01 ஜனவரி 2013

01-ஜனவரி-2013 வாழ்க்கை வாழ்வதற்கே! குடிபோதையில் வாகனத்தை இயக்காதீர்!!

 அன்பு நண்பர்களே,
         வணக்கம்.
               உலக வரலாற்றில் மனித சமூகத்தை அச்சுறுத்தி வரும் உயிரிழப்பு விபத்துக்களை தவிர்க்க முதல் நாளான இன்று 01-ஜனவரி-2013-காலை பத்து மணிக்கு தாளவாடி கவல்நிலையம் முன்பு  மரியாதைக்குரிய காவல்துறை உதவி ஆய்வாளர் -தாளவாடி அவர்கள்  இள வயது வாகன ஓட்டுனர்களுக்கான அறிவுரைகளான ''குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது! எனவும் அதனால் ஏற்படும் இழப்புகள் மற்றும் துன்பங்கள் பற்றியும் விழிப்புணர்வுப்பிரச்சாரம் செய்து  வாழ்க்கையின் முக்கியத்துவத்தினை எடுத்துக்கூறி துவக்கி வைத்தார்.. 





 மரியாதைக்குரிய- காவல்துறை உதவி ஆய்வாளர் - தாளவாடி, அவர்கள், இள வயது ஓட்டுனர்களுக்காக குடிபோதையின் தீங்குகள் பற்றியும் சாலைப்பாதுகாப்பு பற்றியும் உரை நிகழ்த்திய காட்சி.


 மரியாதைக்குரிய  A.P.ராஜு , செயற்குழு உறுப்பினர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மையம்.அவர்கள், 
       சாலை விபத்தும்,பாதிப்பும்,சாலைப்பாதுகாப்பு அவசியம் என  இளைஞர்கள் உயிரிழப்பு,சமுதாயப்பேரிழப்பு. பற்றிய விழிப்புணர்வு உரை நிகழ்த்திய காட்சி.




தாளவாடி காவல்நிலையம் முன்பு
 ''வாழ்க்கை வாழ்வதற்கே என்பதனை அறிந்து கொண்டோம், குடிபோதையில் வாகனம் ஓட்டமாட்டோம்'',
      என மரியாதைக்குரிய காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில்  ''இளவயது ஓட்டுனர்களும் இரு சக்கர மற்றும் தனி நபர்வாகன  ஓட்டுனர்களும்'',உறுதிமொழி ஏற்ற காட்சி.




           தாளவாடி- காவல்நிலையம் முன்பு- சமூக ஆர்வலர்கள் உட்பட அனைவரும் சாலைப்பாதுக்காப்பு நமது பாதுகாப்பு,நமது குடும்பத்தின் பாதுகாப்பு,நமது நாட்டின் பாதுகாப்பு,எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டமாட்டோம் என உறுதிமொழி ஏற்ற காட்சி.

பதிவேற்றம்; PARAMESWARAN.C
                          TAMIL NADU SCIENCE FORUM,
                           THALAVADY,
                            ERODE Dt.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...