25 அக்டோபர் 2014

மதுரை வலைப்பதிவர்கள் சந்திப்பு மூன்றாம் ஆண்டு தமிழ்த் திருவிழா

                   மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.மதுரை வலைப்பதிவர்கள் சந்திப்பு - 2014 சிறப்பாக தமிழ்த்தொண்டு ஆற்றிடவும்,வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.இன்று மதுரையில் சங்கமிக்கும் வெளிநாட்டினர்,வெளிமாநிலத்தினர் உட்பட அனைத்து வலைப்பதிவர்களுக்கும் பாராட்டுக்களுடன் கூடிய நன்றிங்க.

  இதைத்தான் விதி என்று கூறுகிறார்களோ?

         .நேற்றைய அதாவது 25.10.2014சனிக்கிழமை இரவு சத்தியமங்கலத்தில் புறப்பட்டபோது எனது உடல் நலம் குன்றியமையால் (கடுமையான மழையின் விளைவு -காய்ச்சல்&தலைவலி காரணமாக) என்னால் ஆர்வமாக மதுரையில் கலந்துகொள்ள இருந்தும் செல்ல இயலாமைக்கு வருந்துகிறேன்..அடுத்த ஆண்டு தமிழுக்கான சிறப்பான தகவலோடு கலந்துகொள்ள உறுதி ஏற்றுள்ளேன்.(எனது உடல் நலம் மழை காரணமாக சரியில்லை என்பதே உண்மை) விடுப்பு எடுத்தும் மதுரைக்கு பயன்படுத்தமுடியாமை குறித்து மிகவும் வருத்தமடைகிறேன்.

            மதுரை வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை எத்தனையோ சிரமங்களுக்கிடையில் நமக்காக நம்ம தமிழுக்காக கடுமையாக உழைத்து வரும் மதுரை வலைப்பதிவர்கள் குழு நண்பர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல..
    
   நிகழ்ச்சிநிரல்

சந்திப்பு  நிகழ்ச்சிகள் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை  நான்கு மணி வரை நடக்க உள்ளது. வெளியூர் மற்றும் உள்ளூர் பதிவர்கள் அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டு நேரம் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

பதிவர்களே, நிகழ்ச்சிநிரல் படி எல்லா நிகழ்ச்சிகளும் இனிதே நடைபெற உங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

பதிவர்களே, நிகழ்ச்சிநிரலை தங்களது பதிவில் பகிர்ந்து, பெருவாரியான பதிவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு தாருங்கள்.

பதிவர்  சந்திப்பு நிகழ்ச்சிகள் நேரலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பதிவர் சந்திப்பில் நிகழ்ச்சிகளை, நண்பர் மகேந்திரன் பன்னீர்செல்வம் அவர்களும் தீபா நாகராணி அவர்களும் தொகுத்து வழங்க இருக்கிறார்கள்...

வெளியூரிலிருந்து  வரும் பதிவர்கள் அரங்கத்திற்கு வரும் வழித்தடம் பற்றி அடுத்த சில நாட்களில் வரும் பதிவில் பகிர இருக்கிறோம். பதிவர்கள் தங்களுக்கான வழித்தடத்தை குறித்துக் கொள்ளுங்கள்.

பதிவர்  திருவிழாவில் மதிய உணவாக சுவை மிகுந்த சைவ சாப்பாடு வழங்க இருக்கிறோம். உணவு ஏற்பாடுகளை சீனா ஐயா, திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் கவனித்துக் கொள்கிறார்கள்.

பதிவர் திருவிழாவிற்கான நிர்வாக வரவு செலவு கணக்குகள் தமிழ்வாசி பிரகாஷ் கவனித்து கொள்கிறார்.

அரங்க ஏற்பாடுகள், பதிவர்களுக்கான அடையாள அட்டை, விருது ஏற்பாடுகள், சிறப்பு விருந்தினர் தொடர்பு, போன்றவற்றை தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் கவனித்து வருகிறார்கள்.

வெளியூர்  பதிவர்கள் தங்குவதற்கான அறை ஏற்பாடுகளை தமிழன் கோவிந்தராஜ், ஜோக்காளி பகவான்ஜி அவர்கள் கவனித்து கொள்ள இருக்கிறார்கள்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...