01 அக்டோபர் 2014

இந்திய அஞ்சல் துறை வரலாறு

மரியாதைக்குரியவர்களே,
                          வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறோம்.இந்திய அஞ்சல் துறை வரலாறு..........
 
             இந்தியாவில் அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்ட நாள்
இன்று (அக்டோபர்1).

இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் துறை அஞ்சல் சேவை ஆகும். பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. உலகில் அதிகமான அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட நாடு இந்தியா.
அஞ்சல் துறை உலகின் மிகப்பெரிய துறையாகும்.கிரமத்து மக்களை ஒன்றுசேர்க்கும் மிகப்பெரிய நிறுவனம் அஞ்சல் துறை.
வங்கிக் கிளைகள் இல்லாத கிராமத்திலும் அஞ்சலக கிளைகள் உள்ளன.பெருமைக்குரிய மக்கள் சேவைகளில் ஒன்று அஞ்சல் துறை.

இந்தியாவில் ஆங்கில அரசால் முதன்முதலாக 1764-1766களில் பம்பாய் சென்னை மற்றும் கல்கத்தா நகரங்களில் அஞ்சல் சேவையைத் துவக்கியது. வாரன் காஸ்டிங் கவர்னராக இருந்த போது அஞ்சல் சேவை பொது மக்களுக்காகவும் செயல்படத் துவங்கியது. அஞ்சல் சேவையின் அவசியத்தை உணர்ந்தவுடன் பிறகு அனைத்து நகரங்களிலும் அஞ்சல் துறை செயல்படத் தொடங்கியது.
தபால்தலைகள் 1 ஜூலை 1852ல் சிந்து மாவட்டதில் அறிமுகப்படுத்தப்பட்டது. தபால்தலைகள் வட்டவடிவில் இருந்தன. 1854ல் பேரரசி விக்டோரியாவின் உருவம் பொரிக்கப்பட்ட தபால் தலைகள் கல்கத்தாவில் அச்சிடப்பட்டு EAST INDIA POSTAGE என்ற பெயருடன் இந்தியா முழுவதும் பயன்பாடிற்கு வந்தன.
இந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 22 அஞ்சல் வட்டங்கள் தற்போது உள்ளன. ஒவ்வொரு அஞ்சல் வட்டமும் தலைமை அஞ்சல் அதிகாரியின் கீழ் இயங்குகின்றன. இந்த அஞ்சல் வட்டங்கள் தவிர இந்திய இராணுவத்தின் அஞ்சல்சேவைக்காக ஒரு சிறப்பு அஞ்சல் வட்டமும் செயல்படுகிறது.
அஞ்சல்கள் வேகமாகவும் குழப்பமின்றிப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1972 -ல் கொண்டு வரப்பட்ட இந்தக் குறியீட்டு எண் திட்டத்தில் 6 இலக்கங்கள் இருக்கும். முதல் இலக்கம் அதன் மண்டலத்தைக் குறிக்கும். இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தைக் குறிக்கும். மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தைக் குறிக்கும். கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும்
இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1 தலைமை அஞ்சல் அலுவலகங்கள்.
2 துணை அஞ்சல் அலுவலகங்கள்.
3 புற உறுப்பான துணை அஞ்சல் அலுவலகங்கள்.
4 புற உறுப்பான கிளை அஞ்சல் அலுவலகங்கள்.

.இந்தியத் அஞ்சல் துறையின் அஞ்சல் சேவைகள் ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1 ராஜதானிப் பிரிவு,2 பச்சைப் பிரிவு,3 பெருநகரப் பிரிவு
4 வணிகப் பிரிவு, 5பருவ இதழ்கள் பிரிவு ,6மொத்தத் அஞ்சல் பிரிவு

பலதரப்பட்ட சேவைகளை அஞ்சல்துறை செய்துவருகிறது.
அஞ்சல்தலைகள் விற்பனை, அஞ்சல் அட்டை மற்றும் கடிதஉறைகள் விற்பனை.பதிவுத் அஞ்சல்கள் (Registered post) அனுப்புதல்
அஞ்சல் மூலம் பணம் அனுப்புதல் (Money order)
அஞ்சல் மூலம் பொருட்கள் அனுப்புதல் (Booking parcels)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் சேவை
செயற்கைக் கோள் வழியில் பணவிடை அனுப்பும் வசதி
மின்னணு அஞ்சல்
இணைய வழி பில் தொகை செலுத்தல்
புத்தகங்கள் விற்பனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...