21 டிசம்பர் 2018

பிறப்புச் சான்றிதழ் இனி உடனுக்குடன்!

Selvam Palanisamy
20 டிசம்பர், பிற்பகல் 7:09
 
`இனி பிறப்புச் சான்றிதழுக்காக அலைய வேண்டாம்' - சுகாதாரத்துறையின் அசத்தல் முயற்சி
''ஜனவரி ஒன்றாம் தேதி முதல், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ஜ் ஆகும்போதே பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்'' என தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புதுறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
பிறப்புச் சான்றிதழ் பெற, குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள், அந்தப் பகுதியின் உள்ளாட்சி அமைப்புகளில் (ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி ) பதிவு செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் இருந்தும் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பிறப்பு பற்றிய தகவல்கள் அனுப்பப்பட்டிருக்கும். அந்தத் தகவல்களை சரிபார்த்து, பதிவு செய்த பதினைந்து நாள்களுக்குள் பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். குழந்தையின் பெயரை ஒரு வருடத்துக்குள் சான்றிதழில் சேர்த்துக்கொள்ளலாம். இதுதான் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை.
இந்த நிலையில், வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ஜ் ஆகும்போதே பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அந்த மருத்துவமனைகளின் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, 21 நாள்களுக்குள் ஆன் லைனில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்கிற புதிய வசதியைத் தமிழக சுகாதாரத்துறை அறிமுகப்படுத்தவுள்ளது.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, ஏற்கெனவே இருக்கும் முறைப்படி ஆன் லைனிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
நன்றி : விகடன் செய்திகள் - 20.12.2018
https://www.vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...