மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
மோட்டார் வாகன இன்ஷூரன்ஸினால் நன்மைகள் என்ன?
‘நான்தான் நிறுத்தி நிதானமாக வண்டி ஓட்டுகிறவனாச்சே… என்னோட
வாகனத்துக்கு எதுக்கு இன்ஷூரன்ஸ்?” என்று கேட்பவர்கள் நிறைய! இந்த எண்ணம்
தவறானது. நீங்கள், சாலையில் நிதானமாகச் செல்பவராக இருக்கலாம். ஆனால்
எதிரே, பின்னால், முன்னால், பக்கவாட்டில் என அனைத்து திசைகளிலிருந்தும்
வரும் வாகன ஓட்டிகளும் நிதானமாக வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
சாலையில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்பதால், மோட்டார் இன்ஷூரன்ஸ் 101% அவசியம். உங்கள்
வாகனம் விபத்தில் சிக்கி சேத மானால், திருடு போனால், பயணிகள்
உயிரிழந்தால், பாதசாரிகள் பாதிக்கப்பட்டால் உங்களை பொருட் சேதத்திலிருந்து
பாதுகாப்பதாக இந்த மோட்டார் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. மேலும், உங்கள்
வாகனம் மோதி இதர வாகனம், சொத்துகள் பாதிப்புக்கு உள்ளாகும்போதும் இன்ஷூ
ரன்ஸ் கை கொடுக்கிறது. மேலும், இன்ஷூரன்ஸ் நமக்கு என்னெ ன்ன நன்மைகள்
அளிக்கின்றன? எப்படியெல்லாம் இதைப் பயன்படுத்த முடியும் என்பதைப்
பார்ப்போம்.
இன்ஷூரன்ஸ் கட்டாயம்! சாலைகளில் ஓடும் வாகனங்கள் அனைத்துக்கும்
மோட்டார் இன்ஷூரன்ஸ் கட்டாயம் எடுத்திருக்க வேண்டும் என்பது சட்டம்.
வாகனம் ஓட்டும்போது, ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ் போன்றவை
கட்டாயம் இருக்க வேண்டும். கூடவே, இன்ஷூரன்ஸ் பாலிஸி சான்றிதழின் நகலையும் வைத்திருக்க வேண்டும். எங்கே பாலிஸி எடுப்பது? புதிய
வாகனமாக இருந்தால், ஷோரூமிலேயே பாலிஸி எடுப்பது குறித்த விவரம் சொல்வார்கள். உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் அருகிலுள்ள இன்ஷூரன்ஸ் நிறுவ
னத்துக்கு நேரில் சென்று பாலிஸி எடுத்துக் கொள்ளலாம். கூடவே வாகனத்தையும் எடுத்துச் சென்றால் வேலை சுலபமாக முடிந்துவிடும். பாலிஸியில்
உங்கள் பெயர், முகவரி, வாகனத்தின் பதிவு எண், இன்ஜின் மற்றும் சேஸிஸ் எண்கள்
போன்றவை பாலிஸி சான்றிதழில் சரியாக இருக்கிறதா என்று பாலிஸி எடுக்கும்போதே
சரி பார்த்துக் கொள்ள வேண்டும். தவறு இருந்தால், உடனே அதைத் திருத்தச்
சொல்ல வேண்டும். திருத்தப்பட்ட இடத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலக
முத்திரை இருக்க வேண்டியது அவசியம். அதேபோல, இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின்
ஆவணங்களிலும் அந்த மாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் கிளைம்
செய்யும்போது சிக்கல் வரும்.
பாலிஸி வகைகள் மோட்டார் வாகன பாலிஸிகள் இரு வகைகள் உள்ளன.
ஒன்று
நம் வாகன பாதிப்புக்கு, (அதாவது ஓன் டேமேஜ்)… அடுத்து நம் வாகனத்தால்
மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு (அதாவது தேர்ட் பார்ட்டி
இன்ஷூரன்ஸ்). மூன்றாம் நபர் பாலிஸி நம்முடைய
வாகனம் மோதி, யார் என்றே தெரியாத மூன்றாம் நபர் காயமடைந்தாலோ,
உயிரிழந்தாலோ அல்லது அவர்கள் ஓட்டி வந்த வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டாலோ
இழப்பீடு கொடுப்பது நமது கடமை. இந்த இழப்பீட்டை வழங்க பலருக்கு வசதி
வாய்ப்பு இருக்காது.
சிலருக்கு வசதி இருந்தாலும் கொடுக்க மனது இருக்காது. இது போன்ற நிலையில்
கை கொடுப்பது தான் மூன்றாம் நபர் பாலிஸி (Third Party Insurance அல்லது Act
Only Policy). இதன்படி, பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு இன்ஷூரன்ஸ்
நிறுவனமே இழப்பீட்டை வழங்கி விடும். வாகன ஓட்டிகள் இந்த பாலிஸி எடுப்பது
கட்டாயமாக்கப்பட்டு இருக்கி றது. தனி நபர் பாலிஸி
‘மூன்றாம்
நபருக்கு மட்டும்தான் இன்ஷூரன்ஸ் பாதுகாப்பா? வாகனத்தை ஓட்டும் எனக்கு
இல்லையா’ என்று கேட்டால், அதற்கு தனி நபர் விபத்து பாலிஸி என ஒன்று
இருக்கிறது. அதாவது, வாகனத்தின் உரிமையாளர் விபத்தில் உயிர் இழந்தாலோ
அல்லது கை, கால் போன்ற உறுப்புகளை இழந்தாலோ இழப்பீடு வழங்குவதுதான் இந்த
தனி நபர் விபத்து பாலிஸி. இது, மூன்றாம் நபர் பாலிஸியோடு துணை பாலிஸியாகச்
சேர்த்து எடுக்கலாம். ஆனால், இதற்குச் சற்று கூடுதல் பிரீமியம் செலுத்த
வேண்டும்.. மூன்றாம்
நபர் பாலிஸி எடுத்திருக்கும்போது, உங்கள் வாகனம் மோதி யாருக்காவது
பாதிப்பு ஏற்பட்டால், உங்கள் சொந்தப் பணத்தை இழப்பீடு கொடுக்காதீர்கள்.
‘இவ்வளவு நஷ்டஈடு தருகிறேன்’ என்று யாருக்கும் வாக்குறுதி தராதீர்கள்.
மேலும், மூன்றாம் நபருக்கு எந்த இழப்பீடு தருவதாக இருந்தாலும், இன்ஷூரன்ஸ்
நிறுவனத்தைக் கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள். மூன்றாம் நபரின்
சொத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கு அதிகபட்சம் 6,000 ரூபாய் மட்டும்தான்
இழப்பீடு உண்டு. கூடுதல் பிரீமியம் கட்டுவதன் மூலம் இதனை ஒரு லட்ச ரூபாயாக
(இரு சக்கர வாகனம்), அல்லது 7.5 லட்ச ரூபாயாக (கார்) அதிகரித்துக் கொள்ள
முடியும். கவரேஜ் தேர்ட்
பார்ட்டி பாலிஸியில் எவையெல்லாம் கவர் செய்யப்பட்டு இருக்கிறது? தேர்ட்
பார்ட்டி பாலிஸி எடுத்திருப்பவரின் வாகனம் மோதி மூன்றாம் நபர்களுக்கு
ஏற்படும் கீழ்க்கண்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு உண்டு. இறப்பு உடல் காயம் சொத்துகளுக்குச் சேதம் வழக்கு செலவு மற்றும் கிளைம் கோருவதற்கான செலவு. ஓன் டேமேஜ் பாலிஸி – சுய பாதிப்பு விபத்து
என்று மட்டுமில்லாமல் மழை – வெள்ளம், தீ, திருட்டு என்று எந்த வடிவத்தில்
வாகனத்துக்குச் சேதம் நிகழ்ந்தாலும், அந்தப் பாதிப்புக்கு இழப்பீடு
கிடைக்க வழி செய்வதுதான் ஓன் டேமேஜ் பாலிஸி (Own Damage Policy). இது
கட்டாயமாக்கப்படவில்லை என்பதால், இதனை எடுப்பவர்கள் மிகக் குறைவு. இந்த
பாலிஸியில் தீ விபத்து, குண்டு வெடித்தல், வாகனம் தானே தீப்பற்றிக்
கொள்ளுதல், மின்னல் தாக்குதல், கொள்ளை, கலவரம் மற்றும் போராட்டம், பூகம்பம்
(தீ மற்றும் நில அதிர்வால் சேதம்), வெள்ளம்,
புயல், தீவிரவாத செய ல்களாலும் சாலை, ரயில், கப்பல், விமானம், லிஃப்ட்,
எலிவேட்டர் போன்றவற்றில் எடுத்துச் செல்லும்போது சேதம் அடைந்தாலும், நிலம்
மற்றும் பாறை சரிவு போன்ற காரணங்களாலும் வாகனத்துக்கு ஏற்படும்
பாதிப்பு/சேதத்துக்கு இழப்பீடு வழங்கப்படும். சுருக்கமாகச் சொன்னால்,
தேர்ட் பார்ட்டி இன் ஷூரன்ஸ் – வாகனத்தின் மூலம் பிறருக்கு ஏற்படும்
இழப்பையும், ஓன் டேமேஜ் பாலிஸி – வாகன உரிமையாளருக்கு ஏற்படும்
நஷ்டத்தையும் ஈடு செய்யும் விதமாக அமையும். ஒருங்கிணைந்த பாலிஸி மேற்கண்ட இரு வகையான பாலிஸிகளின் பலன்களை ஒருசேரத் தருவது ஒருங்கிணைந்த பாலிஸி. அதாவது (Comprehensive policy), விவரம் தெரிந்த வாகன ஓட்டிகள் அனைவரும் எடுக்கும் பாலிஸியாக இது இருக்கிறது. பிரீமியம் எப்படி நிர்ணயிக்கிறார்கள்? மோட்டார்
இன்ஷூரன்ஸில் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் பிரீமியம்
நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக, வாகனத்தின் திறன் (Cubic Capacity), மாடல்
(உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டு), காரின் பயன்பாடு, ஓட்டப்படும் பகுதி,
பாலிஸிதாரர் இதற்கு முன் கிளைம் செய்த விவரம், இன்ஷூரன்ஸ் தொகை, பிராண்ட்
மதிப்பு (குறிப்பாக, வாகனத்தின் மறுவிற்பனை விலை) போன்றவற்றைப் பொறுத்து
பிரீமியம் அமையும். தேர்ட் பார்ட்டி பாலிஸி மூன்றாம்
நபர் பாலிஸிக்கான பிரீமியம், வாகனத்தின் செயல் திறனைப் பொறுத்து அமையும்.
இரு சக்கர வாகனங்களுக்கு 250 சிசி-க்குக் கீழ் மற்றும் 250 சிசி-க்கு மேல்,
கார்களுக்கு 1200 சிசி-க்குக் கீழ் மற்றும் 1200 சிசி-க்கு மேல் என்பதைப்
பொறுத்து இது அதிகரிக்கிறது. அதாவது சிசி அதிகரிக்க அதிகரிக்க பிரீமியம்
அதிகமாகும். ஓன் டேமேஜ் பாலிஸி ஓன்
டேமேஜ் பாலிஸிக்கான பிரீமியம் வாகனத்தின் சந்தை மதிப்பு மற்றும்
வாகனத்தின் செயல் திறனைச் சார்ந்திருக்கும். இதிலும், சிசி அடிப்படையில்
பிரீமியம் மாறுபடும். இந்த பாலிஸியில் வாகனத்துக்கு ஏற்படும் சேதம் தவிர,
வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவர்களையும்கூட கூடுதலாக பிரீமியம்
செலுத்தி ‘கவர்’ செய்ய முடியும். போதுமான இன்ஷூரன்ஸ் என்பது எது? போதுமான
அளவுக்கு இன்ஷூரன்ஸ் இருந்தால்தான் கிடைக்கின்ற இழப்பீட்டுத் தொகை,
பாதிப்பை ஈடு செய்வதாக இருக்கும். அதே சமயம், அதிக தொகைக்கு இன்ஷூரன்ஸ்
எடுத்தால், தேவையில்லாமல் அதிகமாக பிரீமியம் கட்ட வேண்டியது வரும். அதே
நேரத்தில், பிரீமியத் தொகைக்குப் பயந்து குறைவான தொகைக்கு பாலிஸி
எடுத்தால், பாதிப்பு ஏற்படும்போது, குறைவான தொகைதான் இழப்பீடாகக்
கிடைக்கும். அப்போது கையிலிருந்து பணம் போட்டுச் செலவழிக்க வேண்டிய நிலை
ஏற்படும். எனவே, சரியான அளவு இன்ஷூரன்ஸ் செய்வது 100 சதவிகிதம் அவசியம்.
கிட்டத்தட்ட வாகனத்தின் மார்க்கெட் மதிப்புக்கு பாலிஸி எடுப்பதுதான் சரியாக
இருக்கும். புதிய
வாகனத்தின் பிரீமியம் அதன் ஷோ ரூம் விலையைச் சார்ந்து இருக்கும். பழைய கார்
என்கிறபோது, ‘ஐ.டி.வி’ (IDV – Insured’s Declared Value) என்ற மதிப்புக்கு
எடுத்துக் கொள்ளலாம். வாகனத்தின் சந்தை மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து
கொண்டே வரும். இந்தச் சந்தை மதிப்புதான், அதிகபட்ச இழப்பீடு தொகையாக
இருக்கும். எனவே, ‘ஒருவர் தேர்ந்தெடுக்கும் இன்ஷூரன்ஸ் தொகை – ஐ.டி.வி –
வாகனத்தின் சந்தை மதிப்பு’ ஆகிய மூன்றும் ஒன்றாக இருப்பதுதான் சரி. ஐ.டி.வி தேய்மானம் எவ்வளவு? கார்
வாங்கும் அனைவரும் அதனைச் சரியாகப் பராமரித்து வருவார்கள் என்று சொல்ல
முடியாது. இதனால், வாகனத்தின் தேய்மானம் ஒவ்வொரு வாகனத்துக்கும் வேறுபடும்.
என்றாலும் தோராயமாகக் கணக்கிட வேண்டும் என்றால், வாகனத்தின் ஐ.டி.வி
தேய்மானத்தைக் கீழ்க்கண்டவாறு வைத்திருக்கிறார்கள். ரப்பர்,
நைலான், பிளாஸ்டிக் பாகங்கள், டியூப் மற்றும் பேட்டரிகளுக்கு 50
சதவிகிதம், ஃபைபர் கிளாஸ் பாகங்கள் 30 சதவிகிதம், கண்ணாடிப்
பொருட்களுக்குத் தள்ளுபடி இல்லை. மேற்கண்ட விகிதத்தில் தேய்மானம்
கழிக்கப்பட்டு மீதியுள்ள தொகைக்குத்தான் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும். அதிக
பாதுகாப்புடன் ஓட்டுபவருக்குக் குறைவான பிரீமியமும், கவனக்குறைவாக ஓட்டி
விபத்தை ஏற்படுத்துபவருக்கு அதிக பிரீமியமும் வசூலிக்கப்படும். ரேஸ¨க்குத் தனி இன்ஷூரன்ஸ்! சாதாரண பாலிஸியை எடுத்துவிட்டு, மோட்டார் சைக்கிள் அல்லது கார்
பந்தயங்களில் பங்கேற்று சேதம் ஏற்பட்டால், இழப்பீடு கிடைக்காது.
பந்தயங்களில் கலந் து கொள்பவர்கள் அதற்கென இருக்கும் தனி பாலிஸியை
எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும். அனாமத்து வாகனம் மோதினாலும் இழப்பீடு! சாலையில்
செல்பவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பாதிக்கப்பட்டால்
இழப்பீடு வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு ‘சோலடிம் ஃபண்ட்’ (Solatium
Fund) என்ற நிதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான பிரீமியத்தில் 70
சதவிகிதம் இந்திய பொது காப்பீடு கழகம் கொடுக்கிறது. மீதியை மத்திய மாநில
அரசுகள் செலுத்துகின்றன. இதன்படி மரணம் என்றால் 25 ஆயிரம் ரூபாயும், உடல்
உறுப்புகளை இழந்தால் அல்லது படுகாயம் அடைந்தால் 12,500 ரூபாய் இழப்பீடும்
வழங்கப்படுகின்றன. இந்தியாவில் பிரீமியம் குறைவு! தற்போது
இந்தியாவில் ஒரு வாகனத்துக்கு மோட்டார் இன்ஷூ ரன்ஸ் எடுக்க, அதன் மொத்த
விலையில் 3 சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் செலவாகிறது. சர்வதேச அளவில்
அது 5 சதவி கிதமாக இருக்கிறது.2009-ல்
இந்திய மோட்டார் இன்ஷூரன்ஸ் சந்தையில் எஸ்.பி.ஐ, ஐ.ஏ.ஜி நிறுவனத்துடன்
இணைந்து கூட்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்க இருக்கிறது. இது தவிர, ரஹேஜா
க்யூ.பி.இ, யுனிவர்சல் சாம்போ போன்ற நிறுவனங்களும் இந்தியச் சந்தையில் களம்
இறங் குகின்றன. இதனால், மோட்டார் பாலிஸிகளுக்கான பிரீமியம் இன்னும்
குறையலாம். தற்போது
மோட்டார் பாலிஸிகள் ஆன் லைன் மூலம் அதிக எண்ணிக்கையில் விற்பனை
செய்யப்படுவதால், பல நிறுவனங்கள் போ ட்டி போட்டுக் கொண்டு பிரீமியத்
தள்ளுபடி அளிக்கின்றன. இதனாலும் பிரீமியம் குறைக்கப்படலாம். வாகன விற்பனை
தேக்கம் ஏற்ப ட்டிருப்பதால், வாகன உற்பத்தியாளர்கள், ‘இன்ஷூரன்ஸ் இலவசம்’
என்று வாடிக்கையாளர்களைக் கவரும் நிலை தொடரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது! கூடுதல் கவரேஜ்! வாகனத்தை தவிர, அதிலுள்ள ஸ்டீரியோ செட், ஏ.ஸி போன்றவற்றையும் கூடுதல் பிரீமியம் செலுத்தி இன்ஷூரன்ஸ் செய்து கொள்ளலாம்! தவணையில் பிரீமியம்? ஆயுள்
இன்ஷூரன்ஸ் போல மாதம், காலாண்டு, அரையாண்டுக்கு ஒரு முறை பிரீமியம்
கட்டும் வசதி மோட்டார் இன்ஷூரன்ஸில் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே
பிரீமியம் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் பிரீமியம் செலுத்தவும்
அனுமதிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டு நிறுவனத்துக்கு தவணையில் கடனை
அடைத்துக் கொள்ளலாம். வாகனம் திருடு போனால்..! வாகனம் திருடு போய்விட்டால் முதலில் அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் பாலிஸி எடுத்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு
எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டும். காவல் நிலையத்தின் முதல் தகவல்
அறிக்கை, விசாரணை அறிக்கை போன்றவற்றை இன்ஷூரன்ஸ் நிறுவனம் கேட்டு
வாங்கிக் கொள்ளும். திருடு
போன வாகனம் கண்டு பிடிக்கப்பட்டு, அதற்கு ஏதாவது சேதம் ஏற்பட்டு
இருந்தால், அதற்கு கிளைம் உண்டு. வாகனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை
என்றால் வாகனத்தின் சந்தை விலை, ஐ.டி.வி-யைப் பொறுத்து இழப்பீடு
தருவார்கள். அதாவது, காணாமல் போன வாகனத்தின் மறுவிற்பனை விலைதான்
இழப்பீடாகக் கிடைக்கும். இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டதும், வாகனத்தின்
பதிவு எண் இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்தின் பெயரில் மாற்றப்படும். மேலும், வாகனம்
தொடர்பாக உங்களிடம் உள்ள மாற்றுச் சாவி, இதர ஆவணங்களை இன்ஷூரன்ஸ்
நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். மேலும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு
கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப் ஒட்டிய தாளில் கடிதம் ஒன்றும் எழுதிக் கொடுக்க
வேண்டும். பழைய
வாகனத்தை வாங்கி, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் உங்கள் பெயருக்கு மாற்றி
இருப்பீர்கள். அதே நேரத்தில், இன்ஷூரன்ஸை மாற்ற பலர் தவறி விடுகிறார்கள்.
இது தவறு. வாகனப் பதிவு மற்றும் இன்ஷூரன்ஸ் இரண்டும் ஒரே பெயர், முகவரியாக
இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் இழப்பீடு கிடைக்காது. ஆர்.சி
புத்தகம் மற்றும் இன்ஷூரன்ஸ் பாலிஸியில் பெயர் மாற்றிக் கொள்வது மிக மிக
அவசியம்! தவறு என்றாலும்..! சாலையில்
தவறான பாதையில் சென்று விபத்தில் சிக்கினால் அல்லது சாலை விதியை மீறி
(வேண்டும் என்றே இல்லாமல்) விபத்துக்குள்ளானாலும் கிளைம் செய்ய முடியும்.
அதற்காக, இதையே வழக்கமாகக் கொண்டிருந்தால் உங்களுக்கு அடுத்தமுறை
பிரீமியம் தொகை அதிகரிக்கப்பட்டு விடும்! பொது இன்ஷூரன்ஸ் நிறுவன ங்கள் நேஷனல் இன்ஷூரன்ஸ் ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. இ.ஆர்.இ.கோ. ஜெனரல் இன்ஷூரன்ஸ் டாடா ஏ.ஐ.ஜி. ஜெனரல் இன்ஷூரன்ஸ் பஜாஜ் அல்லயன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் ராயல் சுந்தரம் இன்ஷூரன்ஸ் இஃப்போ டோக்கியோ ஜெனரல் இன்ஷூ ரன்ஸ் மெடிக்ளைம், தனி நபர் விபத்து பாலிஸியும் அவசியம்! மோட்டார்
இன்ஷூரன்ஸில் ஒருங்கிணைந்த பாலிஸியை எடுத்திருக்கும் அதே நேரத்தில்,
விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் சூழ்நிலை வந்தால்,
அதற்குக் கை கொடுக்கும் மெடிக்ளைம் பாலிஸியை எடுத்துக் கொள்வது அவசியம்.
இதில், விபத்தின்போது பாதிப்பு ஏற்பட்டால், கிளைம் கொடுக்கும் தனி நபர்
விபத்து பாலிஸியும் ஒரு பகுதியாக இருக்கும். அதே நேரத்தில், விபத்தினால்
மரணம் அல்லது கை கால் போன்ற உறுப்புகளை இழந்து ஊனமானால் இழப்பீடு
கிடைக்கும். தனி நபர் விபத்து பாலிஸியை (Personal Accident Policy) தனியாக
எடுத்துக் கொள்வது ரொம்ப நல்லது. இந்தப் பாலிஸியை பொதுத் துறை இன்ஷூரன்ஸ்
நிறுவனங்கள் குறைந்த பிரீமியத்தில் அளித்து வருகின்றன. இவை, ‘ஜனதா தனிநபர்
விபத்து பாலிஸி’ என்ற பெயரில் வழங்கப்படுகின்றன. இந்த பாலிஸியை
எடுத்திருந்தால் உலகில் எங்கு விபத்து நடந்தாலும் இழப்பீடு உண்டு. இந்த
தனி நபர் பாலிஸியில் மூன்று வகைகள் இருக்கின்றன. விபத் தில் இறந்தால்
மட்டுமே இழப்பீடு வழங்குவது ஒரு வகை. மற்றொன்று, விபத்தில் மரணம் மற்றும்
அடிபட்டால் இழப்பீடு கிடைக்கும். கடைசியாகச் சொல்லப்பட்ட பாலிஸியில்
பிரீமியம் சிறிது அதிகம் என்றாலும், அதுதான் அதிக ஆதாயம் தருவதாக
இருக்கும். மூன்றாம் வகை, விபத்தினால் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக ஊனம்
ஏற்பட்டு, அதனால் பணிக்குச் செல்ல முடியவில்லை என்றால், அந்தக்
காலகட்டத்தில் வாரம் தோறும் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாகத் தரும் பாலிஸி.
சுமார் 100 வார காலத்துக்கு இந்த இழப்பீடு கிடைக்கும். இந்த
தனி நபர் விபத்து பாலிஸியில் மருத்துவச் செலவு மற்றும் நஷ்டத்துக்கு ஏற்ப
இழப்பீடு கொடுக்க மாட்டார்கள். விபத்து ஏற்ப ட்டால் பாலிஸியில்
குறிப்பிட்டபடி, இழப்பீட்டுத் தொகையைத் தந்துவிடுவார்கள். தனி நபர் விபத்து
இன்ஷூரன்ஸில், பாலிஸி தொகை அவரின் வருமானத்தைப் பொறுத்து இன்ஷூரன்ஸ் நிறுவ
னத்தால் நிர்ணயிக்கப்படும் என்பதால், பாலிஸிதாரர் தன்னால் பிரீமியம் கட்ட
முடியும் என்றாலும், அதிகத் தொகைக்கு பாலிஸி எடுக்க முடியாது. பொதுவாக,
ஒருவரின் ஆண்டு வருமானத்தை போல் 5-7 மடங்குக்கு இந்தப் பாலிஸியை எடுத்துக்
கொள்ள முடியும். இதை பொதுவாக 14-70 வயதினர் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக,
45-50 வயதுக்கு மேல் என்றால், மருத்துவப் பரிசோதனை அறிக்கை தேவைப்படும். ஜனதா
பாலிஸியில் அதிகப்பட்சம் ஒரு லட்ச ரூபாய்க்குத்தான் பாலிஸி எடுக்கும் நிலை
இருக்கிறது. ஆண்டு பிரீமியம் சுமார் 60-75 ரூபாய்தான். பொதுவான தனி நபர்
விபத்து பாலிஸியில் ஒரு லட்ச ரூபாய்க்கு ஆண்டு பிரீமியம் சுமார் 130-150
ரூபாய்தான். இதில் கூடுதல் தொகைக்கு பாலிஸி எடுத்துக் கொள்ளும் வசதி
இருக்கிறது. பாலிஸிதாரரின் வயது, பணியின் போது அவருக்குள்ள இடர்பாடு
போன்றவற்றைப் பொறுத்து பிரீமியம் மாறுபடும். அலுவலத்துக்குள் வேலை
பார்ப்பவரைவிட, அடிக்கடி வெளியில் சென்று வருபவருக்கு பிரீமியம் அதிகமாக
இருக்கும். யாரிடம், எப்படி புகார் செய்வது? பொதுவாக, மோட்டார் இன்ஷூரன்ஸில் இழப்பீட்டுத் தொகை குறைவாக வழங்கப் படுவது தொடர்பாகத்தான் அதி க புகார்கள் எழுகின்றன, இன்ஷூரன்ஸ்
சம்பந்தமான புகாரை, முதலில் இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்திலுள்ள கு றை தீர்ப்பு
அதிகாரியிடம் எழுத்து மூலம் கொடுக்க வேண்டும். 10-15 நாட்களில் பதில்
கிடைக்கவில்லை அல்லது பதில் திருப்திகரமாக இல்லை என்றால், இன்ஷூரன்ஸ்
நிறுவனத்தின் கோட்ட அல்லது மண்டல அலுவலகத்திலுள்ள குறை தீர்ப்பு
அதிகாரியிடம் புகார் கொடுக்க வேண்டும். அப்படியும் பிரச்னை தீரவில்லை
என்றால், இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மன் என்ற அமைப்பை தொடர்பு கொ ள்ளலாம்.
சென்னை
முகவரி: Office of the Insurance Ombudsman, Fatima Akhtar Court, 4th
Floor, 453 (old 312), Anna Salai, Teynampet, CHENNAI-600 018. Tel.:-
044-24333678/664/668 Fax:- 044-24333664 / Email:-insombud@md4.vsnl.net.in
இந்த
ஆம்புட்ஸ்மன் அமைப்பு ரூ.20 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட தனி நபர்
பாலிஸிகளுக்கான கிளைம் கொடுக்கக் கூடிய வழக்குகளை மட்டுமே எடுத்துக்
கொள்ளும். கட்டணம் எதுவும் செலுத்தத் தேவை யில்லை. தீர்ப்பு பெரும்பாலும்
மனிதாபிமான அடிப்படையில் இருக்கும். இந்த
அமைப்பு அளிக்கும் தீர்ப்பை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்று நிறைவேற்ற
வேண்டும். உங்களுக்கு இங்கும் திருப்தி இல் லை என்றால், நுகர்வோர்
நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். இதில், நீதிமன்றம் மற்றும் வக்கீல்
கட்டணம் இருக்கிறது. வழக்கு நீண்ட காலத்துக்கு இழுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக