பசுமைத் தீபாவளி நம்ம சத்தியமங்கலத்தில் .........
மரியாதைக்குரியவர்களே,
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.கட்டணமில்லா தனியார் ஆம்புலன்ஸ் சேவையான RELIEF AMBULANCE SERVICE சார்பாக 6-11-2018இன்று காலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்துநிலையத்தில் துளசியின் மருத்துவக்குணத்தை எடுத்துக்கூறி பொதுமக்களுக்கு துளசிநாற்றுகள் வழங்கப்பட்டன.அதன்விளக்கம் கீழே படியுங்க....
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.மூலிகைகளின் ராணியான துளசிச்செடி இந்துக்களின் புனித செடியாகவும் வணங்கப்படுகிறது.சித்த மருத்துத்திலும்,ஆயுர்வேத மருத்துவத்திலும்,இயற்கை மருத்துவத்திலும்,நாட்டு மருத்துவத்திலும் முக்கிய பங்காற்றும் பலநோய்களை வராமல் பாதுகாக்கிறது.வந்த நோய்களை போக்குகிறது.
துளசிச்செடி விதை,வேர்,இலை,பூ, என சமூலமே மருத்துப்பயன்கொண்டது.துளசிவாசனையை நுகர்ந்தாலே நிறைய பயன்களைத் தருகிறது.நமது உடலின் பாதுகாப்புக் கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தும் ஆற்றல்மிக்கது.தினசரி20மணிநேரம் ஆக்சிஜனையும் 4மணிநேரம் ஓசோனையும் வெளியிடுகிறது அதிகாலை 2மணி முதல் 6மணிவரை ஓசோனை வெளியிடுகிறது..(பரமேஸ்வரன் டிரைவர் சத்தியமங்கலம்) நான்காயிரம் விதமான நோய்களைகுணமளிக்கும் அருமருந்தாகப் பயன்படுகிறது.எனவே மூலிகைகளின் ராணி என அழைக்கப்படுகிறது.மன அழுத்தத்தை குறைக்கிறது.இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.சளி,இருமல்,ஆஸ்த்துமா,கல்லீரல் நோய்கள்,தொண்டைவலி,வயிற்றுவலி,சிறுநீரகக்கோளாறு,மார்புவலி,மலச்சிக்கல் என பெரும்பாலான நோய்களை தனிமருந்தாகவோ,கூட்டுமருந்துப்பொருட்களில் சேர்ந்தோ போக்குகிறது.கிருமிநாசினியாகவும் விளங்குகிறது.பலநோய்களை வராமல் தடுக்கிறது.இந்துக்களின் கோயில்களில் துளசிஇலை சேர்க்கப்பட்ட தீர்த்தம் வழங்கப்படுகிறது.பெருமாள்கோயில்களில் துளசி இலைஇல்லாமல் வழிபாடே இல்லை.மகாவிஷ்ணுவாக போற்றி வணங்கப்படுகிறது.மகாலட்சுமியாக வணங்கப்படுகிறதுஆதலால் துளசியை தெய்வீக மூலிகையாகவும் போற்றப்படுகிறது.காயகற்ப மூலிகையாக போற்றப்படுகிறது. தினசரி 4இலைகள் காலையில் தின்றுவந்தால் உடல் ஆரோக்கியம்பெறும்.இதனாலேயே சத்தியமங்கலம் பேருந்துநிலையத்தில் ரிலீப் ஆம்புலன்ஸ் இலவச சேவை அமைப்பு சார்பாக தீபாவளியன்று(06-11-2018) பொதுமக்களுக்கு ஆயிரம் துளசிச்செடிகளை வழங்கி துளசியின் பெருமையை போற்றியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக