ட் ஆகியோரின் நட்பு ஸ்ரீராமுலுக்குக் கிடைத்தது.நண்பர்கள் நால்வரது கவனமும் திரைத் துறையில் பதிய கோவை முதன் முதலில் கோலிவுட்டானது.
அப்போதெல்லாம் சென்னையில் சென்னையில் எந்த ஸ்டுடியோவும் வருவதற்கு முன்பே நான்கு நண்பர்களின் ஒருவரான சாமிக்கண்ணு வின்சென்ட் ஊமைப் படங்களை நகரில் ஓட்டிக்கொண்டிருந்தார்.உண்மையாகச் சொல்லபாபோனால் தமிழகத் திரையின் பிதா மகன் அவர் தான்.அவரைப் பற்றி விரிவாக இன்னொரு நாள் பார்க்கலாம்.ஸ்ரீராமுலு மற்றும் மூன்று நண்பர்கள் இணைந்து தான் கோவையில் முதல் ஸ்டுடியோவான சென்ட்ரல் ஸ்டுடியோவை ஆரம்பித்தார்கள்.
ரங்கசாமி நாயுடு கோவையின் புகழ் பெற்ற குடும்பமான பி.எஸ்.ஜி.குடும்பத்தைச் சேர்ந்தவர்.ராமகிருஷ்ணன் செட்டியார் இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே.சண்முகம் செட்டியாரது சகோதரர்.சாமிக்கண்ணு வின்சென்ட் தமிழகத் திரையின் முன்னோடி.இவர்களோடு இணைந்த ஸ்ரீராமுவிற்கு திரையின் அரிச்சுவடி கூடத் தெரியாது.பேக்கரித் தொழிலைச் செய்து கொண்டிருந்த ஒரு இளைஞர் பிற்காலத்தில் புகழ் பெற்ற பல படங்களை எடுத்துத் தள்ளியது ஆச்சர்யமான ஒன்று.
கோவை சிங்காநல்லூரில் 1936ல் தொடக்கப்பட்ட சென்ட்ரல் ஸ்டுடியோ தான் தமிழக திரைத் துறையின் தலையெழுத்தையே மாற்றியது என்பதை திரை வரலாறு அறிந்தவர் மறுக்க முடியாது.இங்கு தான் பம்பாய் கல்கத்தாவிற்கு அடுத்தபடியாக நவீன தொழில் நுட்பத்தோடு கூடிய ஸ்டுடியோ இயங்கியது.ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் கூடிய பி.என்.ஸி.மிட்ஸெல் கேமிராக்கள் லைட்டிங் பத்து கி.வாட் ஐந்து கி.வாட் செட்கள் அன்றைய மதிப்பில் லட்சக்கணக்கான ரூபாய்களைப் போட்டு வாங்கப்பட்டது.டெக்னீஸியன்கள் ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்டார்கள்.ஒப்பனையாளர்கள் உடை அலங்கார நிபுணர்கள் மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்டார்கள்.தனியாக ஒரு மியூசிக் ட்ரூப் இயங்கியது.
முதல் படமான துக்காராம் தொடங்கப்பட்டது.அதிலிருந்து ஏகப்பட்ட படங்கள் இந்த ஸ்டுடியோவில் எடுத்துத் தள்ளப்பட்டது.நடிகர்கள் மாதச் சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டனர்.நண்பர்களோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இளைஞர் ஸ்ரீராம் தனியாக தனக்கென ஒரு ஸ்டுடியோவை கொஞ்சம் தள்ளி நிர்மானித்துக்கொண்டார்.அதற்கு பக்ஷி ராஜா ஸ்டுடியோ என பெயரிட்டார்.
சென்ட்ரல் ஸ்டுடியோவில் கிடைத்த அனுபவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இவர் பிற்காலத்தில் பல புகழ் பெற்ற படங்களை தமிழகத் திரைக்குத் தந்தார்.அன்றைய சூப்பர் ஸ்டார்களான தியாகராஜ பாகவதர் மற்றும் பி.யு.சின்னப்பா ஆகியோரின் நெருங்கிய நண்பரானார்.பாகவதரின் சிவகவி மற்றும் சின்னப்பாவின் ஆர்யமாலா ஜகதலப் பிரதாபன் படங்களை தயாரித்து இயக்கியவர் ஸ்ரீராமுலு.
தென்னிந்தியாவின் புகழ் பெற்ற இயக்குநராக இருந்த ஸ்ரீராமுலு லட்சுமி காந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் கலைவாணரோடு கைது செய்யப்பட்டவர். தனக்காக வாதாட நூகண்ட் கிராண்ட் என்ற ஆங்கிலேய வழக்கறிஞரை நியமித்த ஸ்ரீராமுலு வழக்கு தொடங்கும்போது கிராண்ட் இறந்து விட புகழ் பெற்ற லாயரான கே.எம்.முன்ஷியை நியமித்தார்.முன்ஷியின் வாதத் திறமையால் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலையானார்.
சென்னையில் இருந்தால் மீண்டும் வம்பு தான் என எண்ணி உடனே கோவை திரும்பினார்.உடனடியாக கன்னிகா என்ற படத்தைத் தொடக்கினார்.அன்றைய பட்டதாரியான டி.ஈ.வரதனைக் கதாநாயகனாக்கி வழக்கமான தனது நாயகியான எம்.எஸ்.சரோஜினியை நாயகியாக்கி படத்தை சூப்பர் ஹிட்டாக்கினார்.
ஸ்ரீராமுலு அன்றைய பிரபலமாகக் காரணம் அவரது படங்கள் தான்.கை தேர்ந்த இயக்குநராக அவர் அவதாரம் எடுத்தது அவரது படங்களைப் பார்த்தாலே தெரியும்.சிவகவியை அருமையாக இயக்கி படத்தை வெற்றிப் படமாக மாற்றிக் காட்டினார்.பாபநாசத்தின் பல பாடல்கள் இன்றும் பேசும்படி எடுத்துத் தந்திருப்பார்.அதே போல் அவரது பவளக்கொடி படமும் அன்று பரவலாகப் பேசப்பட்டது.ஏற்கனவே பாகவதரின் முதல் படமான பவளக்கொடியும் ஒரு வெற்றிப் படம் தான்.இதை இயக்கியது.கே.எஸ்.
போட்டி போட்டுக்கொண்டு பாகவதருக்கு எதிராக நடித்துக்கொண்டிருந்தார் சின்னப்பாவை வைத்தும் வெற்றிப்படங்களைத் தந்தவர் ஸ்ரீராமுலு.அவரது ஆர்யமாலா மற்றும் ஜகதலப் பிரதாபன் அன்றைய காலகட்டங்களில் பரவலாகப் பேசப்பட்ட படங்கள்.அதிலும் ஜகதலப் பிரதாபனில் சின்னப்பா அருமையாக நடித்திருந்தார்.பிற்கால புகழ் பெற்ற பாட்டும் நானே பாவமும் நானே பாடலில் பல சிவாஜி வருவது போல அன்றே பல சின்னப்பாகக்கள் வாத்திய வித்தை புரிந்ததை முதன் முதலில் திரையில் காட்டியவர் ஸ்ரீராமுலு.ஜி.ராமநாதனின் அருமையான இசை சின்னப்பாவிற்கு புகழைத் தேடித் தந்தது.பனிரெண்டு மந்திரிமார் கதையில் ஒரு கதை தான் ஜகதலப் பிரதாபன்.அன்றைய சகலகலா வல்லவனை இப்படித் தான் அழைப்பார்கள்.அம்பா அகில லோக பிரியா , பாக்கியசாலிகள் உண்டோ, எனக்கு சிவ குருபை வருமா?., எங்கே செல்லுவேன் இறைவா?. தருணமிது அம்பா என பாபநாசத்தின் பல பாடல்களை அருமையாகப் பாடினார் சின்னப்பா. சிவ கவி கன்னிகாவைத் தொடர்ந்து காஞ்சனா என்ற படத்தையும் எடுத்தார் ஸ்ரீராமுலு.
பக்சிராஜாவின் மற்றுமொரு சிறந்த படைப்பு ஏழை படும் பாடு.1950ல் வெளியான இந்தப் படத்தை ராம்ராத் இயக்கியிருந்தாலும் ஸ்ரீராமுலு இந்தப் படத்தின் பின்னணியில் நின்றார்.தமிழின் முதல் எதார்த்த சினிமா.சித்தூர் நாகையா ஜாவர் சீதாராமன் பத்மினி ஆகியோர் நடித்த பிரமாண்டமான படமிது.
இந்த நிறுவனத்திலிருந்து வந்த புகழ் பெற்ற மற்றொரு படம் மலைக்கள்ளன்.மக்கள் திலகத்திற்கு ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்த படம்.முதல் தேசிய விருது பெற்ற படம்.மர்மயோகிக்குப் பிறகு கலைஞரின் கை வண்ணத்தில் மக்கள் திலகம் வெற்றிக் கனியை சுவைத்த படம்.
நாமக்கல் கவிஞரின் கதைக்கு கலைஞர் உரையாடல் எழுதியது அன்று பரவலாகப் பேசப்பட்டது.1954ல் வெளியான இந்தப் படத்தை எடுத்த ஸ்ரீராமுலு யாருமே செய்யாத சாதனையை இந்தப் படத்தில் செய்தார்.ஆறு மொழிகளில் வந்த ஒரே படம் என்ற பெருமையை மலைக்கள்ளன் பெற்றது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்பதோடு நில்லாமல் சிங்களத்திலும் இந்த மலைக்கள்ளன் வந்து போனான்.மக்கள் திலகத்தின் முதல் கொள்கை விளக்கப் பாடலான எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல் டி.எம்.எஸ்ஸூக்கு ஒரு பலமான அஸ்திவாரம் போட்டுக் கொடுத்தது.இதில் பூங்கோதை என்ற கேரக்டரில் வருவார் பானுமதி.
இருப்பவனிடம் எடுத்து இல்லாதவனிடம் தரும் ராபின் ஹூட் கதைக்கு அருமையாகப் பொருந்தினார் எம்.ஜி.ஆர்.பிற்கால பல ராபின் ஹூட் படங்களுக்கு முன்னோடி மலைக்கள்ளன் தான்.
கோவை மண் அந்தக் காலத்தில் புகழோடு விளங்கக் காரணம் ஸ்ரீராமுலு தான்.பிரபலமான திலீப் குமார் மீனா குமாரி இங்கு வந்து பக்ஷி ராஜாவில் நடித்துக் கொடுத்த படம் தான் ஆஸாத்.இந்தியில் பெரு வெற்றி பெற்ற இந்தப் படத்தை இயக்கியது ஸ்ரீராமுலு தான்.சூப்பரான பாடல்களோடு வெள்ளி விழா கொண்டாடிய படமிது.இந்தக் கணையே அக்கி ராமுடு என தெலுங்கில் வந்து என்.டி.ஆருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.ஜோடியாக இதே பானுமதி நடித்திருந்தார்.ஏற்கனவே ஸ்ரீராமுலு பல தெலுங்குப் படங்கள் மலையாளப் படங்களை இயக்கியிருக்கிறார்.கல்யாண் குமாரை கன்னடத்தில் பிரபலமாக்கியதும் இவர் தான்.
ஸ்ரீராமுலுவின் மற்றொரு படம் மரகதம்.டி.எஸ்.துரைசாமி எழுதிய கருங்குயில் குன்றத்துக் கொலை நாவலை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கினார் ஸ்ரீராமு.இது சர் வால்டர் ஸ்காட் எழுதிய நாவலைத் தழுவியது.திரைக் கதையை எஸ்.பாலச்சந்தர் எழுதினார். நடிகர் திலகம் பத்மினி ஜோடியான இந்தப் படத்திற்கு இசை சுப்பையா நாயுடு.சந்திரபாபுவின் வெற்றிப் பாடலான குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே பாடல் இதில் தான்.
காவிரி பாயும் கன்னித் தமிழ்நாடு டி.எம்.எஸ்.குரலில் அருமையாக ஒலித்தது.மாலை மயங்குகிறவர்களை நேரம் பச்சை மலை அருவி ஓரம் போன்ற சூப்பர் பாடல்களும் உண்டு.பத்மினி லலிதா சகோதரிகளை திறமையாகப் பயன்படுத்தியவர் ஸ்ரீராமுலு.
தமிழகத் திரைத் துறை என்ன தான் சென்னையை மையம் கொண்டிருந்தாலும் ஆரம்பப் பாடசாலை கோவை தான் என்பதை பிற்காலத் தலைமுறை மறக்கக் கூடாது.இங்கு தான் பிற்காலத் தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் சாதாரணமாக நடமாடினார்கள்.அறிஞர் அண்ணா தொடங்கி கலைஞர் மற்றும் மக்கள் திலகத்தை வார்த்தெடுத்த பூமியிது.பத்து ரூபாய் மாத வாடகைக்கு கோவையில் வாழ்ந்த வரலாறை கலைஞரின் நெஞ்சுக்கு நீதியில் காணலாம்.மக்கள் திலகத்தின் சுய சரிதையில் கோவையில் அவர் கழித்த காலங்களைக் காணலாம்.பாகவதர் சின்னப்பா தொடங்கி பல பிரபலங்களை மக்களுக்கு அடையாளம் காட்டியது கோவை மண்.தென்னிந்தியாவின் புகழ் பெற்ற ஆரம்ப ஸ்டுடியோக்கள் இரண்டு இருந்தது இங்கு தான்.அதில் ஒன்று தான் ஸ்ரீராமுலு நாயுடுவின் பக்ஷி ராஜா.கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாலும் உன்னதமான வரலாற்றைத் தாங்கி நிற்கிறது இந்த இரண்டு ஸ்டுடியோக்கள்.

27 அக்டோபர் 2018

குழந்தைச் செல்வம்..


மழலைச் செல்வம்....
               நாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு செல்வத்தை வேண்டியும் பெற்றும் வருகிறோம். இளமையில் கல்விச்செல்வம் கேள்விச்செல்வம் இவ்விரண்டால் வாய்க்கும் அறிவுச்செல்வம் வாய்த்த அறிவால் ஈட்டும் பொருட்செல்வம் என ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற செல்வத்தைப் பெற்று வருகிறோம்.

அடுத்த நிலையாக நாம் அடையத்துடிக்கும் ஒப்பற்ற செல்வம் ஒன்றுண்டு.

அச்செல்வத்தை கற்றார், கல்லார், உள்ளார், இல்லார், நல்லார், பொல்லார் என்றில்லாது எல்லார்க்கும் வாலறிவன் வழங்கும் மழலைச்செல்வம்.
பிற செல்வங்களைப் பெறாவிடினும் இழுக்கில்லை. இச்செல்வத்தைப் பெறாவிடின் இழுக்கன்றி வேறில்லை. மழலை பெறாமுன் மலடி என வழங்குவோரும் சேயொன்றைச் சுமந்தீன்றால் தாயென்று சாற்றுவர்.

பிற செல்வங்கள் பெறாவிடின் பெறாஅவ்வொருவருக்கே இழுக்கும் தாழ்வும். மழலைச்செல்வம் பெறாவிடின் இழுக்கு இல்லாள் கணவன் என இருவர்க்கும் ஏற்புடைத்து.

பிற செல்வங்கள் அச்செல்வங்களின் தன்மைக்கேற்பப் பயன்படும் வேளைகளில் மட்டும் நம்மை மகிழ்விக்கிறது. மழலைச்செல்வம் ஒன்றே இவ்வவ் வேளையென்றில்லாது எவ்வேளையிலும் நம்மை இன்பத்தில் ஆத்துகிறது.

பாடறியாப் பெண்களும் ஓர் மழலை பூத்து மடிதவழும் போழ்து ஜானகியாகவும் சித்ராவாகவும் மாறிவிடுகிறார்கள்.

ஏத்துணை வெகுளிபடைத்த வீரனாயினும் தன் மழலையை வாரியணைக்கும் போழ்து தானும் மழலையாகி விடுகிறான்.

இத்துணை இன்பம் பயக்கும் இம்மழலைச் செல்வம் இல்லா இல்லம் எதற்கெல்லாம் ஒக்கும் என சூளாமணி நமக்கோர் பட்டியலே போட்டுக் காட்டுகிறது.

தொக்கின மலர்த்துதை விலாத சோலையும்
புக்கிளந் தாமரை நகாத பொய்கையும்
மிக்கிளம் பிறைவிரி விலாத வந்தியும்
மக்களை யிலாததோர் மனையு மொக்குமே!

ஆயின் இச்செல்வம் பெறாக்கால் வேறு எச்செல்வம் உடையாராயினும் அவரெல்லாம் செல்வம் உடையாரா? எனக் கேள்வி எழுப்புகிறான் புகழேந்தி.

பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனும் உடையரோ? -இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர்!

முடியில் தவழும் மழலையை அள்ளி முத்துப்பல் காட்டிச்சிரிக்கும் முழுநிலாவின் மாவடு கன்னத்தில் முத்தமொன்று வைக்க ஆனந்தம் காட்டி ஆர்ப்பரித்துக் குரலெழுப்புமே குழந்தை அம் மழலைமொழிக்கு மாற்றுளதோ?
இவ்வின் மொழியில் இன்புறா மாக்களன்றோ குழலும் யாழும் இனிதென்பர்!

குழலினிதி யாழினி தென்பர்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்!

பெறும் செல்வங்களுள் மக்கட்செல்வம் சிறப்பெனினும் அம்மக்கட் செல்வங்களுள் அறிவு நிரம்பிய மக்களைப் பெறுவதே பேரின்பமாகும்.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற!

பெறுவனவற்றுள் தலைசிறந்ததாயும் பெற்றோர்க்குப் பேருவகை செய்யும் செல்வமாயும் திகழும் மக்களைப் பெறுவது இனிதென்றால் அம்மக்கள் கைவிட்டளாவும் கூழ் குடிக்கும் இன்பம் இருக்கிறதே அது அமிழ்தை அருந்தும் தேவருக்கும் கிட்டாத பேரின்பமாகும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்!

பேறுடை மக்கட்செல்வமாயினும் அளவோடு பெறுதலே ஆனந்தமாகும்.

முன்பெல்லாம் நாமிருவர் நமக்கிருவர் என்னும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அரசியற்றி அறிவித்து வந்தது.

தற்காலத்தில் நாமிருவர் நமக்கொருவர் திட்டம் வலியுறுத்தப் படுகிறது.
காரணம் மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காய் மட்டுமல்ல. அளவில் மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சைப்போல அதிகம் மழலைகளைப் பெறுவதாலும் ஆனந்தம் கெட்டுவிடும் என்பதாலும் தான்.

இதனை நம் பழம்பாடல் உவமைச்செறுக்கோடு உரைப்பதைப் பாருங்கள்.

ஓர் மழலை ஈன்றால் அவ்வில்லத்திற்கு அம்மழலை கரும்பின் அடிபாகத்தைப் போல் செறிந்த இனிப்பை நல்குமாம்.

மேலொன்று பெறும் ஆசையால் இரண்டாய்ப் பெற்றால் அக்கரும்பின் நுனி பாகத்தைப்போல் (கொழுத்தடை) செறிவில்லாத இனிப்பையே ஈயுமாம்.

பிள்ளைகள் மூன்றாய்ப் பெறுவது வாயிலிட்ட புளியால் பல் கூசுதல் போன்ற புளிப்பைத் தந்து நம்மை அறுவறுக்கச் செய்துவிடுமாம்.

மூன்றிற்குப் பின்னும் ஒன்று பெற்றுக் கொள்வது கசப்பென்றுத் தெரிந்திருந்தும் வேம்பைக் கடித்துத் துன்புறுவதைப் போன்ற துன்பத்தையே நல்குமாம்.

ஆசையின் மிகுதியால் அதற்குமேம் பெறத்துடிப்போர்க்கு என்ன உவமை சொல்வது என்றே தோன்றவில்லை என்கிறது அப்பழம்பாடல்.

ஒன்று கரும்பினடி ஓங்குநுனி யேயிரண்டு
துன்றுபுளிப் பேமூன்று தோகாய்வேம் -பொன்றதன்மேல்
பின்னும் பலபிள்ளை பேறுடை யார்விருப்புக்
கென்னுவமை சொல்வேன் இனி?

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...