வெள்ளி, 27 மே, 2011
ஏன் எப்படி ( aen eppadi )

வெளிச்சத்தை நோக்கி இரவில் பூச்சிகள் வருவது எதனால் ?
எறும்புகள் ஏன் சாரைசாரையாய் செல்கின்றன?
வானவில்லின் நிறங்கள் நேர்கோடுகளாக இல்லாமல் வளைந்து காணப்படுவதேன்?
இதுபோன்று நூற்றுக்கு மேற்பட்ட கேள்விகளுக்கு யாவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான பதில்களுடன் இப்புத்தகம் தொகுகப்பட்டுள்ளது.
ஆசிரியர்: எஸ். ஜனார்த்தனன் (தலைமை ஆசிரியர்,), சு.சீனிவாசன் & இரா.கேசவமூர்த்தி ( இருவரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம்)
விலை: ரூ.45
பக்கம் : 124
பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )
கோள்கள் குள்ளக்கோள்கள் புறக்கோள்கள் Planets, Dwarf Planets Exoplanets ( kolgal 1)

சூரியன், கோள்கள், குள்ளக்கோள்கள், குறுங்கோள்கள், வால் நட்சத்திரம், புறக்கோள்கள் குறித்த அறிவியல் விளக்கங்கள், சுவையான செய்திகள், நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் , அண்மை கண்டுபிடிப்புகள் என கோள்கலைப் பற்றிய அனைத்து தகவல்கலையும் எளிய முறையில் அளிக்கிறது இந்நூல்.
ஆசிரியர்: முனைவர். த. வி. வெங்கடேஸ்வரன் ( Vigyan Prasar, DST, NewDelhi)
விலை : ரூ. 75
பெரிய அளவு
பக்கம் : 130
பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )
குழந்தைகள் சிறுகதைகள் ( kuzhandaikaL siRukathaikaL )

ஆசிரியர்: மு. முருகேஷ்
விலை: ரூ. 30
பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 The Right of Children to Free and Compulsory Education Act 2009 - ( ilavasa kattayakalvi )

எப்பொழுதோ வந்திருக்கவேண்டிய இச்சட்டம் தற்போதாவது வந்திருப்பது மகிழ்ச்சியே. மக்களிடம் இச்சட்டம் குறித்த விழிப்புணர்வே இதன் பயனை அடைவதற்கும் குறைகளைக் களையக் குரல் கொடுக்கவும் உதவும் என்ற உயரிய நோக்கில் உருவாக்கப்பட்ட புத்தகம் இது.
ஆசிரியர் : இரா. தட்சிணாமூர்த்தி & எ. சுவாமிராஜ்
விலை: ரூ. 15
பக்கம் : 62
பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )
வியாழன், 26 மே, 2011
ஒரிகாமி - காகிதம் மடிக்கும் கலை ( origami )

விளையாட்டு பொம்மைகளோடு சலிப்படைந்த குழந்தைகளுக்கு பல விலங்குகள், பூக்கள், பூச்சிகள்,வகை வகையான தொப்பிகள் மற்றும் பலவற்றை காகிதத்தில் உண்டாக்கும் கலையை எளிமையாக விளக்கும் புத்தக்ம்.
ஆசிரியர் : அரவிந்த் குப்தா
தமிழில் : அ. அமல்ராஜன்
விலை: ரூ. 15 மட்டும்
பக்கம் : 56
பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )
தேசிய தடுப்பூசித் திட்டம் ( thesiya thadupuusi thitam)

1985 முதல் அமல்படுத்தப்பட்ட “பொது தடுப்பூசி திட்டத்தின்” அடிப்படையில் தொடர்ந்து சுயசார்போடு தடுபூசிகள் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தினை வலியுருத்தும் புத்தகம்.
ஆசிரியர்: டாக்டர். செல்வராஜ், மக்களுக்கான மருத்துவ கழகம்.
விலை: ரூ. 5 மட்டும்
பக்கம்: 30
பதிப்பு: மக்கள் நலவாழ்வு இயக்கத்திற்காக - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம்
மின்னும் மின்னும் விண்மீனே ( minum minum vinmine )

வானவியல் பற்றிய இந்நூலில் கோள்கள் பற்றி, அவற்றின் அமைப்பு, இயக்கம் பற்றித் தெளிவாக படங்களுடன் சொல்லப்படுகிறது. சில செய்முறைகள் தரப்பட்டுள்ளன. விண்ணுலகு பற்றிய தொன்மங்களின் ஒப்பீடு குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் : முனைவர். த.வி. வெங்கடெஸ்வரன் ( vigyan prasar, new Delhi)
பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )
உயிரியல் யுகம் ( uyiriyal yukam )

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு ” உயிரி யுகம்” என்று அழைக்கப்படுவதுண்டு. உயிரித் தொழில் நுட்பம் வளர்ச்சி உற்பத்தி சாதனமாக பயன்படுவது மட்டும் அல்லாது உயிரினங்களைப் பற்றிய ப ரகசியங்களை அறிய உதவிடும் என்பதை விளக்கும் நூல்.
இன்றைய சூழலில், உயிரியல் வளர்ச்சி சுட்டும் பார்வைகள் என்ன? படிப்ப்பினைகள் என்ன? என்பதை தமிழில் வெளியிடுதல் வேண்டும் என்பதே ஆசிரியரின் நோக்கம் ஆகும்.
ஆசிரியர் : த.வி. வெங்கடேஸ்வரன் ( Vigyan Prasar, New Delhi)
விலை : ரூ. 35
பக்கம் : 95
பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )
உங்களுக்குத் தெரியுமா ( ungalukkuth theriyuma )

மரம் அறுக்கும் ரம்பம் கத்திபோல் கூர்மையாக இல்லாமல் பற்கள் போல் அமைந்துள்ளதே ஏன்?
தாகம் எடுப்பது எதனால்?
இதுபோன்று நமக்கு அன்றாடம் தோன்றும் பல சிந்தனை வினாக்களுக்கு விடையளிக்கிறது இப்புத்தகம்.
ஆசிரியர்: எஸ். ஜனார்த்தனன் (தலைமை ஆசிரியர்,), சு.சீனிவாசன் & இரா.கேசவமூர்த்தி ( இருவரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம்)
விலை: ரூ.45
பக்கம் : 120
பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )
யுரேகா யுரேகா (Yureka yureka)

இப்புத்தகம் ஒரு கேள்வி-பதில் தொகுப்பு - குறிப்பாக இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், சமூக அறிவியல், உடலியல் சம்பந்தமாக நமக்கு அன்றாட வாழ்வில் பல சந்தேகங்களை எழுப்பும் 200க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு அனைவரும் புரிந்துகொள்ளும்வகையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஒரு சிறந்த கையேடு போன்றது.
ஆசிரியர் : எஸ். ஜனார்த்தனன்
விலை: ரூ. 55 மட்டும்
பக்கம்: 144
பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )
ஞாயிறு, 22 மே, 2011
அறிவதின் ஆரம்பம் ( arivathin aarambam )

இப்புத்தகம் குழந்தைகளுக்கான செயல்பாட்டுமுறை கற்றல் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் 1975ம் ஆண்டு வெளியடப்பட்டது.
யுனிசெஃப் (UNICEF) நிறுவனத்தால் 1987ம் ஆண்டு ”Preparation for Understanding" என்ற தலைப்பில் வெளிவந்தது.
ஆசிரியர்: கீத்வாரன்
விலை: ரூ. 15 மட்டுமே
பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )
சனி, 21 மே, 2011
வேதியியல் வரலாறு ( vethiyiyal varalaru )

கி.மு.300 லிருந்து இன்றுவரை மனிதன் வேதியியலை பயன்படுத்திய வரலாற்றை பாமரரும் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ள புத்தகம்.
சர்வதேச வேதியியல் ஆண்டு 2011 ( International Year of Chemistry IYC2011) ஒட்டி வெளியிடப்பட்டது.
ஆசிரியர் : பேரா. சு. மோகனா
விலை : ரூ. 20
பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )
வானம் நீல நிறமா ( why sky is Blue )

மொழி : தமிழ் & English
சர். சி.வி.ராமன் 1968ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி தந்து 80வது வயதில் பள்ளிச் சிறுவர்களுக்கு அளித்த சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது...எளிய விளக்கப் படங்களுடன் மலிவன விலையில்
ரூ. 20
ஆசிரியர் : சர். சி.வி.இராமன்
பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )
இளம் பருவத்தில் விஞ்ஞானிகள் ( Ilam paruvathil vinjanigal )

இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள பிரபல விஞ்ஞானிகளின் குழந்தைப் பருவம் பல்வேறு சிக்கல்கலைக் கொண்டதாக இருப்பினும் அவர்களது விடாமுயற்சியையும் தைரியமும் அவர்களைப் ப் பிறரிடமிருந்து பிரித்துக்காட்டுகிறது...
ஆசிரியர்: மொ. பாண்டியராஜன்
விலை: ரூ. 20
பக்கம்: 40
பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )
போரின் பிடியில் பிஞ்சுகள் ( Porin Pidiyil Pinjugal )

ஆசிரியர்: பேரா. சு.மோகனா
விலை: ரூ. 15
பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக