25 அக்டோபர் 2014

வலைப்பதிவு இலவசமாக துவங்க விருப்பமா?

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். தமிழில் இலவசமாக வலைப்பதிவு,வலைப்பூ,வலைப்பக்கம்,blogspot., தொடங்க இதோ சிறப்பான எளிதான வழிகாட்டுதல் பதிவு செய்து உள்ளார்.மதுரைக்காரர்  திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்.ஐயா அவர்களது http://www.tamilvaasi.com/2014/10/2014.html? வலைப்பக்கத்தில் சென்று படியுங்க...
               .உதாரணமாக வலைப்பதிவு தொடங்கும் வழிகாட்டுதல் தொடரின் முதல் பாகம் இதோ..

வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
வணக்கம் வலை நண்பர்களே,
வலைப்பூ என்பது ஆங்கிலத்தில் (ப்ளாக் Blog) என அழைக்கப்படும் ஓர் கருத்துப் பரிமாற்ற இலவச இணைய பக்கம் ஆகும். இந்த வலைப்பூ பற்றி நிறைய நண்பர்கள் தெரிந்தோ/தெரியாமலோ வெறும் கணக்கு மட்டுமாவது துவங்கி வைத்திருப்பார்கள். வலைப்பூவை தெரிந்தவர்கள் முறையாக எவ்வாறு பயன்படுத்துவது என தெரியாமல் இருக்கலாம். தெரியாதவர்களுக்கு முதலில் எங்கிருந்து ஆரம்பிப்பது, அதில் என்ன செய்வது? வலைப்பூவை அமைப்பது எப்படி என நிறைய கேள்விகள் எழும்.

இப்படி வலைப்பூவைப் பற்றி அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும் என்னால் இயன்ற அளவு ஓர் எளிமையான வழிகாட்டுதலை என் அனுபவத்தின் மூலம் இக்கட்டுரைத் தொடர் வழியாக உங்களுக்கு அறியத் தருகிறேன்.
வலைப்பூ வசதியை Blogger, Wordpress என்ற இரண்டு தளங்கள் தருகின்றன. இவற்றில் நாம் Blogger மூலம் உள்ள வலைப்பூ பற்றியே பார்க்க போகின்றோம். 
1. Gmail account தேவை. Account துவங்க இங்கு செல்லவும்.
அந்த account மூலமாகவே Blogger தளத்திலும் உள் நுழைய முடியும்.

2. உள் நுழைந்த பின் new blog என்பதை க்ளிக் செய்தால் கீழே உள்ளவாறு ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
3. மேலே உள்ள படத்தில் title என்ற கட்டத்தில் உங்கள் வலைப்பூவின் பெயரை கொடுக்கவும். "இணையப் பூங்கா" என நான் கொடுத்துள்ளேன்.

4. அடுத்து address என்ற கட்டத்தில் வலைப்பூவிற்கான தள பெயரை தரவும். நான் netpoonga என கொடுத்துள்ளேன். நீங்கள் தரும் பெயர் ஏற்கனவே Blogger-ல் இருந்தால் Sorry, this blog address is not available என காட்டும். எனவே, நீங்கள் வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும். உங்களது பெயர் இருந்தால் This blog address is available என காட்டும். 
குறிப்பு: Title மற்றும் Address-ஐ தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் கொள்ளுங்கள். Title என்பது வலைப்பூவிற்கான தலைப்பு, அதாவது வலைப்பூவின் முகப்பு பகுதியில் மேலே காட்டக்கூடியது. Address என்பது வலைப்பூவிற்கான முகவரி. அதாவது வலைப்பூவின் URL Name. பெரும்பாலும் Title/Address இரண்டிலும் ஒரே பெயர் வரும்படி அமையுங்கள். Title ஒரு பெயர், Address ஒரு பெயர் என வைத்தால் வாசகர்கள் குழப்பமடைய வாய்ப்பு உள்ளது. Title தமிழில் இருந்தால் Addressஐ ஆங்கில மொழிபெயர்த்தும் வைக்கலாம். அதாவது, இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வைக்க வேண்டாம் என்பதில் கவனம் கொள்க.

5. Template என்ற பகுதியில் simple என்ற டெம்ப்ளேட்டை தேர்வு செய்து create blog என்பதை க்ளிக் செய்யதால் உங்களுக்கான வலைப்பூ ரெடி.
குறிப்பு: வலைப்பூவிற்கான டெம்ப்ளேட் அமைக்க இணையத்தில் நிறைய டெம்ப்ளேட்கள் இலவசமாக கிடைகின்றன. நாம் இப்போது ப்ளாக்கர் வழங்கும் டெம்ப்ளேட்டை எடுத்துக் கொள்வோம். ஏனெனில் ஒரு பத்து இடுகை(post) வரையாவது பிளாக்கர் வழங்கும் டெம்ப்ளேட்டை பயன்படுத்திய பின், நமக்கு தேவைப்படும் இணைப்புகளை இணைத்த பின்னர், மற்றைய டெம்ப்ளேட்டை அந்த வலைப்பூவிற்கு அமைப்பது மிக நல்லது.
 நண்பர்களே, வலைப்பூ தொடங்கியாச்சு. இனி என்ன செய்வது என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...