10 நவம்பர் 2013

தொற்றாநோய்கள்-நீரிழிவு நோய்

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு வரவேற்கிறேன்.வாழ்க்கை முறையிலும்,உணவுப் பழக்கவழக்கங்களிலும்,மாற்றங்களை கொண்டுவந்து நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்.
                       நீரழிவு நோய்(Diabetes Mellitus)
         நீரிழிவு நோய் என்றால் என்ன?
 இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் நிலையேநீரிழிவு நோய் ஏற்படக் காரணமாகிறது.2நமது உடலில் சரியான அளவில் இன்சுலின் சுரக்காமல் போனாலோ,அல்லது சுரக்கப்படும் இன்சுலின் சரியாக உடலில் பயன்படுத்தப்படாமல் போனாலோ நீரிழிவு நோய் ஏற்படும்.3இன்சிலின் என்பது நமது உடலில்,வயிற்றின் நடுப்பகுதியில் உள்ள கணையம் என்னும் நாளமில்லா சுரப்பி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.இதுதான் நமது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் சர்க்கரையை எடுத்துச்சென்று அதை ஆற்றலாக (சக்தியாக) மாற்றித்தர உதவி செய்கிறது.4இன்சுலின் உடலில் சரியாக சுரக்காதபோதோ அல்லது சுரக்கப்பட்ட இன்சுலின் செயல்பாடின்றி போனாலோ நமது உடலில் சர்க்கரையை எடுத்து செல்லும் பணி நடக்காமல் போய் விடுகிறது.அதனால் உடலில் சர்க்கரை தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டு அதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி சிறுநீரில்கூட வெளியேறலாம்.அதனால் உடலுக்கு தேவையான அளவு சக்தி கிடைக்காமல் உடல் சோர்வுறுகிறது.
    
                    நீரிழிவு நோய்க்கான காரணிகள் இருவகை;-
 மாற்ற இயலாத காரணிகள் &மாற்றக்கூடிய காரணிகள்.
  (அ) மாற்ற இயலாத காரணிகள்
(1)வயது வயது அதிகரிப்பதற்கு ஏற்ப இந்நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
(2)பாலினம்-ஆண் மற்றும் பெண் என வேறுபாடின்றி சமமாக பாதிக்கின்றனர்.
(3)குடும்ப பின்னணி-குடும்பத்தில் இரத்த சம்பந்தமுடைய உறவினர் யாருக்காவது நீரிழிவு நோய் இருந்தால் குறிப்பாக தாய்,தந்தை,மகன்,மகள்,சகோதர.சகோதரிகள்.
(4)மரபியல் காரணங்கள்,
(5)கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் இருந்தால்
                                 தவிர்க்கவேண்டியவைகள்;-
 புகையிலை மற்றும் புகை பிடித்தலை தவிர்க்கவேண்டும்.
2வாழ்க்கை நடைமுறையில் உடல் உழைப்பு &உடல் பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும்.
3எண்ணெயில் பொரித்த கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைத்தல்.
4தனிநபர்களுடைய உடல் எடை மற்றும் பருமனை குறைத்தல்.
5வாழ்க்கை நடைமுறை மாற்றத்திற்கான ஆலோசனைகள்(Counselling on Life Style Modification)
தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி.
மன அழுத்த சூழலை தவிர்த்தல்.
தினசரி உணவில் குறைவாக எண்ணெய் பயன்படுத்துதல் ஒரு நபருக்கு எண்ணெய் மாதம் ஒன்றிற்கு400மில்லிக்குள் பயன்படுத்த வேண்டும்.
ஒரு நாளைக்கு உப்பு (ஒரு டீஸ்பூன் அளவு) ஐந்துகிராம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்,சிறுநீரகம்,இருதயம்,நரம்பு,கால் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
உயரத்திற்கேற்ற எடையை பராமரித்தல் 
சுறுசுறுப்பாக செயல்படுவதை அதிகரித்தல்.
அதிக உண்ணுவதையும்,அதிக எடையையும் தவிர்த்தல்,
பருவகாலங்களில் கிடைக்கும் காய்கறிகள்,பழங்களை அதிகமாக சாப்பிடுதல் 
பழங்கள்,காய்கறிகள் அதிகமாக சாப்பிடுவதால் தேவையற்ற கொழுப்பு சத்து குறைகிறது.இரத்தக்குழாய்களில் கொழுப்பு சேராமல் பாதுகாக்கிறது.
 வனஸ்பதி எண்ணெயில் அதிக கொழுப்பு நிறைந்துள்ளதால் அதை உணவுப்பொருட்களில் தவிர்ப்பது நல்லது.எல்லா வகை எண்ணெயிலும் கொழுப்பு உள்ளது.
 அதிக கலோரி ஆனால் ஊட்டச்சத்து குறைவாக உள்ள பொருட்கள் ஆரோக்கியமற்ற உணவுகள் ஆதலால் அவைகளைதவிர்க்க வேண்டும்.
உதாரணம்-வடை,பஜ்ஜி,போண்டா,சமோசா,பப்ஸ்,பர்க்கர்,பிட்ஸா,கேக்,ஐஸ்கிரீம்,எண்ணெயில் நன்கு பொரிக்கப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் உப்பு நிறைந்த பொருட்கள்,மிக்சர்,பக்கோடா,மிக்சர் போன்றவை.தவிரக்கவேண்டும். பழங்கள்,காய்கறிகள்,முளைகட்டிய பயிர்வகைகள்,பொட்டுக்கடலை,புட்டு,இட்லி,சுண்டல்,அரிசிப்பொரி,கொழுக்கட்டை போன்றவை சாபிடலாம்.சர்க்கரை ஜாம் பயன்படுத்துவதற்கு பதிலாக வெல்லம் பயன்படுத்தலாம்.நார்ச்சத்து உட்கொண்டால்தான் வைட்டமின்களும்,தாது உப்புக்களும் உடலுக்கு கிடைக்கும் எனவே நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
பருப்பு வகைகள்,காய்கறிகள் மறும்பழங்களில் உடலுக்கு தேவையான பொட்டாசியம் உப்பு உள்ளதால் இவற்றில் உப்பு சேர்க்காதே.உப்பிற்கு பதிலாக எலுமிச்சை,புதினா பயன்படுத்து.பொரிக்கப்பட்ட உணவு,அப்பளம்,தக்காளி சாஸ்,பதப்படுத்தப்பட்ட உணவு ஊறுகாய்,மோர்மிளகாய்,கருவாடு,ஜாம்,வேண்டாம்.மாமிசவகைகளான ஆடு,மாடு,பன்றிகளுக்கு பதிலாக தோலுரித்த கோழிக்கறி,மீன் சாப்பிடலாம்.முட்டை மஞ்சள்கரு தவிர்த்து சாப்பிடலாம்.
நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடக்கூடிய உணவுவகைகள்
 பச்சைக்காய்கறிகளான,கத்தரிக்காய்,பீன்ஸ்,கறிவேப்பிலை,பீர்க்கங்காய்,நூல்கோல்,குடமிளகாய்,வாழைப்பூ,
முட்டைக்கோஸ்,இஞ்சி,பாகற்காய்,கொத்தவரங்காய்,முருங்கைக்காய்,வாழைத்தண்டு,
சாம்பல் பூசணிக்காய்,வெங்காயம்,புடலங்காய்,காராமணி,புதினா,கோவைக்காய்,முள்ளங்கி,தக்காளி,வெண்டைக்காய்,காலிபிளவர்,கொத்தமல்லி,சுரைக்காய்,சௌசௌ,
வெள்ளரிக்காய்,கேரட் ஆகியன சாப்பிடலாம்.
கீரைவகைகள் அனைத்தும் சாப்பிடலாம்.
நீர்மோர்,சர்க்கரை போடாத பால்விடாத அல்லது பால் குறைவான காபி,தேநீர்,சூப் அருந்தலாம்.
இரு உணவு நேரங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் பசி எடுத்தால் சாப்பிடுவதற்கு உகந்த உணவுப்பொருட்களாக மோர்.தக்காளிப்பழம்,வெஜிடபுள் சூப்,வெள்ளரிக்காய்,அரிசிப்பொரி ஆகியவற்றை சாப்பிடலாம்.
சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளபோது ஒரே நாளில் சாப்பிட சாத்துக்குடி ஒன்று அல்லது பேரிக்காய் சிறியது ஒன்று அல்லது ஆப்பிள் அரைப்பழம் அல்லது தர்பூஸ் பழம் ஒருதுண்டு(100கிராம்) அல்லது கொய்யாப்பழம் அரைப்பழம் அல்லது பப்பாளி ஒரு துண்டு(100கிராம்) ஆகியன சாப்பிடலாம்.
சமையலுக்கு நல்லெண்ணெய்,சூரியகாந்தி எண்ணெய்,அரிசி உமி எண்ணெய் பயன்படுத்தலாம்.
          அசைவ உணவுகள் கோழிமுட்டை வெள்ளைக்கரு மட்டும் தினசரி இரண்டு அல்லது குழம்புமீன் இருதுண்டுகள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அல்லது தோலுரித்த கோழிக்கறி ஐம்பதுகிராம் மாதத்திற்கு ஒருமுறை மட்டும்.சேர்த்துக்கொள்ளலாம்.
சேர்த்துக்கொள்ளக்கூடிய சட்னிகளாக தக்காளி,புதினா,கொத்தமல்லி,கறிவேப்பிலை,வெங்காய சட்னி,சாம்பார்,மிளகாய்ப்பொடி சேர்க்கலாம்.
உணவில் தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்
 எல்லா கிழங்குவகைகளும்(உருளை,சேனை,கருணைக்கிழங்கு,பீட்ரூட்,வாழைக்காய்)
எல்லா இனிப்பு வகைகளும்(சர்க்கரை,வெல்லம்,கற்கண்டு,தேன்,குளுக்கோஸ்)
கேக்,சாக்லெட்,ஐஸ்கிரீம்,ஜாம்,ஜெல்லி,இனிப்பு பிஸ்கட்,பால்கோவா,
ஹார்லிக்ஸ்,போன்விட்டா,பூஸ்ட் போன்ற சக்தி தரும் பானங்கள்,
லிம்கா,ஃபாண்டா,கோகோகோலா,பழச்சாறு போன்ற குளிர்பானங்கள்,
ரெக்ஸ்,ரஸ்னா,ட்ரின்கா போன்ற டின் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள்,
வெண்ணெய்,நெய்,டால்டா,தேங்காய் எண்ணெய்,பனை எண்ணெய்
எண்ணெய் அதிகமுள்ள ஊறுகாய்,
பொரித்த உணவுப்பொருட்கள்,
மாட்டு இறைச்சி,கல்லீரல்,இதயம்,மூளை.
முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்றவைகள்,
மாம்பழம்,பலாப்பழம்,சப்போட்டா பழம்,பேரிச்சம்பழம்,உலர்ந்த பழங்கள்,(முந்திரி,பிஸ்தா,வால்நட் போன்றவை)
மது வகைகள்,
கேழ்வரகு,அரிசி,கோதுமை ஆகியவற்றை கஞ்சி,கூழ்,களி வடிவில் சாப்பிடக்கூடாது.
எருமைபால்,பால் ஏடு.மேதாமாவு,அரோரூட் மாவு,ஜவ்வரிசி,அதிக உப்பு உள்ள உணவுப்பொருட்களை தவிர்க்கவும்.புகை பிடிக்கக்கூடாது.புகையிலை பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
சாப்பிடும் நேரங்கள் மாற்றக்கூடாது.
          MEAL TIMING ARE FIXED.NO FASTING/ NO FEASTING

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக