20 பிப்ரவரி 2015

இன்சுலின்--தெரிஞ்சுக்கோங்க...

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
         இன்சுலினும் குளுக்கோகானும்! பற்றி இந்தப்பதிவில் காண்போம்.
                தரமான செரிமானம் மூலம் தரமான குளுக்கோஸ் உற்பத்தியாகும்பட்சத்தில் கனைய இன்சுலின் ஹார்மோன் தூண்டப்படுகிறது. இந்த இன்சுலினானது நம் உடல் உழைப்பிற்கு வேண்டிய சக்தியாக்கத்தை குளுக்கோஸை உடைத்து அளிக்கிறது.
             சக்தியாக்கத்திற்குப் போக மீதமுள்ள குளுக்கோஸை குளுக்கோகான் என்ற கணையத்தின் மற்றொரு ஹார்மோன் கிளைக்கோஜனாக மாற்றி கல்லீரலில் கிளைக்கோ லிப்பிடாக சேமிக்கிறது.
           ஆக, தரமான குளுக்கொஸ் உற்பத்தி இருக்கும் பட்சத்தில்தான் இன்சுலின் சுரப்பும் உடல் சக்தியாக்கமும் நிகழ்கிறது. அதே போல சக்தியாக்கம் போக மீதமுள்ள குளுக்கொஸும் தரமானதாக இருந்தால்தான் குளுக்கோகானும் சுரக்கத் தூண்டப்படுகிறது.
         தரமற்ற குளுக்கோஸ் உற்பத்தியாகும் பட்சத்தில் அது இன்சுலின் மூலம் சக்தியாக்கமும் ஆகாமலும் குளுக்கோகான் மூலம் கல்லீரலில் சேமிப்பாக ஆகாமலும் அப்படியே இரத்தத்தில் தேங்கிவிடுகிறது. இதனைத்தான் ஆங்கில மருத்துவம் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதாகக்கூறி, இதனை உடல் செல் மற்றும் உறுப்புகளுக்கு செலுத்த வெளியிலிருந்து இன்சுலினை கொடுக்க ஆரம்பிக்கிறது. இந்த கெட்ட குளுக்கோஸை வலுக்கட்டாயமாக இப்படித் திணிக்கும்போது உடல் உறுப்புகள் பாழ்பட ஆரம்பித்து நீரழிவு நோயின் மற்ற நோய் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...