16 டிசம்பர் 2018

ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சவுண்டம்மாள் அவர்கள் கவனிப்பாரா?...

மலையைத் தோண்டி எலி பிடிக்கும் கதையாக!
                                            நன்றி! நன்றி!! நன்றி!!!
     ஈரோடு மாவட்ட கர்ப்பிணிகளின் துயரைப்போக்க உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து தற்போது மாவட்ட அளவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சவுண்டம்மாள் அம்மையார் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.               



            பெருந்துறை வட்டார கிராம மக்களை அவதிக்குள்ளாக்கும் அவலநிலையை போக்க உரிய நடவடிக்கை எடுப்பாரா??

                                      இந்தியாவில் உள்ள 23,109 Primary Health Centre  என்னும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன்றான ஈரோடு மாவட்டம்,பெருந்துறை,விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிற கிராம சுகாதார செவிலியர் மலர்விழி VHN(மொபைல் எண் 9442525385) நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று சேவை வழங்க கடமைப்பட்டுள்ள மலர்விழி VHN ,இருபத்திநான்கு மணி நேரமும் சேவையாற்ற தயாராக இருக்கவேண்டிய கடமையுள்ள மலர்விழி VHN கர்ப்ப பதிவு எண் பெற்று அனுப்பிய RCH ID  என்னும்  Reproductive and Child Health  எண்ணை அதற்கான அடையாளஅட்டையில் எழுதித்தருவதைக்கூட செய்யாமல்  ஏதோ ஒன்றை எதிர்பார்ப்பதன் காரணமாக ஒருமாதமாக அங்குமிங்கும் அலையவைத்து  சுகாதார செவிலியர் பணியின் புனிதத்தன்மைக்கே களங்கம் ஏற்படுத்தி வருகிறார். பலமுறைவாடகைக்கார் எடுத்து  நேரில் சந்திக்க சென்றும் அவரது 9442525385 வாட்ஸ் அப் எண்ணுக்கு போன் செய்தும் பணிக்கே வராமல் (வீட்டில் இருந்துகொண்டே ) அவசரவேலையில் இருப்பதாகவே கூறி வருகிறார். கர்ப்பிணி நோயாளிகளின் இருப்பிடம் செல்லாமல் தான் இருக்கிற இடம் தேடி வந்து சிகிச்சைபெற வேண்டும் என்றும் கூறிவருகிற செவிலியரான மலர்விழி VHNபோன் எண் 9442525385....
இதனால் பொது மக்கள் மருத்துவ சேவை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்களாம்.குறிப்பாக கர்ப்பிணிகள் மிகவும் தொல்லைகளுக்கு ஆளாகி வருகிறார்களாம்..
        நான்பட்ட துன்பத்தை படியுங்க!..  எனது மகளின் கர்ப்பத்தினை பதிவு செய்து ஆன்லைனில் பதிவெண் பெறப்பட்டு மேற்படியான செவிலியர் மலர்விழி கிராம சுகாதார செவிலியர் வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த டிசம்பர் 21 ஆம் தேதியே அனுப்பியும் அலைபேசியில் கூறியும் உள்ள நிலையில் அதற்கான அதாவது RCH ID அடையாள அட்டையை வழங்காமல் போன் செய்த போதெல்லாம் திங்கட்கிழமை நான் இருக்கிற இடத்துக்கு வா என்றும்,சனிக்கிழமை நான் இருக்கும் இடம் சொல்கிறேன் அங்கு வந்து வாங்கிச்செல் என்றும் கூறிவிட்டு மீண்டும்,மீண்டும் போனில் கேட்டால் இன்றைக்கு அவசரவேலை இருக்கிறது பிறகு பார்ப்போம் என்றும் ஆணவமாக பதிலளிப்பதோடு அலைக்கழிக்கவைத்துக்கொண்டே இருக்கிறார்.போதாக்குறைக்கு நர்ஸ் என்று கூப்பிடக்கூடாதாம்! சிஸ்டர் என்றுதான் கூப்பிட வேண்டுமாம்!என்றும் கண்டிசன் போடும்  மலர்விழி VHN 9442525385.செவிலியரிடம் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கி கடந்த 15-12-2018 ஆம் தேதிசனிக்கிழமைவரை ஒரு மாதமாக உரையாடியவற்றில் நான் பதிவு செய்த எட்டுஆடியோ உட்பட புகார் மனு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுப்பியுள்ளேன்.அவற்றின் ஆதாரத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்.அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கடமைகளும்,பணிகளும் பற்றிய விபரத்தை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக கேட்டுப்பெற்று அடித்தட்டு மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் உள்ளோம் என்பது மட்டும் உணர முடிகிறது.ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் வங்கி கணக்கு ஆரம்பித்து அதன் எண்ணை பதிவு செய்து அதனால் ஏழை தாய்மார்களுக்கு உதவிப்பணம் கிடைக்குமாம்.அவ்வாறு வங்கி கணக்கை பதிவு செய்ய ஒரு கர்ப்பிணிக்கு சூழலுக்கேற்ப இரண்டாயிரம்,மூவாயிரம் ரூபாய்வரை அன்பளிப்பாக கேட்பதாக தகவல்???மலர்விழி கண்காணிக்கும் பகுதியிலுள்ள கர்ப்பிண தாய்மார்களை விசாரித்துப்பாருங்க,அவர்களது வேதனையை  போக்க உதவுங்க.
இருபத்திநான்கு மணிநேரமும் மருத்துவசேவை புரியவேண்டிய செவிலியர்கள் பணியே செய்யாமல் அதிகாரத்தோரணையில் பேசியும் கடமை தவறியும் இருப்பதால்தாங்க இன்னும் கிராம மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

சத்தியமங்கலத்திலிருந்து பெருந்துறைக்கும்,விஜயமங்கலத்திற்கும்,திங்களூருக்கும்,பயணித்த வாடகைக்கார்...திங்களூர் ஆரம்ப சுகாதார மருத்துமனை முன்பாக நின்றபோது..
திங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்..








1 கருத்து:

  1. ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மற்றும் தாய்சேய் நல அலுவலர்களுக்கு நன்றி!
    மரியாதைக்குரியவர்களே,
    வணக்கம்.
    பெருந்துறை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுகிற மலர்விழி செவிலியரின் அலட்சியப் பதிலளிப்பு மற்றும் ஆணவப்போக்கு குறித்து நேற்று பதிவிட்டிருந்த தகவலை அறிந்து மரியாதைக்குரிய ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சவுண்டம்மாள் அம்மையார் அவர்களும்,மற்றும் ஈரோடு மாவட்ட தாய் சேய் நல அலுவலர் திருமிகு அம்மையார் அவர்களும் சமூகத்தின் மீது அக்கறைகொண்டு கடந்த இருநாட்களாக அடுத்தடுத்து நான்குமுறை என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக விசாரித்து தவறு செய்த செவிலியர் மீது நடவடிக்கை எடுத்து இனி ஈரோடு மாவட்ட அளவில் அனைத்து சுகாதார நிலையங்களிலும் மக்களிடம் பொறுப்புடன் கடமையாற்ற அறிவுரை கூறி கர்ப்பிணி பெண்களுக்கு வீடுதேடி சென்று மருத்துவ உதவி செய்ய நடவடிக்கை எடுப்பதோடு மக்களின் சுகாதாரத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்வகையில் பணியாற்றுவோரை கண்காணிப்பதாக கூறியுள்ள மருத்துவ அதிகாரிகளுக்கு சமூகம் சார்பாகவும்,ஏழை பொதுமக்களின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்....என அன்புடன்,சி.பரமேஸ்வரன்,9585600733

    பதிலளிநீக்கு

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...