மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறேன்.டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்தவத்தில் தீர்வு...
நிலவேம்பு கஷாயம் அல்லது பப்பாளி இலைச்சாறு
(1) நில வேம்பு
(2)வெட்டிவேர்
(3) விலாமிச்சை வேர்
(4)சந்தனம்
(5)பேய் புடல்
(6)கோரைக்கிழங்கு
(7)சுக்கு
(8)மிளகு
(9) பற்பாடகம்
மேற்கண்ட (1)நிலவேம்பு,(2)வெட்டிவேர்,(3)விலாமிச்சை வேர்,(4)சந்தனம்,(5)பேய் புடல்,(6)கோரைக்கிழங்கு,(7)சுக்கு,(8)மிளகு,(9)பற்பாடகம் ஆகிய ஒன்பது மூலிகைகளையும் சம அளவில் எடுத்து குடிநீர்ப்பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.இதனை காலையிலும் மாலையிலும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வீதம் குடித்து வந்தால் டெங்கு காய்ச்சல்,பன்றிக் காய்ச்சல், போன்ற எல்லா வகையான காய்ச்சலும் நீங்கும், முன்னெச்சரிக்கையாக பயன்படுத்தினால் காய்ச்சல் வராமல் தடுக்கும்.
அனைத்து அரசு சித்த மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.நாட்டு மருந்துக்கடைகளிலும் கிடைக்கும்,ஆயுர்வேத மருந்துகள் விற்பனையகங்களிலும் கிடைக்கும்.
(10) பப்பாளி இலை
பப்பாளி இலை ஒன்றை பறித்து நரம்புகளை உருவிவிட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து கையால் பிழிந்தெடுக்க ஒரு டேபிள் ஸ்பூன் சாறு கிடைக்கும்.இந்த பப்பாளிச்சாற்றை ஒரு வேளைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் சாறு வீதம் என நாள் ஒன்றுக்கு ஆறுமணி இடைவெளியில் மூன்று முறை என குடித்துவர டெங்கு காய்ச்சல் குணமாகும்.கூடுதலாக பேரீச்சம்பழச்சாறும் குடித்து வரவேண்டும்.நல்ல பலன் கிடைக்கும்.
அல்லது
பப்பாளி இலையை பறித்து நன்றாக கழுவி நரம்புகளை அகற்றிவிட்டு இலையை மிக்ஸியல் அல்லது அம்மியில் வைத்து கூழாக அரைத்து இந்தப் (பேஸ்ட்) விழுதை ஏதாவது ஒரு பழச்சாறுடன் கலந்து ஒரு வேளைக்கு 20 அல்லது 25 மில்லி என நாளொன்றுக்கு இரண்டுமுறை குடித்து வர டெங்கு காய்ச்சல் நீங்கும்.இத்துடன் பேரீச்சைம்பழச்சாறும் அருந்தி வர வேண்டும்.
பப்பாளி இலைச்சாறு பிளட்லெட்ஸ் என்னும் ரத்தத்தட்டுக்களையும் வெள்ளை அணுக்களையும் அதிகரிக்கச்செய்யும்.என்ற வன இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் ஆய்வு செய்து கூறியுள்ளது.

சித்த மருத்துவத் தீர்வு
தமிழகம்
முழுவதும் டெங்கு காய்ச்சல் படுவேகமாகப் பரவி வரும் நிலையில், காய்ச்சலோடு
வரும் நோயாளி களைக் குணப்படுத்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்
கடுமையாகப் போராடி வருகின்றன. ‘இவ்வளவு சிரமம் தேவைஇல்லை. சித்த
வைத்தியத்தில் எளிதில் குணப்படுத்தலாம்’ என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
கும்பகோணத்தைச்
சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு முதுநிலை சித்த மருத்துவர் சம்பங்கி இதுபற்றி
நம்மிடம் பேசினார். ”சில ஆண்டுகளுக்கு முன், சிக்குன்குன்யா காய்ச்சல்
தமிழகத்தில் வேகமாகப் பரவியபோது, ஆங்கில மருத்துவத்தால் அதைக்
கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தநேரத்தில், சிக்குன் குன்யாவை உருவாக்கும்
வைரஸைக் கட்டுப்படுத்தும் மருந்தை அறிமுகம் செய்து, அதன் ஆற்றலை
நிரூபித்துக் காட்டினோம். அந்த ஆய்வுக்குப் பிறகுதான் பலரும் சித்த
மருத்துவத்தின் பக்கம் திரும்பினர். இப்போது பரவுகிற டெங்கு காய்ச்சலையும்
சித்தமருத்துவம் மூலம் எளிதில் குணப் படுத்தலாம். நிலவேம்பு இருக்கும்போது
கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை” என்றார்.
மேலும் அவர் தொடர்ந்து, ”விட்டுவிட்டு
வரும் காய்ச்சல், கண்களைச் சுற்றிலும் வலி, தலைவலி, மூட்டுவலி, குமட் டல்,
வாந்தி, உடம்பில் சிறு கொப்புளங்கள், அதில் ரத்தக் கசிவு, மலத்தில்
ரத்தக்கசிவு ஆகியவைதான் டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள். இந்தப் பாதிப்பு
உள்ளவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் சூரணத்தோடு சேர்த்து வசந்த குசுமாகரம்
மாத்திரை, சுதர்சன சூரண மாத்திரை, இம்பூரல் மாத்திரையும் கொடுக்கிறோம்.
இவை ஒவ்வொன்றுக்கும் டெங் குவால் உடலில் ஏற்படும் பாதிப்புக்களைக் குணப்
படுத்தும் தன்மை உண்டு.
நிலவேம்பு
குடிநீர் சூரணத்தில் நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சு வேர்,
சந்தனத்தூள், பேய்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் என்று
ஒன்பது வகையான இயற்கை மருந்துப் பொருட்கள் கலந்து இருக்கின்றன. இதில்
நிலவேம்பு, விலாமிச்சு வேர், பேய்புடல், மிளகு, பற்பாடகம் ஆகிய ஐந்து
பொருட்களும் உடலின் வெப்பத்தை அகற்றி காய்ச்சலைப் போக்கும் தன்மை கொண்டவை.
தலைவலி, மூட்டுவலி ஆகியவற்றையும் இவை போக்கிவிடும். நாவறட்சியைத் தடுத்து
உடலில் நீர்ச்சத்து குறை யாமல் வெட்டிவேர் காப்பாற்றும். தொண்டை,
உணவுக்குழல், இரைப்பை, குடல் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சியைப் போக்கி புண்
ஏதும் ஏற் படாமல் கோரைக்கிழங்கு தடுக்கும். உடலில் உள்ள அகட்டு வாயுவை
அகற்றி வயிறு உப்புசம் ஏற் படாமல் சுக்கு தடுக்கும். சிறுநீர் எரிச்சலைப்
போக்கி அதிக சிறுநீர் எளிதில் வெளியேற சந்தனத்தூள் வழிவகை செய்கிறது.
இத்தனை செயல்களையும் ஒருங்கே கொண்டதுதான் இந்த நிலவேம்பு சூரணம். இது,
டெங்குவுக்கு மட்டுமல்ல… பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் போன்ற எல்லா
விஷக் காய்ச் சலுக்கும் ஏற்ற அற்புதமான மருந்து.
டெங்குவின் முக்கியப் பாதிப்பு… உடலில்
கொப்புளங்கள் ஏற்பட்டு அதன் வழியாகவும், மலத்தின் வழியாகவும் ரத்தக்கசிவு
ஏற்படுவதுதான். அப்படி அதீத ரத்தம் வெளி யேறுவதால்தான் மரணம் ஏற்படுகிறது.
அதைத் தடுக்கத்தான் இம்பூரல் மாத்திரை. ஒரு வேளைக்கு இரண்டு மாத்திரைகள்
வீதம் சாப்பிட்டு வந்தால், எப்படிப்பட்ட ரத்தக்கசிவும் ரத்த வாந்தியும்
மலத் தின் மூலம் வெளியேறும் ரத்தமும் நின்று விடும். உடலில் உள்ள ரத்தம்
கெட்டுப் போகாமலும் இது காக்கும். வசந்தகுசுமார சூரணமும், சுதர்சன சூரண
மாத்திரையும் காய்ச்சலைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இந்த மருந்துகளைத்
தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால், டெங்குவின் சிறு பாதிப்புகூட
இல்லாமல் மீண்டு விடலாம்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து சித்த
மருத்துவப் பிரிவுகளிலும் இந்த மருந்துகள் கிடைக்கின்றன. அதுதவிர, நாட்டு
மருந்துக் கடைகள், ஆயுர்வேத மருந்துகள் விற்பனை செய்யும் கடைகளிலும்
கிடைக்கிறது. டெங்கு ஏற்பட்டவர்கள் மட்டுமின்றி வந்துவிடும் என்று
அச்சப்படுபவர்களும் இதைச் சாப்பிடுவதன் மூலம் நோயின் பாதிப்பில் இருந்து
தப்பிக்கலாம்” என்று திட்டவட்டமாகச் சொல்கிறார்.
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ்
கொசுவை கட்டுப்படுத்தவும் சித்த மருத் துவத்தில் வழி இருக்கிறதாம்.
”காஞ்சாங்கோரை அல்லது வேப்பிலையை வீட்டின் முன்புறம் மற்றும் கொல்லைப் புற
வாசல்களில் தோரணம் போல் தொங்கவிட்டால், அதன் வாசனைக்கு கொசுக்கள் உள்ளே
வராது. அதேபோல, நொச்சி இலை அல்லது காஞ்சாங்கோரை இலையை நிழலில் காயவைத்து
நெருப்பில் போட்டு புகை வரவழைத்தால், அந்தப் புகையும் கொசுவை உள்ளே வராமல்
விரட்டிவிடும். ஆடாதொடை இலை மற்றும் வேப்பிலையை வெயிலில் காயவைத்து சமஅளவு
எடுத்து பொடியாக்கிக்கொள்ள வேண்டும். அந்தப் பொடியோடு சிறிதளவு சாணத் தூள்
சேர்த்து அதில் பச்சரிசிக் கஞ்சியை ஊற்றி ஊதுவத்தி போல் உருட்டி வெயிலில்
காயவைத்து எடுத்து கொசுவத்தி போல் பயன்படுத்தினாலும் கொசு வராது” என்கிறார்
சம்பங்கி.
முயற்சித்துப் பார்க்கலாமே!
நன்றி: ஜூனியர் விகடன்
- See more at:
http://chittarkottai.com/wp/2012/12/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5/#sthash.rUDooZKl.dpuf

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக