22 ஏப்ரல் 2013

இன்று உலக புத்தக தினவிழா - 2013

 மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். 
         இன்று புத்தக தினவிழா.  கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறேன்.புத்தகத்திற்கு செய்யும் செலவு,நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கான முதலீடு.வாசிப்பை ஊக்கப்படுத்துவோம்.சமூகம் சார்ந்த நல்ல கருத்துக்களை,நிகழ்வுகளை,எண்ணங்களை,எதிர்பார்ப்புகளை,சீரழிவுகளை,சிறுகதைகள் எழுதலாம்.நாடகங்கள் எழுதலாம்.கவிதைகள் எழுதலாம்.
        எழுதும் கதைகள்.....
 (1) வாசகரை கற்பனை செய்ய வைக்க வேண்டும்.
(2) வாசகருக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எழுத்துநடை அமைய வேண்டும்.
(3)வாசகர் கதையைப் படிக்கும்போதே வியப்பும்,வேகமும் உண்டாகும் வகையில் எழுத வேண்டும்.
(4)கதையைப் படிக்கும்போது பலவாறாக யூகித்து வாசகரின் எண்ண ஓட்டங்கள் சுறுசுறுப்பாக இயங்கும் வகையில் புனைந்தபடி அதாவது அப்படி இருக்குமா? இப்படி இருக்குமா? என்ன ஆகும்? என்ற திகைப்புடன் வாசிக்கும் வகையில் எழுத வேண்டும்.
(5)எதுகை,மோனை,உவமை,நகைச்சுவை, கருத்துகள், எதிர்பார்ப்பு,ஆர்வம்,திருப்பம்,எளிதில் புரிதல்,பேச்சுத்தமிழ், என படிக்கும்போதே ஆர்வம் மேலோங்கி இன்பம் அடையும் வகையில் எழுத வேண்டும்.
(6) வாசகர் கதையை எப்படி யூகிப்பார்? என்று கதை ஆசிரியரே ஒரு முடிவு செய்து அதற்கு மாறான போக்கில் திருப்பத்துடன்  கதையை முடிக்க வேண்டும்.
(7) சமூகத்தின் கருத்துக்களையும்,நம்பிக்கைகளையும் வலியுறுத்தும் பொருட்டு கதை அமைக்க வேண்டும்.
(8) கதை எழுதுவதற்கு முன்னதாக சிறந்த சிறுகதைகள் சிலவற்றை பலமுறை படித்து கதையின் கட்டமைப்பை நுணுக்கமாக ஆராய்ந்து குறிப்பெடுத்து அதன்வழி எழுதப் பழகலாம்.
 கதையின் அம்சங்களாக கதாபாத்திரங்கள்,எதிர்கதாபாத்திரங்கள்,கதைக்களம்,கதை முடிச்சு,திருப்பம்,என அமைத்துப் பழகிவிட்டால் கதை சிறப்பாக அமையும்.

 கதை எழுத ஆர்வமுள்ளவர்கள் முயற்சிக்கலாமே!. 
   வாழ்த்துக்களுடன்......
    சி.பரமேஸ்வரன்
  அரசுப்பேருந்து ஓட்டுநர்,
 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,
தாளவாடி கிளை. 
 ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...