20 பிப்ரவரி 2015

பிரண்டை வளர்க்க வேண்டுமா?

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.

          பிரண்டையில் கால்சியம் (ஆக்சலேட் வடிவில்; 100 கிராம் தண்டில் 267 மி.கிராம் என்ற அளவில்), கரோடீன், "சி' ஊட்டச்சத்து (அஸ்கார்பிக் ஆசிட் வடிவில்; 100 கிராம் தண்டில் 398 மி.கிராம் என்ற அளவில்), நார்ச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளன.
ஆண்மைக்குறைவு, தாது நஷ்டம், சூதக வலி, ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறுகள், சோம்பல், பசியின்மை, ருசியின்மை, எலும்பு முறிவு, வாய்ப்புண், வாய்நாற்றம், அல்சர், மூலம், பொலிவற்ற சருமம், ஆஸ்துமா, நீரிழிவு, கண்பார்வை கோளாறு, கண் எரிச்சல், உடல் பருமன் போன்றவற்றிற்கு நிவாரணம் தரும் அருமருந்தாக பிரண்டை திகழ்கிறது.

மூலிகை சாகுபடி செய்வோரை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
பல்வேறு வியாபார பெயர்களில் விற்பனைக்கு வரும் இயற்கை மருத்துவ தயாரிப்புகளில் பிரண்டை முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தயாரிப்புகளில் பிரண்டை தண்டோ, இலையோ, சாறோ நேரடியாக சேர்க்காமல் பிரண்டை உப்பும், பிரண்டை பஸ்பமும் பயன்படுத்தப்படுகிறது. பிரண்டை உட்பட ஏறக்குறைய எல்லா மூலிகைகளிலும் தாவரத்தின் வேர், தண்டு, இலை, பூ, காய் என அனைத்து பகுதிகளும் பல வகைகளில் பயன்படுகின்றன.
உயரிய லாபவிகிதம் கொண்ட பிரண்டையை ஒருமுறை சாகுபடி செய்து காபி, தேயிலை பயிர்களைப் போன்று பலமுறை அறுவடை செய்யலாம்.

வறட்சியை தாங்குவதில் மன்னன். சாகுபடி நுட்பங்களும் மிக எளிதானதாகும். இதனை ஆடு, மாடுகள் அண்டாது என்பதால் வேலி அமைப்பதற்கு பெருந்தொகை செலவு செய்ய வேண்டியதில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் மொட்டை மாடியில் தொட்டியில் இதனை சாகுபடி செய்யலாம். வாரக்கணக்கில் தண்ணீர் ஊற்றாவிட்டாலும் சாகாது. திரும்பவும் நீர் ஊற்றியதும் உயிர்த்தெழும். சிரஞ்சீவியாய் நின்று பலன் தரும்.
பிரண்டையிலிருந்து மருந்துப் பொருட்கள் மட்டுமின்றி ஊறுகாய், ஜாம், ஜெல்லி ஆகிய தின்பண்டங்களையும் தயாரித்து சந்தைப் படுத்தலாம்.
தங்கள் வீட்டிலும் ஒரு பிரண்டை கொடி வளர்க்க ஆர்வம் கொண்டவர்கள் "டி.கே.சிவராஜ், விஞ்ஞானி, ஆராய்ச்சித்திட்ட வளாகம், எஸ்.கே.புரம்-627 602, பாப்பாக்குடி அஞ்சல், திருநெல்வேலி' என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பிரண்டை கன்றினை இலவசமாக பெறலாம். கமகமன்னு குழம்பு வெச்சிராதீங்க! நடுங்க... திராட்சை கொடிபோல் அழகா படரும்.-நன்றி-டி.கே.சிவராஜ், விஞ்ஞானி, பாப்பாக்குடி, திருநெல்வேலி-627 607.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...