30 அக்டோபர் 2014

அரியப்பம்பாளையம் பேரூராட்சி கரட்டூரில் மழைக்கால எச்சரிக்கை நடவடிக்கைகள்.

நம்ம கரட்டூர் வார்டு உறுப்பினரை  வாழ்த்துவோம் வாங்க..
மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு இனிதே வரவேற்கிறேன்.
 
 ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி ஐந்தாவது வார்டு உறுப்பினர் திரு.கிருஷ்ணகுமார் அவர்கள் பள்ளத்து கழிவு நீரை வெளியேற்ற JCB இயந்திர ஓட்டுநருடன் ஆலோசனை செய்த காட்சிங்க...


         ஈரோடு மாவட்டம்-சத்தியமங்கலம்-அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஐந்தாவது வார்டு கரட்டூரில் வார்டு உறுப்பினர் கிருஷ்ணகுமார் அதாவது நாங்கள் செல்லமாக அழைக்கும் ராஜேந்திரன் அவர்கள்  ஜேசிபி இயந்திரத்துடன் பள்ளத்தில் அடைத்துள்ள புதர்களை அகற்றிய காட்சி..

பெரியகுளம் உடைப்பு ஏற்பட காரணமும்-எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கையும்

 அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா???.....
ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம்-வரதம்பாளையம் கிராமம்-பெரியகுளம் உடைப்பு ஏற்படக் காரணமும்?  மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கையும்!..
            
                 மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். 
                   
                           கடந்த வாரம் பெய்த மழையால் சத்தியமங்கலம்-பெரிய குளம் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான விவசாய பூமிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதுவரை இல்லாத அளவு தற்போது மட்டும் ஏன் ?.இவ்வாறு பாதிப்புக்குள்ளானது.
            இனிவருங்காலங்களில் அரசு எடுக்கவேண்டிய தடுப்பு நடவடிக்கை என்ன?என்பது பற்றி என்னறிவுக்கு எட்டியவரை பதிவிட்டுள்ளேன்.
  சத்தியமங்கலத்திலுள்ள பெரியகுளம் பகுதிக்குட்பட்ட   விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்டு வருடம் முழுவதும் பாதுகாத்திருந்து அறுவடை நேரத்தில் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டு பெரும் பாதிப்புக்குள்ளானவர்களை  நேரில் சென்று பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது.
  

             மாண்புமிகு அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் மற்றும் நமது ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊராட்சித்தலைவர் S.R.செல்வம் அவர்கள் பெரியகுளம் சாலையை சீரமைக்கும் பணியினை பார்வையிட்டுள்ளனர்.பெரியகுளம் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



             சத்தியமங்கலம்- பெரியகுளத்திற்கு நீர்பிடிப்பு பகுதியான தனவாசி கரடு உட்பட அப்பகுதி மலைப்பகுதியிலிருந்து வரும் நீர்வரத்துப்பகுதி மிக அதிக பரப்பளவைக்கொண்டது. இந்த பரப்பிலிருந்து வரும் தண்ணீர் எளிதாக கடந்துசெல்ல கீழே காட்டப்பட்டுள்ள  ஒரு கண்மாய் பாலம் போதுமானதாக இல்லை? தரைமட்ட பாலத்தை உயர்த்திய அரசு அதிகாரிகள் இதனை கவனித்திருக்க வேண்டும்.இதனால் பின்நாட்களில் மழைநீர் பெருக்கால் ஏற்படும் சேதம் பற்றிய அக்கறை எடுத்து இருக்க வேண்டும்.


     பெரியகுளத்திற்கு வரும் நீர்வரத்து அனைத்தும் உபரியாக வெளியேற இந்த சிறிய கண்மாயில்தான் புகுந்து செல்ல வேண்டும்.ஏற்கனவே கட்டமைப்பில் உள்ள உபரிநீர் வெளியேற்றப்பகுதி கீழே உள்ள படம்.
         மேற்கண்ட படம் உபரி நீர் வெளியேறும் பகுதி.கிழக்கு கடைசியில் அமைந்துள்ளது.ஆனால் உடைப்பு ஏற்பட்டது உறுதியாக இருக்கவேண்டிய குளத்தின் மேற்கு கரைப் பகுதி.
         எனது எண்ணப்படி இதற்கு காரணம் 
(1)குளத்தின் கரையின் மேற்கு பகுதி அகலமில்லாதது.மற்றும் வலுவற்றது.(2)சரியான திட்டமிடல் இல்லாமல் நீர்வரத்து உபரியாக செல்ல போதிய பாதை இன்றி தடுக்கும்விதமாக குளத்தின் நடுவே தார்ச்சாலை உயர்த்திப் போடப்பட்டது .

                      பெரிய குளத்தை துண்டாக்கிய தார்ச்சாலை போட்டுள்ள காட்சியை பாருங்க.மேல் படம் ஏறக்குறைய தடுப்பு சுவரைப்போல் போடப்பட்டுள்ளது..
இவ்வாறு உபரிநீரை வெளியேற்ற இடமில்லாமலும் சரியான திட்டமிடல் இல்லாமலும் தார்ச்சாலை அமைத்திட அனுமதியளித்த சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிக்கு வணக்கங்கள் பல சொல்ல வேண்டும்...
  இந்த தார்ச்சாலை வழியாகவும்  அதிகமான தண்ணீர் வெளியேறியுள்ளது. இருந்தாலும் கீழ்கண்ட படத்தில் உள்ள மேற்குப்பகுதி கடைசியில் உடைப்பு ஏற்பட்டு அதிக விளைநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
                (இப்படத்தை கொடுத்துதவிய சத்தியமங்கலம் செய்திகள் நண்பருக்கு நன்றிகள் பல.) பெரியகுளத்தின் நீர்வரத்து உபரியை தார்ச்சாலை தடுத்த காரணத்தால் தண்ணீர் கிழக்குப்பகுதிக்கு செல்வதை விட்டுவிட்டு மேற்கு பகுதியிலேயே எதிர்த்து தோட்டத்தினுள் புகுந்து கரையை உடைத்து வெளியேறிய காட்சி...எனது உடல்நலக்குறைவினால் அன்றையதினம் சம்பவ இடத்திற்கு செல்ல இயலவில்லை.
   
 குளத்தின் கிழக்கு கடைசியில் உபரி நீர் வெளியேறும் பகுதியின் அகலத்தை நீங்களே கவனியுங்கள்..ஏறக்குறைய 150அடி இருக்கும் என நினைக்கிறேன்.இத்தனை தண்ணீரும் கீழ் கண்டுள்ள  25அடி கண்மாய் பாலத்தில் உட் புகுமா?


   புதியதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் கண்மாய் பாதையில் மண்மேடும் தடுப்புகளும் உள்ளன.இதையாவது சரிப்படுத்தி இருக்க வேண்டும்.                    
                தார்ச்சாலையிலும் தண்ணீர் வெளியேறியும் அதனையும் மீறி உடைப்பு ஏற்பட்டுள்ளது.அதனால் தண்ணீரை தடுத்து குளத்தை உடைத்துவிட்டது.
 

       ( மழையால் வந்த காய்ச்சல்தாங்க!.  நான் சென்று பார்வையிட்ட இன்றைய தினமும் (30.10.2014) எனக்கு  இன்னும் உடல்நிலை சீராகவில்லை .....)


                       
பெரிய குளத்தின் கரையில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.படம் எடுத்த தேதி -30.10.2014 கரை விரிசல் பற்றிய விவரம் எனது காணொளியில் காண்க..
 
        பெரியகுளத்தின் பரப்பளவு சுமாராக 185 ஏக்கர் இருக்கலாம்.முப்பதிலிருந்து ஐம்பது அடி ஆழமாகவும் இருக்கலாம்.பெரிய குளத்தின் கரை கிழக்கிலிருந்து மேற்காக சுமார் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் நீளம் இருக்கலாம்.முழுவதும் மண்ணால் போடப்பட்ட கரை இது.
             ஏனோ தெரியவில்லை கிழக்கிலிருந்து மேற்கு வரை அகலமாக அதாவது பத்து முதல் பதினைந்து அடி அகலமாகப் போடப்பட்ட மண்கரை மேற்கு பகுதியில் மட்டும்  அரைகிலோமீட்டர் நீளத்திற்கும் அதிகமாக இரண்டு அடி அகலத்தோடு நிறுத்திவிட்டார்கள்.அதுவும் இளகிய மண்ணால் போடப்பட்டுள்ளதும் உடைப்பிற்கு காரணம் ஆகும்.
           மேலும், அந்த மண்கரை விரிசல் ஏற்பட்டு அபாயமாக உள்ளது.இனியும் உடையலாம்.பேராபத்தை நிகழ்த்தலாம்.
             அடுத்து குளத்தின் நடுப்பகுதியில் ஏற்கனவே சென்றுகொண்டிருந்த தார்ச்சாலை தரைமட்டமாகத்தான் இருந்தது.அந்த தார்ச்சாலையை மேம்படுத்திய போது கரைக்கு மட்டமான உயரத்தில் தண்ணீரை தடுக்கும் வகையில் தார்ச்சாலையை போட்டதும் உடைப்பிற்கு காரணமாகும்.
                  அவ்வாறு கரைமட்டத்திற்கு போடப்பட்ட தார்ச்சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் இருபத்தைந்து அடி அகலமுள்ள கண்மாய் மட்டும் விடப்பட்டிருப்பதும் குளம் உடைய காரணம்.
                அதாவது நீர்பிடிப்பு பகுதி தனவாசி கரடு உட்பட மலைப்பகுதி மழைநீர் முழுவதும் குறுக்காக போடப்பட்ட தார்ச்சாலையின் மேற்கு பகுதியிலிருந்துதான் நீர்வரத்துவருகிறது.
               அவ்வாறு வரும் நீர் வரத்தானது உபரி நீர் வெளியேற்றும் கிழக்குப்பகுதிக்கு கடந்துசெல்ல போதுமான அகலம் இல்லாததும் குளம் உடைப்பிற்கு காரணம் ஆகும்.உபரி நீர் வெளியேற்றும் மடைப்பகுதி அகலம் 150அடிக்கும் அகலமாக இருக்கும்போல் தோன்றுகிறது.ஆனால் பாலத்தின் கண்மாய் 25அடிதான் இருக்கும்போல் உள்ளது.அவ்வாறானால் எப்படி தண்ணீர் வெளியேற்றப் பகுதிக்கு செல்ல முடியும்.

                போக்குவரத்திற்கான சாலை மேம்பாடு அவசியம்தான்.அதற்காக நீர்வரத்தை தடுக்கும்படி கட்டமைப்பை செய்தவிளைவு இன்று எத்தனை விவசாய நிலங்கள் பாழ்பட்டுள்ளன.உபரி நீர் வெளியேறும் பகுதியின் அகலத்தைப்போன்று அல்லது 100அடி அகலமாவது பாலத்தின் கண்மாய்கள் கட்டியிருக்க வேண்டும்.ஏற்கனவே கட்டப்பட்டுள்ள பாலத்தின் கண்மாயில் தண்ணீர் செல்லும் பாதையை தடுக்கும் மண் மேட்டினை அகற்ற வேண்டும்.அந்த ஒரே கண்மாய் பாதையில் தடுப்பாக மண்மேடு இருப்பதும் தண்ணீரை தடுத்து கரையை உடைத்துள்ளது.இதனையும் அதிகாரிகள் கவனிக்க வேண்டும்.
            அடுத்து மேற்குப்பகுதி கரை அகலம் மிகக்குறைவாக அமைக்கப்பட்டுள்ளது.மற்றும் உறுதியற்ற நிலையில் போடப்பட்டுள்ளது.
                  தற்போதும் இன்றைய (30.10.2014) எனது பார்வையின்படிவிரிசல் ஏற்பட்டு அபாயமாக உள்ளது.அதனையும் அதிகாரிகள் கவனிக்க வேண்டும்
 தேவையான தடுப்பு நடவடிக்கைகள்;
        முதலில் தெற்குப் பகுதியிலுள்ள மண்கரையினை  கிழக்கிலிருந்து மேற்கு வரை ஒரே அளவான அகலத்தில் உறுதியான மண்ணிட்டு கரையை பலப்படுத்த வேண்டும்.
      குளத்தின் குறுக்கே செல்லும் தார்ச்சாலையின் பாலத்தை இன்னும் அகலமாக்கி கூடுதலாக உபரிநீர் வெளியேறும் பகுதியின் அகலத்தின் அளவுக்கு தார்ச்சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில்  அதிக கண்மாய்கள் அதாவது 100அடி அகலமாவது தண்ணீர் வெளியேறுமாறு பாலத்தை சீர்படுத்தவேண்டும்.
   தார்ச்சாலையின் குறுக்காக கட்டப்பட்டுள்ள பாலத்தின் 25அடி அகல கண்மாய் கண்டிப்பாக போதாது.இந்நிலை நீடித்தால் இனி வருங்காலங்களிலும் அழிவிலிருந்து மீளமுடியாது..கரையை இன்னும் உயர்த்த வேண்டும்.உபரிநீர் வெளியேறும் பகுதியின் அளவு இன்னும் ஒருமுறை ஆய்வு செய்தாவது மேல்படி நடவடிக்கை  எடுக்க வேண்டும். பெரியகுளம் பகுதிக்குட்பட்ட 
          விவசாய நிலங்களை காக்க வேண்டும்.
          விவசாயிகளை காக்க வேண்டும்.
             நீர் ஆதாரத்தை காக்க வேண்டும்.
                        செய்வார்களா?....

25 அக்டோபர் 2014

வலைப்பதிவு இலவசமாக துவங்க விருப்பமா?

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். தமிழில் இலவசமாக வலைப்பதிவு,வலைப்பூ,வலைப்பக்கம்,blogspot., தொடங்க இதோ சிறப்பான எளிதான வழிகாட்டுதல் பதிவு செய்து உள்ளார்.மதுரைக்காரர்  திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்.ஐயா அவர்களது http://www.tamilvaasi.com/2014/10/2014.html? வலைப்பக்கத்தில் சென்று படியுங்க...
               .உதாரணமாக வலைப்பதிவு தொடங்கும் வழிகாட்டுதல் தொடரின் முதல் பாகம் இதோ..

வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
வணக்கம் வலை நண்பர்களே,
வலைப்பூ என்பது ஆங்கிலத்தில் (ப்ளாக் Blog) என அழைக்கப்படும் ஓர் கருத்துப் பரிமாற்ற இலவச இணைய பக்கம் ஆகும். இந்த வலைப்பூ பற்றி நிறைய நண்பர்கள் தெரிந்தோ/தெரியாமலோ வெறும் கணக்கு மட்டுமாவது துவங்கி வைத்திருப்பார்கள். வலைப்பூவை தெரிந்தவர்கள் முறையாக எவ்வாறு பயன்படுத்துவது என தெரியாமல் இருக்கலாம். தெரியாதவர்களுக்கு முதலில் எங்கிருந்து ஆரம்பிப்பது, அதில் என்ன செய்வது? வலைப்பூவை அமைப்பது எப்படி என நிறைய கேள்விகள் எழும்.

இப்படி வலைப்பூவைப் பற்றி அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும் என்னால் இயன்ற அளவு ஓர் எளிமையான வழிகாட்டுதலை என் அனுபவத்தின் மூலம் இக்கட்டுரைத் தொடர் வழியாக உங்களுக்கு அறியத் தருகிறேன்.
வலைப்பூ வசதியை Blogger, Wordpress என்ற இரண்டு தளங்கள் தருகின்றன. இவற்றில் நாம் Blogger மூலம் உள்ள வலைப்பூ பற்றியே பார்க்க போகின்றோம். 
1. Gmail account தேவை. Account துவங்க இங்கு செல்லவும்.
அந்த account மூலமாகவே Blogger தளத்திலும் உள் நுழைய முடியும்.

2. உள் நுழைந்த பின் new blog என்பதை க்ளிக் செய்தால் கீழே உள்ளவாறு ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
3. மேலே உள்ள படத்தில் title என்ற கட்டத்தில் உங்கள் வலைப்பூவின் பெயரை கொடுக்கவும். "இணையப் பூங்கா" என நான் கொடுத்துள்ளேன்.

4. அடுத்து address என்ற கட்டத்தில் வலைப்பூவிற்கான தள பெயரை தரவும். நான் netpoonga என கொடுத்துள்ளேன். நீங்கள் தரும் பெயர் ஏற்கனவே Blogger-ல் இருந்தால் Sorry, this blog address is not available என காட்டும். எனவே, நீங்கள் வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும். உங்களது பெயர் இருந்தால் This blog address is available என காட்டும். 
குறிப்பு: Title மற்றும் Address-ஐ தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் கொள்ளுங்கள். Title என்பது வலைப்பூவிற்கான தலைப்பு, அதாவது வலைப்பூவின் முகப்பு பகுதியில் மேலே காட்டக்கூடியது. Address என்பது வலைப்பூவிற்கான முகவரி. அதாவது வலைப்பூவின் URL Name. பெரும்பாலும் Title/Address இரண்டிலும் ஒரே பெயர் வரும்படி அமையுங்கள். Title ஒரு பெயர், Address ஒரு பெயர் என வைத்தால் வாசகர்கள் குழப்பமடைய வாய்ப்பு உள்ளது. Title தமிழில் இருந்தால் Addressஐ ஆங்கில மொழிபெயர்த்தும் வைக்கலாம். அதாவது, இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வைக்க வேண்டாம் என்பதில் கவனம் கொள்க.

5. Template என்ற பகுதியில் simple என்ற டெம்ப்ளேட்டை தேர்வு செய்து create blog என்பதை க்ளிக் செய்யதால் உங்களுக்கான வலைப்பூ ரெடி.
குறிப்பு: வலைப்பூவிற்கான டெம்ப்ளேட் அமைக்க இணையத்தில் நிறைய டெம்ப்ளேட்கள் இலவசமாக கிடைகின்றன. நாம் இப்போது ப்ளாக்கர் வழங்கும் டெம்ப்ளேட்டை எடுத்துக் கொள்வோம். ஏனெனில் ஒரு பத்து இடுகை(post) வரையாவது பிளாக்கர் வழங்கும் டெம்ப்ளேட்டை பயன்படுத்திய பின், நமக்கு தேவைப்படும் இணைப்புகளை இணைத்த பின்னர், மற்றைய டெம்ப்ளேட்டை அந்த வலைப்பூவிற்கு அமைப்பது மிக நல்லது.
 நண்பர்களே, வலைப்பூ தொடங்கியாச்சு. இனி என்ன செய்வது என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போமே!

மதுரை வலைப்பதிவர்கள் சந்திப்பு மூன்றாம் ஆண்டு தமிழ்த் திருவிழா

                   மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.மதுரை வலைப்பதிவர்கள் சந்திப்பு - 2014 சிறப்பாக தமிழ்த்தொண்டு ஆற்றிடவும்,வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.இன்று மதுரையில் சங்கமிக்கும் வெளிநாட்டினர்,வெளிமாநிலத்தினர் உட்பட அனைத்து வலைப்பதிவர்களுக்கும் பாராட்டுக்களுடன் கூடிய நன்றிங்க.

  இதைத்தான் விதி என்று கூறுகிறார்களோ?

         .நேற்றைய அதாவது 25.10.2014சனிக்கிழமை இரவு சத்தியமங்கலத்தில் புறப்பட்டபோது எனது உடல் நலம் குன்றியமையால் (கடுமையான மழையின் விளைவு -காய்ச்சல்&தலைவலி காரணமாக) என்னால் ஆர்வமாக மதுரையில் கலந்துகொள்ள இருந்தும் செல்ல இயலாமைக்கு வருந்துகிறேன்..அடுத்த ஆண்டு தமிழுக்கான சிறப்பான தகவலோடு கலந்துகொள்ள உறுதி ஏற்றுள்ளேன்.(எனது உடல் நலம் மழை காரணமாக சரியில்லை என்பதே உண்மை) விடுப்பு எடுத்தும் மதுரைக்கு பயன்படுத்தமுடியாமை குறித்து மிகவும் வருத்தமடைகிறேன்.

            மதுரை வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை எத்தனையோ சிரமங்களுக்கிடையில் நமக்காக நம்ம தமிழுக்காக கடுமையாக உழைத்து வரும் மதுரை வலைப்பதிவர்கள் குழு நண்பர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல..
    
   நிகழ்ச்சிநிரல்

சந்திப்பு  நிகழ்ச்சிகள் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை  நான்கு மணி வரை நடக்க உள்ளது. வெளியூர் மற்றும் உள்ளூர் பதிவர்கள் அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டு நேரம் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

பதிவர்களே, நிகழ்ச்சிநிரல் படி எல்லா நிகழ்ச்சிகளும் இனிதே நடைபெற உங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

பதிவர்களே, நிகழ்ச்சிநிரலை தங்களது பதிவில் பகிர்ந்து, பெருவாரியான பதிவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு தாருங்கள்.

பதிவர்  சந்திப்பு நிகழ்ச்சிகள் நேரலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பதிவர் சந்திப்பில் நிகழ்ச்சிகளை, நண்பர் மகேந்திரன் பன்னீர்செல்வம் அவர்களும் தீபா நாகராணி அவர்களும் தொகுத்து வழங்க இருக்கிறார்கள்...

வெளியூரிலிருந்து  வரும் பதிவர்கள் அரங்கத்திற்கு வரும் வழித்தடம் பற்றி அடுத்த சில நாட்களில் வரும் பதிவில் பகிர இருக்கிறோம். பதிவர்கள் தங்களுக்கான வழித்தடத்தை குறித்துக் கொள்ளுங்கள்.

பதிவர்  திருவிழாவில் மதிய உணவாக சுவை மிகுந்த சைவ சாப்பாடு வழங்க இருக்கிறோம். உணவு ஏற்பாடுகளை சீனா ஐயா, திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் கவனித்துக் கொள்கிறார்கள்.

பதிவர் திருவிழாவிற்கான நிர்வாக வரவு செலவு கணக்குகள் தமிழ்வாசி பிரகாஷ் கவனித்து கொள்கிறார்.

அரங்க ஏற்பாடுகள், பதிவர்களுக்கான அடையாள அட்டை, விருது ஏற்பாடுகள், சிறப்பு விருந்தினர் தொடர்பு, போன்றவற்றை தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் கவனித்து வருகிறார்கள்.

வெளியூர்  பதிவர்கள் தங்குவதற்கான அறை ஏற்பாடுகளை தமிழன் கோவிந்தராஜ், ஜோக்காளி பகவான்ஜி அவர்கள் கவனித்து கொள்ள இருக்கிறார்கள்.
 

22 அக்டோபர் 2014

மதுரை வலைப்பதிவர்கள் சந்திப்பு மூன்றாம் ஆண்டு விழா-2014

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறேன். அனைவரும் வாங்க! சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் பதிவர் சங்கத்(குழுமத்) தமிழ் வளர்க்கலாம் நீங்க!!
கலந்துகொள்ள வரிப்பமுள்ள அனைவரும் நன்கொடை கொடுத்தே ஆக வேண்டியதில்லைங்க! நன்கொடை அளிக்காவிடினும் அதனை தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்! எனவே கவலைப்படாமல்,சந்தேகப்படாமல்,வாங்க!
வணக்கம் உலக தமிழ் வலைப்பதிவர்களே!!!!

       வருகிற அக்டோபர் மாதம் 26-ம் நாள் வலைப்பதிவர் திருவிழா மதுரையில் நடக்கவிருப்பது தாங்கள் அறிந்ததே. இவ்விழாவை இனிதே சிறப்பிக்க தங்கள் வருகையை உறுதி செய்த பதிவர்களின் முதல் பட்டியல் கடந்த பதிவில் வெளியிட்டு இருந்தோம். இன்றைய தேதியில் வருகையை உறுதி செய்த பதிவர்களின் எண்ணிக்கை நூறைத் தொட்டுள்ளது. அதனடிப்படையில் இரண்டாவது பட்டியல் இப்பதிவில் வெளியிடப்பட்டுள்ளது. 


இதுவரை தங்கள் வருகையை உறுதி செய்த பதிவர்கள் பெயர் இப்பட்டியலில் விடுபட்டு இருந்தால்?.....
 
தமிழ்வாசி பிரகாஷ் - thaiprakash1@gmail.com
திண்டுக்கல் தனபாலன் - dindiguldhanabalan@yahoo.com
பால கணேஷ் - bganesh55@gmail.com
ஆகியோரில் ஒருவருக்கு தொடர்பு கொண்டு தங்களின் பெயரை இணைத்து வருகையை உறுதி செய்யுங்கள். 

****************************************************

பதிவர்கள் இதுவரை தங்கள் வருகையை உறுதி செய்யாமல் இருந்தால் கீழ்கண்ட தளங்களில் ஏதேனும் ஒரு தளத்தில் சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பி தங்களின் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள். 







பதிவர் விழா சிறப்புற நடைபெற உங்களின் வருகைபதிவு மிக அவசியமாகிறது. 


****************************************************

நன்கொடை:
கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற, விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூல் செய்ய மதுரை சந்திப்பு விழா நிர்வாக குழுவினரால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் நன்கொடை அளிக்க விருப்பமுள்ள பதிவர்கள் கீழ்கண்ட இணைப்பில் உள்ள வங்கி கணக்கு விவரங்கள் மூலம் அனுப்பலாம்.

 
அன்பார்ந்த உலக தமிழ் வலைப்பதிவர் நண்பர்களே.... வணக்கம்...

கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் பதிவர் சந்திப்பு உங்களின் பேராதரவோடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாக தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரையில் வருகிற அக்டோபர் மாதம் 26-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இது பற்றிய முதல் பதிவை இங்கு காணலாம். ஆகையால்,


கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற, விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூல் செய்ய மதுரை சந்திப்பு விழா நிர்வாக குழுவினரால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பதிவர் சந்திப்பின் நிர்வாக கணக்குகள் பதிவர் தமிழ்வாசி பிரகாஷ் வங்கி கணக்கு மூலம் பயன்படுத்தி வருகிறோம்.

நன்கொடை வழங்க விருப்பமுள்ள பதிவர்கள் கீழ்கண்ட வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தலாம். பணத்தை செலுத்திய பின்பு தங்களுடைய பணம் செலுத்தப்பட்ட விபரங்களையும், தங்களின் சுயவிவரங்களையும் (வலைப்பூ முகவரி/பெயர், தொடர்பு மின்னஞ்சல் முகவரி) தமிழ்வாசி பிரகாஷ்-ன் அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள். பணம் எங்களுக்கு வந்து சேர்ந்தவுடன் தமிழ்வாசி பிரகாஷ்-ன் மின்னஞ்சலில் இருந்து "தங்களது பணத்தை வங்கிக் கணக்கில் பெற்றுக் கொண்டோம்... நன்றி" என்ற தகவல் வந்து சேரும்.

**********************************************************
வங்கிக் கணக்கு விபரங்கள்:

Name: S PRAKASH KUMAR

Account No: 847715358 (savings bank)

Bank & Branch: INDIAN BANK, TALLAKULAM BRANCH

Branch Code: 00T003

IFSC Code: IDIB000T003 

MICR Code: 625019008

Bank Address: 73, Alagar Koil Road, Tallakulam, Madurai 625002 
***********************************************************
தொடர்புக்கு:
தமிழ்வாசி பிரகாஷ் - 9080780981
thaiprakash1@gmail.com

பதிவு செய்தவர்களின் பட்டியல்:

. எண்
பதிவர் பெயர்
வலைப்பூ முகவரி
ஊர்
1
சிதம்பரம் என்ற சீனா
மதுரை
2
தமிழ்வாசி பிரகாஷ்
மதுரை
3
பொன். தனபாலன்
திண்டுக்கல்
4
கவிஞர். திருமலை சோமு
சென்னை
5
பகவான்ஜி
மதுரை
6
பாலகணேஷ்
சென்னை
7
கவியாழி
சென்னை
8
சத்தியன் சிவகுமார்
மதுரை
9
சங்கர இராமசாமி
அம்பத்தூர்
10
செல்வின்
சென்னை
11
சேட்டைக்காரன்
சென்னை
12
சசிகுமார்
சென்னை
13
ஜீவானந்தம்
கோவை
14
சித்தூர்.முருகேசன்
சித்தூர் - ஆந்திரா
15
கருப்பணன்
karuppanan
அலகாபாத்
16
நா.முத்துநிலவன்
புதுக்கோட்டை
17
சுரேஷ்குமார்
பெங்களுர்
18
பாலாஜி
சென்னை
19
மு.கீதா
புதுக்கோட்டை
20
கா..கல்யாணசுந்தரம்
சென்னை
21
முருகன்
அருப்புக்கோட்டை
22
கருண் குமார்
திருவள்ளூர்
23
யானைக்குட்டி
திருநெல்வேலி
24
கோவை ஆவி
கோவை
25
செல்வி ஷங்கர்
மதுரை
26
வியபதி (சபாபதி)
சென்னை
27
இராய செல்லப்பா
சென்னை
28
முகமது நவாஸ்கான்
கீழக்கரை
29
கரந்தை ஜெயக்குமார்
தஞ்சாவூர்
30
கேபிள் சங்கர்
சென்னை
31
பட்டிகாட்டான் ஜெய்
சென்னை
32
.வரதராஜபெருமாள்
கொமரபாளையம்
33
திலிப் நாராயணன்
பெல்லாரி
34
J. நிஷா
பெங்களூர்
35
புலவர் ராமானுஜம்
சென்னை
36
மதுமதி
சென்னை
37
வெங்கட் நாகராஜ்
புதுடில்லி
38
.கோகுல்
புதுச்சேரி
39
விமலன்
விருதுநகர்
40
ஆர்.வி.சரவணன்
சென்னை
41
முனைவர் துரை.மணிகண்டன்
தஞ்சாவூர்.
42
துளசி கோபால்
நியுசிலாந்து
43
விஜயன் துரை
ராமேஸ்வரம்
44
சி.வெற்றிவேல்
சாளையக்குறிச்சி
45
சரவணன்
சென்னை
46
கவி. செங்குட்டுவன்
ஊத்தங்கரை
47
விஜய நரசிம்மன்
மதுரை
48
சபி
தஞ்சாவூர்
49
சம்பத் குமார்
கம்பம்
50
முனைவர் நா.சிவாஜி கபிலன்
தஞ்சாவூர்
51
அரசன்
அரியலூர்
52
ரூபக் ராம்
சென்னை
53
தி தமிழ் இளங்கோ
திருச்சி
54
வெ.கோபாலகிருஷ்ணன்
சிதம்பரம்
55
.ரா.சங்கரலிங்கம்
திருநெல்வேலி
56
அகிலா
கோவை
57
கோவிந்தராஜ்.வா
மதுரை
58
பொய்யாமொழி
ராமநாதபுரம்
59
அறிவு விக்னேஷ்குமார்
ராமநாதபுரம்
60
சிவபார்க்கவி
திருச்சி
61
வஹாப் ஷாஜஹான்
திருமங்கலம்
62
நவாஸ்
திருவனந்தபுரம்
63
நக்கீரன்.ஜெ
சிதம்பரம்
64
சைதை அஜீஸ்
சென்னை
65
பரமேஸ்வரன்.C
சத்தியமங்கலம்
66
ரஞ்சனி நாராயணன்
பெங்களுர்
67
மணவை ஜமாஸ்
manavaijamestamilpandit.blogspot.in
மணப்பாறை
68
சீனு
www.seenuguru.com
சென்னை
69
துளசிதரன், கீதா
http://thillaiakathuchronicles.blogspot.com/
பாலக்காடு
70
வெளங்காதவன்
http://velangaathavan.blogspot.in
பொள்ளாச்சி
71
மகேந்திரன் பன்னீர்செல்வம்
http://www.ilavenirkaalam.blogspot.com
தூத்துக்குடி
72
பாலசுப்பிரமணியன்
http://www.vitrustu.blogspot.in
சென்னை
73
.தமிழ்ச்செல்வன்
http://indrayavanam.blogspot.in/
திருமங்கலம்
74
சசிகலா
www.veesuthendral.blogspot.in
முடிச்சூர்
75
இராஜசேகரன்
http://nanduonorandu.blogspot.com
ஈரோடு
76
உலகசினிமா ரசிகன்
http://worldcinemafan.blogspot.in/
கோவை
77
பழனி.கந்தசாமி
http://swamysmusings.blogspot.com/
கோயமுத்தூர்
78
அல்பின்சன்
http://albinsonjg.blogspot.in/
நாகர்கோயில்
79
சிவகுமார்
asiriyarvoice.blogspot.in
தொழுதூர்
80
கில்லர்ஜி
www.killergee.blogspot.com
அபுதாபி
81
பாண்டியன்
http://pandianpandi.blogspot.com/
மணப்பாறை
82
ருக்மணி ஷேசாயி
chuttikadhai.blogspot.com
சென்னை
83
ஓவியர் முத்துக்கிருஷ்ணன்
anupostcardmagazine.blogspot.com
சிவகங்கை
84
ராஜா
www.kingmedias.blogspot.com
பழனி
85
பா.ஜம்புலிங்கம்
http://drbjambulingam.blogspot.in/
தஞ்சாவூர்
86
அருண்
chinnathambiRun.blogspot.com
மதுரை
87
பிரபு கிருஷ்ணா
http://karpom.com/
பெங்களுர்
88
சிவகுமாரன்
http://sivakumarankavithaikal.blogspot.in/
சிவகங்கை
89
ஜீவன் சுப்பு
www.jeevansubbu.blogspot.com
திருப்பூர்
90
செ.சுவாதி
www.swthiumkavithaium.blogspot.com
புதுக்கோட்டை
91
அருண் [ ஆளுங்க]
http://www.aalunga.blogspot.com/
நெல்லை
92
ரீகன் ஜோன்ஸ்
http://www.tamilpriyan.com/
விழுப்புரம்
93
இராம்கரன்
http://www.tamiljatakam.blogspot.com
மதுரை
94
கவிதைவீதி சௌந்தர்
http://kavithaiveedhi.blogspot.com/
திருவள்ளூர்
95
பால கணேசன்
http://koodalbala.blogspot.com/
கூடன்குளம்
96
ராஜேஷ்
www.rajeshvravanappan.blogspot.in
திருப்பூர்
97
வலிப்போக்கன்
http://valipokken.blogspot.com
மதுரை
98
அனந்து
http://pesalamblogalam.blogspot.in
சென்னை
99
மின்சார சிவா
www.minsaaram.blogspot.in
மதுரை
100
ஜோதிஜி திருப்பூர்
திருப்பூர்
101
ரமணி
மதுரை
102
சுவாதி
புதுக்கோட்டை
103
இரா.எட்வின்
பெரம்பலூர்
104
சிவா
மதுரை
105
அன்பே சிவம்
வேலூர்



வலைப்பதிவர் விழா நிர்வாகக் குழு - மதுரை
 
       விழா சிறக்க வாழ்த்தும் 
அன்பன்
 பரமேஸ்வரன்.சி. 
ஓட்டுநர்-
சத்தியமங்கலம்.

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...